இந்தியா தென்னாபிரிக்கா மூன்றாவது டெஸ்ட் முதல் நாள் + இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகள் India in 2011

வெடிகுண்டு வெங்கட்டின் சிறப்பு செய்தியாகிய இந்த பதிவினை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

மக்களே,

மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் (வழக்கம் போல இன்றைய ஆட்டத்திலும் முன்னணி பெற்றும் அதனை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள தவறி விட்டோம்) இந்திய அணியின் விளையாடும் ஆட்டங்களையும், அது எப்படி இருக்கும் என்று என்னுடைய கணிப்பையும் இந்த பதிவில் பார்ப்போம்:

இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்: 2010-2011

இந்த டெஸ்ட் போட்டியில் தோற்றால் கூட இந்திய அணியானது வரும் ஜூன் மாதம் வரை டெஸ்ட் போட்டிகளில் முதல் இடத்திலேயே இருக்கும் அளவிற்கு தன்னுடைய ரேங்கிங் பாயிண்ட்டுகளை பெற்றுள்ளது. (நடுவில் ஒருநாள் போட்டிகளுக்கான உலக கிண்ண போட்டிகள் வருகின்றன - டெஸ்ட் போட்டிகள் கிடையாது).

இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி சிறப்பாக ஆரம்பமாகி இருக்கிறது. கடந்த 14 போட்டிகளில் இரண்டாம் முறையாக டாசில் ஜெயித்தார் தோனி. அதுவே பெரிய விஷயம். பார்க்கலாம், இந்த வருஷமாவது அவருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதா என்று. டாசில் ஜெயித்த பிறகு இந்திய அணியானது பீல்டிங் செய்யும் முடிவை எடுத்தது. கடந்த இரண்டு போட்டிகளில் கடினமான சூழலில் இந்திய அணி பேட்டிங் செய்வதும், தென்னாபிரிக்கா அணி சற்று சாதகமான சூழ்நிலையில் பேட்டிங் செய்வதும் தொடர்ந்தது. ஆனால் இந்த போட்டியில் அப்படி நடக்க வில்லை. காலையில் பந்துவீச்சிற்கு சாதகமான நிலையில் தென்னாபிரிக்க அணி விளையாட வந்தது. ஊருக்கு உத்தமர் ஆகிய கிரீம் ஸ்மித் சென்ற போட்டியில் தைரியமாக முதல் பந்தை சந்திக்காமல் விரைவில் ஜாகிர் கானிடம் அவுட் ஆனார். இரண்டாம் இன்னிங்க்சில் என்னமோ தெரியவில்லை, தானே ஜாகிர் கானின் முதல் பந்தை சந்தித்தார். சற்றே தாக்குப்பிடித்து விளையாடினார். ஆனால், ஸ்ரீஷாந்த் பந்துவீச்சின் வேகத்தையும், அவரது பேச்சின் தாக்கத்தையும் சந்திக்க முடியாமல் ஒரு கற்றுக்குட்டி போல டென்ஷன் ஆகி அவுட் ஆனது அந்த போட்டியின் சிறப்பு அம்சம். இந்த நிலையில் யார் ஜாகிர் கான் வீசும் பந்தை சந்திப்பார்கள் என்று பார்க்க ஆவலாக இருந்தேன்.

ஜாகிர் கானை பொறுத்த வரையில் ஸ்மித்தின் விக்கெட் எப்போதுமே ஒரு டிராவலர்ஸ் செக் போனது. எப்போது வேண்டுமானாலும் அவர் என்கேஷ் செய்துக்கொள்வார். சென்ற போட்டியில் இரண்டாவது இன்னிங்க்சில் ஸ்விங் இருக்காது என்ற சூழலில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு முதல் பந்தை சந்தித்த ஸ்மித், இந்த போட்டியில் காலை வேளையில் காற்றின் ஈரப்பதம் மற்றும் ஓவர்காஸ்ட் கண்டிஷன் சூழலில் எட்டாவது டெஸ்ட் ஆடும் பீட்டர்சனை முதல் பந்தை சந்திக்க விட்டார். தொண்ணூறு போட்டிகளை கண்ட ஒரு வீரர் இப்படி ஆடுவது எனக்கு சற்றே ஏமாற்றத்தை கொடுத்தது. 

சென்ற போட்டியில் சேவாக் (வழக்கமாக சேவாக் முதல் பந்தை சந்திக்க மாட்டார்) விஜய் முதல் பந்தை சந்திக்க சென்ற பொது, தடுத்து தானே முதல் பந்தை சந்தித்து ஆடினார். அதுதான் ஒரு சீனியர் செய்யும் செயல். ஆனால், வழக்கமாக முதல் பந்தை சந்திக்கும் ஸ்மித், ஜாகிர் கான் என்றவுடன் பீட்டர்சனை ஆடவிட்டது அவரது குழப்பமான மனநிலையை வெளிப்படுத்தியது. நான் அப்போதே முடிவு செய்துவிட்டேன். ஜாகிர் கான் தன்னுடைய டிராவலர்ஸ் செக்கை என்கேஷ் செய்துவிடுவார் என்று. அதுதான் நடந்தது.

வெளிச்சம் குறைவாகவும், லேசான மழைத்தூறல் வந்ததாலும் ஆட்டம் ஒன்றரை மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. மதிய உணவை முடித்துக்கொண்டு வந்த தென்னாபிரிக்கா அணியினரை இஷாந்த் ஷர்மா ஒரு விக்கெட் வீழ்த்தி அதிர்ச்சியடைய வைத்தார். பின்னர் அந்த அணியின் மிகச்சிறந்த இரண்டு ஆட்டக்காரர்களும் சேர்ந்து அணியினை தொய்வில் இருந்து தூக்கி நிறுத்தினார்கள். குறிப்பாக ஆம்லா விளையாடியபோது, அவருக்கு ஆடுகளம், சூழல், தட்பவெப்பம், எதிரணி என்று எதுவுமே தோன்றாமல் வெறும் பந்தை மட்டுமே கவனத்தில் கொண்டு சிறப்பாக ஆடினார். அவரது கவுண்டர் அட்டாக்கிங் ஆட்டம் இந்திய அணியை சற்று தடுமாற வைத்தது. முதல் 50 ரன்கள் குவிக்க 111 பந்துகள் எடுத்துக்கொண்ட தென்னாபிரிக்கா, ஆம்லாவின் அதிரடியால் இரண்டாவது 50 ரன்களை வெறும் 51 பந்துகளிலேயே குவித்தனர்.  பின்னர் ஸ்ரீசாந்தின் அதிரடியான பவுன்சர்களால் சற்றே கவனம் குறைந்து தன்னுடைய விக்கெட்டை ஒரு சிறப்பான பிளான் செய்யப்பட்டு எக்சிகியூட் செய்யப்பட்ட பந்துவீச்சில் இழந்தார் ஆம்லா.

தென்னாப்பிரிக்காவின் சிறந்த பேட்ஸ்மேன் ஆவதே தன்னுடைய லட்சியம் என்று சொல்லியுள்ள டீ வில்லியர்ஸ் ஸ்ரீசாந்தின் மற்றுமொரு அட்டகாசமான அவுட் ஸ்விங்கர் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். ஸ்கோர் 164/4. விரைவிலேயே மற்ற விக்கெட்டுகளை வீழ்த்திவிடலாம் என்று இந்திய அணி நினைத்தாலும், கப்தான் தோனியின் டிபென்சிவ் அப்ரோச்சினால் (காலிஸ் மற்றும் பிரின்ஸ் இருவரின் தேர்ந்த ஆட்டத்தினாலும், நான்காவது வேகப்பந்து வீச்சாளர் இல்லாத காரணத்தினாலும்) அடுத்து வேறெந்த விக்கெட்டையும் சாய்க்க இயலவில்லை. ஆட்டமும் முடிந்தது.

1st Day நாளைக்கு காலையில் விரைவாக காலிஸ் விக்கெட்டை வீழ்த்திவிட்டு, முன்னூறு ஓட்டங்களுக்குள் தென்னாப்பிரிக்காவை கட்டுப்படுத்தினால், இந்திய அணிக்கு பிரகாசமான வெற்றிவாய்ப்பு இருக்கிறது. இந்த ஆடுகளமானது வழக்கமாக இரண்டாம் மற்றும் மூன்றாம் நாட்களில் மட்டைப்பந்தாட்டதிற்கு (அதாங்க பேட்டிங்) மிகவும் சாதகமான ஒன்று. அதற்க்கு பிறகு நான்காம் மற்றும் ஐந்தாம் நாட்களில் சுழல் பந்து வீச்சிற்கு சற்று (கவனிக்கவும், சற்றுதான்) உபயோகமாக இருக்கும். ஆகையால் நாளைக்கு இந்திய அணியின் ஆட்டமானது இந்த போட்டியை நிர்ணயிக்கும்.

என்னுடைய கணிப்பு: இந்தியா முதல் இன்னிங்க்சில் நானூறு ஓட்டங்களை குவித்தால் வெற்றி பெரும்.

ஒரு நாள் போட்டிகள்:Ind Vs SA 

இந்திய அணி சேவாக் இல்லாமல் விளையாடப்போகிறது. அணியின் பந்து வீச்சு இந்த போட்டிகளை நிர்ணயிக்கப்போகிறது. இந்த ஒரு நாள் போட்டிகள் தொடர் அதிக அளவில் ரன்களை கொண்ட ஒரு தொடராகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஒரு முக்கியமான விஷயம் - ஒரு நாள் போட்டிகளில் இருநூறு ரன்களை குவித்த பிறகு சச்சின் இன்னமும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவே இல்லை. அவர் விளையாடும் அடுத்த போட்டி இதுதான். யுவராஜ் சிங்கிடம் இருந்தும், யூசுப் பதானிடம் இருந்தும் சிறப்பான ஆட்டத்தினை எதிர்ப்பார்க்கலாம்.

என்னுடைய கணிப்பு: தென்னாபிரிக்கா 3-2 or 4-1.

India’s upcoming matches in World cup and 2 immediate Tours after the IPL 3:

Indian Team நாளைக்கு ஆஷஸ் மற்றும் இந்திய அணியின் போட்டிகளை பற்றி விரிவாக பேசுவோம்.

Comments

2 Responses to "இந்தியா தென்னாபிரிக்கா மூன்றாவது டெஸ்ட் முதல் நாள் + இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகள் India in 2011"

Anonymous said... February 1, 2011 at 2:00 AM

Hi, You entries are just great. i would like to receive your entries through email. please enable feedburner in your site.

Sadhu said... June 14, 2011 at 2:05 PM

மேலும் வாசிக்க.... பார்க்க.........

Do Visit

மனசு ரெண்டும் புதுசு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_1926.html

ஜில் ஜில் ஜிலேபி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_7808.html

மாங்கனி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_8805.html


நாட்டு சரக்கு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_9605.html


http://www.verysadhu.blogspot.com/

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin