பட்டம் விடும் மாஞ்சா'வால் கண்மணிக்கு ஏற்பட்ட காயம்

வெடிகுண்டு வெங்கட்டின் சிறப்பு செய்தியாகிய இந்த பதிவினை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மக்களே,

மூன்று நாட்களாக ஊரில் இல்லை. ஹைதரபாத் பிரியாணி சாப்பிட்டுவிட்டு இப்போது தான் திரும்பினேன். இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்த ஒரு துக்க சம்பவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

உங்களில் பலருக்கு கண்மணியை தெரிந்து இருக்கும். சென்னையில் இருப்பவர்களில் கண்மணியை தெரியாதவர்கள் கண்டிப்பாக காது கேட்காதவர்களாகவே இருக்க வாய்ப்பு. ஆம், சென்னையின் நம்பர் ஒன் ரேடியோஜாக்கி யார் என்றால் பலரும் ஆண்களில் தீனாவையும் பெண்களில் கண்மண்யையும்/சுசித்ராவையும் தேர்ந்தெடுப்பார்கள். அதில் இந்த சுசித்ரா பல தொலைக்கட்சிகளில் வருவதாலும் / வாழ்க்கை முறையாலும் பலராலும் அறியப்பட்டாலும் கூட சிறப்பான இனிமையான குரல்வளம் கொண்ட ரேடியோஜாக்கி என்று மட்டும் பார்த்தால் கண்மணி தான் வெற்றிபெறுவார்கள்.

மற்றபடி சென்னையில் வசிக்காத தமிழர்களுக்காக இதோ இந்த தகவல்: நீங்கள் திருட்டு பயலே படத்தில் வரும் பொய் சொல்லப் போறேன் பாடலை கண்டிப்பாக கேட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. அந்த இனிமையான பெண் குரலுக்கு சொந்தக்காரர் நம்முடைய கண்மணிதான்.

 

என்ன பாடலை கேட்டு விட்டீர்களா? அருமையான குரலுக்கு சொந்தக்காரர் நம்முடைய கண்மணி என்பதில் இனிமேலும் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காது அல்லவா? இனிமேல் நடந்த சம்பவத்திற்கு வருவோம். கடந்த திங்கள் கிழமை அன்று (15-02-2010) அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டு இருந்த கண்மணி அவர்கள் திடீரென்று கழுத்தை ஏதோ ஒன்று அறுப்பது போல வலி ஏற்படுத்த, உடனே வண்டியை நிறுத்த முயன்றார்கள். மாலை நான்கு மணி என்பதால் நல்ல சூரியவெளிச்சத்தில் கழுத்தில் இருந்து ரத்தம் வருவதையும், தாங்க முடியாத வலி ஏற்பட்டதையும் பார்த்த கண்மணிக்கு சிறிது நேரம் கழித்தே தன்னுடைய கழுத்தில் பட்டம் விடும் மாஞ்சா கயிற்றின் வலியை உணர முடிந்தது.

RJ Kanmani

அதன் பின்னர் உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனையில் சென்று அட்மிட் ஆகிவிட்டார்கள். கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கண்மணிக்கு மொத்தம் 24 தையல்கள் போடப்பட்டனவாம், அதுவும் கழுத்தில். இன்று காலை கண்மணி அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொதுவான சிகிச்சை பிரிவுக்கு மாற்றப் பட்டார்கள். உயிருக்கும், குரலுக்கும் (இவரை பொறுத்த வரையில் குரலானது உயிரை விட முக்கியம்) இப்போதைக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் கூறி விட்டனர்.

இந்த விபத்தினை பற்றி பல்வேறு செய்தித்தாள்களில் வந்த விவரங்கள் :(படிக்க, அந்த பத்திரிக்கையின் பெயரை கிளிக் செய்யுங்கள்)

விரைவில் கண்மணி உடல்வளமும், குரல்வளமும் பெற்று மறுபடியும் தன்னுடைய இனிமையான குரல் மூலம் நம்மையெல்லாம் மகிழ்விக்க எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டுவதோடில்லாமல் இப்படி வாகன போக்குவரத்து நிறைந்த சாலைகளில் சட்டவிரோதமாக மாஞ்சா பட்டம் விடும் நபர்களை கடுமையாக தண்டிக்க காவல்துறைக்கு வேண்டுகோளையும் வைக்கிறோம்.

சென்னை பீச்சில் கிரிக்கெட் விளையாடுவதை தடை செய்த அரசாங்கம், சென்னை நகர சாலைகளில் மாஞ்சா மூலம் பட்டம் விடுவது தண்டிக்கபடக்கூடிய குற்றம் என்று தெரிந்தும் அந்த ஆபத்தான விளையாட்டில் ஈடுபடும் நபர்களை என்ன செய்யப் போகிறது?

Comments

1 Response to "பட்டம் விடும் மாஞ்சா'வால் கண்மணிக்கு ஏற்பட்ட காயம்"

டெக்‌ஷங்கர் @ TechShankar said... February 17, 2010 at 6:22 PM

இதை வைத்து ஒரு படமே வந்ததே. சர்வம் படம். த்ரிஷா, ஆர்யா நடித்த படம். அடக் கொடுமையே..

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin