மக்களே,
நேற்று காலை (திங்கட்கிழமை, April மாதம் ஐந்தாம் தேதி) என்னுடைய அடுத்த சுற்றுப்பயணத்தை துவக்க நான் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தை சென்றடைந்தேன். அப்போது மணி ஒன்பதரை இருக்கும். லோக்கல் ரயில் நிலையத்தின் மெயின் வாசலில் ஒரு பெரிய கூட்டம் நிற்பதை கண்டேன்.
ஒருவழியாக அவரை சரிபடுத்தி அனுப்பி வைத்த பிறகு தான் நான் யோசித்தேன் - இந்த சூழ்நிலையிலும் கூட மக்கள் காக்காய் வலிப்பு, இரும்பு என்று இருக்கிறார்களே, இன்னுமா அவர்களுக்கு அறிவு வரவில்லை என்று.
அதனால் என்னுடைய நண்பர் டாக்டர் (பாண்ட்) பரத், PGDCA அவர்களை நம்முடைய வெடிகுண்டு பதிவில் வந்து இந்த வலிப்பை பற்றிய சந்தேகங்களை நிவர்த்தி செய்ய சொன்னேன். Take Over Doctor:
- காக்காய் வலிப்பின் ஆங்கிலப் பெயர் - எபிலெப்சி ஆகும். For Further Reading, Wikipedia Tamil, English
- இது ஒரு பொதுவான தீவிரமான நரம்புச் சீர்கேடு ஆகும்
- மூளையில் நிகழும் அசாதரணமான, மிதமிஞ்சிய, அதே சமயம் குறுகிய காலத்திற்கு தோன்றும் வலிப்புத்தாக்கங்கள் தான் இந்த வலிப்பிற்கு காரணம்.
- இது ஒரு மருத்துவ குறைபாடே-நோயே ஆகும்.
வலிப்பு வந்தால் செய்ய வேண்டியவை:
- உடனடியாக அவருக்கு போதிய இடம் அளியுங்கள், சுவாசிக்க காற்று வரவிடுங்கள். அவரை சூழ்ந்து நிற்க வேண்டாம்.
- அவரின் நாக்கு எப்படி இருக்கிறது, எங்கே இருக்கிறது என்பதை கவனியுங்கள். சிலர் வலிப்பின்போது தம்மையறியாமல் நாக்கை கடித்துக்கொள்ளவும் செய்வார்கள்.
- அவருக்கு மூச்சு திணறல் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
- பொதுவாக, அதிகபட்சம் மூன்று நிமிடங்களில் அந்த வலிப்பின் வீரியம் குறைந்துவிடும். அப்படி குறையாமல் ஐந்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்தால் அது மிகவும் ஆபத்தானதாகும். உடனடியாக அவருக்கு மருத்துவமனையில் அவசரகால சிகிச்சை அளிக்க வேண்டும்.
வலிப்பின்போது செய்ய கூடாதவை
- வலிப்பு வந்தவருக்கு கையிலோ, வாயிலோ எதனையும் திணிக்க வேண்டாம்.
- குறிப்பாக இரும்பினால் ஆன பொருட்களை கொடுத்தால் அதனால் தன்னைத்தானே காயப்படுதிக்கொள்ள வாய்ப்பு அதிகம்.
- வலிப்பு வந்த நபர் முழுமையாக சரியாகாத வரை (அவருக்கு வலிப்பு தானாக நிற்காத வரை) அவரை பலவந்தமாக பிடிக்கவோ, கட்டுப்படுத்தவோ கூடாது.
- அவராக அடங்கும்வரை காத்திருக்க வேண்டும். புஜபல பராக்கிரமத்தை காட்டினால், வலிப்பு பாதியில் நின்று உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம்.
வலிப்பு வந்தவுடன் செய்ய வேண்டியவை
- வலிப்பிற்கு பிறகு பாதிக்கப்பட்ட நபர் பலவீனமடைதல் & குழப்பமடைதல் பொதுவான ஒன்றாகும். ஏனெனில் அவருக்கு வலிப்பு வந்தது தெரியாது. அவருக்கு தெளிவாக, மறுபடியும், மறுபடியும் "உங்களுக்கு வலிப்பு வந்தது" என்று சொல்லுங்கள்.
- பாதிக்கப்பட்ட நபர் சாதாரண நடவடிக்கைக்கு மாறும் வரை மற்றொருவர் உடனிருந்து அவருக்கு நம்பிக்கையும் ஆறுதலும் அளிக்க வேண்டும்.
- சிலர் வலிப்பிற்கு பின் வாந்தி எடுப்பார்கள், அதனால் சற்று விலகியே இருங்கள்.
- வலிப்பிற்கு பிறகு அந்த நபர் சாதாரண விழிப்புணர்வு நிலைக்குத்திரும்ப பலமணி நேரம் ஆகும். அதனால் அவரை தனித்து விடவேண்டாம்.
இதுவரையில் பொறுமையாக படித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
அப்பாடா, ரொம்ப நாளா மக்களுக்கு பயனுள்ள ஒரு பதிவாவது போட எண்ணி இருந்தேன், இன்று செய்து விட்டேன். அதில் அனைவருக்கும் ஒரு மெஸ்சேஜ் வேறு சொல்லி விட்டேன்.
பயனுள்ள இடுகை. வாழ்த்துக்கள்
வெங்கட்,
நல்ல பதிவு. நான் தெரிந்து கொள்ள நிறைய சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்...நன்றியும் கூட.
நீங்கள் தவிர்த்திருக்கக் கூடியதாக நான் கருதும் சில:
இது ரொம்பவே வெயிட் சப்ஜெக்ட், ஆரம்பத்தில் வந்த அந்த அதீத கிண்டலை தவிர்த்திருக்கலாம். நம்மை சுற்றி இருப்பவர் எல்லோரையும் நாம் மருத்துவ அறிவுடன் எதிர்பார்க்க முடியாது, ஆகவே மக்களின் செய்கை ஏற்கத்தக்கது இல்லாவிடினும், அந்த சூழலில் இயற்கையே.
அவரையும் அவர் வண்டியையும் படம் பிடித்ததை நீங்கள் தவிர்த்திருக்கலாம். பிரைவசி அல்லவா?
இது என் suggestion தான். மற்றபடி இறுதியில் நீங்கள் தந்துள்ள தகவல்கள், ஒவ்வொரு மனிதனும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியத் தகவல். அதற்காக மீண்டும் கோடானுகோடி நன்றிகள் உங்களுக்கு!
நன்றி மதுரை சரவணன் அவர்களே.
//ஆரம்பத்தில் வந்த அந்த அதீத கிண்டலை தவிர்த்திருக்கலாம். நம்மை சுற்றி இருப்பவர் எல்லோரையும் நாம் மருத்துவ அறிவுடன் எதிர்பார்க்க முடியாது, ஆகவே மக்களின் செய்கை ஏற்கத்தக்கது இல்லாவிடினும், அந்த சூழலில் இயற்கையே.//
சார், அந்த நேரத்தில் அனைவரும் உத்தரவு போடுகிறார்களே தவிர யாரும் எதுவும் செய்ய மாட்டேன்கிறார்கள். நான் என்னுடைய இரண்டு கைகளிலும் இருந்த பைகளை ஒதுக்கி வைத்து விட்டு உதவும்போது கூட உத்தரவு தான் இடுகிறார்கள், உதவிக்கு வரவில்லை. அப்போது வட இந்தியாவை சேர்ந்த (ரயில் நிலையத்தில் வசிக்கும்) ஒருவர்தான் வந்து தண்ணீர் கொடுத்து கைத்தாங்கலாக உதவினார்.
//நம்மை சுற்றி இருப்பவர் எல்லோரையும் நாம் மருத்துவ அறிவுடன் எதிர்பார்க்க முடியாது// உண்மைதான், ஆனால் காமன் சென்ஸ் என்று ஒன்று இருக்கிறதே? ஒருவர் வலிப்பினால் துடிக்கும்போது அவருக்கு எதுவும் கொடுக்க கூடாது என்பது மருத்துவ ஆலோசனை. குறிப்பாக வாயில். நண்பர் என்னவோ விபூதியை கொடுக்க பார்க்கிறார். நெற்றியில் இடுகிறார்.
//ஆரம்பத்தில் வந்த அந்த அதீத கிண்டலை தவிர்த்திருக்கலாம்// தயவு செய்து தவறாக என்ன வேண்டாம். என்னுடைய நடையே அப்படிதான். முந்தைய பதிவுகளை படித்து பாருங்களேன்?
//அவரையும் அவர் வண்டியையும் படம் பிடித்ததை நீங்கள் தவிர்த்திருக்கலாம். பிரைவசி அல்லவா?//
உண்மைதான். அவரின் முகம் தெரியாத அளவில்தான் படம் எடுத்தேன். ஆனால், வண்டியை யோசிக்க வில்லை. நன்றி, இப்போது மாற்றிவிட்டேன்.
நல்ல பதிவு குடுத்த சந்தோஷத்தில் உணவை ஒரு பிடி பிடிகிறீர்கள் போல.... நடக்கட்டும் நடக்கட்டும் .
உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
//நல்ல பதிவு குடுத்த சந்தோஷத்தில் உணவை ஒரு பிடி பிடிகிறீர்கள் போல//
மேடம், அவர் என்னுடைய நண்பர் டாக்டர் (பாண்ட்) பரத்-PGDCA. அவர்தான் இந்த மருத்துவ ஆலோசனைகளை எனக்கு கூறியவர்.
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்
வெடிகுண்டு வெங்கட்!
காலை நேர அவசரத்திலும் அந்த நபரை தேற்றுவதில் உதவி புரிந்த உங்களுக்கு நன்றிகள் பல.
காக்கை வலிப்பு என்பதே ஒரு மருவியச் சொல்தான். கால், கை வலிப்பு என்பதே உண்மையான நோயின் பெயர். ஒருவரை தாஜா செய்வதை காக்கா பிடித்தல் என்பர். இது கூட கால், கை பிடித்தல் என்ற பதங்களின் மருவிய நிலையே.
//பொதுவாக, அதிகபட்சம் மூன்று நிமிடங்களில் அந்த வலிப்பின் வீரியம் குறைந்துவிடும்.//
மேற்கண்ட உண்மையை அறியாமல், தானே குறையும் வலிப்பு இரும்பை கொடுத்ததால்தான் குறைந்தது என்று மக்கள் தவறாக தொடர்ந்து நினைத்து வருகின்றனர்.
நல்ல கருத்தான பதிவு, நான் கூட இதுவரை இரும்பு கொடுக்கலாம் என்றுதான் நினைத்து இருந்தேன். மிக்க நன்றி.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
தேவையான செய்தி. பல விஷயங்களை அறிய முடிந்தது.