மக்களே,
இளைய தளபதி மருத்துவர் விஜயின் தீவிர ரசிகன் நான் என்பது இந்த வலைப்பூவை தொடர்ந்து படித்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். சமீபத்தில் இவருக்கு இழைக்கபட்ட ஒரு அநீதி என்னை மிகவும் பாதித்து விட்டது. ஆகையால் இனிமேலும் சும்மா இருந்தால் இந்த அநீதி யாருக்கும் தெரியாமல் சரித்திரத்தில் காணாமல் போய் விடுமோ என்று அஞ்சியதன் விளைவே இந்த உள்ளக்குமுறலின் வெளிப்பாடு.
சமீபத்தில் 2009ம் ஆண்டுக்கான இந்திய அரசின் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப் பட்டன. இதில் தமிழில் வெளிவந்த சிறந்த படமாக பசங்க படம் தெரிவு செய்யப்பட்டது. அதில் நடித்த பொடியன்களுக்கும் சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான விருது வழங்கப் பட்டது. அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
ஆனால் பசங்க படத்தின் கதை உண்மையில் இயக்குனர் பாண்டிராஜின் கற்பனையில் தோன்றிய ஒன்றா என்ற கேள்வியை இத்தருணத்தில் நாம் கேட்டேயாக வேண்டும். பல இயக்குனர்கள் போல இவரும் இவரது படத்தின் கதையை வேறெங்கிருந்தோதான் சுட்டிருக்கிறார். ஆனால் நீங்கள் நினைப்பது போல் இவரொன்றும் அயல்நாட்டு அல்பேனியப் படத்திலிருந்தோ, உக்ரேனிய ஒலக சினிமாவிலிருந்தோ தன் படத்திற்கான கதையை சுடவில்லை.
இவர் தன் படத்திற்கான கதையை சுட்டது இளைய தளபதி மருத்துவர் விஜய் அவர்கள் நடிப்பில் 2003ம் வருடமே வெளிவந்து வெற்றிகரமாக தோல்வியைத் தழுவிய புதிய கீதை படத்திலிருந்துதான்.
என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆனால் உற்று நோக்கினால் உண்மை விளங்கும்.
சரி, இப்போது பசங்க படத்தின் கதை என்னவென்று பார்ப்போம். எல்லோரும் விரும்பும் ஒரு ஹீரோவுக்கும், எல்லோரும் வெறுக்கும் ஒரு வில்லனுக்கும் நடக்கும் போராட்டம் தான் கதை. இதில் ஹீரோ யார் வம்புக்கும் போக மாட்டார். ஆனால் வில்லனுக்கோ ஹீரோ தனக்கு ஒரு போட்டியாக வருவதை பொறுக்கவில்லை. ஆகையால் அவனை சீண்டிக்கொண்டே இருக்கிறார். க்ளைமாக்ஸில் ஹீரோவுக்கு விபத்து நேர்கிறது. உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஹீரோ பிழைக்க வேண்டுமென்று ஊரே ஆஸ்பத்திரி முன்பு கூடி நின்று ஒப்பாரி வைத்து அழுகிறது. வில்லனும் கடைசியில் மனம் திருந்தி ஹீரோவுக்காக பிரார்த்திக்க ஹீரோ அனைவரின் வேண்டுதல்களாலும் பிழைத்துக் கொள்கிறார்.
என்ன எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? ங்கொயாலே இதுதாண்டா இளைய தளபதி மருத்துவர் விஜய் அவர்கள் நடிப்பில் 2003ம் வருடமே வெளிவந்து வெற்றிகரமாக தோல்வியைத் தழுவிய புதிய கீதை படத்தின் கதை!
என்ன நம்பிக்கை வரலியா? இதோ வீடியோ ஆதாரங்களுடன் நிரூபிக்கிறேன்.
புதிய கீதை க்ளைமாக்ஸுல இளைய தளபதி மருத்துவர் விஜய் பைக்குல சைட் ஸ்டாண்டை எடுத்து விடாம போய் விபத்துல மாட்டிக்குவாரு. அதே போல பசங்க படத்திலும் அந்த பொடியன் கடைசியிலே சைக்கிள் ஸ்டாண்டை எடுத்து விடாம போய் விபத்தாகிவிடும். சைட் ஸ்டாண்ட் போட்ட நிலையிலே பைக் ஓட்டக்கூடாதுன்னு உயரிய கருத்து சொல்லியிருக்கிறார் இளைய தளபதி மருத்துவர் விஜய். அதை அப்படியே அப்பட்டமாக காப்பியடிச்சு படமெடுத்தால் அதுக்கு அவார்டு வேற கொடுக்கிறாங்க? என்ன கொடுமை சார் இது?!!
இன்னும் நம்பிக்கை வரலியா? இதோ ரெண்டு படத்திலும் வர்ற ஹீரோ ஓப்பனிங் சாங். இதுக்கப்புறமுமா நம்பிக்கை வரல?!!
இப்படியொரு அப்பட்டமாக காப்பியடித்து எடுக்கப்பட்ட ஒரு படத்துக்கு மத்திய அரசு விருது வழங்கியிருக்கிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம் இருக்க முடியும். இளைய தளபதி மருத்துவர் விஜய் அவர்களின் அசுர அரசியல் வளர்ச்சியைக் கண்டு பொறுக்காத காங்கிரஸ் கட்சியினரின் சதிச்செயல் இது என்பது இன்னுமா விளங்கவில்லை.
இளைய தளபதி மருத்துவர் விஜய் காங்கிரஸில் சேர விருப்பம் தெரிவித்ததும் அவரது அசுர அரசியல் வளர்ச்சியைக் கண்டு அஞ்சிய ராகுல் காந்தி அவரை கேவலப்படுத்தும் விதமாக பேசி அவரை துரத்தியதும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். தெரியாதவர்களுக்கு இதோ சுட்டி, படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
http://error007.blogspot.com/2009/08/blog-post_8561.html
அந்த சம்பவத்தை இன்னும் மனதில் வைத்துக் கொண்டு இளைய தளபதி மருத்துவர் விஜய் அவர்களை பழி வாங்கும் விதமாக இவ்வாறெல்லாம் செய்கின்றனர் அதிகாரத்திலிருப்பவர்கள்.
இருக்கட்டும்... இருக்கட்டும்... இன்னும் எத்தனை நாளைக்குதான் இவங்க ஆட்டம் செல்லுபடியாகும்னு பார்க்கலாம். காவலன் என்கிற ஒலக சினிமா மட்டும் வரட்டும். மவனே அதுக்கு மட்டும் அவார்டு கொடுக்கல, நடக்கறதே வேற!!!
இதுவரையில் பொறுமையாக படித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
romba mukkiyam........
இந்த அநிதிகாக night சாப்ட்டுடு விடியும் வரை உன்னவேருதம் இருக்கபோறேன்