மக்களே,
இரண்டு வருடங்களுக்கு முன்பே பார்த்த படம் என்றாலும்கூட, நேற்று திரையரங்கில் பார்ப்பது ஒரு விசித்திரமான அனுபவம்தான். பலரும் பல விதமாக விமர்சனம் எழுதி இருந்தாலும்கூட படத்தின் ஒரு முக்கியமான காட்சியை பற்றி யாருமே சொல்லவில்லை. அதனால் அந்த ஒரே ஒரு காட்சியை பற்றி மட்டுமே இந்த விமர்சனம்.
ஸ்னிக்தா தான் எப்படி ஒரு விலைமாதுவாக மாறினார் என்பதை விளக்கிய பின்னர், அந்த கொட்டும் மழையில் அந்த பாழடைந்த ரோட்டோர கட்டிடத்தில் மிஸ்கின், சிறுவன் அஸ்வத்ராம், ஸ்னிக்தா, பைகர் பாய்ஸ் இருவர் என்று அனைவரும் தூங்கிக்கொண்டு இருக்கின்றனர். அந்த நாளில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்துமே அவர்கள் வாழ்வில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தி விட்டுள்ள அந்த சூழலில், அனைவரும் உறங்கிக்கொண்டு இருக்கின்றனர். அவர்களின் தலையருகே அந்த கருவுற்ற மலைப்பாம்பானது மெல்ல இருளில் இருந்து ஊர்ந்து ஒரு சிறிய வழியின் ஊடே செல்கிறது. அந்த ஒரு காட்சிய ஓராயிரம் ஜென் கதைகளுக்கு மூலம்.
- அவர்கள் இனிமேல் ஒரு புதிய பாதையில், புதிய வாழ்வை நோக்கி சொல்கிறார்கள் (அந்த சிறிய வழி + கருவுற்ற அந்த பாம்பு)
- அவர்கள் அனைவருமே மறுபிறப்பு எடுக்கும் நிலையில் இருக்கின்றனர். (கருவுற்ற பாம்பு + மாற்றமடைந்த ஸ்னிக்தாவின் வாழ்க்கை, மாற வைத்ததால் மிஸ்கின் மற்றும் சிறுவனின் முதிர் நிலை)
- அவர்களுக்கு வாழ்வில் ஒரு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கிறது (ஒரு தாய் கருவுற்று தன வாரிசை ஈனும்போது அந்த வாரிசின் ஊடே தானே வந்ததாக ஒரு மனநிலையை அடைவார்கள். அந்த சூழலில் அந்த பாம்பு மறுபடியும் தான் வாழ்வதாக (இரண்டாவதாக) ஒரு நிலையை நோக்கி செல்கிறது. அதைப்போலவே அந்த மூன்று பாத்திரங்களுமே தங்களின் வாழ்வில் இரண்டாவது வாய்ப்பிற்காக காத்திருந்து அந்த கட்டத்திற்குள் நுழைகிறார்கள்).
இப்படியாக ஓராயிரம் காரணங்களை சொல்லி ஒவ்வொரு காட்சியமைப்பின் மூலமும் ஒரு ஜென் கதையை சொல்லலாம்.
இந்த படமானது ஒரு கொண்டாட்டம். மனித வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் கொண்டாடப்படவேண்டிய ஒன்று என்பதை அந்த மிஸ்கின் பாத்திரம் மூலம் தெளிவாக விளக்குகிறார். அந்த மிஸ்கின் பாத்திரமே ஓர் மந்திரவாதி அல்லது இயேசு கிறிஸ்து போன்ற ஒரு பாத்திரம். மிச்க்கின் பாத்திரம் செல்லும் வழியெல்லாம் யாரையெல்லாம் கடந்து செல்கிறாரோ, அவர்கள் எல்லாரின் வாழ்வும் உடனடியாக மாறிவிடுகிறது.மந்திரவாதியின் தொடுதலுக்காக காத்திருந்த சபிக்கப்பட்ட தவளை போல பலரும் மிஸ்கின் பாத்திரத்தின் மூலம் தங்களின் விமோசனத்தை எதிர் நோக்கியிருந்தனர்.
மக்களுக்கு ஒரு வேண்டுகோள்: சில அதிக பிரசங்கிகள் இந்த படத்தை கிகுஜிரோவின் காபி என்றெல்லாம் கூறுவார்கள். ஒன்றுமே தெரியாதவர்களின் பேச்சை கண்டுகொள்ளாமல் வாழ்வை கொண்டாடும் இந்த படத்தை இரண்டாவது முறை பார்க்கும்போது புரியும் பல விஷயங்கள் முதல் தடவை புரியாதாகையால் மறுபடியும் ஒரு முறை பாருங்கள்.
நல்லா எழுதியிருக்கீங்க :)
நன்றி நண்பரே.
nice. I love the film.
அருமையான பார்வைங்க வெங்கட். இன்று படம் பார்க்கலாமென்று இருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி! :))
venkat.. இப்படி சொல்லப் போனால் பல இடங்களில் குறியீடுகளாய் பல காட்சிகள் வருகிறது.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறை பார்க்கும்போது புது அனுபவத்தை தருகிறது..
வெங்கட்...அதை பர்பசாக குறிப்பிடாமல் விட்டேன்..நெடுகிலும் நிறைய குறியீடுகளும், உருவகங்களும்...அடுத்த பதிவில் விரிவாக எழுத வேண்டும்..நன்றி
விமர்சனம் நன்று.’பலா’ பஸ் உட்ருக்காரு.பார்த்தேன். நீங்க கிகுஜீரோ பார்த்திருக்கிறீங்களா அண்ணே?
டைம் கிடைக்கும்போது இதயும் பாருங்கண்ணே
http://butterflysurya.blogspot.com/2009/06/kikujiro.html
நண்பரே,
// நீங்க கிகுஜீரோ பார்த்திருக்கிறீங்களா அண்ணே?// நான் அந்த படத்தை பல முறை பார்த்திருக்கேன். முதன்முதலில் அந்த படத்தை எனக்கு சஜ்ஜஸ்ட் செய்ததே மிஸ்கின் தான். அவரின் பழைய ஆபீசில் மிஸ்கின் நாற்காலியின் பின்னால் பார்த்தால் குரசோவா படமும், நம்ம பீட் கிட்டானோ படமும் தான் இருக்கும். அந்த அளவுக்கு அவர் கிட்டாநோவுக்கு மரியாதை கொடுப்பவர்.
மற்றபடி நாட் ஒன்று என்பதைத்தவிர வேறெந்த சம்பந்தமும் இல்லை. கிகுஜிரோ அவரது வாழ்வின் சொந்தக்கதை. அந்த கேரக்டர் அவரது அப்பாவின் மறு உருவம்.
நந்தலாலாவில் சிறுவனும், நடுத்தர வயதிணனும் ஒன்றாக அம்மாவை தேடி பயணம் செய்வதை தவிர வேறெந்த ஒற்றுமையும் இல்லை. மே பி, அந்த பைக்கர் பாய்ஸ் மறுபடியும் வந்து உதவுவது வேண்டுமென்றால் ஒருமாதிரி சார்ந்து இருக்கலாம். மற்றபடி இதுதான் கிகுஜிரோ என்றால் இதைப்போலவே மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ஒரு படமும் ஐம்பதிலேயே வந்துள்ளது. அப்போ, பீட் கிட்டானோ சுட்டார் என்று சொல்கிறார்களோ?
மற்றபடி சமீபத்தில் வந்த வெர்டிகோ (பார்ட் டு) படத்தின் கிளைமாக்சும், காதல் கொண்டேன் படத்தின் கிளைமாக்சும் ஒன்றுதான் (அந்த காதலி இரண்டு பேரை இரண்டு கைகளில் தாங்கிக்கொண்டு மலையுச்சியில் தொங்குவது, கெட்டவனை கை விடுவது). அதற்காக காதல் கொண்டேன் படத்தை பிரெஞ்ச் வெர்டிகோ குழுவினர் அடித்தார் என்று சொல்ல முடியுமா?
கேபிள் சார்,
//venkat.. இப்படி சொல்லப் போனால் பல இடங்களில் குறியீடுகளாய் பல காட்சிகள் வருகிறது.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறை பார்க்கும்போது புது அனுபவத்தை தருகிறது..//
உண்மைதான். பல கவிதைகளின் தொகுப்பே இந்த படம். என்னவென்றால், எல்லா கவிதைகளும் சூப்பர்.
மணிஜி,
//வெங்கட்...அதை பர்பசாக குறிப்பிடாமல் விட்டேன்..நெடுகிலும் நிறைய குறியீடுகளும், உருவகங்களும்...அடுத்த பதிவில் விரிவாக எழுத வேண்டும்..நன்றி//
உண்மைதான். அதைப்போலவே பின்னணி இசையும் பல இடங்களில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. ஸ்னிக்தா தன்னுடைய கதையை சொல்லும்போது பின்னணி இசையை கவனியுங்கள். கதை முடியும்போது (இப்போ என்னுடைய மனசும் அசிங்கமாயிடுச்சு என்று சொல்லும்போது) பின்னணி இசையை கவனியுங்கள். அப்போதுதான் மழை பெய்வதையையும் கவனியுங்கள்.
அருமையான விவரிப்பு :) இன்னும் பல காட்சிகளையும் இப்படி விலாவாரியாக விளக்க முடியும் என்று தோன்றுகிறது..
உங்களுக்கெல்லாம் வேற வேலை இல்லயாடா ங்கொம்மால....
விமர்சனம் என்ற பேரில் போரடிக்காதேடா ங்கொய்யால கேனப்...
கே.பு.கி.கூ.மு.கூ.கே.கூ.தா.தே.ப இதுக்கு விமர்சனம் எழுது பாப்போம்....பிளாக்கர் காரனுகளை செருப்பால அடிச்சாத்தான்டா நீங்கல்லாம் திருந்துவீங்க...நந்தலாலா நல்ல படம்.
//கே.பு.கி.கூ.மு.கூ.கே.கூ.தா.தே.ப இதுக்கு விமர்சனம் எழுது பாப்போ//
இது என்னுடைய பெயர். நான் விருந்தாளிக்கு பிறந்தவன்.ஆகையால் எங்கேயுமே என்னுடைய பெயரை சொல்லாமல் அனானியாக வந்து என்னுடைய வீரத்தை நிலைநாட்டுவேன்.
நல்லதொரு விமர்சனம்
//அருமையான விவரிப்பு :) இன்னும் பல காட்சிகளையும் இப்படி விலாவாரியாக விளக்க முடியும் என்று தோன்றுகிறது//
உண்மைதான் பிரசன்னா அவர்களே. ஒட்டுமொத்த படமுமே அப்படித்தான். ஒரு அருமையான பூங்கொத்து இந்த படம்.
அனானி நபர்களே,
தயவு செய்து சிறிது கண்ணியமாக கமென்ட் இட முயலுங்கள்.
சிநேகிதன் அக்பர் said...நல்லதொரு விமர்சனம்.
நன்றி அக்பர் சார். படத்தை தியேட்டரிலே பார்க்க முயலுங்கள், முழுவதுமாக இசையை உணர்வீர்கள்.
//அந்த ஒரு காட்சிய ஓராயிரம் ஜென் கதைகளுக்கு மூலம்//
அந்த மலைப்பாம்பு அவர்களை கடிக்காமல் விட்டதால் அவர்களுக்கு நல்ல நேரம் தொடங்கி விட்டது என்று கொள்ளலாம்.
இல்லை, அவர்களெல்லாம் நன்றாக தின்று விட்டு மலைப்பாம்பு மாதிரி தூங்குகிறார்கள் என்றும் கொள்ளலாம்.
ஹ்ம்ம் நல்ல விமர்சனம். :)