இயக்கம் | சிம்புதேவன் |
தயாரிப்பு | கல்பாத்தி S.அகோரம் |
ஆக்கம் | சிம்புதேவன் |
நடிப்பு | ராகவா லாரன்ஸ் |
லக்ஷ்மி ராய் | |
பத்மபிரியா | |
சந்தியா | |
நாசர் | |
சாய் குமார் | |
M.S.பாஸ்கர் | |
ரமேஷ் கண்ணா | |
மனோரமா | |
டெல்லி கணேஷ் | |
வையாபுரி | |
மெளலி | |
இளவரசு | |
இசை | G.V.பிரகாஷ் குமார் |
ஒளிப்பதிவு | அழகப்பன் |
எடிட்டிங் | ராஜா முகம்மது |
விஷுவல் எஃபெக்ட்ஸ் | பீட்டர் பால் (வைட் லோட்டஸ்) |
ஸ்டூடியோ | AGS ஃபிலிம் எண்டெர்டெய்ன்மெண்ட் |
ரிலீஸ் | மே 7, 2010 |
சுவாரசியமான தகவல்கள்:
வரும் வெள்ளியன்று (மே 7, 2010) வெளிவரவிருக்கும் இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் திரைப்படம் குறித்து ஒரு EXCLUSIVE முன்னோட்டம். விமர்சனம் விரைவில்.
· கிட்டத்தட்ட 36 வருடங்களுக்குப் பிறகு தமிழில் வெளிவரும் முதல் கெள-பாய் திரைப்படம் இதுதான்.
· 1972-ல் கர்ணன் இயக்கத்தில் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நடித்து வெளிவந்த கங்கா திரைப்படம்தான் தமிழில் கடைசியாக வெளிவந்த முழு நீள கெள-பாய் திரைப்படம் ஆகும்.
· இயக்குனர் சிம்புதேவன் தான் படித்து ரசித்த/ரசித்துக் கொண்டிருக்கும் கெள-பாய் காமிக்ஸ்களையும் (டெக்ஸ் வில்லர், லக்கி லூக், கேப்டன் டைகர், சிக்பில்) பார்த்து ரசித்த கெள-பாய் படங்களையுமே இப்படத்திற்கு உந்துதலாக அமைந்தது என்கிறார்.
· அதிலும் குறிப்பாக மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நடித்து வெளிவந்த கெள-பாய் திரைப்படங்களுக்கு இயக்குனர் சிம்புதேவன் பெரும் ரசிகராவார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் படத்தில் காணப்படும் ஊர்களுக்கும் தெருக்களுக்கும் அவரது பெயரையே சூட்டியுள்ளார் (உம்: ஜெய்சங்கர்புரம் என்று ஒரு ஊருக்கு பெயர் வைத்துள்ளார்).
· படத்தை எடுப்பதற்கு முன் இயக்குனர் சிம்புதேவன் 1960களிலும் 70களிலும் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நடிப்பில் பல கெள-பாய் திரைப்படங்களை இயக்கிய காமிரா மேதை கர்ணன் அவர்களை சந்தித்து அவரின் நல்லாசிகளுடனேயே படத்தை துவக்கியுள்ளார்.
· THE GOOD, THE BAD AND THE UGLY படத்தையும் தன்னை பாதித்த படங்களில் ஒன்று என்று குறிப்பிட்டிருக்கிறார் இயக்குனர் சிம்புதேவன். தன் படத்திலும் ஒரு நல்லவன் (ராகவா லாரன்ஸ்), ஒரு கெட்டவன் (நாசர்), ஒரு விநோதன் (M.S.பாஸ்கர்) என்று மூன்று கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளார்.
· இதில் விநோதனாகத் தோன்றும் M.S.பாஸ்கரின் கதாபாத்திரம் படத்தில் பேசும் ஒரு வித மொழியையே புதிதாக உருவாக்கியுள்ளார்கள். இதற்காக பல நாட்கள் தீவிரமாக ஆராய்ந்து அந்த புது மொழிக்கு ஒரு அகராதியையே உருவாக்கியுள்ளார்கள். படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் கண்டிப்பாக அந்தப் புது மொழியிலிருந்து நான்கைந்து வார்த்தைகளாவது கற்றுக் கொள்வது நிச்சயம் என்கிறார்கள்.
· படத்தில் நடிக்கும் பலரும் இதுவரை குதிரையேறியதில்லை என்பதால் அனைவருக்குமே குதிரையேற்றம் பயிற்றுவிக்கப் பட்டது. இதில் குறிப்பாக லக்ஷ்மி ராய் பயிற்சிக்குப் பின் ஒரு தேர்ந்த குதிரை வீராங்கனையாக மாறி விட்டாராம். அவர் குதிரையில் பவனி வரும் அழகைக் கண்ட கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் படவிழாவில் அவரைப் புகழ்ந்து “ஒரு அரேபியக் குதிரையே குதிரை மீது சவாரி செய்கிறது! குதிரை கொடுத்து வைத்திருக்க வேண்டும்!” என்றெல்லாம் கவிதை மழை பொழிந்தாராம்.
· படத்தின் ஒரு பாடல் காட்சி வியட்நாமில் உள்ள ஹா லோங் விரிகுடா எனும் இடத்தில் படமாக்கப்பட்டது. இங்குதான் PIRATES OF THE CARIBBEAN படமும் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
படம் பார்க்கும் அனைவருக்கும் இது மறக்க முடியாத புதுமையான அனுபவமாக இருக்கும் என்று படக்குழுவினரும் நாமும் நம்புகிறோம்.
//ஒரு அரேபியக் குதிரையே குதிரை மீது சவாரி செய்கிறது! குதிரை கொடுத்து வைத்திருக்க வேண்டும்!” //
இதெல்லாம் சின்னப் பசங்க சொன்னா நல்லாயிருக்கும். புலவருக்கு இதெல்லாம் சும்மா