
படம் : வில்லு
ஹீரோ ; விஜய், என்னை போன்ற பல விஜய் ரசிகர்கள் மன்னிக்கவும், மருத்துவர் விஜய் (இப்போது மருத்துவர்கள் மன்னிக்கவும்)
இயக்குனர் : பிரபுதேவா
ஹீரோயின் : நயன்தாரா
வெளியாகும் நாள் : சனவரி 15 (தை மாதம் முதல் நாள்)
சிறப்பு அம்சம் : மருத்துவர் விஜய் இரட்டை வேடங்களில் (அப்பா புகழ் மற்றும் மகன் ராஜா) நடிப்பதும், நடிகை குஷ்பூ ஒரு பாடலில் மட்டும் நடனம் ஆடுவதும்.
படத்தின் கதை: அப்பா கதாபாத்திரத்தில் இருக்கும் விஜய் சுமார் 45 வயதுடையவர். அவர் இந்திய ராணுவத்தில் மேஜர் ஆக பணி புரிகிறார். அவருடன் பணி புரியும் சக ராணுவ அதிகாரிகள் இந்திய ராணுவ ரகசியங்களை அயல் நாட்டிற்கு உளவு சொல்வதை கண்டு பிடிக்கிறார்; அதனால் அவர்களால் துரோகமாக கொல்லப் படுகிறார் (இவை எல்லாம் பிளாஷ்பாக்'ல் வருபவை, நான் உங்களுக்கு கோர்வையாக சொல்லுகிறேன்).
ஆஸ்திரேலியாவில் மேல் படிப்பு படித்து கொண்டு இருக்கும் விஜய் (மகன் = ராஜா) வழமை போல ஒரு அறிமுக பாடல் மூலம் தோன்றி நம்மை எல்லாம் அசத்துகிறார். இந்த பாடலில் அவருடன் ஆடுவது நம் மனம் கவர்ந்த நடிகை குஷ்பூ ஆகும். பின்னர் ராஜா பிரகாஷ் ராஜ்'ன் மகளாகிய நயன்தாராவை காதலிக்கிறார். திடீரென்று அவருக்கு ஒரு உத்தரவு வருகிறது. அந்த உத்தரவின் படி முன்-பின் அறிமுகம் இல்லாத ஒருவரை (பிஜு மேனன் ) ராஜா தடயம் இல்லாமல் கொலை செய்கிறார் & பின்னர் அவர் வளர்க்கும் அனைத்து பறவைகளையும் (குருவி உட்பட) கொன்று விடுகிறார்.
அங்கே அவர் வடிவேலு'வை சந்திக்கிறார். படத்தில் வடிவேலு மதுரை சித்திரை திருவிழாவில் தொலைந்த தன்னுடைய சகோதரனை ஆஸ்திரேலியாவில் தேடும் படலம், அற்புதமான நகைச்சுவை காட்சிகள் நிறைந்த கதம்பம். அதே போல, நயன்தாராவின் அறிமுகப் பாடலில் (உள்ளத்தை அள்ளித்தா ரம்பா போல) அவரின் ஸ்கர்ட் காற்றில் பறக்கும் காட்சிகள் முதல் பெஞ்சில் இருக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளை கண்டிப்பாக உற்சாகப் படுத்தும்.
பின்னர் பிரகாஷ் ராஜ்'ன் தொழில் பார்ட்னர் ஆக வரும் நெப்போலியன்'ஐயும் மர்மமான முறையில் (மறுபடியும் மர்ம உத்தரவை பின்பற்றி) கொலை செய்கிறார் & பின்னர் அவர் வளர்க்கும் அனைத்து பறவைகளையும் (குருவி உட்பட) கொன்று விடுகிறார். இந்த மரணங்களை தொடர்ந்து பிரகாஷ் ராஜ்'ஐயும் கொல்ல முயற்சிக்கிறார். அப்போது நயன்தாரா குறுக்கிட்டு அந்த முயற்சியை முறியடிக்கிறார். அப்போது நயன்தாராவின் கேள்விகளுக்கு விஜய் பதில் அளிக்காமல் அவரது அம்மாவை (சிம்ரன்) அறிமுகப் படுத்துகிறார். சிம்ரனும் மேலே எதுவும் கூறாமல் ஒரு டையரியை கொடுக்கிறார்.
அந்த டையரியில் புகழ் கதாபாத்திரத்தில் வரும் விஜய்'ன் அப்பா "என்னுடைய மரணத்திர்ர்க்கு காரணம் குருவி....................................." என்று இருக்கிறது. அந்த டையரியை படிக்கும் சிம்ரன் தன் கணவனின் படுகொலைக்கு பழி வாங்க மர்ம உத்தரவுகளை கொடுக்கிறார். அதனால் தான் மகன் விஜய் குருவி வளர்க்கும் பண்ணை அதிபர்களை எல்லாம் கொலை செய்கிறார்.
இப்போது பிரகாஷ் ராஜ் வந்து அந்த டைரியின் கிழிந்த கடைசி பக்கத்தை கொடுக்கிறார். அதில், "என்னுடைய மரணத்திர்க்கு காரணம் குருவி படத்தை பார்த்தது ஆகும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதனுடன் ஒரு குருவி படத்தின் திருட்டு டிவீடி'யும் உள்ளது. இதை முழவதும் படித்து மனம் திருந்தும் மகன் விஜய் தன்னுடைய அடுத்த படத்திற்கு "வேட்டைக்காரன்" என்று பெயரிட்டு நடிக்க செல்லுகிறார். இதனை பொறுமையுடன் படித்த நண்பர்கள் தமிழிஷ்'இல் வோட்டு போட்டு விட்டு இதை எல்லாம் படித்தோமே என்று மனம் நொந்து செல்கின்றனர்.
பின் குறிப்பு: நானும் ஒரு விஜய் ரசிகன் தான். எனவே என்னுடைய வீட்டிற்கு ஆட்டோ அனுப்புவது, என்னை கேவலப் படுத்தி பின்னுட்டம் இடுவது போன்ற செயல்களில் ஈடுபடாமல் Sportive ஆக இதனை எடுத்து கொள்ளவும். இந்த இடுகையின் மூலம் யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.