நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். பல நாட்களாக இந்தியாவில் இல்லாததால் என்னால் வலையுலக பணிகளை கவனிக்க முடியவில்லை. மன்னிக்கவும்.திரும்பிய உடனே எனக்கு ஒரு அதிர்ச்சி மெயில் வந்தது. அதனை பார்த்த உடனே எனக்கு ஒரு கணம் கையும் ஓட வில்லை, வில்லும் - மன்னிக்கவும் - காலும் ஓட வில்லை.
இதோ அந்த படங்களை உங்களின் மேம்பட்ட பார்வைக்கு வைத்து உள்ளேன். பாருங்கள்.
சிவபெருமானுக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம்?அட, விஜய்க்கும் சிங்களத்துக்கும் என்ன சம்பந்தம்?
அட, 2011க்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம்?
இதை எல்லாம் கேட்டால் நம்மளை முட்டாள்'ன்னு சொல்றாங்க தல.
இப்போது சில பல கேள்விகள்:
இவை எல்லாம் டாக்டர் விஜய் அவர்களின் பார்வைக்கு போகுமா?
எல்லாம் தெரிந்துமா அவர் சும்மா இருக்கிறார்?
ஹிந்து முன்னணி என்ன செய்து கொண்டு இருக்கிறது? முன்பு ஒருமுறை இதைப் போல போஸ்டர் ஒட்டியதற்கு அவர்கள் பிரச்சினை செய்ததாக நியாபகம்.
இந்த முறை விஜய் அவர்கள் எடுபட்டு உள்ளதால் அமைதியாக விட்டு விட்டார்கள?
இதை படித்து விட்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
போய் தமிலிஷ்'இல் வோட்டு போடுங்கள் சார்,உங்களுக்கு புண்ணியமாக போகும்.