சன் டிவி மெகா தொடர் -கோலங்கள் - முடியவே முடியாதா?

மக்களே,

கடந்த ஒரு வாரமாக கதை போன போக்கை பார்த்து இந்த வெள்ளிக்கிழமையோடு கோலங்கள் என்ற இந்த சன் டிவி மெகா தொடர் முடிந்து விடும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், இப்போது பார்த்தால் இனிமேலும் தொடர்ந்து நடைபெறும் என்றே தோன்றுகிறது.

ஆதி (அபியின் சகோதரன்) டிஜிடல் வேல்லி புராஜெட்டுக்காக வெறி கொண்டு பலவிதமான சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு கடைசியில் தன்னுடைய முயற்சிகளில் தோல்வியுற்று அனைவரின் உறவையும் இசந்து கடைசியில் தன்னுடைய சொந்த அம்மாவையே கொன்றுவிட்டு தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறான்.

k

ஆனால் அந்த தற்கொலை முயற்சி தோல்வியில் முடிந்து விடுகிறது. என்னடா இது? என்று பார்த்தால் ஆதி கோமாவில் சென்று விடுகிறான். ஆமாம், ஆதி இப்போது ஒரு நடைபிணம் ஆகா இருக்கிறான். இந்த சூழ்நிலையில் ஆதியை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை அவனின் முன்னாள் மனைவி (தீபா வெங்கட்) இடம் ஒப்படைக்கிறாள் அபி.

k1k3 k2

இந்த ஒரு அசாதாரண சூழ்நிலையில் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார் ஆதியின் முன்னாள் மனைவி. ஆதியின் குழந்தையும் இந்த மாற்றத்தை வரவேற்கிறது. அதனால் ஆதியை அவனுடைய முன்னாள் மனைவியே கேர் டேக்கர் ஆக இருந்து கவனித்து கொள்ள ஒப்புக் கொள்கிறாள், அபியின் வேண்டு கோளுக்கு இணங்க.

k4 k5 k6

சரி, இந்த மொக்கை இதோட முடிந்தது. நாளைக்கு சுபம் போட்டு விடுவார்கள் என்று பார்த்தால், திடீர் என்று ஒரு திருப்பம். தொல்ஸ் (அதாங்க, நம்ம தொல்காப்பியன்) அக்க வந்து அபியிடம் தொல்சை மனம் செய்துக் கொள்ள கேட்கிறாள். டிஜிடல் வேல்லி புராஜெட் அபிக்கு மறுபடியும் வந்து விட்டதை அறிந்த பாஸ்கர் (அபியின் முன்னாள் கணவன்) மறுபடியும் வந்து திருந்தி விட்டதாக நாடகம் ஆடுகிறான். இன்று அந்த நாடகத்தின் உச்ச கட்டமாக அபியின் காலில் பாஸ்கர் விழுந்து தன்னை ஏற்றுக் கொள்ளும்படி கேட்கிறான். அபி பதில் ஏதும் சொல்லாமல் சென்று விடுகிறாள்.

vanna kolangal

சரி சரி, இந்த மொக்கையை பற்றி ரொம்ப பேசி விட்டதால் கோலங்கள் என்ற பேரில் வந்த வேறு சில நல்ல (இந்த தொடருடன் ஒப்பிடும்போது) தொடரை பாருங்கள். ஆமாம், இந்த தனியார் தொலைக்கட்சிகள் எல்லாம் வருவதற்கு முன்பு தூர்தர்ஷனில் எஸ்.வீ சேகரின் வண்ணக் கோலங்கள் என்ற அற்புதமான காமெடி தொடர் வந்தது. அது இப்போது டிவிடியில் கிடைக்கிறது. பார்த்து மகிழுங்கள்.

Azhiyatha Kolangal

அப்படியும் இல்லை என்றால் மோசர்பேர் டிவிடியில் இருக்கும் இந்த அழியாத கோலங்கள் படத்தை பார்த்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள், நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் கண்டிப்பாக கோலங்களை விட சிறப்பாகவே இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

ஜி தமிழ் தொலைக் காட்சியின் எதிர்காலம்?

மக்களே,

ஏற்கனவே ஜி தமிழ் பற்றிய ஒரு சூடான பதிவை இட்டு இருந்தோம். அதைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும். ஏற்கனவே படித்தவர்கள் தொடரலாம். சூப்பர் ஹிட் படங்களை நம்பர் ஒன் குழுமத்திற்கு விற்று விட்ட ஜி தமிழ் நிர்வாகம், தற்போது இருக்கும் சுமாரான படங்களான அரசாங்கம் (கேப்டனின் அரசாங்கம்?), வல்லமை தாராயோ, ராசையா போன்ற படங்களையும் கூட வேறு சில தொலைக்காட்சி நிர்வாகத்தினரிடம் கொடுத்து விட்டதாக கேள்வி.

எதற்காக இந்த விஷயம் சொல்ல வருகிறேன் என்றால், ஒரு பொழுது போக்கு தொலைக் காட்சியில் படங்களோ (கலைஞர் டிவி), சீரியல்களோ (சன் டிவி), அல்லது நடைமுறை நிகழ்ச்சிகளோ (விஜய் டிவி) முன்னணியில் இருந்தால் அது அந்த சேனலுக்கு பெருமை. மற்ற சேனல்களாகிய ஜெயா டிவி (ஜாக்பாட், எங்கே பிராமிணன்) ராஜ் டிவி (ஸ்ரீ கிருஷ்ணா) என்று சில பல நிகழ்ச்சிகளை தங்கள் கைவசம் வைத்து உள்ளன. அவ்வளவு ஏன்? மெகா டீவியில் கூட கருப்பு வெள்ளை பாடல்களை பற்றிய ஒரு காலை வேலை நிகழ்ச்சி சிறப்பாக இருக்கின்றது.

zee tamil launch ad

ஆனால், ஒரு தேசிய சேனலில், அதுவும் கோடிக்கணக்கில் செலவு செய்ய தயங்காத ஒரு சேனலில் ஒரு சமையல் நிகழ்ச்சி தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறது என்றால் அது அந்த புரோகிராமை பற்றிய பெருமை அல்ல, அந்த சேனலில் வேறு சரக்கு இல்லை என்பதை காட்டும் ஒரு கண்ணாடி. ஆம், தொடர்ந்து பல வாரங்களாக "அஞ்சறைப் பெட்டி" என்ற ஒரு சமையல் குறிப்பு நிகழ்ச்சியே ஜி தமிழ் தொலைக்காட்சியில் முதன்மை புரோகிராமாக இருந்து வருவது அந்த நிர்வாகத்தினரை சிந்தனையில் ஆழ்த்தி உள்ளது.

Zee Tamil Ad

அதுவும் இல்லாமல் செய்திகளை தவிர்த்து வேறு எந்த நிகழ்வுகளையும் மக்கள் ரசிக்காததால் (அஞ்சறைப்பெட்டியும் செய்திகளும் தவிர்த்து என்று வாசிக்கவும்) எதற்கு இத்தனை செலவு செய்து மற்ற நிகழ்ச்சிகளை செய்ய வேண்டும் என்று நிர்வாகம் யோசிக்க ஆரம்பித்து விட்டது.

Kumudham Reporter Dated 10112009

முதலில் முழுவது மூடிவிடலாமா என்று கூட யோசித்தார்களாம் (இந்த தகவல் ஊர்ஜிதப்படுத்தப்படாத ஒன்று - தவறாகவும் இருக்கலாம்), பின்னர் அவ்வாறு செய்தால் அது சகோதரர்களின் வெற்றி என்பது போல ஆகிவிடும் என்பதால் சரி,முழுநேர செய்தி சேனலாக மாற்றி விடும் முடிவில் நிர்வாகம் இருப்பதாகவும் அதில் பணி புரியும் புரோகிராம் மேனேஜர்களுக்கு ஒரு மாத கெடு அளிக்கப் பட்டு இருப்பதாகவும் இன்னுமொரு ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்.

இந்த ஒரு மாதத்தில் புரோகிராம் ரேட்டிங்கில் மாற்றங்கள் வந்தால் முழு நேர பொழுதுபோக்கு தொலைக்காட்சியாக தொடருமாம்; இல்லை எனில், முழு நேர செய்தி சேனலாக தொடருமாம்.

என்ன கொடுமை சார் இது?

Related Posts Widget for Blogs by LinkWithin