இந்தியாவின் மானத்தை காப்பாற்றிய புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்

மக்களே,

பல நாட்களாக என்னுடைய அரசியல் சாராத இந்த சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு வந்து விட்டேன், உங்களை மகிழ்விக்க. என்னுடைய சுற்றுப் பயணத்தின் போது நான் கண்டு களித்த ஒரு அழகிய நதியின் டாப் ஆங்கிள் படங்கள இவை.

 

Image(249) Image(250)

இந்தப் படத்தில் ஓடிக் கொண்டு இருக்கும் பேருந்தை வைத்தே இது கொல்கத்தா என்றும், அந்த நதி ஹூக்லி நதி என்றும் கண்டு பிடித்தவர்களுக்கும் பாராட்டுக்கள்.

சரி, இப்போது விஷயத்துக்கு வருவோம். இது என்னடா, புரட்சிக் கலைஞர் விஜய காந்த் எப்போது இந்தியாவின் மானத்தை காப்பாற்றினார் என்று நீங்கள் ஆச்சரியப் படலாம். அதற்க்கு பதில் சொல்லுமுன், இதோ சில அரிய படங்கள்:

பைரேட்ஸ் ஆப தி கரீபியன் என்ற அந்த பழங்காலத்து சமயத்தை அடிப்படையாக கொண்ட படத்தில் அடீடஸ் எப்படி வந்தது என்று ஆச்சர்யமா?

Adidas Pirate

மகாபாரதம் மற்றும் ராமாயணத்தை அடிப் படையாக கொண்ட இந்த கிரேக்க இதிகாசத்தில் விமானம்? என்ன கொடுமை இது, பிராட் பிட்?

AeroPlanes in Trojan War

ஹீரோஸ் என்ற இந்த சீன வரலாற்று படத்தில் செல் பொன்? சீனர்கள் வின்ஜானத்தில் எவ்வளவு முன்னேறியவர்கள் என்பதை நீங்கள் இப்போதாவது புரிந்து கொண்டால் சரி தான்.

Cell Phones are a Must, even in those days

இதோ இந்த ஜாக்கி சான் படத்தில் கூட தெலுகு படம் பார்த்து கேட்டுப் போன அசிஸ்டன்ட் டைரக்டர்கள் நிறைய பேர் இருப்பார்கள் போல (அவங்க தான் போலீஸ ஆனா கூட ரப்பர் செருப்பு குடுத்து ஓடி வர சொல்லுவாங்க). துப்பாக்கிய எப்படி புடிக்குறது என்று கூட சொல்லி தரல. இதையெல்லாம் துப்பாக்கியை சாய்வாக பிடித்து சுடும் நம்ம கேப்டன் பார்த்தால் பாவம் அவர் மனசு எவ்வளவு கஷ்டப் படும்?

TRigger Happy Cop

இந்த ஹாங் காங் படத்தை பாருங்கள். இந்த வில்லன் கூட "ஜாக்கிரதை" என்று சொல்வது ஏதோ அந்த படத்தோட அசிஸ்டன்ட் டைரக்டருக்கு தானோ? ஏம்பா, ராஜா ராணி காலத்து படம் என்று சொல்லி அவரு கடிகாரத்தை எல்லாம் கழட்ட சொல்ல மாட்டீங்களா?

WATCH it Out

என்னடா, இந்த கூத்தெல்லாம் சினிமாவுல தான் என்று தானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. உலக மகா மொக்கைச்சாமி அங்கிள் சாம் ஜார்ஜ் புஷ் இந்த சாதனையை எல்லாம் சர்வ சாதாரணமாக முறியடித்து விட்டார். இதோ பாருங்கள், ஒரு குழந்தைக்கு கூட புத்தகத்தை எப்படி படிப்பது என்று தெரிகிறது. ஆனால், நம்ம உலக மகா மொக்கைச்சாமி அங்கிள் சாம் ஜார்ஜ் புஷ் புத்தகத்தை எப்படி பார்க்கிறார் என்று பாருங்கள்.

George Bush 2

சரி, ஏதோ ஒரு தடவ அவர் எக்கு தப்பா இருக்கும்போது எடுத்த படத்த வச்சு நம்ம உலக மகா மொக்கைச்சாமி அங்கிள் சாம் அவர்களை தப்பா எடை போடாதீர்கள் என்று தானே சொல்ல வருகிறீர்கள்? தயவு செய்து அடுத்த படத்தை பாருங்கள். ஒரு பைனாகுலாரை எப்படி உபயோகப் படுத்துவது என்று கூட நம்ம உலக மகா மொக்கைச்சாமி அங்கிள் சாம் அவர்களுக்கு தெரிய வில்லை.

George Bush 1

சரி, சரி, நம்ம உலக மகா மொக்கைச்சாமி அங்கிள் சாம் உண்மையிலேயே ஒரு மகா மொக்கை என்பதை ஒப்புக் கொள்கிறோம், ஆனால் இதுக்கும் நம்ம கேப்டன் விஜய காந்த் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்? அவரை என் இந்த பதிவில் இழுத்தீர்கள்? இப்ப தான் நம்ம லக்கி அவரைப் பத்தி புத்தகமெல்லாம் எழுதி அவர ஒரு பாப்புலர் பிகர் ஆக மாத்தி விட்டுக் கொண்டு வருகிறார், இந்த சூழ்நிலையில் இப்படி ஒரு தலைப்பா? என்று கூட சிலர் நினைக்கலாம்.

ஆனால், இந்த படங்களையெல்லாம் பார்த்த அயல்நாட்டு நண்பர்கள் சிலர் என்னடா உங்க நாட்டுல இந்த படங்களுக்கு போட்டியா எதுவுமே இல்லையா? அப்ப உலக மகா மொக்கைச்சாமி போட்டிக்கு இந்தியாவின் சார்பாக என்றி ஒன்றுமே இல்லையா என்று கூட கேலியாக சிரித்தார்கள். அப்ப தான் இந்தியாவின் மானத்தை காப்பாற்ற நம்ம கேப்டன் விஜய காந்த் அவர்களின் வீரப் பிரதாபத்தை முழுவதும் காட்டாமல் (நரசிம்மா படத்தின் முதல் பாதியை பார்த்தாலே போதும், அவங்களுக்கு பாதி உயிர் காலி ஆகிடும்) ஒரே ஒரு சாம்பிள் மட்டும் காட்டினேன்;

captain md

இந்தப் படத்தில் மேனேஜிங் டைரக்டர் என்ற வார்த்தைகளின் ஸ்பெல்லிந்'ஐ சற்று கூர்ந்து பாருங்கள். ஆனால், இதற்கு முன்னரே ரமணா படத்தில் விண்டோஸ் மூவீ பிளேயரில் கேப்டன் டைப் அடிப்பதை நான் பார்த்து விட்டு மனதை தேற்றிக் கொண்டு விட்டதால் எனக்கு இதெல்லாம் பெரியதாக தெரியவில்லை. உங்களுக்கு எப்படி?

சரி, சரி, மனதை தேற்றிக் கொள்ளுங்கள். இந்த அதிர்ச்சியை தாங்கிய உங்களுக்கு இந்த தகவல் சாதரணம் தான். அதாவது இந்த பதிவின் ஆரம்பத்தில் நீங்கள் பார்த்த இரண்டு படங்களும் நம்ம கூவம் ஆற்றை டாப் ஆங்கிளில் காட்டும் படங்கள். மவுண்ட் ரோட் தாராப்பூர் டவரில் B.S.N.L Office இருந்து பார்த்து எடுத்தால் இப்படி வரும்.

Related Posts Widget for Blogs by LinkWithin