சுப்ரமணியபுரம் - கை மாறிய கதை


ஜீ தமிழ் என்ற ஒரு சேனல் தமிழ் நாட்டில் தட்டு தடுமாறி வந்து கொண்டு இருப்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த கதை. என்னடா இவன், இந்தியாவில் முதல் முறையாக சாட்டிலைட் சேனல் ஆரம்பித்த ஜீ குழுமத்தின் சேனலை பற்றி இப்படி தட்டு தடுமாறி வருகிறது என்று கூறுகிறானே என்று கூட நீங்கள் யோசிக்கலாம். ஆனால், உண்மை அது தான். அதன் பின்புல விவரங்கள் கீழ்வருமாறு:

சென்னை மற்றும் தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களில் கேபிள் குழுமங்களை இயக்குவது SCV என்று அழைக்கப்படும் சுமங்கலி கேபிள் விஷன் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த குழுமமே சென்னையில் எண்பத்தி ஐந்து சதவீதம் அளவிற்கு கேபிள் வீடுகளின் கனேக்டிவிடியை SCV கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதும் நீங்கள் கேள்விப் பட்ட உண்மையே. அதனால் எந்த ஒரு புதிய சேனல் பல கோடி ரூபாயை செலவு செய்து தமிழகத்தில் ஆரம்பித்தாலும் இவர்கள் அதனை காண்பித்தால் மட்டுமே அது மக்களை சென்று அடையும்.

இந்த சூழ்நிலையில் ஆரம்பிக்கப் பட்ட ஜீ தமிழ் சேனல் பல தொழில் நுட்ப வல்லுனர்களையும், துறை அறிஞர்களையும் கொண்டு ஆரம்பிக்கப் பட்டாலும் அது இருட்டடிப்பு செய்யப் பட்டது மக்களுக்கு நன்றாக தெரியும். இன்னனும் அந்த சேனல் செட் டாப் பாக்ஸில் வரவில்லை என்பது ஆரம்பித்து ஒரு வருடம் கழித்தும் தொடரும் கொடுமை.

எப்போது ஒரு சேனல் மக்களுக்கு சென்று அடைய வில்லையோ அப்போதே அந்த நிகழ்ச்சிகள் வெற்றி அடையாது. அதனால் அங்கு எந்த அளவுக்கு நல்ல நிகழ்ச்சிகள் இருந்தாலும் வணிக அளவில் அவை வெற்றி அடையவில்லை. இருந்தாலும் தன முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல அந்த நிர்வாகமும் தொடர்ந்து படங்களை வாங்குவதிலும், சீரியல்களை ஆரம்பிபதிலும் மும்முரமாக இருந்த வந்தனர். அதனால் தான் சுட்ட பழம், ஸ்டெப் நீ போன்ற சரித்திர புகழ் பெற்ற படங்களை நம்மால் கண்டு ரசிக்க முடிகிறது.
சுப்ரமணியபுரம் படம் வெளிவருவதற்கு முன்பே ஜீ தமிழ் சேனல் அந்த படத்தின் தொலைக்காட்சி ஒலி பரப்பும் உரிமையை வாங்கி விட்டனர். கடந்த நான்கு மாதங்களாக அந்த படத்தை விரைவில் என்று விளம்பரம் செய்தும் அனைவரையும் கவர்ந்து கொண்டு இருந்தனர். அது ஒரு வெற்றி பெற்ற படம் என்பதால் அந்த படத்தை பலரும் எதிர்பார்த்து இருந்தனர் என்பது மறுக்க இயலாத உண்மை. வணிக அளவில் ஒரு கணிசமான தொகையை ஈட்ட இந்த படம் ஜீ தமிழ் நிறுவனத்திற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.

அதனால் இந்த திங்கள் அன்று அந்த படத்தை ஒலி பரப்ப ஜீ தமிழ் நிர்வாகம் முடிவு எடுத்தது. அன்று விஜய தசமி என்பதால் அது மக்களை கண்டிப்பாக சென்றடையும் என்பது நிர்வாகத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை. தொழில் முறை போட்டியாளர்களின் படங்கள் ஒன்று பெரிய அளவில் போட்டியாக இல்லை என்பதும் ஒரு முக்கிய விஷயம். ஆம், கலைஞர் டீவியில் "அபியும் நானும்" என்ற படமும், சன் டீவியில் "வெடிகுண்டு முருகேசன்" என்ற படமும் ஒளிபரப்ப முடிவு செய்து இருந்தனர். அதற்கான ஆயத்தமும் செய்யப் பட்டு விளம்பரதாரர்களுக்கு தகவலும் தெரிவிக்கப் பட்டது.

இந்த படத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஜீ தமிழ் நிர்வாகம் அனைத்து விளம்பரதாரர்களிடமும் சிறப்பான முறையில் பேசி விளம்பரங்களை பெற்று மகிழ்ச்சியாக இருந்தபோது திடீரென வெள்ளிக் கிழமை அன்று சன் டீவியில் சுப்ரமணியபுரம் படம் விஜயதசமி சிறப்பு படம் என்று விளம்பரம் வந்த வுடன் மக்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் முழிக்க ஆரம்பித்தனர். எனென்றால், ஒரு டிவி வாங்கிய படத்தை அனுமதியில்லாமல் மற்ற டிவி ஒளிபரப்பினால் அது சட்டப்படி குற்றமாகும்.

சன் டிவி சுப்ரமணியபுரம் படத்தை மாலை ஆறு மணிக்கு ஒளிபரப்ப போகிறார்கள், அதாவது ஜீ தமிழ் ஒளிபரப்ப முடிவு செய்த அதே நேரத்தில். அதாவது உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு குழும டிவிக்கள் ஒரே படத்தை ஒரே மொழியில் ஒளிபரப்பவிருக்கின்றனர்.

இந்த விஷயத்தை கேள்விப் பட்டவுடனே பெரும்பாலான (அனைத்து?) விளம்பரதாரகளும் தங்களது விளம்பரங்களை ஜீ தமிழ் டீவியில் நிறுத்தி விட்டு சன் டீவியில் கொடுத்து விட்டனர். இப்படி திடீரென நடந்தது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதற்க்கான காரணம் என்ன என்று தெரியாமல் மக்கள் முழித்து கொண்டு இருந்த வேளையில் வெடிகுண்டு வெங்கட் தன்னுடைய முழு திறமையை உபயோகப் படுத்தி உண்மையை கண்டறிந்து மக்களுக்கு தெரியப்படுத்துகிறார்.

உண்மை - இந்த தகவல் தமிழின் முன்னணி பத்திரிக்கையாளர் ஒருவரால் கூறப்பட்டது. அதனால் இது உண்மையாக இருக்கும் என்றே நம்பப் படுகிறது. சுமார் இருவது வருடங்கள் பத்திரிகை துறையில் இருக்கும் நண்பர் தவறான தகவலை அளிக்க மாட்டார் என்ற நம்பிக்கையுடன் அந்த தகவலை இங்கு அளிக்கிறேன்.

அதாகப்பட்டது சன் டிவியின் சன் டைரெக்ட் டி.டி.எச்சில் இனிமேல் ஜி தமிழ சேனல் வருமாம். அதற்க்கு கைம்மாறாக இந்த ஒரு முறை மட்டும் இப்படி கோடிக் கணக்கில் கொடுத்து வாங்கிய உரிமையை ஜி தமிழ் நிர்வாகம் பகிர்ந்து கொள்கிறது.

அதனால், இந்த திங்கள் அன்று உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக ஒரே படத்தை இரண்டு சேனல்களில் பார்க்கும் பாக்கியம் தமிழக மக்களை அடைகின்றது. என்ன கொடுமை சார் இது?

உலகத்தமிழர்கள் தவற விட்ட உண்மை சம்பவம் (கன்னி மற்றும் கண்ணி சம்பவங்களின் முழு உண்மை)

மக்களே,

ரொம்ப அதிசயமாக நேத்து நம்ம ஜெயம் ரவி கால் பண்ணி இருந்தான். சமீப காலமா அவன் கிட்ட இருந்து எந்த ஒரு தொடர்பும் இல்லாததால் நான் கூட அவனை கண்டுக் கொள்ளவே இல்லை. எனக்கு என்ன ஒரு சந்தேகம் என்றால் கொஞ்சம் பாப்புலாரிட்டி வந்துட்டா போதுமே, நண்பனை எல்லாம் மறந்து விடுவதா என்ன? அதனால் தான் தொடர்பு கொள்ளவில்லையோ என்னவோ என்று. ஆனால் அவன் கூட பேசிய பிறகுதான் தெரிந்தது, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று.

அவன் சொன்ன ரெண்டு முக்கியமான விஷயங்களை கீழே கொடுத்துள்ளேன் (அவனுக்கு இதெல்லாம் முக்கியமான விஷயங்கலாம்).

1. நேத்து தேதி 20-09 -2009 அதனால் என்னடா என்று கேட்டால், 20092009 என்று வருகிறதாம், இந்த வருடத்தில் இப்படி ஒரு முறை தான் வருமாம். ?(ஏண்டா, போன வருஷம் கூட 20082008 வந்ததே, நீ அப்ப எண்டா போன் பண்ணல?)

சரி, எப்படி தான் மொக்கை போடப் போறான் என்று நினைத்து, அந்த பாழாப் போன ரெண்டாவது விஷயம் என்னடா என்று கேட்டால், அவன் சொன்னதை கேட்டு என்னுடைய நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது. (நன்றாக கவனிக்கவும், நெஞ்சுதான்)

2. அதாவது, நேத்து, அதாங்க ஞாயிற்றுகிழமை அன்று தமிழ மொழியின் தலைமகனாம் நம்ம கவிஞர் கபாலீஸ்வரன் அவர்கள் எழுதிய கவிதைகளின் ஒலி நாடாக்கள் (நன்றாக கவனிக்கவும், ஒலி நாடாக்கள் தான், வேறு எந்த நாடாவும் இல்லை) வெளியிடப் பட்டனவாம். அந்த சம்பவத்தை அவன் அப்படியே போட்டோ எடுத்து எனக்கு அனுப்பி இருந்ததால் அதனை இங்கே உங்களின் பார்வைக்கு அளிக்கிறேன்.

முதல் போட்டோ ஒரு சேஞ்சுக்கு இருட்டில் எடுக்கப்பட்டது, பயந்து விடாதீர்கள்.

Image(316)
Image(317)
Image(318)

கவிதை தொகுப்புகளின் பெயர்களை நன்றாக கவனிக்கவும்.

1. நீ மனிதன் தானா? (அருகிலேயே நம்ம கவிஞர் கபாலீஸ்வரன் படம் உள்ளதை கவனிக்கவும்)

2. இதயா ஒலி (இதய ஒலி அல்ல, இதயா ஒலிதான்)

3. உன்னை பார்த்து உலகம் சிரிக்கிறது (அருகிலேயே நம்ம கவிஞர் கபாலீஸ்வரன் படம் உள்ளதை கவனிக்கவும்)

4. ஆசையை அலை போலே (ஆசையே அலை போலே அல்ல, ஆசையை அலை போலே தான்)

5. முள்ளில் மலர்ந்த ரோஜா (சொல்ல ஒன்னும் இல்ல, இருந்தாலும் அருகில் ஷகீலா படம்).

இதில் முக்கியமான விஷயம் வெளியீட்டாளர் பெயருக்கு முன்னாள் உள்ள அடைமொழிகள் தான்:

கனவுக்கண்ணி (நன்றாக கவனிக்கவும், கனவுக் கன்னி அல்ல, கண்ணி தான்). இந்த கன்னி என்றால் ஆங்கிலத்தில் TRAP என்று கூட அர்த்தமாம். அதாங்க கண்ணி வெடி என்று சொல்வோமே, அந்த கண்ணி தான் இந்த கண்ணி.

அதுக்கு அப்புறம், உஸ்ஸ்ஸ்ஸ், அப்பாடா முடியல. நீங்களே படிச்சு தெரிஞ்சுகொங்கோ.

பாலிமர் டி.வி - புதிய தமிழ் சாட்டிலைட் தொலைக்காட்சி சேனல்

மக்களே,

நீண்ட நெடு நாட்களாக ஆழ்தூக்கத்தில் இருந்த நான் எழுந்து வந்து விட்டேன். இனிமேல் என்னிடம் இருந்து மொக்கை பதிவுகளை நீங்கள் அடிக்கடி எதிர்பார்க்கலாம். இனிமேல் அறிவிப்புகள், விழாக்கள், சினிமா விமர்சனங்கள், சுவையான சங்கதிகள் என்று இந்த வலை ரோஜா சிறப்பாக இயங்கும் என்ற தகவலை உங்களுக்கு தெரிவிப்பதில் நான் பெறுமகிழ்ச்சி அடைகிறேன். முதன்முதலாக இதோ ஒரு விழா பற்றிய பதிவு. இந்த விழ ஒரு புதிய சாட்டிலைட் சேனல் துவக்க விழா ஆகும்.

தமிழில் ஏற்கனவே பல சேனல்கள் இருக்கின்றன. அவற்றில் குறிப்பிட்டு சொல்லும்படியாக ஒன்றிரண்டு சேனல்களே இயங்குகின்றன. இருபத்தி இரண்டு சேனல்கள் இருக்கும் இடத்தில் நான் என் ஒன்றிரண்டு சேனல் பற்றியே பேசவேண்டும் என்று கூட நீங்கள் கேட்கலாம். வாசகர்களையும், பார்ப்பவர்களையும் அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லாத எந்த ஒரு ஊடகமும் அவர்களுக்கு தீமையே செய்கின்றன என்பது தவிர்க்க இயலாத உண்மை. ஆங்கிலத்தில் If you are Not part of the Solution, Then You Are the Problem என்று ஒரு சொல்லாடல் உண்டு. இதனையே ரிக் வேதத்தில் கூறி இருப்பார்கள். இங்குள்ள பெரும்பாலான தொலைக்காட்சி ஊடகங்கள் நம்மை மன அளவிலும், சமூக அளவிலும் வளர விடாமல் ஒரு அடிமைகளாகவே வைத்து இருக்கின்றன.

இத்தகைய சூழ்நிலையில் தான் இந்த புதிய சாட்டிலைட் சேனல் உதயமாகிறது. பெரும்பாலான நிகழ்ச்சிகள் புதுமையாக இருக்கும் என்று உறுதி அளித்து வரும் புதன் அன்று முதல் தொலைக் காட்சி இயங்க ஆரம்பிக்கும் என்று அந்த நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிறுவனத்தினரை பற்றி தெரியாதவர்களுக்கு இந்த பத்தி: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் (சேலம், கோவை, ஈரோடு இன்னும் பிற) மக்கள் அதிகமாக பார்க்கும் சேனல் எது என்று ஆய்வு செய்தால் வழக்கம் போல சண் தொலைக்காட்சி தான் முதலில் வரும். ஆனால் இரண்டாவது இடத்தில் நீங்கள் நினைப்பது போல கே. டி.வியோ, கலைஞட் தொலைக்காட்சியோ, விஜய் டி.வியோ அல்லது ஜெயா டி.வியோ இல்லை. இவற்றிற்கு பதிலாக இரண்டாவது இடத்தில் வரும் சேனல் ஒரு கேபிள் தொலைக்காட்சி சேனல் ஆகும். அந்த சேனலின் பெயர் தான் பாலிமர். இதுநாள் வரை கேபிள் தொலைக் காட்சியாக மட்டுமே இயங்கி வந்த இவர்கள் தமிழ நாட்டின் முன்னணி தொலைக் காட்சி ஊடக நிபுணர்களை கொண்டு ஆரம்பிக்கும் சேனல் இது.

Polimer

புதிதாக ஒன்று என்றால் நம்முடைய பத்திரிகை காரர்களுக்கு மூக்கில் வேர்த்து விடுமே? இதில் கழுகுகள் யாருக்குm சளைத்தவர் இல்லை என்பதை இந்த தகவல் மூலம் தெரிவிக்கிறார். இதனால் இதுவும் ஒரு அரசியல் சார்ந்த சேனலோ என்ற எண்ணம் மேலிட்டதால் அந்த நிறுவனத்தினரிடமும் பலரிடமும் விசாரித்ததில் அரசியல் சார்பு அற்ற நடுநிலைமை நிறுவனம் இது என்ற தகவல் கிடைத்தது.

d

மக்களே, இந்த பதிவு இவ்வள்வு தான். அடுத்த பதிவில் விரைவில் சந்திப்போம்.

Related Posts Widget for Blogs by LinkWithin