சூப்பர் ஸ்டார் ரஜினி'யின் ரோபோ பட ஷூட்டிங் - சென்னை ஒலிம்பியா டெக் பார்க்'ல்

என்னதான் பரம ரகசியமாக வைத்து இருந்தாலும் ரஜினி படத்தை யாராலும் மறைக்க முடியாது என்பது மறுபடியும் நிரூபணம் ஆகி உள்ளது.


கடந்த ஞாயிற்று கிழமை அன்று (அதாங்க சண்டே 15-02-2009) சென்னையில் இருக்கும் ஒலிம்பியா டெக் பார்க்'ல் ரோபோ பட ஷூட்டிங் நடை பெற்றது. அந்த படப் பிடிப்பின் பிரத்யேக புகைப் படங்கள் இதோ ரசிகர்களின் பார்வைக்காக:




ரஜினியும் வில்லனும் அருகருகே: இந்த வில்லனை பார்த்தால் ஏதோ ஒரு ஆங்கிலப் படத்தில் வரும் வில்லனை அப்படியே காப்பி அடித்தது போல உள்ளது.



ஷங்கருக்கு இது ஒன்றும் புதிது அல்லவே. ஏற்கனவே அவர் சிவாஜி படத்தில் வரும் மொட்டை ரஜினியை ஷாப்ட் என்ற படத்தின் நாயகனை மைய்யமாக கொண்டே அமைத்தார்.




ஏதேது? படத்தில் ரஜினி வெயிட் போட்டு உள்ளதைப் போல தெரிகிறதே? இந்த படத்தில் உள்ள ரஜினி கமல் போல இருக்கிறார் (ஆளவந்தான் கமல்)





இது தான் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி. எப்பவும் ஸ்டைல். எல்லாமே ஸ்டைல்.


அடுத்த வாரம் வேற எங்கே ஷூட்டிங் பண்ணலாம்?




வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர் செய்த அமெரிக்க தொழில் அதிபர் ஆலன் ஸ்டான்போர்ட் கைது

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு மேலும் ஒரு துக்க செய்தி.

வியாபார காந்தம் ஆலன் ஸ்டான்போர்ட் அமெரிக்க போலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.


அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த திரு ஆலன் ஸ்டான்போர்ட் அவர்கள் இன்று அமெரிக்க போலிஸ் அதிகாரிகளால் திடீரென்று கைது செய்யப் பட்டர். அமெரிக்க பங்கு வர்த்தக செக்கியூரிடிஸ் மற்றும் எக்ஸ்செஞ் துறையினர் "நினைத்தே பார்க்க இயலாத அளவிற்கு' ஒரு பெரிய குற்றத்தை இவர் செய்ததாக கூறியுள்ளனர்.
ஸ்டான்போர்ட் அவர்கள் அமெரிக்காவை சேர்ந்தவராக இருந்த போதிலும் அவர் வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் ஒன்றான அன்டீகா & பார்புடா குடிய்ரிமையையும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பெற்றார்.

இவர் யார்? சென்ற ஆண்டு உலகிலேயே ஒரு போட்டிக்காக அதிகபட்ச தொகையாகிய இருபது மில்லியன் டாலர்களை எப்படி இவர் அளித்தார்? (ஆம், சென்ற ஆண்டு ஸ்டான்போர்ட் சூப்பர்ஸ்டார்ஸ் அணி இங்கிலாந்து அணியை தோற்கடித்து இதனை வென்றது).

1932ல் தன்னுடைய தாத்தா துவக்கி வைத்த ரியல் எஸ்டேட் கம்பெனியை ஸ்டான்போர்ட் பொறுபேற்று கொண்டது என்னவோ 1980ல் தான். பின்னர் அந்த கம்பெனியை பல சாதனைகள் புரிந்து (நம்ம சத்யம் ராமலிங்கராஜு போலவா?) இன்று உலகின் முன்னணி கம்பெனிகளில் ஒன்றாக கொண்டு வந்துள்ள இவர் இன்று கைது செய்யாப் பட்டது உண்மையிலேயே அதிர்ச்சி அளிக்கும் ஒரு தகவல் தான்.

வெஸ்ட் இண்டீஸ் அணியை சற்று நினைத்து பாருங்கள். உலகிலேயே வறுமையில் அடிபடும் அணியாகிய அணிக்கு ஒரு ஆபத்தாந்தவனாக வந்தவர் இந்த ஸ்டான்போர்ட். கடந்த வாரம் தான் தன்னுடைய அனைத்து கிரிகெட் சார்ந்த பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தார்.
அவருக்கு முன்பே தெரியுமோ என்னவோ?
மேல் தகவல்களுக்கு:
crikinfo சுட்டி: Click here
ஸ்டான் போர்ட் பற்றிய விகிபீடியா சுட்டி: click here.

நம்ம ஊர் நடிகர்களின் வருங்கால படங்கள் - ஒரு காமடி

நம்ம ஊர் நடிகர்களின் வருங்கால படங்கள் - ஒரு காமடி: இப்போ போற போக்கை பார்த்தல் படங்களின் பெயருக்கு கூட பஞ்சம் வந்து விடும் போல இருக்கிறது. அதனால் நம்முடைய சூப்பர் நடிகர்களுக்கு அந்த நிலைமை வரக் கூடாது என்று நானே (சுயமாக சிந்திச்சு) சில தலைப்புகளை சூட்டி உள்ளேன். குறிப்பிட்ட நடிகர்களின் ரசிகர்கள் கோபிக்க வேண்டாம்.



முதலில் நம்ம கேப்டன் விஜயகாந்த் = தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், தூத்துக்குடி, மயிலாடுதுறை, இப்படியே போக வேண்டியது தான். என்ன ஒரு பிரச்சினை நம்ம பேரரசு சண்டைக்கு வருவார்.






அடுத்து நம்ம இளைய தளபதி விஜய், மன்னிக்கவும் டாக்டர் விஜய்: வில்லு, அம்பு, கம்பு, கத்தி, கபடா, நெறைய இருக்கு.

அருவாள், வீச்சரிவா என்று போனால் தான் ஹரி சண்டைக்கு வருவார்.




தல அஜித் = அசல், நகல், ஒரிஜினல், ஜெராக்ஸ், கலர் ஜெராக்ஸ், இன்னும் நெறைய நெறைய இருக்கு. அப்படி இது சரியா வரலன்னா, அசல், வட்டி, கடன், மீட்டர் வட்டி, கந்து வட்டி, இப்படியும் போகலாம். எப்படி வசதி?



சூர்யா = வாரணம் ஆயிரம், தோரணம் ரெண்டாயிரம், பூரணம் மூவாயிரம், பஞ்சவர்ணம் நாலாயிரம், காரணம் அஞ்சாயிரம் இப்படி சொல்லிகிட்டே போகலாம்.


என்ன, மாமா பிஸ்கோத்து என்று யாரும் கேக்காத வரை.






வருங்கால (அது எப்போ வருமோ) சூப்பர் ஸ்டார் இன்றைய லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு = சிலம்பாட்டம், புலியாட்டம், கரகாட்டம், குயிலாட்டம், மயிலாட்டம், பாம்பாட்டம் இப்படி பல கலைகளை கூறிக்கொண்டே போனால் போதும்.

அந்த பெயரில் எல்லாம் சிம்பு வருவார்.





நடிகர் ஜீவா (அப்ப மத்தவங்க எல்லாம்?) = ஈ, கொசு, எறும்பு, கரப்பான்பூச்சி, மூட்டபூச்சி, மண்புழு... சொல்ல சொல்ல கொமட்டிட்டு வருது. இதோட நிறுத்திக்குவோம். பேசாம அவர் ராமேஸ்வரம், காசி, கன்னியாகுமரி, இப்படி ஸ்டார்ட் செய்யலாமே?



புரட்சி தளபதி விஷால் = சத்யம், சங்கம், அபிராமி, உதயம், வூட்லண்ட்ஸ், தேவி, ஐநாக்ஸ், இன்னும் நெறைய இருக்கு.







இயக்குனர் சேரன் (அப்போ ஓட்டுனர் சேரன் யாராம்?) = ராமன் தேடிய சீதை, லக்சுமணன் தேடிய சீதை, அனுமன் தேடிய சீதை, ராவணன் தேடிய சீதை, வாலி தேடிய சீதை, சூர்பனகை தேடிய சீதை யப்பா முடியல. இது போர் அடிச்சா, கைகேழி தேடிய சீதை, கூனி தேடிய சீதை, பாரதன் தேடிய சீதை என்றும் ஆரம்பிக்கலாம்.







நகுல் = காதலில் விழுந்தேன், ரோட்ல விழுந்தேன், பைக்'ல விழுந்தேன், கிழே விழுந்தேன், செப்டிக் டாங்கில் விழுந்தேன் இன்னும் நெறைய எதிர் பார்க்கிறோம்.


நாயகன் ஜீவன் = தோட்டா, புல்லட், பீரங்கி, துப்பாக்கி. பழைய படமா வேணும்னா ரெட்டை குழல் துப்பாக்கி, காது வச்ச பீரங்கி இன்னும் கூட இருக்கு. சொல்லட்டுமா?









சியான் விக்ரம் = கந்தசாமி, கருப்புசாமி, குப்புசாமி (அட நம்ம நல்லி குப்புசாமி இல்லாப்பா), குழந்தைசாமி, மாடசாமி, ஆருச்ச்சாமி, எழுச்சாமி, எட்டுச்சாமி, இப்படி பெயர் வச்ச இது ஒரு வசதி.







பார்க்க பார்க்க பிடிக்கும் தனுஷ் = படிக்காதவன், உருப்படாதவன், தருதல, ஒன்னுத்துக்கும் ஒதவாதன், சூப்பர் ஸ்டார் மருமகன் என்பதால் அவர் ரசிகர்கள் கோபிசுசுகுவாங்கோ.


ஆர்யா = நான் கடவுள், நான் மிருகம், நான் பேய், நான் சாத்தான், நான் பிசாசு, நான் பைத்தியம்



ஜெயம் ரவி (நம்ம செந்தழல் ரவி பிரண்டா?) = சம்திங் சம்திங், நத்திங் நத்திங், எனிதிங் எனிதிங், எவ்ரிதிங் எவ்ரிதிங் இப்படி பல.


நரன் = அஞ்சாதே, ஆறாதே, எழாதே, எட்டாதே,




மக்கள் தலைவர் சரத் குமார் = 1977, 1978, 1979, 1980 ...அய்யா, நீங்க 2011க்கு வர ரொம்ப காலம் பிடிக்குமே?


எஸ்.ஜெ.சூர்யா = நியுட்டனின் மூன்றாம் லா, பாஸ்கல் லா, ஒம்'ஸ் லா, ஷகீ லா,


மாதவன் = குரு என் ஆளு, ப்ரியா உன் ஆளு, நமிதா என் ஆளு, (சிம்பு) நயன் என் ஆளு,



கார்த்தி = பருத்தி வீரன், புண்ணாக்கு வீரன், கழனி தண்ணி வீரன், மாட்டு தீவனம் வீரன்



சாந்தனு = சக்கர கட்டி, உப்புக் கட்டி (புரடியூசருக்கு), சுண்ணாம்பு கட்டி (படத்த பார்த்தவங்களுக்கு), சந்தன கட்டி (அப்பாவுக்கு)



இந்த லிஸ்ட் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?

2009ல் சிங்களம், 2011ல் தமிழகம்-இளைய தபதி விஜய் அவர்களின் முழக்கம்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். பல நாட்களாக இந்தியாவில் இல்லாததால் என்னால் வலையுலக பணிகளை கவனிக்க முடியவில்லை. மன்னிக்கவும்.

திரும்பிய உடனே எனக்கு ஒரு அதிர்ச்சி மெயில் வந்தது. அதனை பார்த்த உடனே எனக்கு ஒரு கணம் கையும் ஓட வில்லை, வில்லும் - மன்னிக்கவும் - காலும் ஓட வில்லை.


இதோ அந்த படங்களை உங்களின் மேம்பட்ட பார்வைக்கு வைத்து உள்ளேன். பாருங்கள்.



சிவபெருமானுக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம்?

அட, விஜய்க்கும் சிங்களத்துக்கும் என்ன சம்பந்தம்?

அட, 2011க்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம்?


இதை எல்லாம் கேட்டால் நம்மளை முட்டாள்'ன்னு சொல்றாங்க தல.

இப்போது சில பல கேள்விகள்:

இவை எல்லாம் டாக்டர் விஜய் அவர்களின் பார்வைக்கு போகுமா?

எல்லாம் தெரிந்துமா அவர் சும்மா இருக்கிறார்?

ஹிந்து முன்னணி என்ன செய்து கொண்டு இருக்கிறது? முன்பு ஒருமுறை இதைப் போல போஸ்டர் ஒட்டியதற்கு அவர்கள் பிரச்சினை செய்ததாக நியாபகம்.

இந்த முறை விஜய் அவர்கள் எடுபட்டு உள்ளதால் அமைதியாக விட்டு விட்டார்கள?

இதை படித்து விட்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

போய் தமிலிஷ்'இல் வோட்டு போடுங்கள் சார்,உங்களுக்கு புண்ணியமாக போகும்.
Related Posts Widget for Blogs by LinkWithin