Showing posts with label Cricket. Show all posts
Showing posts with label Cricket. Show all posts

இந்தியா தென்னாபிரிக்கா மூன்றாவது டெஸ்ட் முதல் நாள் + இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகள் India in 2011

மக்களே,

மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் (வழக்கம் போல இன்றைய ஆட்டத்திலும் முன்னணி பெற்றும் அதனை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள தவறி விட்டோம்) இந்திய அணியின் விளையாடும் ஆட்டங்களையும், அது எப்படி இருக்கும் என்று என்னுடைய கணிப்பையும் இந்த பதிவில் பார்ப்போம்:

இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்: 2010-2011

இந்த டெஸ்ட் போட்டியில் தோற்றால் கூட இந்திய அணியானது வரும் ஜூன் மாதம் வரை டெஸ்ட் போட்டிகளில் முதல் இடத்திலேயே இருக்கும் அளவிற்கு தன்னுடைய ரேங்கிங் பாயிண்ட்டுகளை பெற்றுள்ளது. (நடுவில் ஒருநாள் போட்டிகளுக்கான உலக கிண்ண போட்டிகள் வருகின்றன - டெஸ்ட் போட்டிகள் கிடையாது).

இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி சிறப்பாக ஆரம்பமாகி இருக்கிறது. கடந்த 14 போட்டிகளில் இரண்டாம் முறையாக டாசில் ஜெயித்தார் தோனி. அதுவே பெரிய விஷயம். பார்க்கலாம், இந்த வருஷமாவது அவருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதா என்று. டாசில் ஜெயித்த பிறகு இந்திய அணியானது பீல்டிங் செய்யும் முடிவை எடுத்தது. கடந்த இரண்டு போட்டிகளில் கடினமான சூழலில் இந்திய அணி பேட்டிங் செய்வதும், தென்னாபிரிக்கா அணி சற்று சாதகமான சூழ்நிலையில் பேட்டிங் செய்வதும் தொடர்ந்தது. ஆனால் இந்த போட்டியில் அப்படி நடக்க வில்லை. காலையில் பந்துவீச்சிற்கு சாதகமான நிலையில் தென்னாபிரிக்க அணி விளையாட வந்தது. ஊருக்கு உத்தமர் ஆகிய கிரீம் ஸ்மித் சென்ற போட்டியில் தைரியமாக முதல் பந்தை சந்திக்காமல் விரைவில் ஜாகிர் கானிடம் அவுட் ஆனார். இரண்டாம் இன்னிங்க்சில் என்னமோ தெரியவில்லை, தானே ஜாகிர் கானின் முதல் பந்தை சந்தித்தார். சற்றே தாக்குப்பிடித்து விளையாடினார். ஆனால், ஸ்ரீஷாந்த் பந்துவீச்சின் வேகத்தையும், அவரது பேச்சின் தாக்கத்தையும் சந்திக்க முடியாமல் ஒரு கற்றுக்குட்டி போல டென்ஷன் ஆகி அவுட் ஆனது அந்த போட்டியின் சிறப்பு அம்சம். இந்த நிலையில் யார் ஜாகிர் கான் வீசும் பந்தை சந்திப்பார்கள் என்று பார்க்க ஆவலாக இருந்தேன்.

ஜாகிர் கானை பொறுத்த வரையில் ஸ்மித்தின் விக்கெட் எப்போதுமே ஒரு டிராவலர்ஸ் செக் போனது. எப்போது வேண்டுமானாலும் அவர் என்கேஷ் செய்துக்கொள்வார். சென்ற போட்டியில் இரண்டாவது இன்னிங்க்சில் ஸ்விங் இருக்காது என்ற சூழலில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு முதல் பந்தை சந்தித்த ஸ்மித், இந்த போட்டியில் காலை வேளையில் காற்றின் ஈரப்பதம் மற்றும் ஓவர்காஸ்ட் கண்டிஷன் சூழலில் எட்டாவது டெஸ்ட் ஆடும் பீட்டர்சனை முதல் பந்தை சந்திக்க விட்டார். தொண்ணூறு போட்டிகளை கண்ட ஒரு வீரர் இப்படி ஆடுவது எனக்கு சற்றே ஏமாற்றத்தை கொடுத்தது. 

சென்ற போட்டியில் சேவாக் (வழக்கமாக சேவாக் முதல் பந்தை சந்திக்க மாட்டார்) விஜய் முதல் பந்தை சந்திக்க சென்ற பொது, தடுத்து தானே முதல் பந்தை சந்தித்து ஆடினார். அதுதான் ஒரு சீனியர் செய்யும் செயல். ஆனால், வழக்கமாக முதல் பந்தை சந்திக்கும் ஸ்மித், ஜாகிர் கான் என்றவுடன் பீட்டர்சனை ஆடவிட்டது அவரது குழப்பமான மனநிலையை வெளிப்படுத்தியது. நான் அப்போதே முடிவு செய்துவிட்டேன். ஜாகிர் கான் தன்னுடைய டிராவலர்ஸ் செக்கை என்கேஷ் செய்துவிடுவார் என்று. அதுதான் நடந்தது.

வெளிச்சம் குறைவாகவும், லேசான மழைத்தூறல் வந்ததாலும் ஆட்டம் ஒன்றரை மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. மதிய உணவை முடித்துக்கொண்டு வந்த தென்னாபிரிக்கா அணியினரை இஷாந்த் ஷர்மா ஒரு விக்கெட் வீழ்த்தி அதிர்ச்சியடைய வைத்தார். பின்னர் அந்த அணியின் மிகச்சிறந்த இரண்டு ஆட்டக்காரர்களும் சேர்ந்து அணியினை தொய்வில் இருந்து தூக்கி நிறுத்தினார்கள். குறிப்பாக ஆம்லா விளையாடியபோது, அவருக்கு ஆடுகளம், சூழல், தட்பவெப்பம், எதிரணி என்று எதுவுமே தோன்றாமல் வெறும் பந்தை மட்டுமே கவனத்தில் கொண்டு சிறப்பாக ஆடினார். அவரது கவுண்டர் அட்டாக்கிங் ஆட்டம் இந்திய அணியை சற்று தடுமாற வைத்தது. முதல் 50 ரன்கள் குவிக்க 111 பந்துகள் எடுத்துக்கொண்ட தென்னாபிரிக்கா, ஆம்லாவின் அதிரடியால் இரண்டாவது 50 ரன்களை வெறும் 51 பந்துகளிலேயே குவித்தனர்.  பின்னர் ஸ்ரீசாந்தின் அதிரடியான பவுன்சர்களால் சற்றே கவனம் குறைந்து தன்னுடைய விக்கெட்டை ஒரு சிறப்பான பிளான் செய்யப்பட்டு எக்சிகியூட் செய்யப்பட்ட பந்துவீச்சில் இழந்தார் ஆம்லா.

தென்னாப்பிரிக்காவின் சிறந்த பேட்ஸ்மேன் ஆவதே தன்னுடைய லட்சியம் என்று சொல்லியுள்ள டீ வில்லியர்ஸ் ஸ்ரீசாந்தின் மற்றுமொரு அட்டகாசமான அவுட் ஸ்விங்கர் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். ஸ்கோர் 164/4. விரைவிலேயே மற்ற விக்கெட்டுகளை வீழ்த்திவிடலாம் என்று இந்திய அணி நினைத்தாலும், கப்தான் தோனியின் டிபென்சிவ் அப்ரோச்சினால் (காலிஸ் மற்றும் பிரின்ஸ் இருவரின் தேர்ந்த ஆட்டத்தினாலும், நான்காவது வேகப்பந்து வீச்சாளர் இல்லாத காரணத்தினாலும்) அடுத்து வேறெந்த விக்கெட்டையும் சாய்க்க இயலவில்லை. ஆட்டமும் முடிந்தது.

1st Day நாளைக்கு காலையில் விரைவாக காலிஸ் விக்கெட்டை வீழ்த்திவிட்டு, முன்னூறு ஓட்டங்களுக்குள் தென்னாப்பிரிக்காவை கட்டுப்படுத்தினால், இந்திய அணிக்கு பிரகாசமான வெற்றிவாய்ப்பு இருக்கிறது. இந்த ஆடுகளமானது வழக்கமாக இரண்டாம் மற்றும் மூன்றாம் நாட்களில் மட்டைப்பந்தாட்டதிற்கு (அதாங்க பேட்டிங்) மிகவும் சாதகமான ஒன்று. அதற்க்கு பிறகு நான்காம் மற்றும் ஐந்தாம் நாட்களில் சுழல் பந்து வீச்சிற்கு சற்று (கவனிக்கவும், சற்றுதான்) உபயோகமாக இருக்கும். ஆகையால் நாளைக்கு இந்திய அணியின் ஆட்டமானது இந்த போட்டியை நிர்ணயிக்கும்.

என்னுடைய கணிப்பு: இந்தியா முதல் இன்னிங்க்சில் நானூறு ஓட்டங்களை குவித்தால் வெற்றி பெரும்.

ஒரு நாள் போட்டிகள்:Ind Vs SA 

இந்திய அணி சேவாக் இல்லாமல் விளையாடப்போகிறது. அணியின் பந்து வீச்சு இந்த போட்டிகளை நிர்ணயிக்கப்போகிறது. இந்த ஒரு நாள் போட்டிகள் தொடர் அதிக அளவில் ரன்களை கொண்ட ஒரு தொடராகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஒரு முக்கியமான விஷயம் - ஒரு நாள் போட்டிகளில் இருநூறு ரன்களை குவித்த பிறகு சச்சின் இன்னமும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவே இல்லை. அவர் விளையாடும் அடுத்த போட்டி இதுதான். யுவராஜ் சிங்கிடம் இருந்தும், யூசுப் பதானிடம் இருந்தும் சிறப்பான ஆட்டத்தினை எதிர்ப்பார்க்கலாம்.

என்னுடைய கணிப்பு: தென்னாபிரிக்கா 3-2 or 4-1.

India’s upcoming matches in World cup and 2 immediate Tours after the IPL 3:

Indian Team நாளைக்கு ஆஷஸ் மற்றும் இந்திய அணியின் போட்டிகளை பற்றி விரிவாக பேசுவோம்.

ஆஷஸ் தொடர் நான்காம் நாள்: சொதப்பிய ஆஸ்திரேலியாவும், தலைதூக்கிய இங்கிலாந்தும்

மக்களே, 

ஆஷஸ் தொடரானது இந்த வியாயக்கிழமை அன்று ஆரம்பித்தது. அதன் தொடக்கம் பற்றிய எனது பதிவு இதோ: ஆரம்பித்து விட்டது ஆஷஸ் தொடர்.

ஆஷஸ் தொடர் - முதல் நாள்:

மூன்றாவது பந்திலேயே தங்களது அணியின் கேப்டனையும், பார்ம்’படி சிறந்த பேட்ஸ்மனையும் இழந்த இங்கிலாந்து அணி, முதலாவது ட்ரிங்க்ஸ் பிரேக்குக்குள் டிராட்டையும் இழந்து நின்றபோது, நடமாடும் ஈகோ என்று ஷேன் வார்னேவால் அழைக்கப்பட்ட கெவின் பீட்டர்சன் ஓரளவுக்கு நன்றாக ஆடி வந்தார். அவருடன் துணை தலைவர் குக்கும் ஆட, நான்கூட இங்கிலாந்து சுதாரிக்கும் என்று நம்பினேன். ஆனால் இரண்டு இடங்களில் அவர்கள் கோட்டை விட்டார்கள்.இந்த கப்பா மைதானமானது வழக்கமாக முதல் மூன்று நாட்களுக்கு பேட்டிங் சொர்க்கம் என்று அழைக்கப்படும். முதல் இரண்டு மணி நேரங்களை சமாளித்து ஆடிவிட்டால், அன்று முழுவதும் ரன் வேட்டைதான் என்பது அங்கு நிலவும் சூழல்.

1. ஒரே ஓவரில் பீட்டர்சனும், பூவர் மேன்'ஸ் டிராவிட் என்றழைக்கப்படும் காலின்வுட்டும் அவுட்டாக திடீரென்று 2/119 என்ற நிலையிலிருந்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து 4/125 என்று வந்துவிட்டனர்.

2. சரி, அந்த நிலையில் இருந்து சென்ற லோக்கல் மேட்ச்சில் Near இரட்டை சதமடித்த (192)  இயன் பெல்லும், குக்கும் சேர்ந்து ஆடி, ஸ்கோரை இருநூறுக்கு அருகாமையில் கொண்டு சென்றபோதுகூட முன்னூற்றி ஐம்பது என்ற பாதுகாப்பான ஸ்கோரை நோக்கி இங்கிலாந்து போவதாக உணர்ந்தேன். ஆனால் பத்து மாதங்கள் கழித்து விளையாட வந்திருக்கும் Peter Siddle அனாயசமாக ஒரு ஹாட் ட்ரிக் எடுத்து இங்கிலாந்தின் லோயர் மிடில் ஆர்டரை நிலைகுலைய வைத்துவிட்டார். அதிலிருந்து இங்கிலாந்து மீளவே இல்லை. அவர்கள் 260 ரன்னுக்கு மொத்த விக்கெட்டையும் இழந்தனர்.

இதையும் தாண்டி வேறிரண்டு விஷயங்களை சொல்லியே தீரவேண்டும்: ஒன்று –ve, மற்றொன்று +ve.

  • ரிக்கி பாண்டிங்கின் ரொம்பவும் சாதாரணமான கேப்டன்ஷிப். முதல் நாளில், முதல் ஓவரில் கேப்டனை இழந்த இங்கிலாந்து அணி கொஞ்சம் கூட கஷ்டமே படாமல் ரொம்பவும் சாதாரணமாக ரன்களை குவித்தது. பீல்ட் பிளேஸ்மென்ட்டும், பந்துவீச்சாளர் தேர்வும் ரொம்பவும் சாதாரணம். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம். ஏதோ கொஞ்சம் லக் இருந்ததால் வாட்சன் ஒரு விக்கெட்டும், சிட்டில் இரண்டு முக்கியமான ஓவர்களில் (லஞ்ச்ச் பிரேக்கிர்க்கு அப்புறம் ஒன்றும், டீ பிரேக்கிர்க்கும் அப்புறம் ஒன்றும்) விக்கெட்டுகளை எடுக்காமல் இருந்திருந்தால் பாண்டிங்கின் கேப்டன்ஷிப் மீது இருக்கும் கேள்விக்குறி தொடர்ந்திருக்கும்.
  • இரண்டாவது, மைக் ஹஸ்ஸியின் கிரவுண்ட் பிரசன்ஸ். ஆமாம், முதல் நாள் முழுவதும் ஹஸ்சியை பார்க்கையில் தன்னுடைய முதல் டெஸ்ட் விளையாடும் ஒரு டீனேஜரையே காண முடிந்தது. அந்த உற்சாகம் மற்ற வீரர்களிடமும் பரவி ஆஸ்திரேலியா அணி ரொம்ப நாள் கழித்து ஒரு டீம் போல விளையாடியது.  

ஆஸ்திரேலியா 1-0 இங்கிலாந்து (At least, Psychologically)

image

ஆஷஸ் தொடர் - இரண்டாம் நாள்:

முதல் செஷனை ஆஸ்திரேலியா கைப்பற்றி இருந்தாலும்கூட இரண்டாம் செஷனில் வாட்சன், பாண்டிங் போன்ற முக்கியமான ஆட்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒரு கட்டத்தில் 5/143 என்ற நிலைக்கு தள்ளி விட்டனர்.

இந்த இடத்தில் நாம் பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்: 

  • விக்கெட் கீப்பர் ஹாடின் பல மாதங்கள் கழித்து ஆடும் முதல் மேட்ச் இது. மேட்ச் பிராக்டிஸ் இல்லாமல் விளையாடுகிறார்.
  • இரண்டு ஆண்டுகளாக ஹஸ்சி போராடி வருகிறார். சென்ற இந்திய சுற்றுப்பயணத்தின் போதுகூட சொதப்பியதால் அவரின் தலைக்கு மேலே கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது.
  • அடுத்து ஆட வரும் வீரர்கள் ஒன்றும் பேட்டிங்கில் ஒன்றும் பிரமாதமாக ஆடுபவர்கள் அல்ல என்பதை கடந்த இந்தியா, பாகிஸ்தான் தொடர்களின் முடிவை பார்த்தாலே தெரியும்.

ஆகையால் இந்த சூழலில் ஒரு ஐம்பது ரன் லீட் என்ற நிலையில் ஆஸ்திரேலியாவை மடக்கி இருந்தால் கூட போதும், இங்கிலாந்து ஜெயிக்க பிரகாசமான வாய்ப்பும், முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கில் சொதப்பியதால் ஏற்பட்ட மனோத்தத்துவ அட்வாண்டேஜ்ஜை மறுபடியும் திரும்ப பெறலாம்.

இந்த இடத்தில் இரண்டு விஷயங்களை குறிப்பிட்டே ஆகவேண்டும்:

  • ஒன்று: இங்கிலாந்தின் பந்துவீச்சு. (என்னுடைய கணிப்பில் சற்றே ஓவர் ரேட்டட்) ஸ்பின்னர் ஸ்வான் தடுமாறினார். அல்லது அவரை நிலைகொள்ள ஆஸ்திரேலியா வீரர்கள் விடவில்லை. முதல் ஐந்து ஓவர்களில் முப்பத்தி நான்கு ரன்களை குவித்தனர். அவரை கொஞ்சம் கூட நிலைக்கவே விடாமல் தொடர்ந்து அவரை தாக்கி விளையாடினர். குறிப்பாக ஹஸ்ஸியும், ஹாட்டினும்.
  • அதைப்போலவே மற்றுமொரு விஷயம் - ஆண்டர்சனின் முதிர்ச்சி. சென்ற தொடரில் ஆஸ்திரேலியாவில் தடுமாறிய ஆண்டர்சன் இந்த தொடரில் ஒரு லீடிங் பந்து வீச்சாளர் போலவே பந்து வீசினார்.

End Of Day: Australia - 220/5 in 80.0 overs (MEK Hussey 81, BJ Haddin 22)

என்பது ஓவர்கள் முடிந்ததால் புதிய பந்தை இங்கிலாந்து அணி உபயோகப்படுத்த அமைந்த வாய்ப்பும், சிறிது நேரம் பெய்த மழையால் மறுபடியும் பிரெஷ் ஆகி இருக்கும் மைதானத்தில் புதிய பந்தை உபயோகப்படுத்தும் டைமிங்கும் இங்கிலாந்திற்கு முன்னணியை தந்தன. ஆனால் இங்கேயும் வழக்கத்திற்கு நேர்மாறாகவே நடந்து (இந்த நான்கு நாட்களிலும் அவ்வாறே நடந்து வருகிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்).

ஆஸ்திரேலியா 1-0 இங்கிலாந்து

ஆஷஸ் தொடர் – மூன்றாம் நாள்: இங்கிலாந்தின் மோசமான மூன்றாவது நாள்.

ஆனால், நடந்தது என்னவோ மற்றுமொரு திருப்புமுனை சம்பவம்: ஆம், ஹஸ்ஸியும் ஹாட்டினும் ஆளுக்கொரு சதமடித்து முன்னூறு ரன்கள் குவித்தனர். இங்கே இரண்டு விஷயங்கள் அதற்க்கு உதவின.

  • ஒன்று:  சில நேரங்களில் கேப்டன்ஷிப் என்பது சேசிங் தி பால் என்று சொல்வார்கள் (அதாவது பந்து எங்கே சென்றதோ, அங்கே பீல்டர்களை வைப்பது, சமீபமாக நம்ம டோனி செய்து வருகிறார்). இந்த மூன்றாவது நாளில் இங்கிலாந்து அதையே செய்தது. அதைப்போலவே பீல்டிங்கிலும் இன்ஸ்பிரேஷன் ஆக எதுவுமே இல்லை.
  • இரண்டு: ஒரு முன்னூறு ரன் பார்ட்னர்ஷிப் நடக்கும்போது வழக்கமாக எதிர் அணி தலைவர்கள் இரண்டு முயற்சிகளை மேற்கொள்வார்கள்: (1) டைட்'ஆக பந்து வீசி, ரன்களை முற்றிலுமாக மட்டுப்படுத்தி, நெகடிவ் லைனில் பீல்டிங் வைத்து, ரன் குவிப்பை தடுப்பதின் மூலம் விக்கெட்டுகளை பெற முயற்சிப்பது (2) அல்லது முற்றிலுமாக அட்டக்கிங் பந்துவீச்சு செய்து விக்கெட்டுகளை எடுக்க முயல்வது.

இங்கிலாந்து இரண்டையுமே செய்யவில்லை.  Australia 2 – 0 England.

பின்னர் நடந்தது என்னவோ வழக்கமாக நடக்கும் ஒன்றுதான் (Both for Aus batting & Eng Bowling): கடைசி ஐந்து விக்கெட்டுகள் மட மடவென முப்பது ரன்களுக்கு வீழ்ந்து, சமீபத்து சாதனைகளை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டனர். அசாதாரண உயரத்தில் இருக்கும் ஸ்டீவன் பின் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Australiya 2 – 1 England.

கடைசியாக இங்கிலாந்து இருநூறு ரன்கள் பின்னடைவை பெற்று விளையாட வந்த போது அன்றைய ஆடப்போழுது முடிய பதினைந்து ஓவர்கள் இருந்தன. வழக்கமாக இந்த மாதிரி ஓவர்கள் ஒப்பனிங் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனம். அதுவும் அணியின் தலைவரும், உப தலைவரும் ஒப்பனிங் வீரர்களாக இருந்தால் சொல்லவே வேண்டாம். ஆனால் அந்த பதினைந்து ஓவர்களை பொறுமையாக ஆடி (மொத்தம் பத்தொன்போதே ரன்களை எடுத்தாலும்) விக்கெட் இழக்காமல் அன்றைய பொழுதை கழித்தது முதல் பதிலடி.

image

ஆஷஸ் தொடர் – நான்காம் நாள்: ஆஸ்திரேலியாவின் மோசமான நான்காம் நாள்.

இந்த நான்காம் நாள் பற்றி பலரும் பலவிதமாக பேசிக்கொண்டார்கள். வழக்கம்போல ஆஸ்திரேலியா ஆரம்ப செஷனில் விக்கெட்டுகளை வீழ்த்திடும், இங்கிலாந்து அணி தடுமாறும், ரன்கள் குவிப்பது கஷ்டம், விக்கெட் சுழற்சி எடுக்க ஆரம்பிக்கும் என்றெல்லாம் பல விதமான சிந்தனைகள். ஆனால் இதெல்லாம் நடக்க இப்போது மெக்கிராத்தும், வார்னேவும் இல்லை என்பதையே மக்கள் சுத்தமாக மறந்து விட்டார்கள்.

அதைப்போலவே இப்போது இருக்கும் டோஹர்த்தி என்ற இந்த புதிய ஸ்பின்னர் (என்று அழைக்கபடுகிறார்) பந்தை சுழலவே வாய்ப்பளிக்காமல் நம்ம ஹர்பஜனை விட வேகமாக பந்து வீசுகிறார். ஒரே ஒரு பந்தையத்தின் மூலம் இவரை இந்த முக்கியாமான டெஸ்ட் போட்டிக்கு தேர்ந்தெடுத்ததின் மூலம் ஆஸ்திரேலியாவின் பெஞ்ச் ஸ்டிரெணத்தை  அறியலாம். இன்றைய நான்காம் நாள் முழுவதுமே ஆஸ்திரேலியா அணியானது ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்த முடிந்தது என்பது, அந்த அணியின் பலவீனத்தை ஒட்டுமொத்தமாக குன்றிலிட்ட விளக்கு போல தெளிவாக்கிவிட்டது.

  • ஒப்பனிங் பவுலர்களின் ஸ்விங் இயலாமை.
  • மிட்ச்சல் ஜான்சனின் தொடர்ச்சியான மந்தமான ஆட்டம் (பேட்டிங்கிலும், பவுலிங்கிலும், ஏன், பீல்டிங்கிலும்கூட).
  • ஒரு முன்னணி, அனுபவம் உள்ள சுழல் பந்து வீச்சாளர் இல்லாதது (ஸ்பின் எடுக்கும் பிட்ச்சில் பந்து வீசுவது ஒரு கலை, எல்லா ஸ்பின்னராலும் அது முடியாது)
  • பீல்டிங்கில் ஒரு பிரகாசமான ஒரு துவக்கி இல்லாதது (ஒரு இன்ஸ்பிரேஷனல் பீல்டர் - ரெய்னா, காலின்வுட், போல லைவ் வயர்கள்).
  • மந்தமான கேப்டன்ஷிப்.
  • ஒட்டுமொத்த பந்துவீச்சு பெய்லியர்.
  • இங்கிலாந்தின் அட்டகாசமான பேட்டிங் மற்றும் ரன்னிங்.
  • இது போன்ற மைதானங்களில் தேவைப்படும் பந்துவீச்சாளர்களின் உயரமின்மை (ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை விட குள்ளமே)

image image

Australia 2 – 2 England (both Physically & mentally)

இந்த ஒட்டுமொத்த ஆஷஸ் தொடருமே நாளை நடக்கப்போகும் ஐந்தாம் நாளின் ஆட்டத்தை மைய்யமாக கொண்டே அமையும் என்பது ஏன் கணிப்பு. நாளைய பொழுதினை யார் சிறப்பாக ஆடுகிறார்களோ, அவர்களே இந்த தொடரினை வெல்லவும் செய்வார்கள் (என்று நம்புகிறேன்).

ஐந்தாம் நாள் எதிர்பார்ப்புகள்: இங்கிலாந்து அணி

  • ஒன்றரை செஷன்கள் ஆடி, பீட்டர்சன் ரன் குவித்து சுழல் பந்து வீச்சிற்கு சாதகமான அந்த பிட்ச்சில் டிக்ளேர் செய்து ஆஸ்திரேலியாவை மன அளவில் வீக் ஆக காட்டுவது, சிறிது லக் இருந்தால் (ஆஸ்திரேலியாவும் ஒத்துழைத்தால்) வெல்ல முயற்சிப்பது.
  • நாளைக்கு இருப்பது தொண்ணூறு ஓவர்கள். அதில் நாற்பது ஓவர்கள் விளையாடி நூற்றி அறுபது (பீட்டர்சன் கலக்கினால் இருநூறு) ரன்கள் குவித்து, மீதமிருக்கும் 48 ஓவர்களில், 250-280 ரன்கள் என்று டார்கெட் வைத்து ஆஸ்திரேலியாவை இன்னமும் பலவீனமாக்கலாம்.
  • அல்லது பீட்டர்சன், காலின்வுட், பிரையர் மற்றும் பிராட்  போன்ற வீர்கள் பேட்டிங் பிராக்டிஸ் பெறச்செய்யலாம். குறிப்பாக பீட்டர்சன் வரப்போகும் போட்டிகளில் கான்பிடென்ட் ஆக விளையாடுவது இங்கிலாந்திற்கு மிகவும் முக்கியம்.

ஐந்தாம் நாள் எதிர்பார்ப்புகள்: ஆஸ்திரேலியா அணி

  • இப்போது அணியில் கலைக்கிடமான நிலையில் இருப்பது மிட்ச்சல் ஜான்சன்தான். போல்லின்ஜர் தயாராக இருக்கும் நிலையில், பந்து வீச்சில் ஜான்சன் பிரகாசிப்பது ஆஸ்திரேலியாவுக்கு மிக, மிக முக்கியம்.
  • ஆஸ்திரேலியாவின் லோவர் ஆர்டரில் அவர் இருப்பது அணிக்கு மிகவும் முக்கியம்.
  • அணியிலேயே மிகவும் வேகமான பந்து வீச்சாளர் முதல் போட்டியிலேயே மொக்கையான ஆட்டத்திறன் மூலம் விலக்கப்படுவது எந்த ஒரு அணிக்குமே நல்லதில்லை.
  • நாளை தேவைப்படுவது ஒரு இன்ஸ்பிரேஷனல் துண்டு. (ஒரு அசாதாரண கேட்ச், ஒரு விளையாடமுடியாத பந்து, ஒரு சிறப்பான பீல்டிங், திடீரென்று ஒரு புதிய பந்து வீச்சாளரின் அறிமுகம், வித்தியாசமான ஒரு பீல்டிங் முயற்சி, ஏதாவது, ஏதாவது).
  • ஷேன் வார்னேவிற்கு பிறகு ஆஸ்திரேலியாவில் ஸ்பின்னர் என்றாலே குதிரைக்கொம்பாகி விட்ட சூழலில், கிடைத்த வாய்ப்பை டோஹர்த்தி இன்னமும் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும், கொஞ்சம் ஸ்லோ ஆக பந்து வீசினாலே போதும், மற்றவைகளை அந்த ஐந்தான் நாள் பிட்ச் பார்த்துக்கொள்ளும்.
  • முதல் செஷனில் இங்கிலாந்தின் முன்னணி விக்கெட்டுகளை வீழ்த்தி அவர்களின் முன்னேற்றத்தை தடை படுத்துவதே முக்கிய குறிக்கோளாக இருக்கவேண்டும், அப்படி செய்தால் ஜெயிக்கவும் ஏதேனும் ஒரு வாய்ப்பு அமையலாம்.
  • என்னதான் இந்தியாவில் மூன்று அரைசதம் அடித்தாலும், பாண்டிங் கடந்த இரண்டு ஆண்டுகளாக டிராவிட்டை விட மோசமாக ஆடி வருகிறார். அவரது ஆட்டத்திறன் மேல் இன்னமும் கேள்வி எழவில்லை என்றாலும் (மற்றவர்கள் அந்த அளவுக்கு மோசமாக இருக்கிறார்கள்) அவரது தலைமை மீது சரமாரியான தாக்குதல்கள் நடைபெற்றவண்ணமே உள்ளது.
  • இந்த தொடரில் ஜெயிக்க வில்லை என்றால் கண்டிப்பாக அடுத்த வருடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு புதிய கேப்டன் இருப்பது உறுதி (பாண்டிங் டீமில் இருப்பார் - வேறு வழி இல்லை).

வெடிகுண்டின் கணிப்பு: ஒரு டிரா (75% Chance) அல்லது ஆச்சர்யமான இங்கிலாந்து வெற்றி (25% Chance)

மலையாளத்தில் சுறா - സുരാ

மக்களே,

நேற்றுதான் என்னுடைய கேரளா சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினேன். வந்து பார்த்தால் அனைவரும் சூறாவளியில் (சுறாவலியில்?) சிக்கி சின்னா பின்னமாகி இருப்பது தெரிந்தது. ஆனால் என்னுடைய பதிவு சற்று வித்தியாசமான ஒன்றாகும். ஆம், நான் பதிவிடப்போவது மலையாள சுறா பற்றி. அதாவது இளைய தளபதி நடித்த சுறா படத்தின் மலையாள வடிவம் பற்றி.

என்னுடைய கேரளா சுற்றுப்பயனத்தினூடே நான் அவதானித்த விடயம் என்னவெனில் அங்கும் விஜய் ஒரு மாஸ் தான். அவருடைய படங்கள் அங்கும் பல தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது என்பதே. (இன்னமுமா மக்கள் நம்மளை நம்புறாங்க?). ஆனால் அவை டப்பிங் செய்யப்படுவதில்லை. மாறாக போஸ்டர்கள் மலையாளத்தில் இருந்தாலும்கூட படம் என்னவோ தமிழில்தான் உள்ளது.

DSC00163
DSC00162
DSC00160
DSC00159

இந்த நேரத்தில் எனக்கு மின் அஞ்சலில் வந்த சில பல மொக்கை மெயில்களை உங்களுக்கு சமர்பிக்கிறேன். பாருங்கள். ஏற்கனவே பார்த்திருந்தால் மன்னிக்கவும். படங்கள் அந்த போட்டோஷாப் திறனாளிக்கே சமர்ப்பணம். வாழ்க அவரது திறமை, வளர்க அவரது கற்பனை. (சார், கொஞ்ச நாளில் காவல்காரன் வருதாம், ரெடியா இருங்க).

1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24

என்ஜாய்.

கிரிக்கெட் கேப்டன் தோனி ஆரம்பித்து வைக்கும் நடிகர் விஜயகாந்த்தின் கேப்டன் டிவி 14th April 2010

நடிகர் விஜயகாந்த் அவர்கள் ஒரு தொலைகாட்சி சேனலை ஆரம்பிக்கப்போகிறார் என்பது ஊரறிந்த விஷயம். அதனைப் பற்றி நாம் கூறப்போவதில்லை. நாம் சொல்லப்போவது ஒரு ஸ்கூப் செய்தி. அந்த செய்தியை தெரிந்துகொள்ளும் முன் இதுவரை நடந்தது என்ன என்பதை சற்று நினைவு கூறுங்கள்:

இரண்டு மாதங்களுக்கு முன்பு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தங்களுடைய கட்சி தொண்டர்களுக்காக ஒரு தொலைக்காட்சி சேனலை ஆரம்பிக்க முடிவெடுத்து அதன் சின்னத்தையும் வெளியிட்டார். பின்னர் அந்த தொலைக்காட்சி தன்னுடைய நிகழ்சிகளை ஏப்ரல் மாதம் பதினான்காம் நாள் முதல் ஆரம்பிக்கும் என்று கூறப்பட்டது.

vijayakanth unwiling captain-tv logo DSC_0075 DSC_0062

வழக்கமாக தன்னுடைய படங்களில் மட்டுமே அரசியல் மற்றும் பன்ச் டையலாக்குகளை பேசி வந்த கேப்டன் இனிமேல் தன்னுடைய தொலைக்காட்சி சேனலிலும் இதுபோன்ற வசனங்களை அடிக்கடி பேசுவார் என்பதற்கு அவரின் ஆரம்ப நாள் விழாவின் சில வசனங்களே சான்று:

  • நான்காவது தூணின் மூன்றாவது கண் - கேப்டன் டிவி (The 3rd eye of the Fourth estate)
  • உள்ளது உள்ளபடி - இனி கேப்டன் டிவியில் மட்டுமே (Actuals – As it is : Only in Captain TV)

இதனிடையில் மீடியா துறையில் இருக்கும் என் நண்பர்கள் சிலரிடம் நான் விசாரிக்கையில் இதுவரையில் (சேனல் ஆரம்பிக்க இன்னும் மூன்று வாரங்களே பாக்கி இருக்கும் போது) அந்த சேனலில் பெரிய ஆட்களை நியமிக்கவில்லை என்றே சொன்னார்கள். அதாவது ஒரு சேனல் ஆரம்பிக்கும்போது பொதுவாக மற்ற சேனல்களில் இருக்கும் முக்கியமான நபர்களை போச் செய்வார்கள். இதற்க்கு சிறந்த உதாரணம் - கலைஞர் டிவி. அவர்கள் ஆரம்பித்த போது அனைத்து ஆட்களையும் சன் டிவியில் இருந்தே எடுத்தார்கள்.

ஆனால் கேப்டன் டிவியில் இதுவரை அந்த மாதிரி யாரையும் வேலைக்கு எடுத்த மாதிரியே தெரியவில்லை. திரு ஹெமாத்த்ரி என்பவர் தான் அங்கு நிகழ்ச்சிகளின் முதன்மை மேலாளராம். கேப்டனின் மச்சான் சுதீஷ் தான் CEO.

  • யாரோ ஒருவர் வசந்த் டிவியில் இருந்து விளம்பர துறைக்கு பொறுபேற்க இருப்பதாக தகவல். இது ஏப்ரலில் நடக்குமாம்.
  • இதுவரையில் கலைஞர் டிவியில் இருந்த ஒருவர் (அதாவது மானாட மயிலாட பைனல்ஸ் வரை) கேப்டன் டிவியின் ப்ரோக்ராம் மேனஜராகவும் சேர இருப்பதாக பேச்சு.
  • அதைப்போலவே பாலிமர் டிவியில் இருந்து ஒருவர் கேமரா டிபார்ட்மென்டுக்கும் சேர இருப்பதாகவும் கூட உபரி தகவல். 

RAJINI_WITH_FANS_14_20962f

kamal

ms-dhoni

இதெல்லாம் இப்படி இருக்கையில் கேப்டன் அவர்கள் தன்னுடைய சேனலை துவக்கி வைக்க தன்னுடைய அருமை நண்பர்களாகிய திரைத்துறையினரை கேட்டதாகவும், அதற்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், சூப்பர் நடிகர் கமல்ஹாசன் அவர்களும் ஒப்புக்கொண்டு தலைமையேற்க சம்மதித்தது இருப்பதும் உபரித்தகவல். வழக்கம் போல ஒரு தொலைக்காட்சி சேனலின் ஆரம்ப நிகழ்ச்சிக்கு இரண்டு முன்னணி நடிகர்கள் போகிறார்கள். இதில் என்னடா ஸ்கூப் நியூஸ் என்றா கேட்கிறீர்கள்?  இந்த இரண்டு நடிகர்கள் சென்றாலும்கூட அந்த சேனலை துவக்கி வைக்கப்போவது என்னவோ இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிதான். ஆம், (Acting) கேப்டன் சேனலை (Cricket) கேப்டன் துவக்கி வைக்கிறார். என்ன ஒரு பொருத்தம் பாருங்கள்?

உங்களுக்கு சந்தேகம் எனில் ஐ.பி.எல் போட்டிகளின் அட்டவனையை பாருங்கள் - ஏப்ரல் பதினான்காம் தேதி தோனி சென்னையில் இருப்பதும் அன்று அவர் ப்ரீயாக இருப்பதும் தெரிய வரும். இந்த செய்தியை இதற்க்கு முன்பு யாரும் கொடுத்து இருக்க வாய்ப்பே இல்லை. வெடிகுண்டு வெங்கட்டின் ஸ்கூப் நியூஸ் இது.

Tue Apr 13 - 14:30 GMT | 20:00 local - 20:00 IST : 48th match - Chennai Super Kings v Kolkata Knight Riders
MA Chidambaram Stadium, Chepauk, Chennai
Wed Apr 14 - 14:30 GMT | 20:00 local - 20:00 IST: 49th match - Rajasthan Royals v Royal Challengers Bangalore
Sawai Mansingh Stadium, Jaipur
Thu Apr 15 - 14:30 GMT | 20:IST: 50th match - Chennai Super Kings v Delhi Daredevils 00 local - 20:00
MA Chidambaram Stadium, Chepauk, Chennai

IPL – 3 Schedule: Cricinfo.

கேப்டன் டிவி துவக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க இருக்கின்றது. மாலை ஐந்து மணிமுதல் நடைபெறும் இந்த துவக்க விழா நிகழ்ச்சியை கேப்டன் டிவியில் நேரலை (அதாங்க லைவ்) தொகுப்பாக வழங்குகிறார்கள். அதுமட்டுமின்றி அன்று நடைபெறும் நிகச்சிகளை எல்லாம் வழங்குபவர்கள் (Day Branding விளம்பரதாரர்கள்) ஆக ஒரு முன்னணி  செல்போன் சேவை நிறுவனம் முன்வந்துள்ளது.

அதுமட்டுமின்றி அன்று முதல் பத்து செகண்ட் விளம்பரம் அந்த சேனலில் ருபாய் பதினெட்டு ஆயிரமாம் (10 Sec’s Spot = Rs 18, 000/-). இதுகூட ஒரு வகையில் ஒரு சாதனையே. ஏனெனில் சன் டிவி தவிர்த்து வேறு எந்த சேனலும் இந்த விலைக்கு விளம்பரங்களை விற்பது கிடையாது. சொன்னபடி நடத்தினால் கேப்டன் ஜெயிப்பார்.

ஐ.பீ.எல் இந்தியாவில் இருந்து மாற்றப் பட்டது எதனால்?திடுக்கிடும் சம்பவங்களும், சில திரைமறைவு அரசியல் ரகசியங்களும்

சமீபத்தில் ஐ.பீ.எல் என்று அழைக்கப்படும் 20/20 கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் இருந்து மாற்றப் பட்டது. அதனை இங்கிலாந்திலும், தென்னாப்பிரிக்காவிலும் நடத்த முயற்சிகளின் மேற்கொள்ளப் பட்டன. ஆனால், அவை தென்னாப்பிரிக்கில் தான் இப்போது நடத்தப் படுகின்றன. இதனால் கடுப்படைந்த இங்கிலாந்து செக்கியுரிட்டி சேவை பிரிவு தலைவர் கார்டன் ரீச் அவர்கள் சில திடுக்கிடும் தகவல்களை அளித்தார். அவற்றில் சில அரசியல் அசிங்கங்கள், திடுக்கிடும் தகவல்கள், உள்குத்துக்கள் என பல விஷயங்கள் இருந்தன.



அவற்றின் சாராம்சம் என்னவென்றால், கடந்த 2000'ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்த் நடித்து வந்த வானத்தைப் போல படம் உலகின் நூற்றி என்பத்தி ஒன்பது நாடுகளிலும் இருநூறு நாட்கள் ஓடி சாதனை புரிந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. குறிப்பாக "லாலா, லாலா, லாலலா" என்ற பாடல் ஆப்பிரிக்காவின் ஸுவாஹேலி நாட்டில் தேசிய கீதமாக மாற்றப் பட்டதும் அனைவருக்கும் தெரிந்ததே.




அவரின் எங்கள் ஆசான், மரியாதை என்ற இரண்டு படங்கள் தொடர்ந்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வர இருப்பதை தெரிந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் லலித் மோடி அவர்கள் எப்படியாவது அதனை தடுக்க முயற்சி செய்தார். எனென்றால், இந்த இரண்டு படங்கள் வந்தால் உலகமெங்கிலும் உள்ள ரசிகர்கள் அனைவரும் கிரிக்கெட் போட்டிகளை மறந்து இந்த படங்களை ரசிக்க சென்று விடுவார்கள்.



இந்த தடுப்பு முயற்சிகளை எல்லாம் அறிந்து கொண்ட நமது கேப்டன் விஜயகாந்த் அவர்கள், ஐ.நா சபை உதவியுடன் படம் வெளிவர முயற்சி மேற்க்கொண்டு அதில் வெற்றியும் கண்டு விட்டார். ஆம், ஏப்ரல் மாதம் எங்கள் ஆசான் படமும், மே மாதம் மரியாதை படமும் வரும் என்று ஐ.நா சபை உத்தரவு இட்டு விட்டது.


இனிமேல் ஒன்றும் செய்ய இயலாது என்பதை தெரிந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம், ஐ.பீ.எல் என்று அழைக்கப்படும் 20/20 கிரிக்கெட் போட்டிகளை ஒரேயடியாக தென்னாபிரிக்காவிற்கு மாற்றி விட்டனர்.

இதன் மூலம் இளைய தளபதி விஜய் அவர்களை விட தான் ஒரு படி மேலே என்பதை கேப்டன் நிரூபித்து விட்டார். ஆம், சிறந்த கதையும், நெஞ்சை உலுக்கும் வசனங்களும், குடும்ப குணச்சித்திர காட்சிகள் இருந்தும் இளைய தளபதி விஜய் அவர்களின் "குருவி" என்ற படம் சென்ற ஆண்டு ஐ.பீ.எல் 20/20 கிரிக்கெட் போட்டிகளால் தோல்வி அடைந்தது. இப்போது கேப்டன் அந்த ஐ.பீ.எல் 20/20 கிரிக்கெட் போட்டியே தோல்வி அடைய செய்து விட்டார்.


எங்கள் ஆசான் படம் என்ன ஆச்சு என்று இன்னமும் சில பல கோடி மக்கள் வழி மேல் விழி வைத்து காத்து இருக்கும்போது நேற்று இரவு "மரியாதை" படத்தின் சில காட்சிகளை பார்க்கும் பாக்கியம் ஏற்பட்டது. இதோ, அந்த படத்தில் வரும் சில மெகா ஹிட் வசனங்களும், சிறப்பு புகைப் படங்களும்.


சின்ன விஜயகாந்த்: திங்கறது தமிழ் நாட்டுல. ஆனா, தமிழன் வேஷ்டி கட்டிக் கிட்டு வந்தா மட்டும் கழுத்தப் புடிச்சு வெளிய தள்ளுவீன்களோ?

ரமேஷ் கண்ணா: தோசத்துக்கும் சந்தோஷத்துக்கும் என்ன வித்தியாசம்?

மீரா ஜாஸ்மின்: உன்ன நான் கிணத்துல தள்ளி சாகடிச்சா, அது தோஷம். அதுவே, நீயா கிணத்துல விழுந்து செத்தா, அது எனக்கு சந்தோஷம்.



பெரிய விஜயகாந்த் (சின்ன விஜயகாந்த்'இடம்) : தூங்குற மீன் தூண்டில்ல மாட்டிக் கொள்ளும். ஆனா, சில சமயங்கள்ல முழிச்சிக்கிட்டு இருக்குற மீனே தூண்டில்ல மாட்டிக்கும். அதுக்கு பேர்தான் விதி.



அதே மாதிரி இந்த பதிவ படிச்சதும் உங்க விதி தான். போங்க, பேசாமல் போய் தமிளிழ்'ல போய் வோட்டு போட்டுட்டு போங்க.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர் செய்த அமெரிக்க தொழில் அதிபர் ஆலன் ஸ்டான்போர்ட் கைது

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு மேலும் ஒரு துக்க செய்தி.

வியாபார காந்தம் ஆலன் ஸ்டான்போர்ட் அமெரிக்க போலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.


அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த திரு ஆலன் ஸ்டான்போர்ட் அவர்கள் இன்று அமெரிக்க போலிஸ் அதிகாரிகளால் திடீரென்று கைது செய்யப் பட்டர். அமெரிக்க பங்கு வர்த்தக செக்கியூரிடிஸ் மற்றும் எக்ஸ்செஞ் துறையினர் "நினைத்தே பார்க்க இயலாத அளவிற்கு' ஒரு பெரிய குற்றத்தை இவர் செய்ததாக கூறியுள்ளனர்.
ஸ்டான்போர்ட் அவர்கள் அமெரிக்காவை சேர்ந்தவராக இருந்த போதிலும் அவர் வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் ஒன்றான அன்டீகா & பார்புடா குடிய்ரிமையையும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பெற்றார்.

இவர் யார்? சென்ற ஆண்டு உலகிலேயே ஒரு போட்டிக்காக அதிகபட்ச தொகையாகிய இருபது மில்லியன் டாலர்களை எப்படி இவர் அளித்தார்? (ஆம், சென்ற ஆண்டு ஸ்டான்போர்ட் சூப்பர்ஸ்டார்ஸ் அணி இங்கிலாந்து அணியை தோற்கடித்து இதனை வென்றது).

1932ல் தன்னுடைய தாத்தா துவக்கி வைத்த ரியல் எஸ்டேட் கம்பெனியை ஸ்டான்போர்ட் பொறுபேற்று கொண்டது என்னவோ 1980ல் தான். பின்னர் அந்த கம்பெனியை பல சாதனைகள் புரிந்து (நம்ம சத்யம் ராமலிங்கராஜு போலவா?) இன்று உலகின் முன்னணி கம்பெனிகளில் ஒன்றாக கொண்டு வந்துள்ள இவர் இன்று கைது செய்யாப் பட்டது உண்மையிலேயே அதிர்ச்சி அளிக்கும் ஒரு தகவல் தான்.

வெஸ்ட் இண்டீஸ் அணியை சற்று நினைத்து பாருங்கள். உலகிலேயே வறுமையில் அடிபடும் அணியாகிய அணிக்கு ஒரு ஆபத்தாந்தவனாக வந்தவர் இந்த ஸ்டான்போர்ட். கடந்த வாரம் தான் தன்னுடைய அனைத்து கிரிகெட் சார்ந்த பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தார்.
அவருக்கு முன்பே தெரியுமோ என்னவோ?
மேல் தகவல்களுக்கு:
crikinfo சுட்டி: Click here
ஸ்டான் போர்ட் பற்றிய விகிபீடியா சுட்டி: click here.
Related Posts Widget for Blogs by LinkWithin