Showing posts with label டிவீ சீரியல். Show all posts
Showing posts with label டிவீ சீரியல். Show all posts

தொலைக்காட்சியில் பொங்கல் சிறப்பு திரைப்படங்கள் - கலைஞர், சன், ஜெயா, ராஜ் மற்றும் பாலிமர்

மக்களே,

வழக்கம் போல இந்த விடுமுறை சிறப்பு தினத்தையும் நாம் துப்பாக்கி, கடத்தல், வெட்டு, குத்து, கொலை, கற்பழிப்பு காட்சிகள் நிறைந்த படங்களை பார்த்தே கழிப்போம் என்றே தோன்றுகிறது. அதனால் இனிமேல் சின்னத்திரையில் மட்டுமே படங்களை பார்க்கலாம் என்றால், அதுவும் முடியாது போல இருக்கிறது. ஆம், சமீப வருடங்களில் சின்னத்திரையில் தான் பெரும்பாலான படங்கள் ரிலீஸ் ஆனா விவரமே தெரிகிறது. (கேபிளார் புண்ணியத்தில் பலவற்றை அவைத் செய்து விடுகிறேன், இருந்தாலும் சில பல படங்களை என்ன,ஏது என்று தெரியாமல் பார்க்க வேண்டி  இருக்கிறது - தொலைக் காட்சியிலேயே).

All Logos

சன் டிவி: sun_tv_in இவர்கள் வழக்கம் போல ஒரு புதிய படத்தையும் இரண்டு மூன்று பழைய படத்தையும் போட இருக்கிறார்கள். முதல் முறை ஒளிபரப்பில் இருக்கும் படம் : இளைய தளபதி விஜய் நடித்த (நடிக்க முயற்சித்த?!?) போக்கிரி என்ற முக்கால்வாசி சீரியஸ், கடைசி கால்வாசி காமெடி படத்தை ஒளிபரப்புகிறார்கள். மேலும் ரீமேக் ரவி நடித்த "சந்தோஷ் சுப்பிரமணியம்" என்ற படத்தையும் இரண்டாம் முறையாக ஒளிபரப்புகிறார்கள்.

மொத்தத்தில் இது ஒரு இளையதளபதி பொங்கல் தான் சன் டிவியில்.

14th Jan 2010:

                                 10.00 AM Polladhavan                                                        06.00 PM Pokkiri

pollathavan

Pokkiri

 

 

 

 

 

 

 

 

15th Jan 2010

                10.00 AM Santhosh Subramaniyam                                            06.00 PM Thiruppachi

Santhosh subramaniyam

Thirupachi

கலைஞர் டிவி :

kalaignar tv புத்தம்  புது படங்களை போட்டு தாக்கிக் கொண்டு இருக்கும் கலைஞர் டிவி இந்த முறையும் களத்தில் அட்டகாசமாக இறங்குகிறார்கள். ஆம், இரண்டு முதல் முறை ஒளிபரப்பையும் இரண்டு மற்ற புது படங்களையும் ஒளிபரப்புகிறார்கள். இளைய தளபதி பறந்த "குருவி" படம் இவர்களின் எதிர்பார்ப்பை தூக்கி இருக்கிறது. ஆம், இந்த படத்தை கண்டிப்பாக தியேட்டரில் எல்லாம் யாரும் பார்க்காததால், கண்டிப்பாக டிவியில் பார்ப்பார்கள். அதனால் ரேட்டிங் ஏறும் என்று ஒரு அசாத்திய நம்பிக்கை. அதனால் பத்து செகண்ட் விளம்பரம் ருபாய் இருபதாயிரம் என்று கூட விற்கிறார்கள். ஆனானப்பட்ட தசாவதாரம் கூட இருபத்தி  ஐந்தாயிரம் ரூபாய்க்கே விற்றார்கள்.

14th Jan 2010:

                                    10.00 AM Pandi                                                           01.30 PM Kuruvi

pandi-may24-2008

Kuruvi

15th Jan 2010:

             10.00 AM Sivapuram                         01.30 PM Jillunu Oru Kadhal                                   06.00 PM Muthirai

sivapuram-oc23-2008

jillunu oru kaadhalmuthirai 

ஜெயா டிவி: 

tamil-jaya-tv-logo

வழக்கம் போல இவர்களும் ஒரே ஒரு படத்தை வைத்துக் கொண்டு களத்தில்  இறங்குகிறார்கள். ஆனால் அதுவும் விஜய் படம் என்பது தான் கொடூரம். ஆம், சிவகாசி படத்தை இவர்கள் ஒளிபரப்புகிறார்கள். வழி இல்லாமல் இந்த பொங்கலுக்கு கேபிள் கனேக்க்ஷனை புடுங்கி விட வேண்டிய சூழல் வந்தாலும் வரலாம்.  என்ன கொடுமை மருத்துவர் விஜய் இது?

Sivakasi_(film)_300

Paramasivan pudhupettai-4437

 

 

 

 

 

 

 

 

 

பாலிமர் டிவி:

polimer

புதிதாக களத்தில் இறங்கி குறுகிய காலத்தில் ராஜ் டிவியை முந்திய இவர்களும் இந்த முறை படங்களுடன் களத்தில் இறங்கி விட்டனர். ஆனால், எத்தனை நாள் பெரிய பெரிய படங்களுடன் இவர்களால் போட்டி இட இயலும் என்பது தெரிய வில்லை. இந்த முறை சற்று வித்தியாசமாக ரஜினிகாந்த் நடித்த ஒரே படமான முள்ளும் மலரும் படத்தை மறு ஒலிபரப்பு செய்கிறார்கள், அதுவும் மேம்படுத்தப்பட்ட தரத்துடன். வழக்கம் போல இரண்டு ஹாலிவுட் படங்களும், ஒரு புதிய தமிழ் படமும் கூட உண்டு. சாபூதிரீ என்ற படத்தை இவர்கள் ஒளிபரப்புகிறார்கள்.

SaaBooThree1

mullum malarum

iam david

 

 

 

 

 

 

 

ராஜ் டிவி

raj_tv

நாங்களும் களத்தில் இருக்கிறோம் என்பதை காட்ட ராஜ் டிவி கடுமையாக போராடிக் கொண்டு இருக்கிறது. ஆனாலும், தலைமையில் தடுமாற்றம் இருப்பதால் முயற்சிகள் கை கூடவில்லை. இந்த முறை சற்று புதுமையாக புரட்சி தலைவரை நம்பி களத்தில் இறங்கி இருக்கிறார்கள். ஆம், சென்ற ஆண்டு புரட்சி கலைஞரை நம்பியது வீண் ஆனது(மரியாதை தியேட்டரில் ஊத்திக் கொண்டு அவமரியாதை ஆனது). அதனால் புரட்சி தலைவர் எம்ஜியார் நடித்த படங்களை முதல் முறையாக ஒளிபரப்புகிறார்கள். வழக்கம் போல அவர்கள் தயாரிப்பான காதல்னா சும்மா இல்லை என்ற படமும் உண்டு. ஒரு நல்ல படத்தை (தெலுகு - கம்யம்) எப்படி ஒரு மொக்கை ஹீரோவை கொண்டு வீணடிக்கலாம் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

alibabavum40thirudargalum1

adimai-pen-7378

kadhalna summa illai

Enjoy.

அபியின் கல்யாணம் நின்றது

1

பரபரப்பு செய்தி = அபியின் கல்யாணம் நின்றது.

இன்று டாக்டர் மகேஷ் உடன் நடப்பதாக இருந்த அபியின் கல்யாணம் (இரண்டாவது கல்யாணம் - முதல் கல்யாணம் பாஸ்கர் உடன் நடந்து இப்போது விவாகரத்தும் நடந்து விட்டது) இன்று திடீரென்று நின்று விட்டது.

4 கல்யாணத்தை நிறுத்தியது யார்?  என்று தெரிந்து கொள்வதற்கு முன்பாக ஒரு சிறு தகவல்: இந்த கல்யாணம் நடக்க கூடாது என்பதற்காக முதல் கணவன் பாஸ்கர் ஒரு துப்பாக்கியுடன் கல்யாண மண்டபத்தில் வந்து அபியை சுட எண்ணியுள்ளான்.

இந்த துடிப்பான கட்டத்தில் தான் அபியின் கல்யாணம்  நின்று விட்டது.

கல்யாணத்தை நிறுத்தியது யார்?

பாஸ்கரா? (விவாகரத்து பெற்ற முன்னால் கணவன் - மறுபடியும் கல்யாணம் செய்துக் கொள்ள துடிப்பவன்).

ஆதியா? (அபியின் சகோதரன் - ஆனால் மாற்றாந்தாய்க்கு பிறந்தவன் - அபியை பழி வாங்க துடிப்பவன்)

திருவேங்கடம்'ஆ? (அபியின் சித்தப்பா - அபியின் வளர்ச்சியை பிடிக்காத ஒரு நபர் - ஆதியின் கைக்கூலி).

தொல்காப்பியன்'ஆ? (அபியின் முன்னால் நண்பர் - அபியாள் தவறாக புரிந்து கொள்ளப் பட்ட சீரியல் இயக்குனர் - அதனால் எப்போதும் நல்லவர்)

மேனகாவா? (தொழிலதிபர் - அபியால் பல வகைகளில் பாதிக்கப்பட்டவர்)

3 இப்படி பலரும் யோசித்துக் கொண்டு இருக்கும்போது தான் இந்த கல்யாணம் நின்று விட்டது.

கல்யாணத்தை நிறுத்தியது வேறு யாருமல்ல, சாட்சாத் அபியே தான்.

என்ன சார் இது? தன்னுடைய கல்யாணத்தை தானே யாராவது நிறுத்துவார்களா என்று கேட்பவர்கள் சரியாக மூன்று வருடங்களும் ஐந்நூறு நாட்களும் கழித்து இந்த சீரியலை பாருங்கள். அப்போதாவது யாராவது வந்து "அபி ஏன் கல்யாணத்த நிறுத்தினா தெரியுமா?" என்று கேட்டு நமக்கு எல்லாம் விடை சொல்வார்கள்.

2 டிஸ்கி: டோண்டு சார் சும்மா இவன்தான் பிராமணன் கதையை போட்டு விடுகிறார். நமக்கு தான் எழுதவே எந்த டாபிக்கும் இல்லை என்று நினைத்தால் இன்று இந்த சம்பவம் நடந்தது.

டோண்டு சார் கோவிச்சுக்க மாட்டேளே?

பின் குறிப்பு : திருவேங்கடத்தின் மகள் தான் டாக்டர் மகேஷ் உடன் கல்யாணம் செய்துக் கொள்ளப் போகும் பெண். இதில் கூத்து என்னவென்றால் அவளுக்கும் இது ரெண்டாவது கல்யாணம். முதல் கணவன் இப்போது தான் திரும்பி வந்து திருவேங்கடத்தின் வீட்டில் தங்கி இருக்கிறான்.

Related Posts Widget for Blogs by LinkWithin