கேப்டனின் விருதகிரி படமும், கூட்டணி அரசியல் அடித்தளமும்

மக்களே,

இந்த வெள்ளிகிழமை அன்று கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடித்து, தயாரித்து இயக்கம் படமாகிய விருதகிரி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் மூலம் ஒரு பெரிய ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கேப்டன் மறுபடியும் மக்கள் மனதில் இடம் பிடிக்க எண்ணியுள்ளார். கடைசியாக கேப்டன் நடித்த சூப்பர் ஹிட் படமாகிய ரமணா படத்திற்கு பிறகு கடந்த எட்டு ஆண்டுகளில் இரண்டே இரண்டு படங்களே தோல்வியை தழுவாமல் அவெரேஜ் ஆக இருந்தன. 2004ம் ஆண்டு எங்கள் அண்ணா என்ற காமெடி படமும், 2008ம் ஆண்டு அரசாங்கம் என்ற ஆக்ஷன் படமுமே கேப்டனுக்கு ஹிட் ஆக அமைந்தவை. இவற்றை தவிர கடந்த எட்டு ஆண்டுகளில் ரமணா படத்திற்கு பிறகு கேப்டன் நடித்த பத்து படங்கள் வெற்றிக்கனியை தவற விட்டன. ஆகையால் இந்த முறை கேப்டன் தானே படத்தை இயக்கவும் முடிவெடுத்துள்ளார்.

பதிவிற்கு சம்பந்தமில்லாத ஒரு ஸ்மால் பிட்: இந்த விருதகிரி படமானது டேக்கன் என்கிற ஆங்கில படத்தின் கதையை சார்ந்து தமிழாக்கப்பட்டது என்று அந்த படத்தின் எடிட்டிங்கில் ஈடுபட்ட நபர் ஒருவர் கூறியுள்ளார். டேக்கன் படத்தை பற்றி தெரிந்து கொள்ள இந்து சுட்டியை கிளிக் செய்யுங்கள் TAKEN Wiki Link. ஒக்கே, அந்த விஷயம் நமக்கு தேவை இல்லாதது. இனி நமக்கு தேவையான விஷயத்தை பார்ப்போம். அதாவது இந்த படம் வருவதற்கு முன்பு நடந்த விஷயங்கள் இவை. இவற்றை அசை போடுவதன் மூலம் இப்போது நடக்கும், நடந்த விஷயங்களை சரியான முறையில் அணுக இயலும்.

Viruthagiri Poster 5

பிளாஷ்பேக் ஆன்: கடந்த பத்து ஆண்டுகளாக கேப்டன் தயாரிக்கும் படங்களையும், அவரது பின்னர் படங்களையும் விளம்பரப்படுத்தியவர் கோடம்பாக்கத்தை சேர்ந்த பிரபல விளம்பர நிறுவனத்தை சார்ந்த ரமேஷ் என்பவர். இவரது சோலார் கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனமே கேப்டனின் ஆசைதான விளம்பர நிறுவனம். இவர் யாரென்றால் கடந்த 2006ம் ஆண்டு கேப்டன் அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்று கோயம்பேட்டில் வெங்கடேச பெருமாள் திருக்கல்யாணம் செய்தவர். (அதுவும் ஒரு ஜோஸ்யரின் கணிப்பை நம்பி).

கேப்டன் அரசியலுக்கு வந்த பின்னர் அவருக்கும் அ.தி.மு.க பொது செயலாளர் அவர்களுக்கும் (அதாங்க, அம்மா) சிறிய அளவில் கருத்து வேறுபாடுகள் இருந்தே வந்தன. ஆகையால் கேப்டனின் படங்களை ஜெயா டிவி சேனலில் விளம்பரம் செய்ய (பணம் கொடுத்துதான்) ஆர்டர் கேட்டாலும் ஜெயா டிவி நிர்வாகம் அந்த விளம்பரங்களை மறுத்து வந்தது. ஆனால் சோலார் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வேறு எந்த படங்களின் விளம்பரங்களை கொடுத்தாலும் அதனை ஜெயா டிவி நிர்வாகம் மறுப்பின்றி வெளியிட்டது. வெறும் கேப்டன் படங்களை மட்டுமே அவர்கள் நிராகரித்தனர்.

Viruthagiri Poster 4

பிளாஷ்பேக் முடிந்து ரியாலிடி ஆன்: கடந்த வெள்ளிகிழமை அன்று முதல் பெரும்பாலான டிவி சேனல்களில் கேப்டனின் விருதகிரி படத்தின் விளம்பரங்கள் (டிசம்பர் பத்தாம் தேதி முதல் கேப்டனின் விருதகிரி -உங்கள் அபிமான திரையரங்குகளில்) வர ஆரம்பித்தன. அது சரி அது என்னா பெரும்பாலான சேனல்களில் என்றா கேட்கிறீர்கள்? அது சரி, கலைஞர் டிவியிலும், அதன் சார்பு சேனல்களான மற்ற சேனல்களிலும் இந்த விளம்பரங்கள் வரவில்லை. ஒக்கே, இதில் என்ன விசேஷம் என்று கேட்பவர்களுக்கு இரண்டு விஷயங்களை இங்கு சொல்லிக்கொள்கிறேன்.

ஒன்று: ஜெயா டிவியில் கேப்டனின் விருதகிரி படத்தின் விளம்பரங்கள் ஓடிக்கொண்டு இருக்கின்றன.

இரண்டு: இந்த விளம்பரங்களை வெளியிட்டோர் சோலார் நிறுவனம் அல்ல, விஷன் டைம் என்ற (சன் குழுமத்தின் பினாமி நிறுவனம் என்று பரவலாக பேசப்படுகிறது) என்ற விளம்பர நிறுவனமே இந்த விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.

Viruthagiri Poster 2

For those who came in late, இதோ விளக்கங்கள்:

ஒன்று: இப்படியாக கேப்டனின் பட விளம்பரங்களை வெளியிட அனுமதித்ததின் மூலம் சூசகமாக கேப்டனுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு செய்தி அளிக்கப்பட்டு உள்ளது. எஸ், நீங்கள் வர விரும்பினால் வரலாம், எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆகவே கூட்டணிக்கான கதவுகள் உங்களுக்காக எப்போதும் திறந்தே உள்ளன. வர விரும்பினால் வந்து கதவை தட்டுங்கள்.

இரண்டு: சன் குழுமத்தின் ஆதரவு வழக்கம் போல எப்போதும் கேப்டனுக்கு தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது. முன்பு கூட ஆடியோ வெளியீடு விழாவிற்கு சன் பிச்சர்ஸ் தலைமை அதிகாரி சக்சேனா அவர்கள் வந்திருந்தார் (ஆமாங்க, அதே அடிதடி கேசில் பிரபலம் ஆன சக்சேனாதான்). முன்பெல்லாம் தி.மு.க தலைமைக்கு பிடிக்காத விஷயங்களை சன் குழுமல் செய்யாது. ஆனால், தற்போதோ, நிலைமையோ வேறு. மாறன் பிரதர்ஸ் நேரிடையாக செல்லாவிடினும் அவர்களின் ஆதரவை வெளிப்படுத்த தவறுவதே இல்லை. தங்களின் பிரதம விளம்பர நிறுவனம் மூலம் (இந்த விஷன் டைம் நிறுவனம்தான் சன் குழுமத்தின் ஆதித்யா மற்றும் சன் நியூஸ் சேனலின் அதிகார பூர்வமான விளம்பர ஏஜன்சி - நீங்கள் இந்த சேனல்களில் விளம்பரம் செய்ய வேண்டுமென்றால் இந்த நிறுவனத்திடமே வரவேண்டும்) கேப்டனின் பட விளம்பரங்களை ஒப்படைத்து சிறப்பாக வழி நடத்தியுள்ளனர்.

ஸோ வாட்? என்றா கேட்கிறீர்கள்? பொறுமையாக அரசியல் நடப்புகளை கவனியுங்கள் மக்களே. விரைவில் இந்த செய்தியுடன் ரிலேட் ஆன பல விஷயங்களை நீங்கள் செய்தித்தாளில் படிப்பீர்கள். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் - நீங்கள் இதனை முதலில் படித்தது நம்ம தளத்தில் தான்.

Related Posts Widget for Blogs by LinkWithin