கம்ப்யுட்டர் கைப்புள்ள'யின் சாகசங்கள்

மக்களே,

எனது நண்பர் கூஜா ஒரு கம்ப்யுட்டர் கைப்புள்ள. அதாவது அவர் ஒரு  ஐ.டி மென்பொருள் கட்டுமான வல்லுநர்.  அந்த துறையில இருக்குற மத்தவங்கள மாதிரியே அவருக்கும் கம்பியுட்டர் இல்லன்னா ஒன்னும் ஓடாது. உதாரணமா, அவரு எப்படி சேவிங் செய்வார் தெரியுமா?

இதென்னடா கேள்வி? மத்தவங்கள மாதிரி முகத்துலதான் என்று கிண்டலாக பதில் அளிக்காமல் தொடர்ந்து படியுங்கள். அதாவது நாமெல்லாம் செல்ப் சேவிங் என்றால் பாத் ரூம் போய் கண்ணாடி முன்னால் நின்று சேவிங் செய்து கொள்வோம்.  ஆனால், இவர் அப்படி இல்லை. இவருக்கு தான் கம்பியுட்டரே உலகம் ஆச்சே? அதனால் என்ன செய்கிறார் என்று பாருங்கள்.

10

9

8

7

6

5

4

3

2

1

0

கம்பியுட்டர் கைப்புள்ள சேவிங் செய்துக் கொள்ளும் முறை - விளக்கப் படம்

shaving

சரி, இதுல என்னடா பெரிய காமெடி? எங்கிருந்தோ வந்த ஒரு மெயில வச்சு ஒரு பதிவு போட்டுடுவியா? என்று சிலர் கேட்பது காதில் விழுகிறது. அதனால, நம்ம நண்பர் கம்பியுட்டர் கைப்புள்ள கூஜா'வுக்கு குழந்தை பொறந்தப்போ என்ன நடந்துச்சுன்னு சொல்றேன்.

கம்பியுட்டர் கைப்புள்ள கூஜாவுக்கு பொறந்தது ரெட்டைக் குழந்தைகள். அதனால் அவர் என்ன பெயர் வச்சாருன்னு யாராவது சொல்ல முடியுமா?

சார்லஸ் & பாபெஜ்?

பில் கேட்ஸ் & அல் கேட்ஸ்?

ராம் & ரோம்?

சீடி & டீவிடி?

இப்படி பல பேரு வைப்பருன்னு தானே யோசிப்பீங்க? கம்பியுட்டர் கைப்புள்ள கூஜா அப்படி எல்லாம் பண்ணல.அவரு என்ன பேரு வச்சாருன்னு தெரியுமா?

10

 

9

 

8

 

7

 

6

 

5

 

4

 

3

 

2

 

1

 

0

 

கம்பியுட்டர் கைப்புள்ள கூஜாவுக்கு பொறந்த ரெட்டைக் குழந்தைகள்

twins

மக்களே, என்னை திட்டி மின் அஞ்சல் அனுப்புறதோ, பின்னுட்டம் இடுறதோ எண்ணம் இருந்தா, மறப்போம் மன்னிப்போம்  என்ற கொள்கையில் நம்பிக்கை வைத்து கோபிக்காமல் ரெண்டு வினாடி உங்களை சிரிக்க வைத்த என்னை பாராட்டி தமிலிஷ்'ல போய் வோட்டு போட்டால் நமது இந்தியாவை காக்க வந்த கேப்டன் விஜயகாந்த் பத்தி ஒரு பதிவு இடுவேன் என்று உறுதி கூறுகிறேன்.

அபியின் கல்யாணம் நின்றது

1

பரபரப்பு செய்தி = அபியின் கல்யாணம் நின்றது.

இன்று டாக்டர் மகேஷ் உடன் நடப்பதாக இருந்த அபியின் கல்யாணம் (இரண்டாவது கல்யாணம் - முதல் கல்யாணம் பாஸ்கர் உடன் நடந்து இப்போது விவாகரத்தும் நடந்து விட்டது) இன்று திடீரென்று நின்று விட்டது.

4 கல்யாணத்தை நிறுத்தியது யார்?  என்று தெரிந்து கொள்வதற்கு முன்பாக ஒரு சிறு தகவல்: இந்த கல்யாணம் நடக்க கூடாது என்பதற்காக முதல் கணவன் பாஸ்கர் ஒரு துப்பாக்கியுடன் கல்யாண மண்டபத்தில் வந்து அபியை சுட எண்ணியுள்ளான்.

இந்த துடிப்பான கட்டத்தில் தான் அபியின் கல்யாணம்  நின்று விட்டது.

கல்யாணத்தை நிறுத்தியது யார்?

பாஸ்கரா? (விவாகரத்து பெற்ற முன்னால் கணவன் - மறுபடியும் கல்யாணம் செய்துக் கொள்ள துடிப்பவன்).

ஆதியா? (அபியின் சகோதரன் - ஆனால் மாற்றாந்தாய்க்கு பிறந்தவன் - அபியை பழி வாங்க துடிப்பவன்)

திருவேங்கடம்'ஆ? (அபியின் சித்தப்பா - அபியின் வளர்ச்சியை பிடிக்காத ஒரு நபர் - ஆதியின் கைக்கூலி).

தொல்காப்பியன்'ஆ? (அபியின் முன்னால் நண்பர் - அபியாள் தவறாக புரிந்து கொள்ளப் பட்ட சீரியல் இயக்குனர் - அதனால் எப்போதும் நல்லவர்)

மேனகாவா? (தொழிலதிபர் - அபியால் பல வகைகளில் பாதிக்கப்பட்டவர்)

3 இப்படி பலரும் யோசித்துக் கொண்டு இருக்கும்போது தான் இந்த கல்யாணம் நின்று விட்டது.

கல்யாணத்தை நிறுத்தியது வேறு யாருமல்ல, சாட்சாத் அபியே தான்.

என்ன சார் இது? தன்னுடைய கல்யாணத்தை தானே யாராவது நிறுத்துவார்களா என்று கேட்பவர்கள் சரியாக மூன்று வருடங்களும் ஐந்நூறு நாட்களும் கழித்து இந்த சீரியலை பாருங்கள். அப்போதாவது யாராவது வந்து "அபி ஏன் கல்யாணத்த நிறுத்தினா தெரியுமா?" என்று கேட்டு நமக்கு எல்லாம் விடை சொல்வார்கள்.

2 டிஸ்கி: டோண்டு சார் சும்மா இவன்தான் பிராமணன் கதையை போட்டு விடுகிறார். நமக்கு தான் எழுதவே எந்த டாபிக்கும் இல்லை என்று நினைத்தால் இன்று இந்த சம்பவம் நடந்தது.

டோண்டு சார் கோவிச்சுக்க மாட்டேளே?

பின் குறிப்பு : திருவேங்கடத்தின் மகள் தான் டாக்டர் மகேஷ் உடன் கல்யாணம் செய்துக் கொள்ளப் போகும் பெண். இதில் கூத்து என்னவென்றால் அவளுக்கும் இது ரெண்டாவது கல்யாணம். முதல் கணவன் இப்போது தான் திரும்பி வந்து திருவேங்கடத்தின் வீட்டில் தங்கி இருக்கிறான்.

அரசியல் தலைவர்களின் அன்பளிப்பு - தே. மு & தே. பி

மக்களே,

தலைப்பை பார்ர்த்து விட்டு புதிய அரசியல் கட்சியா என்று எண்ணி விடாதீர்கள்.

தே.மு - தே. பி என்பது தேர்தலுக்கு முன் - தேர்தலுக்கு பின் என்பதின் சுருக்கமே ஆகும்.

அடுத்த இரண்டு மாதங்களில் இந்தியாவின் மிகப் பெரும் சர்க்கஸ் நடக்கப் போவது உங்கள் எல்லாருக்கும் தெரியும். அந்த சர்க்கஸ் ஆட்டத்தில் கலந்து கொள்ள இருக்கும் தமிழ் நாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பின்வருமாறு:

 

கருணாநிதி ஜெயலலிதா விஜயகாந்த் ராமதாஸ் திருமாவளவன்
Karunanidhi jayalalitha vijaykanth ramados thirumavalavan

அடுத்த கட்ட தலைவர்கள் மற்றும் வருங்கால இந்திய பிரதமர்களின் விபரங்களும் இங்கே உண்டு. என்னடா இங்கே எதற்கு வடிவேலு அவர்களின் படம் உள்ளது என்று யோசிக்காதீர்கள். அவர்தான் விஜயகாந்த் எங்கே நின்றாலும் அவரை எதிர்த்து போட்டியிடப் போவதாக சொல்லி இருக்கிறாரே? மறந்து விட்டதா?

தங்கபாலு கார்த்திக் சரத் குமார் விஜய டி ராஜேந்தர் வடிவேலு
thangabalu sarath kumar images VTR VADIVELU

சரி, அது என்னதான் அப்படிப்பட்ட அன்பளிப்பு - கிப்ட்? அதில் என்ன தேர்தலுக்கு முன் தேர்தலுக்கு பின் என்ற பாகுபாடு என்று கேட்பவர்களுக்கு, இதோ விளக்கம்.

தேர்தலுக்கு முன்னர் பல விதமான அன்பளிப்புகள் வழங்கப்படும். ஒவ்வொரு கட்சியின் நிதி நிலையை பொறுத்து அவை நிர்ணயிக்கப் படும். அவற்றில் சில, இதோ:

 

தேர்தலுக்கு முன்பு கிடைக்கப் போகும் கிப்ட்- எந்த கட்சி அதிகம் கொடுக்குமோ அது தான் ஜெயிக்கும்
டெலிவிஷன் கம்புயுட்டர் சைக்கிள் பிரியாணி பணம்
television computer bicycle biriyani cash

   ஆனால், தேர்தலுக்கு பின்னர் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு கிடைக்கப் போகும் அன்பளிப்பு ஒன்றே ஒன்றுதான். இதில், மேல்ஜாதி, கீழ்ஜாதி, ஹிந்து, முஸ்லீம், கிறித்துவன், போன்ற பாகுபாடு, படித்தவன் - படிக்காதவன், பணக்காரன் - ஏழை என்று எந்த விதமான பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் ஒரே விதமான அன்பளிப்புதான் வழங்கப் படும். இதோ அந்த அன்பளிப்பின் விளக்கப் படம்:

தேர்தலுக்கு பிறகு கிடைக்கப்போகும்  கிப்ட்-எந்தகட்சி ஜெயித்தாலும் ஒரே கிப்ட்தான்
gift

முக்கிய கேள்வி:தலைவர்களே,  இந்த மாத இறுதியில் நான் வெளி நாடு செல்ல இருப்பதால், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அரசியல் பரிசளிப்பு விழாக்களில் (அதாங்க, தேர்தல்) பங்கேற்க இயலாது. அதனால் எனக்கு உரிய பரிசுகளை (அதாங்க அன்பளிப்பு) இப்போதே வாங்கிக் கொள்ளலாமா? எப்படி இருந்தாலும் என்னுடைய வோட்டை நீங்களே போட்டு விடுவீர்கள் தானே? நீங்க தேர்தலுக்கு பின்னாடி தர வேண்டியதை (அதாங்க நாமம்) நான் இப்பவே போட்டுக்குறேன். ஒ.கே.வா?

கலைஞர் டி.வி.ஐ காப்பாற்றிய வீரத்தளபதி ஜே.கே ரித்தீஷ், இப்போது கலைஞரை காப்பாற்றுவாரா?

மக்களே,

உங்களின் சொந்த ஊர் ராமநாதபுரமா? நீங்கள் கோடை விடுமுறையில் அங்கு செல்ல நினைத்து இருக்கிறீர்களா? இன்னும் ரிசர்வேஷன் செய்யவில்லையா? அப்படியானால் உடனடியாக ராமநாதபுரம் செல்லும் என்னத்தை கை விட்டு விடுங்கள்.

அமெரிக்காவிற்கு கிரீன் கார்ட் வாங்க மக்கள் அமெரிக்க எம்பஸ்ஸி வாசலில் கியூ வில் நிற்கும் காட்சியை சென்னையில் எப்போதும் பார்க்கலாம். அதனைப் போல இப்போது ராமநாதபுரம் செல்லத் துடிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

இந்த விஷயத்தின் மூலம் என்னவென்றால், ராமநாதபுரம் தொகுதியில் வீரத்தளபதி ஜே.கே ரித்தீஷ் தி.மு.க சார்பில் போட்டியிடுவார் என்று இன்று அதிகார பூர்வமாக அறிவிக்கப் பட்டது. மதுரையில் நடை பெற்ற இடைத் தேர்தலில் பெய்த பணமழை பற்றி கேள்விப்பட்ட தமிழக மக்கள், வீரத்தளபதி ஜே.கே ரித்தீஷ் பற்றியும் தெரிந்து வைத்து இருப்பதால் தான் இந்த நிலைமை.

"தலைவா" என்று யாராவது கூறினாலே அவர்களிடம் ஆயிரம் ருபாய் நோட்டை தூக்கி கொடுக்கும் வீரத்தளபதி ஜே.கே ரித்தீஷ், ஒரு வோட்டுக்கு என்ன செலவு செய்வார் என்பதை கணக்கு போட்டு பார்த்து விட்டு, பலர் தங்களின் சொத்து, சுகங்களை எல்லாம் விற்று விட்டு ராமநாதபுரம் சென்று குடி பெயர்வது என்று முடிவு செய்து விட்டனர். ராமநாத புரம் மக்களுக்கு கோடையில் ஒரு பணமழை தான்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் கலைஞர் டி.வி.யின் ரேடிங் மிகவும் மோசமாக இருந்தது. அதாவது சன் டி.வி.யின் ரேடிங்'ஐ விட ஆறில் ஒரு பங்காக இருந்தது. அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் முழித்த அவர்கள், உடனடியாக வீரத்தளபதி ஜே.கே ரித்தீஷ் நடித்த நாயகன் என்ற படத்தை உலகத் தொலைக் காட்சிகளில் முதல் முறையாக ஒளி பரப்பினார்கள்.

விளைவு? அடுத்த வாரம் வந்த ரேடிங் கலைஞர் டி.வி. சன் டி.வி.ஐ நெருங்கி விட்டது. ஆம், இப்போது ரேடிங் மூன்றில் ஒரு பங்காகி விட்டது. அது மட்டும் இல்லாமல், கலைஞர் டி.வி.யின் ரேடிங் பல மாதங்களுக்கு பின்னர் இரண்டு இலக்கங்களை தொட்டதும் அப்போது தான்.

எனவே, முன்பு கலைஞர் டி.வி.ஐ காப்பாற்றிய வீரத்தளபதி ஜே.கே ரித்தீஷ், இப்போது கலைஞரையே காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை. காப்பாற்றுவாரா?

கடைசியாக கேள்விப் பட்ட தகவல் என்னவென்றால் அங்கு கட்சி தொண்டு ஆற்றப் போகும் இளம் சிங்கங்களுக்கு ஏ.சி பொருத்தப்பட்ட டூ வீலர் ரெடியாம். அதுவும் ஸ்பிலிட் ஏ.சி.யாம்.

சார், சார் எங்கே போறீங்க? ராமநாத புரமா? போறதுக்கு முன்னாடி கொஞ்சம் தமிளிஷ்'ல வோட்டு போட்டுட்டு போங்க சார். என்னால வீரத்தளபதி ஜே.கே ரித்தீஷ் மாதிரி எதுவும் பண்ண முடியாவிட்டாலும் நன்றி கூறுவேன்.
Related Posts Widget for Blogs by LinkWithin