வேட்டைக்காரன் - கவுண்டமணி சிறப்பு விமர்சனம்

மக்களே,

இன்று வேட்டைக்காரன் என்ற உலக மகா காவியம் வெளியிடப் படுவதால் அதனைப் பற்றி அனைவரும் சிறப்பு பதிவுகளை இட்டுக் கொண்டே இருக்கின்றனர். அந்த வரிசையில் நம்முடைய நண்பர் சுரேஷ் அவர்கள் தங்களுடய கனவுகளே என்ற வலை ரோஜாவில் (எத்தனை நாளைக்கு தான் வலைப்பூ என்றே சொல்வது, அதனால் சும்மா ஒரு மாற்றத்துக்கு) இன்று வேட்டைக்காரன் படத்தின் சிறப்பு விமர்சனத்தையே வெளியிட்டு உள்ளார். அதனை படிப்பதற்கு முன்னர் (இங்கே கிளிக் செய்யவும் Suresh) இந்த சிறப்பு பதிவை படியுங்கள்.

நேற்று வேட்டைக்காரன் படத்தின் சிறப்பு காட்சி நடைபெற்றது. அதில் சினிமா உலகின் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அதில் நம்முடைய ஆல் டைம் பேவரிட் காமெடியர் (ஒரு மரியாதை தான்) கவுண்டமணியும் அடக்கம். அந்த படத்தை பார்த்து விட்டு அவருடைய விமர்சனம் பின்வருமாறு:

vijay

மருத்துவர் விஜய்: நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட.....................

gavundamani

கவுண்டர்: டேய் டிபன் பாக்ஸ் மண்டையா, நீ அடிச்சா கூட பரவா இல்லைடா. ஆனா நீ நடிச்சா தான் தாங்க முடியல.

kid

 

மக்களே, நானும் ஒரு மருத்துவர் விஜய் ரசிகன் என்பதை மறந்து விடாதீர்கள். இது நம்முடைய ஞானி அவர்கள் பாணியில் செய்யப்பட்ட ஒரு பகடி (அதாங்க காமெடி). அதனால் இதனை சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் ஜாலியாக விட்டு விடுங்கள்.

வாழ்க மருத்துவர் விஜய். ஓடுக அவரின் படங்கள்.

சன் டிவி மெகா தொடர் -கோலங்கள் - முடியவே முடியாதா?

மக்களே,

கடந்த ஒரு வாரமாக கதை போன போக்கை பார்த்து இந்த வெள்ளிக்கிழமையோடு கோலங்கள் என்ற இந்த சன் டிவி மெகா தொடர் முடிந்து விடும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், இப்போது பார்த்தால் இனிமேலும் தொடர்ந்து நடைபெறும் என்றே தோன்றுகிறது.

ஆதி (அபியின் சகோதரன்) டிஜிடல் வேல்லி புராஜெட்டுக்காக வெறி கொண்டு பலவிதமான சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு கடைசியில் தன்னுடைய முயற்சிகளில் தோல்வியுற்று அனைவரின் உறவையும் இசந்து கடைசியில் தன்னுடைய சொந்த அம்மாவையே கொன்றுவிட்டு தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறான்.

k

ஆனால் அந்த தற்கொலை முயற்சி தோல்வியில் முடிந்து விடுகிறது. என்னடா இது? என்று பார்த்தால் ஆதி கோமாவில் சென்று விடுகிறான். ஆமாம், ஆதி இப்போது ஒரு நடைபிணம் ஆகா இருக்கிறான். இந்த சூழ்நிலையில் ஆதியை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை அவனின் முன்னாள் மனைவி (தீபா வெங்கட்) இடம் ஒப்படைக்கிறாள் அபி.

k1k3 k2

இந்த ஒரு அசாதாரண சூழ்நிலையில் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார் ஆதியின் முன்னாள் மனைவி. ஆதியின் குழந்தையும் இந்த மாற்றத்தை வரவேற்கிறது. அதனால் ஆதியை அவனுடைய முன்னாள் மனைவியே கேர் டேக்கர் ஆக இருந்து கவனித்து கொள்ள ஒப்புக் கொள்கிறாள், அபியின் வேண்டு கோளுக்கு இணங்க.

k4 k5 k6

சரி, இந்த மொக்கை இதோட முடிந்தது. நாளைக்கு சுபம் போட்டு விடுவார்கள் என்று பார்த்தால், திடீர் என்று ஒரு திருப்பம். தொல்ஸ் (அதாங்க, நம்ம தொல்காப்பியன்) அக்க வந்து அபியிடம் தொல்சை மனம் செய்துக் கொள்ள கேட்கிறாள். டிஜிடல் வேல்லி புராஜெட் அபிக்கு மறுபடியும் வந்து விட்டதை அறிந்த பாஸ்கர் (அபியின் முன்னாள் கணவன்) மறுபடியும் வந்து திருந்தி விட்டதாக நாடகம் ஆடுகிறான். இன்று அந்த நாடகத்தின் உச்ச கட்டமாக அபியின் காலில் பாஸ்கர் விழுந்து தன்னை ஏற்றுக் கொள்ளும்படி கேட்கிறான். அபி பதில் ஏதும் சொல்லாமல் சென்று விடுகிறாள்.

vanna kolangal

சரி சரி, இந்த மொக்கையை பற்றி ரொம்ப பேசி விட்டதால் கோலங்கள் என்ற பேரில் வந்த வேறு சில நல்ல (இந்த தொடருடன் ஒப்பிடும்போது) தொடரை பாருங்கள். ஆமாம், இந்த தனியார் தொலைக்கட்சிகள் எல்லாம் வருவதற்கு முன்பு தூர்தர்ஷனில் எஸ்.வீ சேகரின் வண்ணக் கோலங்கள் என்ற அற்புதமான காமெடி தொடர் வந்தது. அது இப்போது டிவிடியில் கிடைக்கிறது. பார்த்து மகிழுங்கள்.

Azhiyatha Kolangal

அப்படியும் இல்லை என்றால் மோசர்பேர் டிவிடியில் இருக்கும் இந்த அழியாத கோலங்கள் படத்தை பார்த்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள், நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் கண்டிப்பாக கோலங்களை விட சிறப்பாகவே இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

ஜி தமிழ் தொலைக் காட்சியின் எதிர்காலம்?

மக்களே,

ஏற்கனவே ஜி தமிழ் பற்றிய ஒரு சூடான பதிவை இட்டு இருந்தோம். அதைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும். ஏற்கனவே படித்தவர்கள் தொடரலாம். சூப்பர் ஹிட் படங்களை நம்பர் ஒன் குழுமத்திற்கு விற்று விட்ட ஜி தமிழ் நிர்வாகம், தற்போது இருக்கும் சுமாரான படங்களான அரசாங்கம் (கேப்டனின் அரசாங்கம்?), வல்லமை தாராயோ, ராசையா போன்ற படங்களையும் கூட வேறு சில தொலைக்காட்சி நிர்வாகத்தினரிடம் கொடுத்து விட்டதாக கேள்வி.

எதற்காக இந்த விஷயம் சொல்ல வருகிறேன் என்றால், ஒரு பொழுது போக்கு தொலைக் காட்சியில் படங்களோ (கலைஞர் டிவி), சீரியல்களோ (சன் டிவி), அல்லது நடைமுறை நிகழ்ச்சிகளோ (விஜய் டிவி) முன்னணியில் இருந்தால் அது அந்த சேனலுக்கு பெருமை. மற்ற சேனல்களாகிய ஜெயா டிவி (ஜாக்பாட், எங்கே பிராமிணன்) ராஜ் டிவி (ஸ்ரீ கிருஷ்ணா) என்று சில பல நிகழ்ச்சிகளை தங்கள் கைவசம் வைத்து உள்ளன. அவ்வளவு ஏன்? மெகா டீவியில் கூட கருப்பு வெள்ளை பாடல்களை பற்றிய ஒரு காலை வேலை நிகழ்ச்சி சிறப்பாக இருக்கின்றது.

zee tamil launch ad

ஆனால், ஒரு தேசிய சேனலில், அதுவும் கோடிக்கணக்கில் செலவு செய்ய தயங்காத ஒரு சேனலில் ஒரு சமையல் நிகழ்ச்சி தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறது என்றால் அது அந்த புரோகிராமை பற்றிய பெருமை அல்ல, அந்த சேனலில் வேறு சரக்கு இல்லை என்பதை காட்டும் ஒரு கண்ணாடி. ஆம், தொடர்ந்து பல வாரங்களாக "அஞ்சறைப் பெட்டி" என்ற ஒரு சமையல் குறிப்பு நிகழ்ச்சியே ஜி தமிழ் தொலைக்காட்சியில் முதன்மை புரோகிராமாக இருந்து வருவது அந்த நிர்வாகத்தினரை சிந்தனையில் ஆழ்த்தி உள்ளது.

Zee Tamil Ad

அதுவும் இல்லாமல் செய்திகளை தவிர்த்து வேறு எந்த நிகழ்வுகளையும் மக்கள் ரசிக்காததால் (அஞ்சறைப்பெட்டியும் செய்திகளும் தவிர்த்து என்று வாசிக்கவும்) எதற்கு இத்தனை செலவு செய்து மற்ற நிகழ்ச்சிகளை செய்ய வேண்டும் என்று நிர்வாகம் யோசிக்க ஆரம்பித்து விட்டது.

Kumudham Reporter Dated 10112009

முதலில் முழுவது மூடிவிடலாமா என்று கூட யோசித்தார்களாம் (இந்த தகவல் ஊர்ஜிதப்படுத்தப்படாத ஒன்று - தவறாகவும் இருக்கலாம்), பின்னர் அவ்வாறு செய்தால் அது சகோதரர்களின் வெற்றி என்பது போல ஆகிவிடும் என்பதால் சரி,முழுநேர செய்தி சேனலாக மாற்றி விடும் முடிவில் நிர்வாகம் இருப்பதாகவும் அதில் பணி புரியும் புரோகிராம் மேனேஜர்களுக்கு ஒரு மாத கெடு அளிக்கப் பட்டு இருப்பதாகவும் இன்னுமொரு ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்.

இந்த ஒரு மாதத்தில் புரோகிராம் ரேட்டிங்கில் மாற்றங்கள் வந்தால் முழு நேர பொழுதுபோக்கு தொலைக்காட்சியாக தொடருமாம்; இல்லை எனில், முழு நேர செய்தி சேனலாக தொடருமாம்.

என்ன கொடுமை சார் இது?

கை மாறியது இசை அருவி மற்றும் சிரிப்பொலி - பலமானது கலைஞர் குழுமம்

மக்களே,

ரொம்ப நாள் கழிச்ச்சு இன்னைக்கு தான் சென்னையில் ஒரு சன்டேவை கழித்தேன். வழக்கம் போல எங்கும் போகாமல் வீட்டிலேயே கழிக்கலாம் என்று நினைத்து தொலைக்காட்சியை ஆன் செய்து காமெடி அல்லது மியூசிக் சேனல் பக்கம் போனால் ஒரு விந்தை காணப்பட்டது. ஆம், வழக்கமாக ரெண்டு பாட்டுக்கு ஒரு முறை விளம்பர பிரேக் எடுக்கும் இசை அருவி மற்றும் சிரிப்பொலி சேனல்களில் இன்று விளம்பரங்களே காணப்படவில்லை. (மிதமாக இரண்டு மூன்று குழும விளம்பரங்களே வந்தன). சரிதான், என்னமோ விஷயம் என்று விசாரித்தேன். அதன் பின்னணியே இன்றைய இந்த பதிவு.

Kalaignar Media 

கலைஞர் தொலைக்காட்சி முதன்முதலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப் பட்டபோது தொடர்ச்சியாக மூன்று நான்கு சேனல்கள் ஆரம்பிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. பின்னர் இசை அருவி என்ற மியூசிக் சேனல் ஆரம்பிக்கப்பட்டபோது தமிழக தொலைக் காட்சி வரலாற்றில் இல்லாத ஒரு புதுமையாக அந்த சேனலை மார்க்கெட் செய்யும் பொறுப்பை வேறு ஒரு தனியார் நிர்வாகத்திடம் மினிமம் கியாரேன்டி முறையில் ஒப்படைக்கப்பட்டது.

அப்படி ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு தனியார் நிறுவனமே சோசியல் மீடியா இந்தியா லிமிடெட். இந்த நிறுவனம் நார்த்கேட் டெக்னாலஜிஸ் லிமிடெட் என்ற அமெரிக்க நிறுவனத்தின் இந்திய அமைப்பாகும். இந்த நார்த்கேட் டெக்னாலஜிஸ் லிமிடெட் சுமார் ஐந்நூறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமானமுள்ள ஒரு மிகப்பெரிய இன்டர்நெட் துறை சார்ந்த நிறுவனமாகும். அவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

பின்னர் கலைஞர் நிர்வாகம் சென்னையில் முரசு என்ற கேபிள் சேனலை கூட மார்கெட் செய்யும் பொறுப்பை இந்த சோசியல் மீடியாவிடமே ஒப்படைத்தது. அதன் பின்னர் இந்த ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட சிரிப்பொலி என்ற காமெடி சேனலை கூட மார்கெட் செய்யும் பொறுப்பு இவர்களுக்கு வழங்கப் பட்டது. கலைஞர் குழும நிழலாகவே இவர்கள் கருதப்பட்டார்கள். ஆரம்பித்த சில நாட்களிலேயே இசை அருவி சேனல் சிறப்பாக செயல்பட்டு சன் மியூசிக் சேனலை ஆட்டம் காண வைத்தது (டி.ஆர.பி ரேட்டிங் மற்றும் விளம்பர வருவாய் - இரண்டிலுமே).

ஆம், எந்த ஒரு துறையிலும் முதன்மையாக இருக்கும் சன் குழும சேனலை ஆட்டம் காண வைத்தது இந்த இசை அருவி சேனல். முதன் முறையாக மியூசிக் சேனல்களில் முதல் ரேட்டிங் பெற்று சன் குழுமத்தினரை ஆட்டம் காண வைத்தது. மேலும் சோசியல் மீடியா நிர்வாகத்தினர் புதுமையாக பல நிகழ்ச்சிகளை செய்து (தமிழ் மியூசிக் அவார்ட்ஸ், பல சிறப்பு நிகழ்வுகள் என்று) தமிழக மக்களை தங்கள் கட்டுக்குள் வைத்து இருந்தனர்.

ஆனால் திடீரென்று சனிக்கிழமை அன்று கலைஞர் டிவி நிர்வாகம் அவர்களின் காண்டிராக்டை முறித்துக்கொண்டது, அதுவும் உடனடியாக. இதில் உடனடியாக என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். இந்த தீபாவளி சீசனில் பலரும் விளம்பரத்தில் குறியாக இருக்கும் போது திடீரென்று இந்த சம்பவம் நடந்து உள்ளது. இது வரை கொடுத்து உள்ள விளம்பரங்கள் அனைத்தும் கேன்சல் செய்யப் பட்டு இன்று முதல் அனைத்து விளம்பரங்களும் கலைஞர் டிவி நிர்வாகத்திடம் மட்டுமே புக் செய்யப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இதோ, அதனை உறுதிப்படுத்தும் கடிதம்.

Isaiaruvi & Sirippoli - Marketing copy

இதன் காரணமாக இன்று (அதாவது ஞாயிற்றுகிழமை) ஆச்சரியமாக கலைஞர் டிவி மார்கெட்டிங் குழு பணிக்கு வந்தார்கள். வந்து அவர்கள் அனைவரிடமும் புதிய விளம்பர ஒப்பந்தங்கள் செய்து அதன் பின்னரே விளம்பரங்கள் வர ஆரம்பித்தன. பின் குறிப்பு: எதற்காக இந்த மாற்றம் என்பதில் பல கருத்துக்கள் நிலவுகின்றன. நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து இதுவரை தகவல்கள் வராததால் எதனையும் உறுதிப்படுத்தி கூற இயலவில்லை.

அதே சமயம் சில பல ரூமர்கள் / வதந்திகள் உலவுகின்றன. அவற்றை மட்டும் இங்கே அளிக்கிறேன். கவனிக்கவும், இவை உறுதிப்படுத்தப்படாதவை.

1. மினிமம் கியாரேன்டி கடந்த நான்கு மாதங்களாக தரப்படவில்லையாம். பல நினைவுருத்தல்களுக்கு பின்னரே இந்த திடீர் அதிரடி முடிவாம்.

2. கலைஞர் குழும உயர் அதிகாரி ஒருவருக்கும் சோசியல் மீடியா சென்னை நிர்வாகத்துக்கும் கடந்த பல மாதங்களாக நடந்த பனிப்போரின் விளைவே இது என்றும் கூறுகிறார்கள். கடைசியில் குடும்பமே வென்றதாம். இதனை கொண்டாடும் விதமாக இன்று பணிக்கு வந்த பெரும்பாலான அலுவலர்களை ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டலில் மதிய விருந்து வைத்து மகிழ்ந்தாராம்.

3. இந்த மார்கெட்டிங் முறையை அமுல்படுத்தியவர் கலைஞர் தொலைக்காட்சியின் முதன்மை மேலாளர் திரு சரத்குமார் ஆகும். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் இருவது சதவீதம் பங்குதாரரும் ஆவார். நவம்பரில் நடந்த ஒரு சம்பவத்திற்கு பின்னர் இவர் கலைஞர் டிவி வருவதே இல்லை என்பது ஊரறிந்த உண்மை. அவரே இல்லாதபோது, இவர்களுக்கு என்ன வேலை என்று செயல்பட்டதால் நடந்த வேலை இது என்றும் கூறுகிறார்கள்.

நாளைய மனிதன் - அதிசய மனிதன் படங்களை தொடர்ந்து "நானே வருவேன் "

மக்களே,

இப்போது வேலு பிரபாகரனின் காதல் கதை என்ற படத்தை எடுத்த வேலு பிரபாகரன அவர்களை கடவுள், புரட்சிக்காரன், காதல் கதை போன்ற புரட்சிகரமான முற்போக்கு (முன் நவீனத்துவம்?) சிந்தனையுள்ள படங்களை இயக்கியவராக மட்டுமே நமக்கு தெரியும். நேற்று எனக்கு வந்த ஒரு அழைப்பிதழை பார்த்த பொது தான் அவரைப் பற்றிய முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக்கவும்.

நான் சிறு வயதில் ரசித்து பார்த்த படங்களில் நாளைய மனிதன், அதிசய மனிதன், ஜென்ம நட்சத்திரம் போன்ற படங்கள் அடங்கும். அதிலும் சாகாத ஒரு மனிதனை பற்றி சிறு வயதில் சிலாகித்து பயந்த காலங்களும் உண்டு. நாம் அதிஷா இந்த படங்களுக்கு ரசிகர் மன்றமே ஆரம்பித்தாலும் ஆரம்பிப்பார் போல. அந்த அளவுக்கு இந்த படங்களுக்கு ஒரு சிறப்பிடம் உண்டு. இப்போது இந்த "நாளைய மனிதன் - அதிசய மனிதன்" படங்களை தொடர்ந்து அடுத்து ஒரு படம் இதே வரிசையில் வரப் போகிறது. இதோ அந்தப் படத்தின் விவரங்கள்.முதல் படமாகிய நாளைய மனிதனில் இளைய திலகம் பிரபு ஒரு ஆங்கில காப் போன்ற ஒரு போலீஸ வேடமேற்று நடித்து இருப்பார். அதிலும் அந்த கிளைமாக்ஸ் காட்சி இப்போதும் கண்முன்னே நிற்கும். இரண்டாவது பாகத்தில் நிழல்கள் ரவி அதைப் போலவே போலீஸ வேடத்தில் வருவார். இது போன்ற படங்களில் எல்லாமே வருவது போல கிளைமாக்சில் அந்த வில்லன் சாவது போல தெரியும், ஆனாலும் உறுதியாக சொல்ல முடியாது. இப்போது இந்த புதிய படத்தில் பாபு கணேஷ் அவர்கள் பிரபு, நிழல்கள் ரவி போல லீட் கதாபாத்திரம் ஆக நடிக்கிறார் போல.ஆனாலும் ஸ்ரீமன் கையில் சிவப்பு பெயின்ட் அடித்த அந்த கோடாரியை வைத்து இருப்பதை பார்க்கும் போது அவரும் ஹீரோவாக இருப்பாரோ என்ற சந்தேகம் வருகிறது. சின்னி ஜெயந்த் வேறு இருக்கிறார். என்ன நடக்குமோ என்று இப்போதே ஒரு பயம் கிளம்பி விட்டதை தவிர்க்க முடியவில்லை.

அந்த படங்களில் எல்லாம் அந்த நாளைய மனிதனாக நடித்தவர் நம்ம அஜய் ரத்னம். அவரை காணவில்லை போல. அதனால் ஒரு புதிய முகம் காட்டாத வில்லன் நடிக்கிறார் என்று நாம் வைத்துக் கொள்ளலாம்.

தசாவதாரத்துடன் மோதும் படிக்காதவன் : தீபாவளி திரைப்படங்கள்

சென்ற வருடம் தீபாவளி அன்று சந்திரமுகியுடன் மோதிய பில்லா கதை போல இந்த வருடம் தீபாவளி அன்று மறுபடியும் மோத சன் டிவி மற்றும் கலைஞர் டிவி நிறுவனங்கள் தயாராக உள்ளன.

கலைஞர் டிவி மிகுந்த பொருட்செலவில் வாங்கிய கமல் பத்து வேடத்தில் கலக்கிய தசாவதாரம் படத்தை இந்த தீபாவளிக்கு ஒளிபரப்புகின்றனர். அதற்காக அவர்கள் விளம்பர வேட்டையில் இறங்கி உள்ளனர். வழக்கமாக பதினாலாயிரம் ருபாய் விலைக்கு பத்து செகண்ட் சார்ஜ் செய்யும் கலைஞர் டிவி இந்த படத்துக்காக ருபாய் இருபத்தி ஐந்தாயிரம் என்று விலையை நிர்ணயித்து உள்ளனர். கமல் மேஜிக் பெரிய திரையில் நடந்தது போல சின்ன திரையிலும் நடக்கும் என்பது இவர்களின் எண்ணம்.


அதே நேரம் தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தை ஒழி பரப்ப சன் டிவி முடிவு எடுத்துள்ளது. வழக்கமாக இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்க்கு பத்து செகண்ட் விளம்பரம் வாங்கும் சன் டிவி இந்த மெகா ஹிட் பிளாக்பஸ்டர் படத்துக்கு முப்பத்தி எட்டாயிரம் ருபாய் சார்ஜ் செய்கிறார்களாம். வழக்கம் போல இதுவும் ஒரு வெற்றி முயற்சியாக அமையும் என்பதில் அவர்களுக்கு இருவேறு எண்ணம் இல்லையாம்.

சென்ற வருடம் இதே போல நடந்த மோதலில் (சந்திரமுகி + பில்லா) சன் டிவியே ஜெயித்தது உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம். அதனால் இந்த வருடம் தசாவதாரம் படத்துடன் மோத மருத்துவர் விஜய் நடித்த போக்கிரி படம் தான் ஒலிபரப்ப படும் என்று பலரும் நினைத்திருந்த வேளையில் இப்படி ஒரு செய்தி வந்துள்ளது அனைவரின் கவனத்தியும் கவர்ந்து உள்ளது. குறிப்பாக சுப்ப்ரமணிபுரம் மேட்டருக்கு பின்னர் இப்படி நடந்து உள்ளது ஆச்சரியமாக உள்ளது.

சன் டிவியை பற்றி நன்றாக தெரிந்தவர்கள் கண்டிப்பாக அவர்கள் வேறொரு படத்தை கமலுக்கு போட்டியாக களமிறக்குவார்கள் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்கிறார்கள். பார்க்கலாம், என்ன நடக்கிறது என்று.

சுப்ரமணியபுரம் - கை மாறிய கதை


ஜீ தமிழ் என்ற ஒரு சேனல் தமிழ் நாட்டில் தட்டு தடுமாறி வந்து கொண்டு இருப்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த கதை. என்னடா இவன், இந்தியாவில் முதல் முறையாக சாட்டிலைட் சேனல் ஆரம்பித்த ஜீ குழுமத்தின் சேனலை பற்றி இப்படி தட்டு தடுமாறி வருகிறது என்று கூறுகிறானே என்று கூட நீங்கள் யோசிக்கலாம். ஆனால், உண்மை அது தான். அதன் பின்புல விவரங்கள் கீழ்வருமாறு:

சென்னை மற்றும் தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களில் கேபிள் குழுமங்களை இயக்குவது SCV என்று அழைக்கப்படும் சுமங்கலி கேபிள் விஷன் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த குழுமமே சென்னையில் எண்பத்தி ஐந்து சதவீதம் அளவிற்கு கேபிள் வீடுகளின் கனேக்டிவிடியை SCV கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதும் நீங்கள் கேள்விப் பட்ட உண்மையே. அதனால் எந்த ஒரு புதிய சேனல் பல கோடி ரூபாயை செலவு செய்து தமிழகத்தில் ஆரம்பித்தாலும் இவர்கள் அதனை காண்பித்தால் மட்டுமே அது மக்களை சென்று அடையும்.

இந்த சூழ்நிலையில் ஆரம்பிக்கப் பட்ட ஜீ தமிழ் சேனல் பல தொழில் நுட்ப வல்லுனர்களையும், துறை அறிஞர்களையும் கொண்டு ஆரம்பிக்கப் பட்டாலும் அது இருட்டடிப்பு செய்யப் பட்டது மக்களுக்கு நன்றாக தெரியும். இன்னனும் அந்த சேனல் செட் டாப் பாக்ஸில் வரவில்லை என்பது ஆரம்பித்து ஒரு வருடம் கழித்தும் தொடரும் கொடுமை.

எப்போது ஒரு சேனல் மக்களுக்கு சென்று அடைய வில்லையோ அப்போதே அந்த நிகழ்ச்சிகள் வெற்றி அடையாது. அதனால் அங்கு எந்த அளவுக்கு நல்ல நிகழ்ச்சிகள் இருந்தாலும் வணிக அளவில் அவை வெற்றி அடையவில்லை. இருந்தாலும் தன முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல அந்த நிர்வாகமும் தொடர்ந்து படங்களை வாங்குவதிலும், சீரியல்களை ஆரம்பிபதிலும் மும்முரமாக இருந்த வந்தனர். அதனால் தான் சுட்ட பழம், ஸ்டெப் நீ போன்ற சரித்திர புகழ் பெற்ற படங்களை நம்மால் கண்டு ரசிக்க முடிகிறது.
சுப்ரமணியபுரம் படம் வெளிவருவதற்கு முன்பே ஜீ தமிழ் சேனல் அந்த படத்தின் தொலைக்காட்சி ஒலி பரப்பும் உரிமையை வாங்கி விட்டனர். கடந்த நான்கு மாதங்களாக அந்த படத்தை விரைவில் என்று விளம்பரம் செய்தும் அனைவரையும் கவர்ந்து கொண்டு இருந்தனர். அது ஒரு வெற்றி பெற்ற படம் என்பதால் அந்த படத்தை பலரும் எதிர்பார்த்து இருந்தனர் என்பது மறுக்க இயலாத உண்மை. வணிக அளவில் ஒரு கணிசமான தொகையை ஈட்ட இந்த படம் ஜீ தமிழ் நிறுவனத்திற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.

அதனால் இந்த திங்கள் அன்று அந்த படத்தை ஒலி பரப்ப ஜீ தமிழ் நிர்வாகம் முடிவு எடுத்தது. அன்று விஜய தசமி என்பதால் அது மக்களை கண்டிப்பாக சென்றடையும் என்பது நிர்வாகத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை. தொழில் முறை போட்டியாளர்களின் படங்கள் ஒன்று பெரிய அளவில் போட்டியாக இல்லை என்பதும் ஒரு முக்கிய விஷயம். ஆம், கலைஞர் டீவியில் "அபியும் நானும்" என்ற படமும், சன் டீவியில் "வெடிகுண்டு முருகேசன்" என்ற படமும் ஒளிபரப்ப முடிவு செய்து இருந்தனர். அதற்கான ஆயத்தமும் செய்யப் பட்டு விளம்பரதாரர்களுக்கு தகவலும் தெரிவிக்கப் பட்டது.

இந்த படத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஜீ தமிழ் நிர்வாகம் அனைத்து விளம்பரதாரர்களிடமும் சிறப்பான முறையில் பேசி விளம்பரங்களை பெற்று மகிழ்ச்சியாக இருந்தபோது திடீரென வெள்ளிக் கிழமை அன்று சன் டீவியில் சுப்ரமணியபுரம் படம் விஜயதசமி சிறப்பு படம் என்று விளம்பரம் வந்த வுடன் மக்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் முழிக்க ஆரம்பித்தனர். எனென்றால், ஒரு டிவி வாங்கிய படத்தை அனுமதியில்லாமல் மற்ற டிவி ஒளிபரப்பினால் அது சட்டப்படி குற்றமாகும்.

சன் டிவி சுப்ரமணியபுரம் படத்தை மாலை ஆறு மணிக்கு ஒளிபரப்ப போகிறார்கள், அதாவது ஜீ தமிழ் ஒளிபரப்ப முடிவு செய்த அதே நேரத்தில். அதாவது உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு குழும டிவிக்கள் ஒரே படத்தை ஒரே மொழியில் ஒளிபரப்பவிருக்கின்றனர்.

இந்த விஷயத்தை கேள்விப் பட்டவுடனே பெரும்பாலான (அனைத்து?) விளம்பரதாரகளும் தங்களது விளம்பரங்களை ஜீ தமிழ் டீவியில் நிறுத்தி விட்டு சன் டீவியில் கொடுத்து விட்டனர். இப்படி திடீரென நடந்தது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதற்க்கான காரணம் என்ன என்று தெரியாமல் மக்கள் முழித்து கொண்டு இருந்த வேளையில் வெடிகுண்டு வெங்கட் தன்னுடைய முழு திறமையை உபயோகப் படுத்தி உண்மையை கண்டறிந்து மக்களுக்கு தெரியப்படுத்துகிறார்.

உண்மை - இந்த தகவல் தமிழின் முன்னணி பத்திரிக்கையாளர் ஒருவரால் கூறப்பட்டது. அதனால் இது உண்மையாக இருக்கும் என்றே நம்பப் படுகிறது. சுமார் இருவது வருடங்கள் பத்திரிகை துறையில் இருக்கும் நண்பர் தவறான தகவலை அளிக்க மாட்டார் என்ற நம்பிக்கையுடன் அந்த தகவலை இங்கு அளிக்கிறேன்.

அதாகப்பட்டது சன் டிவியின் சன் டைரெக்ட் டி.டி.எச்சில் இனிமேல் ஜி தமிழ சேனல் வருமாம். அதற்க்கு கைம்மாறாக இந்த ஒரு முறை மட்டும் இப்படி கோடிக் கணக்கில் கொடுத்து வாங்கிய உரிமையை ஜி தமிழ் நிர்வாகம் பகிர்ந்து கொள்கிறது.

அதனால், இந்த திங்கள் அன்று உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக ஒரே படத்தை இரண்டு சேனல்களில் பார்க்கும் பாக்கியம் தமிழக மக்களை அடைகின்றது. என்ன கொடுமை சார் இது?

உலகத்தமிழர்கள் தவற விட்ட உண்மை சம்பவம் (கன்னி மற்றும் கண்ணி சம்பவங்களின் முழு உண்மை)

மக்களே,

ரொம்ப அதிசயமாக நேத்து நம்ம ஜெயம் ரவி கால் பண்ணி இருந்தான். சமீப காலமா அவன் கிட்ட இருந்து எந்த ஒரு தொடர்பும் இல்லாததால் நான் கூட அவனை கண்டுக் கொள்ளவே இல்லை. எனக்கு என்ன ஒரு சந்தேகம் என்றால் கொஞ்சம் பாப்புலாரிட்டி வந்துட்டா போதுமே, நண்பனை எல்லாம் மறந்து விடுவதா என்ன? அதனால் தான் தொடர்பு கொள்ளவில்லையோ என்னவோ என்று. ஆனால் அவன் கூட பேசிய பிறகுதான் தெரிந்தது, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று.

அவன் சொன்ன ரெண்டு முக்கியமான விஷயங்களை கீழே கொடுத்துள்ளேன் (அவனுக்கு இதெல்லாம் முக்கியமான விஷயங்கலாம்).

1. நேத்து தேதி 20-09 -2009 அதனால் என்னடா என்று கேட்டால், 20092009 என்று வருகிறதாம், இந்த வருடத்தில் இப்படி ஒரு முறை தான் வருமாம். ?(ஏண்டா, போன வருஷம் கூட 20082008 வந்ததே, நீ அப்ப எண்டா போன் பண்ணல?)

சரி, எப்படி தான் மொக்கை போடப் போறான் என்று நினைத்து, அந்த பாழாப் போன ரெண்டாவது விஷயம் என்னடா என்று கேட்டால், அவன் சொன்னதை கேட்டு என்னுடைய நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது. (நன்றாக கவனிக்கவும், நெஞ்சுதான்)

2. அதாவது, நேத்து, அதாங்க ஞாயிற்றுகிழமை அன்று தமிழ மொழியின் தலைமகனாம் நம்ம கவிஞர் கபாலீஸ்வரன் அவர்கள் எழுதிய கவிதைகளின் ஒலி நாடாக்கள் (நன்றாக கவனிக்கவும், ஒலி நாடாக்கள் தான், வேறு எந்த நாடாவும் இல்லை) வெளியிடப் பட்டனவாம். அந்த சம்பவத்தை அவன் அப்படியே போட்டோ எடுத்து எனக்கு அனுப்பி இருந்ததால் அதனை இங்கே உங்களின் பார்வைக்கு அளிக்கிறேன்.

முதல் போட்டோ ஒரு சேஞ்சுக்கு இருட்டில் எடுக்கப்பட்டது, பயந்து விடாதீர்கள்.

Image(316)
Image(317)
Image(318)

கவிதை தொகுப்புகளின் பெயர்களை நன்றாக கவனிக்கவும்.

1. நீ மனிதன் தானா? (அருகிலேயே நம்ம கவிஞர் கபாலீஸ்வரன் படம் உள்ளதை கவனிக்கவும்)

2. இதயா ஒலி (இதய ஒலி அல்ல, இதயா ஒலிதான்)

3. உன்னை பார்த்து உலகம் சிரிக்கிறது (அருகிலேயே நம்ம கவிஞர் கபாலீஸ்வரன் படம் உள்ளதை கவனிக்கவும்)

4. ஆசையை அலை போலே (ஆசையே அலை போலே அல்ல, ஆசையை அலை போலே தான்)

5. முள்ளில் மலர்ந்த ரோஜா (சொல்ல ஒன்னும் இல்ல, இருந்தாலும் அருகில் ஷகீலா படம்).

இதில் முக்கியமான விஷயம் வெளியீட்டாளர் பெயருக்கு முன்னாள் உள்ள அடைமொழிகள் தான்:

கனவுக்கண்ணி (நன்றாக கவனிக்கவும், கனவுக் கன்னி அல்ல, கண்ணி தான்). இந்த கன்னி என்றால் ஆங்கிலத்தில் TRAP என்று கூட அர்த்தமாம். அதாங்க கண்ணி வெடி என்று சொல்வோமே, அந்த கண்ணி தான் இந்த கண்ணி.

அதுக்கு அப்புறம், உஸ்ஸ்ஸ்ஸ், அப்பாடா முடியல. நீங்களே படிச்சு தெரிஞ்சுகொங்கோ.

பாலிமர் டி.வி - புதிய தமிழ் சாட்டிலைட் தொலைக்காட்சி சேனல்

மக்களே,

நீண்ட நெடு நாட்களாக ஆழ்தூக்கத்தில் இருந்த நான் எழுந்து வந்து விட்டேன். இனிமேல் என்னிடம் இருந்து மொக்கை பதிவுகளை நீங்கள் அடிக்கடி எதிர்பார்க்கலாம். இனிமேல் அறிவிப்புகள், விழாக்கள், சினிமா விமர்சனங்கள், சுவையான சங்கதிகள் என்று இந்த வலை ரோஜா சிறப்பாக இயங்கும் என்ற தகவலை உங்களுக்கு தெரிவிப்பதில் நான் பெறுமகிழ்ச்சி அடைகிறேன். முதன்முதலாக இதோ ஒரு விழா பற்றிய பதிவு. இந்த விழ ஒரு புதிய சாட்டிலைட் சேனல் துவக்க விழா ஆகும்.

தமிழில் ஏற்கனவே பல சேனல்கள் இருக்கின்றன. அவற்றில் குறிப்பிட்டு சொல்லும்படியாக ஒன்றிரண்டு சேனல்களே இயங்குகின்றன. இருபத்தி இரண்டு சேனல்கள் இருக்கும் இடத்தில் நான் என் ஒன்றிரண்டு சேனல் பற்றியே பேசவேண்டும் என்று கூட நீங்கள் கேட்கலாம். வாசகர்களையும், பார்ப்பவர்களையும் அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லாத எந்த ஒரு ஊடகமும் அவர்களுக்கு தீமையே செய்கின்றன என்பது தவிர்க்க இயலாத உண்மை. ஆங்கிலத்தில் If you are Not part of the Solution, Then You Are the Problem என்று ஒரு சொல்லாடல் உண்டு. இதனையே ரிக் வேதத்தில் கூறி இருப்பார்கள். இங்குள்ள பெரும்பாலான தொலைக்காட்சி ஊடகங்கள் நம்மை மன அளவிலும், சமூக அளவிலும் வளர விடாமல் ஒரு அடிமைகளாகவே வைத்து இருக்கின்றன.

இத்தகைய சூழ்நிலையில் தான் இந்த புதிய சாட்டிலைட் சேனல் உதயமாகிறது. பெரும்பாலான நிகழ்ச்சிகள் புதுமையாக இருக்கும் என்று உறுதி அளித்து வரும் புதன் அன்று முதல் தொலைக் காட்சி இயங்க ஆரம்பிக்கும் என்று அந்த நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிறுவனத்தினரை பற்றி தெரியாதவர்களுக்கு இந்த பத்தி: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் (சேலம், கோவை, ஈரோடு இன்னும் பிற) மக்கள் அதிகமாக பார்க்கும் சேனல் எது என்று ஆய்வு செய்தால் வழக்கம் போல சண் தொலைக்காட்சி தான் முதலில் வரும். ஆனால் இரண்டாவது இடத்தில் நீங்கள் நினைப்பது போல கே. டி.வியோ, கலைஞட் தொலைக்காட்சியோ, விஜய் டி.வியோ அல்லது ஜெயா டி.வியோ இல்லை. இவற்றிற்கு பதிலாக இரண்டாவது இடத்தில் வரும் சேனல் ஒரு கேபிள் தொலைக்காட்சி சேனல் ஆகும். அந்த சேனலின் பெயர் தான் பாலிமர். இதுநாள் வரை கேபிள் தொலைக் காட்சியாக மட்டுமே இயங்கி வந்த இவர்கள் தமிழ நாட்டின் முன்னணி தொலைக் காட்சி ஊடக நிபுணர்களை கொண்டு ஆரம்பிக்கும் சேனல் இது.

Polimer

புதிதாக ஒன்று என்றால் நம்முடைய பத்திரிகை காரர்களுக்கு மூக்கில் வேர்த்து விடுமே? இதில் கழுகுகள் யாருக்குm சளைத்தவர் இல்லை என்பதை இந்த தகவல் மூலம் தெரிவிக்கிறார். இதனால் இதுவும் ஒரு அரசியல் சார்ந்த சேனலோ என்ற எண்ணம் மேலிட்டதால் அந்த நிறுவனத்தினரிடமும் பலரிடமும் விசாரித்ததில் அரசியல் சார்பு அற்ற நடுநிலைமை நிறுவனம் இது என்ற தகவல் கிடைத்தது.

d

மக்களே, இந்த பதிவு இவ்வள்வு தான். அடுத்த பதிவில் விரைவில் சந்திப்போம்.

இந்தியாவின் மானத்தை காப்பாற்றிய புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்

மக்களே,

பல நாட்களாக என்னுடைய அரசியல் சாராத இந்த சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு வந்து விட்டேன், உங்களை மகிழ்விக்க. என்னுடைய சுற்றுப் பயணத்தின் போது நான் கண்டு களித்த ஒரு அழகிய நதியின் டாப் ஆங்கிள் படங்கள இவை.

 

Image(249) Image(250)

இந்தப் படத்தில் ஓடிக் கொண்டு இருக்கும் பேருந்தை வைத்தே இது கொல்கத்தா என்றும், அந்த நதி ஹூக்லி நதி என்றும் கண்டு பிடித்தவர்களுக்கும் பாராட்டுக்கள்.

சரி, இப்போது விஷயத்துக்கு வருவோம். இது என்னடா, புரட்சிக் கலைஞர் விஜய காந்த் எப்போது இந்தியாவின் மானத்தை காப்பாற்றினார் என்று நீங்கள் ஆச்சரியப் படலாம். அதற்க்கு பதில் சொல்லுமுன், இதோ சில அரிய படங்கள்:

பைரேட்ஸ் ஆப தி கரீபியன் என்ற அந்த பழங்காலத்து சமயத்தை அடிப்படையாக கொண்ட படத்தில் அடீடஸ் எப்படி வந்தது என்று ஆச்சர்யமா?

Adidas Pirate

மகாபாரதம் மற்றும் ராமாயணத்தை அடிப் படையாக கொண்ட இந்த கிரேக்க இதிகாசத்தில் விமானம்? என்ன கொடுமை இது, பிராட் பிட்?

AeroPlanes in Trojan War

ஹீரோஸ் என்ற இந்த சீன வரலாற்று படத்தில் செல் பொன்? சீனர்கள் வின்ஜானத்தில் எவ்வளவு முன்னேறியவர்கள் என்பதை நீங்கள் இப்போதாவது புரிந்து கொண்டால் சரி தான்.

Cell Phones are a Must, even in those days

இதோ இந்த ஜாக்கி சான் படத்தில் கூட தெலுகு படம் பார்த்து கேட்டுப் போன அசிஸ்டன்ட் டைரக்டர்கள் நிறைய பேர் இருப்பார்கள் போல (அவங்க தான் போலீஸ ஆனா கூட ரப்பர் செருப்பு குடுத்து ஓடி வர சொல்லுவாங்க). துப்பாக்கிய எப்படி புடிக்குறது என்று கூட சொல்லி தரல. இதையெல்லாம் துப்பாக்கியை சாய்வாக பிடித்து சுடும் நம்ம கேப்டன் பார்த்தால் பாவம் அவர் மனசு எவ்வளவு கஷ்டப் படும்?

TRigger Happy Cop

இந்த ஹாங் காங் படத்தை பாருங்கள். இந்த வில்லன் கூட "ஜாக்கிரதை" என்று சொல்வது ஏதோ அந்த படத்தோட அசிஸ்டன்ட் டைரக்டருக்கு தானோ? ஏம்பா, ராஜா ராணி காலத்து படம் என்று சொல்லி அவரு கடிகாரத்தை எல்லாம் கழட்ட சொல்ல மாட்டீங்களா?

WATCH it Out

என்னடா, இந்த கூத்தெல்லாம் சினிமாவுல தான் என்று தானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. உலக மகா மொக்கைச்சாமி அங்கிள் சாம் ஜார்ஜ் புஷ் இந்த சாதனையை எல்லாம் சர்வ சாதாரணமாக முறியடித்து விட்டார். இதோ பாருங்கள், ஒரு குழந்தைக்கு கூட புத்தகத்தை எப்படி படிப்பது என்று தெரிகிறது. ஆனால், நம்ம உலக மகா மொக்கைச்சாமி அங்கிள் சாம் ஜார்ஜ் புஷ் புத்தகத்தை எப்படி பார்க்கிறார் என்று பாருங்கள்.

George Bush 2

சரி, ஏதோ ஒரு தடவ அவர் எக்கு தப்பா இருக்கும்போது எடுத்த படத்த வச்சு நம்ம உலக மகா மொக்கைச்சாமி அங்கிள் சாம் அவர்களை தப்பா எடை போடாதீர்கள் என்று தானே சொல்ல வருகிறீர்கள்? தயவு செய்து அடுத்த படத்தை பாருங்கள். ஒரு பைனாகுலாரை எப்படி உபயோகப் படுத்துவது என்று கூட நம்ம உலக மகா மொக்கைச்சாமி அங்கிள் சாம் அவர்களுக்கு தெரிய வில்லை.

George Bush 1

சரி, சரி, நம்ம உலக மகா மொக்கைச்சாமி அங்கிள் சாம் உண்மையிலேயே ஒரு மகா மொக்கை என்பதை ஒப்புக் கொள்கிறோம், ஆனால் இதுக்கும் நம்ம கேப்டன் விஜய காந்த் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்? அவரை என் இந்த பதிவில் இழுத்தீர்கள்? இப்ப தான் நம்ம லக்கி அவரைப் பத்தி புத்தகமெல்லாம் எழுதி அவர ஒரு பாப்புலர் பிகர் ஆக மாத்தி விட்டுக் கொண்டு வருகிறார், இந்த சூழ்நிலையில் இப்படி ஒரு தலைப்பா? என்று கூட சிலர் நினைக்கலாம்.

ஆனால், இந்த படங்களையெல்லாம் பார்த்த அயல்நாட்டு நண்பர்கள் சிலர் என்னடா உங்க நாட்டுல இந்த படங்களுக்கு போட்டியா எதுவுமே இல்லையா? அப்ப உலக மகா மொக்கைச்சாமி போட்டிக்கு இந்தியாவின் சார்பாக என்றி ஒன்றுமே இல்லையா என்று கூட கேலியாக சிரித்தார்கள். அப்ப தான் இந்தியாவின் மானத்தை காப்பாற்ற நம்ம கேப்டன் விஜய காந்த் அவர்களின் வீரப் பிரதாபத்தை முழுவதும் காட்டாமல் (நரசிம்மா படத்தின் முதல் பாதியை பார்த்தாலே போதும், அவங்களுக்கு பாதி உயிர் காலி ஆகிடும்) ஒரே ஒரு சாம்பிள் மட்டும் காட்டினேன்;

captain md

இந்தப் படத்தில் மேனேஜிங் டைரக்டர் என்ற வார்த்தைகளின் ஸ்பெல்லிந்'ஐ சற்று கூர்ந்து பாருங்கள். ஆனால், இதற்கு முன்னரே ரமணா படத்தில் விண்டோஸ் மூவீ பிளேயரில் கேப்டன் டைப் அடிப்பதை நான் பார்த்து விட்டு மனதை தேற்றிக் கொண்டு விட்டதால் எனக்கு இதெல்லாம் பெரியதாக தெரியவில்லை. உங்களுக்கு எப்படி?

சரி, சரி, மனதை தேற்றிக் கொள்ளுங்கள். இந்த அதிர்ச்சியை தாங்கிய உங்களுக்கு இந்த தகவல் சாதரணம் தான். அதாவது இந்த பதிவின் ஆரம்பத்தில் நீங்கள் பார்த்த இரண்டு படங்களும் நம்ம கூவம் ஆற்றை டாப் ஆங்கிளில் காட்டும் படங்கள். மவுண்ட் ரோட் தாராப்பூர் டவரில் B.S.N.L Office இருந்து பார்த்து எடுத்தால் இப்படி வரும்.

கம்ப்யுட்டர் கைப்புள்ள'யின் சாகசங்கள்

மக்களே,

எனது நண்பர் கூஜா ஒரு கம்ப்யுட்டர் கைப்புள்ள. அதாவது அவர் ஒரு  ஐ.டி மென்பொருள் கட்டுமான வல்லுநர்.  அந்த துறையில இருக்குற மத்தவங்கள மாதிரியே அவருக்கும் கம்பியுட்டர் இல்லன்னா ஒன்னும் ஓடாது. உதாரணமா, அவரு எப்படி சேவிங் செய்வார் தெரியுமா?

இதென்னடா கேள்வி? மத்தவங்கள மாதிரி முகத்துலதான் என்று கிண்டலாக பதில் அளிக்காமல் தொடர்ந்து படியுங்கள். அதாவது நாமெல்லாம் செல்ப் சேவிங் என்றால் பாத் ரூம் போய் கண்ணாடி முன்னால் நின்று சேவிங் செய்து கொள்வோம்.  ஆனால், இவர் அப்படி இல்லை. இவருக்கு தான் கம்பியுட்டரே உலகம் ஆச்சே? அதனால் என்ன செய்கிறார் என்று பாருங்கள்.

10

9

8

7

6

5

4

3

2

1

0

கம்பியுட்டர் கைப்புள்ள சேவிங் செய்துக் கொள்ளும் முறை - விளக்கப் படம்

shaving

சரி, இதுல என்னடா பெரிய காமெடி? எங்கிருந்தோ வந்த ஒரு மெயில வச்சு ஒரு பதிவு போட்டுடுவியா? என்று சிலர் கேட்பது காதில் விழுகிறது. அதனால, நம்ம நண்பர் கம்பியுட்டர் கைப்புள்ள கூஜா'வுக்கு குழந்தை பொறந்தப்போ என்ன நடந்துச்சுன்னு சொல்றேன்.

கம்பியுட்டர் கைப்புள்ள கூஜாவுக்கு பொறந்தது ரெட்டைக் குழந்தைகள். அதனால் அவர் என்ன பெயர் வச்சாருன்னு யாராவது சொல்ல முடியுமா?

சார்லஸ் & பாபெஜ்?

பில் கேட்ஸ் & அல் கேட்ஸ்?

ராம் & ரோம்?

சீடி & டீவிடி?

இப்படி பல பேரு வைப்பருன்னு தானே யோசிப்பீங்க? கம்பியுட்டர் கைப்புள்ள கூஜா அப்படி எல்லாம் பண்ணல.அவரு என்ன பேரு வச்சாருன்னு தெரியுமா?

10

 

9

 

8

 

7

 

6

 

5

 

4

 

3

 

2

 

1

 

0

 

கம்பியுட்டர் கைப்புள்ள கூஜாவுக்கு பொறந்த ரெட்டைக் குழந்தைகள்

twins

மக்களே, என்னை திட்டி மின் அஞ்சல் அனுப்புறதோ, பின்னுட்டம் இடுறதோ எண்ணம் இருந்தா, மறப்போம் மன்னிப்போம்  என்ற கொள்கையில் நம்பிக்கை வைத்து கோபிக்காமல் ரெண்டு வினாடி உங்களை சிரிக்க வைத்த என்னை பாராட்டி தமிலிஷ்'ல போய் வோட்டு போட்டால் நமது இந்தியாவை காக்க வந்த கேப்டன் விஜயகாந்த் பத்தி ஒரு பதிவு இடுவேன் என்று உறுதி கூறுகிறேன்.

அபியின் கல்யாணம் நின்றது

1

பரபரப்பு செய்தி = அபியின் கல்யாணம் நின்றது.

இன்று டாக்டர் மகேஷ் உடன் நடப்பதாக இருந்த அபியின் கல்யாணம் (இரண்டாவது கல்யாணம் - முதல் கல்யாணம் பாஸ்கர் உடன் நடந்து இப்போது விவாகரத்தும் நடந்து விட்டது) இன்று திடீரென்று நின்று விட்டது.

4 கல்யாணத்தை நிறுத்தியது யார்?  என்று தெரிந்து கொள்வதற்கு முன்பாக ஒரு சிறு தகவல்: இந்த கல்யாணம் நடக்க கூடாது என்பதற்காக முதல் கணவன் பாஸ்கர் ஒரு துப்பாக்கியுடன் கல்யாண மண்டபத்தில் வந்து அபியை சுட எண்ணியுள்ளான்.

இந்த துடிப்பான கட்டத்தில் தான் அபியின் கல்யாணம்  நின்று விட்டது.

கல்யாணத்தை நிறுத்தியது யார்?

பாஸ்கரா? (விவாகரத்து பெற்ற முன்னால் கணவன் - மறுபடியும் கல்யாணம் செய்துக் கொள்ள துடிப்பவன்).

ஆதியா? (அபியின் சகோதரன் - ஆனால் மாற்றாந்தாய்க்கு பிறந்தவன் - அபியை பழி வாங்க துடிப்பவன்)

திருவேங்கடம்'ஆ? (அபியின் சித்தப்பா - அபியின் வளர்ச்சியை பிடிக்காத ஒரு நபர் - ஆதியின் கைக்கூலி).

தொல்காப்பியன்'ஆ? (அபியின் முன்னால் நண்பர் - அபியாள் தவறாக புரிந்து கொள்ளப் பட்ட சீரியல் இயக்குனர் - அதனால் எப்போதும் நல்லவர்)

மேனகாவா? (தொழிலதிபர் - அபியால் பல வகைகளில் பாதிக்கப்பட்டவர்)

3 இப்படி பலரும் யோசித்துக் கொண்டு இருக்கும்போது தான் இந்த கல்யாணம் நின்று விட்டது.

கல்யாணத்தை நிறுத்தியது வேறு யாருமல்ல, சாட்சாத் அபியே தான்.

என்ன சார் இது? தன்னுடைய கல்யாணத்தை தானே யாராவது நிறுத்துவார்களா என்று கேட்பவர்கள் சரியாக மூன்று வருடங்களும் ஐந்நூறு நாட்களும் கழித்து இந்த சீரியலை பாருங்கள். அப்போதாவது யாராவது வந்து "அபி ஏன் கல்யாணத்த நிறுத்தினா தெரியுமா?" என்று கேட்டு நமக்கு எல்லாம் விடை சொல்வார்கள்.

2 டிஸ்கி: டோண்டு சார் சும்மா இவன்தான் பிராமணன் கதையை போட்டு விடுகிறார். நமக்கு தான் எழுதவே எந்த டாபிக்கும் இல்லை என்று நினைத்தால் இன்று இந்த சம்பவம் நடந்தது.

டோண்டு சார் கோவிச்சுக்க மாட்டேளே?

பின் குறிப்பு : திருவேங்கடத்தின் மகள் தான் டாக்டர் மகேஷ் உடன் கல்யாணம் செய்துக் கொள்ளப் போகும் பெண். இதில் கூத்து என்னவென்றால் அவளுக்கும் இது ரெண்டாவது கல்யாணம். முதல் கணவன் இப்போது தான் திரும்பி வந்து திருவேங்கடத்தின் வீட்டில் தங்கி இருக்கிறான்.

அரசியல் தலைவர்களின் அன்பளிப்பு - தே. மு & தே. பி

மக்களே,

தலைப்பை பார்ர்த்து விட்டு புதிய அரசியல் கட்சியா என்று எண்ணி விடாதீர்கள்.

தே.மு - தே. பி என்பது தேர்தலுக்கு முன் - தேர்தலுக்கு பின் என்பதின் சுருக்கமே ஆகும்.

அடுத்த இரண்டு மாதங்களில் இந்தியாவின் மிகப் பெரும் சர்க்கஸ் நடக்கப் போவது உங்கள் எல்லாருக்கும் தெரியும். அந்த சர்க்கஸ் ஆட்டத்தில் கலந்து கொள்ள இருக்கும் தமிழ் நாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பின்வருமாறு:

 

கருணாநிதி ஜெயலலிதா விஜயகாந்த் ராமதாஸ் திருமாவளவன்
Karunanidhi jayalalitha vijaykanth ramados thirumavalavan

அடுத்த கட்ட தலைவர்கள் மற்றும் வருங்கால இந்திய பிரதமர்களின் விபரங்களும் இங்கே உண்டு. என்னடா இங்கே எதற்கு வடிவேலு அவர்களின் படம் உள்ளது என்று யோசிக்காதீர்கள். அவர்தான் விஜயகாந்த் எங்கே நின்றாலும் அவரை எதிர்த்து போட்டியிடப் போவதாக சொல்லி இருக்கிறாரே? மறந்து விட்டதா?

தங்கபாலு கார்த்திக் சரத் குமார் விஜய டி ராஜேந்தர் வடிவேலு
thangabalu sarath kumar images VTR VADIVELU

சரி, அது என்னதான் அப்படிப்பட்ட அன்பளிப்பு - கிப்ட்? அதில் என்ன தேர்தலுக்கு முன் தேர்தலுக்கு பின் என்ற பாகுபாடு என்று கேட்பவர்களுக்கு, இதோ விளக்கம்.

தேர்தலுக்கு முன்னர் பல விதமான அன்பளிப்புகள் வழங்கப்படும். ஒவ்வொரு கட்சியின் நிதி நிலையை பொறுத்து அவை நிர்ணயிக்கப் படும். அவற்றில் சில, இதோ:

 

தேர்தலுக்கு முன்பு கிடைக்கப் போகும் கிப்ட்- எந்த கட்சி அதிகம் கொடுக்குமோ அது தான் ஜெயிக்கும்
டெலிவிஷன் கம்புயுட்டர் சைக்கிள் பிரியாணி பணம்
television computer bicycle biriyani cash

   ஆனால், தேர்தலுக்கு பின்னர் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு கிடைக்கப் போகும் அன்பளிப்பு ஒன்றே ஒன்றுதான். இதில், மேல்ஜாதி, கீழ்ஜாதி, ஹிந்து, முஸ்லீம், கிறித்துவன், போன்ற பாகுபாடு, படித்தவன் - படிக்காதவன், பணக்காரன் - ஏழை என்று எந்த விதமான பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் ஒரே விதமான அன்பளிப்புதான் வழங்கப் படும். இதோ அந்த அன்பளிப்பின் விளக்கப் படம்:

தேர்தலுக்கு பிறகு கிடைக்கப்போகும்  கிப்ட்-எந்தகட்சி ஜெயித்தாலும் ஒரே கிப்ட்தான்
gift

முக்கிய கேள்வி:தலைவர்களே,  இந்த மாத இறுதியில் நான் வெளி நாடு செல்ல இருப்பதால், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அரசியல் பரிசளிப்பு விழாக்களில் (அதாங்க, தேர்தல்) பங்கேற்க இயலாது. அதனால் எனக்கு உரிய பரிசுகளை (அதாங்க அன்பளிப்பு) இப்போதே வாங்கிக் கொள்ளலாமா? எப்படி இருந்தாலும் என்னுடைய வோட்டை நீங்களே போட்டு விடுவீர்கள் தானே? நீங்க தேர்தலுக்கு பின்னாடி தர வேண்டியதை (அதாங்க நாமம்) நான் இப்பவே போட்டுக்குறேன். ஒ.கே.வா?

Related Posts Widget for Blogs by LinkWithin