இளைய தளபதி விஜய்'யின் வில்லு படத்தின் கதை

முன்குறிப்பு: வாசக நண்பர்கள் அனைவரும், குறிப்பாக இளைய தளபதி விஜய்'ன் ரசிகர்கள், என்னை திட்டலாம். என்னடா இவன், இன்னும் முப்பது நாளில் வெளி வரப் போகும் வில்லு படத்தின் கதையை இப்போதே கூறி விட்டானே என்று. என்ன செய்வது, வாசகர்கள் என்னுடைய எழுத்தையும் படிக்க வேண்டும் என்றால் இது போன்ற ஏதாவது வித்தியாசமாக செய்தால் ஒழிய வேறு வழி இல்லை.

படம் : வில்லு

ஹீரோ ; விஜய், என்னை போன்ற பல விஜய் ரசிகர்கள் மன்னிக்கவும், மருத்துவர் விஜய் (இப்போது மருத்துவர்கள் மன்னிக்கவும்)

இயக்குனர் : பிரபுதேவா

ஹீரோயின் : நயன்தாரா

வெளியாகும் நாள் : சனவரி 15 (தை மாதம் முதல் நாள்)

சிறப்பு அம்சம் : மருத்துவர் விஜய் இரட்டை வேடங்களில் (அப்பா புகழ் மற்றும் மகன் ராஜா) நடிப்பதும், நடிகை குஷ்பூ ஒரு பாடலில் மட்டும் நடனம் ஆடுவதும்.

படத்தின் கதை: அப்பா கதாபாத்திரத்தில் இருக்கும் விஜய் சுமார் 45 வயதுடையவர். அவர் இந்திய ராணுவத்தில் மேஜர் ஆக பணி புரிகிறார். அவருடன் பணி புரியும் சக ராணுவ அதிகாரிகள் இந்திய ராணுவ ரகசியங்களை அயல் நாட்டிற்கு உளவு சொல்வதை கண்டு பிடிக்கிறார்; அதனால் அவர்களால் துரோகமாக கொல்லப் படுகிறார் (இவை எல்லாம் பிளாஷ்பாக்'ல் வருபவை, நான் உங்களுக்கு கோர்வையாக சொல்லுகிறேன்).


ஆஸ்திரேலியாவில் மேல் படிப்பு படித்து கொண்டு இருக்கும் விஜய் (மகன் = ராஜா) வழமை போல ஒரு அறிமுக பாடல் மூலம் தோன்றி நம்மை எல்லாம் அசத்துகிறார். இந்த பாடலில் அவருடன் ஆடுவது நம் மனம் கவர்ந்த நடிகை குஷ்பூ ஆகும். பின்னர் ராஜா பிரகாஷ் ராஜ்'ன் மகளாகிய நயன்தாராவை காதலிக்கிறார். திடீரென்று அவருக்கு ஒரு உத்தரவு வருகிறது. அந்த உத்தரவின் படி முன்-பின் அறிமுகம் இல்லாத ஒருவரை (பிஜு மேனன் ) ராஜா தடயம் இல்லாமல் கொலை செய்கிறார் & பின்னர் அவர் வளர்க்கும் அனைத்து பறவைகளையும் (குருவி உட்பட) கொன்று விடுகிறார்.

அங்கே அவர் வடிவேலு'வை சந்திக்கிறார். படத்தில் வடிவேலு மதுரை சித்திரை திருவிழாவில் தொலைந்த தன்னுடைய சகோதரனை ஆஸ்திரேலியாவில் தேடும் படலம், அற்புதமான நகைச்சுவை காட்சிகள் நிறைந்த கதம்பம். அதே போல, நயன்தாராவின் அறிமுகப் பாடலில் (உள்ளத்தை அள்ளித்தா ரம்பா போல) அவரின் ஸ்கர்ட் காற்றில் பறக்கும் காட்சிகள் முதல் பெஞ்சில் இருக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளை கண்டிப்பாக உற்சாகப் படுத்தும்.

பின்னர் பிரகாஷ் ராஜ்'ன் தொழில் பார்ட்னர் ஆக வரும் நெப்போலியன்'ஐயும் மர்மமான முறையில் (மறுபடியும் மர்ம உத்தரவை பின்பற்றி) கொலை செய்கிறார் & பின்னர் அவர் வளர்க்கும் அனைத்து பறவைகளையும் (குருவி உட்பட) கொன்று விடுகிறார். இந்த மரணங்களை தொடர்ந்து பிரகாஷ் ராஜ்'ஐயும் கொல்ல முயற்சிக்கிறார். அப்போது நயன்தாரா குறுக்கிட்டு அந்த முயற்சியை முறியடிக்கிறார். அப்போது நயன்தாராவின் கேள்விகளுக்கு விஜய் பதில் அளிக்காமல் அவரது அம்மாவை (சிம்ரன்) அறிமுகப் படுத்துகிறார். சிம்ரனும் மேலே எதுவும் கூறாமல் ஒரு டையரியை கொடுக்கிறார்.


அந்த டையரியில் புகழ் கதாபாத்திரத்தில் வரும் விஜய்'ன் அப்பா "என்னுடைய மரணத்திர்ர்க்கு காரணம் குருவி....................................." என்று இருக்கிறது. அந்த டையரியை படிக்கும் சிம்ரன் தன் கணவனின் படுகொலைக்கு பழி வாங்க மர்ம உத்தரவுகளை கொடுக்கிறார். அதனால் தான் மகன் விஜய் குருவி வளர்க்கும் பண்ணை அதிபர்களை எல்லாம் கொலை செய்கிறார்.

இப்போது பிரகாஷ் ராஜ் வந்து அந்த டைரியின் கிழிந்த கடைசி பக்கத்தை கொடுக்கிறார். அதில், "என்னுடைய மரணத்திர்க்கு காரணம் குருவி படத்தை பார்த்தது ஆகும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதனுடன் ஒரு குருவி படத்தின் திருட்டு டிவீடி'யும் உள்ளது. இதை முழவதும் படித்து மனம் திருந்தும் மகன் விஜய் தன்னுடைய அடுத்த படத்திற்கு "வேட்டைக்காரன்" என்று பெயரிட்டு நடிக்க செல்லுகிறார். இதனை பொறுமையுடன் படித்த நண்பர்கள் தமிழிஷ்'இல் வோட்டு போட்டு விட்டு இதை எல்லாம் படித்தோமே என்று மனம் நொந்து செல்கின்றனர்.


பின் குறிப்பு: நானும் ஒரு விஜய் ரசிகன் தான். எனவே என்னுடைய வீட்டிற்கு ஆட்டோ அனுப்புவது, என்னை கேவலப் படுத்தி பின்னுட்டம் இடுவது போன்ற செயல்களில் ஈடுபடாமல் Sportive ஆக இதனை எடுத்து கொள்ளவும். இந்த இடுகையின் மூலம் யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியும், கவுண்ட மணியும்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தேர்வும், ஒரு மர்ம போன் காலும்



மன்னிப்பு: இந்த சம்பவம் நடைபெற்றது ஒரு மாதத்திற்கு முன்பாக. தாமதமாக இந்த பதிவை வெளியிடுவதற்கு மன்னிக்கவும்.

இன்றைய ஆட்ட நிலை: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினருக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில், கடந்த ஒரு வருடமாக தடுமாறி வந்த ஆன்ட்ரு ஸ்ட்ராஸ்'ம் பால் காலிங் வூட்'ம் ஆளுக்கொரு சதமடித்து இந்தியர்களுக்கு கடினமான இலக்கை அளித்து உள்ளனர்.

சம்பவம்: அது ஒரு மிகப் பிரபலமான ஓட்டல். அதன் கான்பரன்ஸ் ஹாலில் ஐந்து கனவான்கள் கூடி இருந்தனர். அவர்கள் தான் இங்கிலாந்து கிரிக்கெட் அணி தேர்வாளர்கள். அவர்கள் இந்தியா செல்லும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அவர்கள் தேர்வு செய்த அணியில் துவக்க ஆட்டக்க் காரராக லுக் ரைட்'ஐயும், மத்திய நிலை ஆட்ட காரராக ரவீ போபாரா'வையும் தேர்ந்து எடுத்து இருந்தனர். அந்த அணியில் ஆன்ட்ரு ஸ்ட்ராஸ்'உம் பால் காலிங் வூட்'உம் இடம் பெற வில்லை. அணியை முடிவு செய்த அவர்கள் பத்திரிக்கையாளர்களை அழைக்க இருந்த நேரத்தில் ஒரு போன் கால் வந்தது.

அப்போது வந்த போன் காலை செய்தவர் திரு மைகேல் வாகன் ஆகும். அவர் இங்கிலாந்து அணியின் முன்னால் தலைவர் ஆவார். கடந்த பத்து வருடங்களாக இந்தியாவுடன் தொடந்து விளையாடிய அனுபாவம் பெற்றவர் ஆவார். அவர் தேர்வாளர்களிடம் அணியை பற்றி விசாரித்தார். அவர்களும் அணி விவரங்களை தெரிவித்தனர். அதில் ஆன்ட்ரு ஸ்ட்ராஸ்'ம் பால் காலிங் வூட்'ம் இடம் பெற வில்லை என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தார் மைகேல் வாகன். அதற்க்கு பதிலளித்த தேர்வாளர்கள் கடந்த ஒரு வருடமாக இந்த இரு ஆட்டக்காரர்களும் சிறப்பாக விளையாடததை சுட்டிக் காட்டி அதனால் தன் அவர்கள் தேர்வு செய்யப் படவில்லை என்றும் கூறினார்.

நிற்க.

சமீபத்தில் 1990'களில் வெளிவந்த ஒரு தமிழ் படத்தில் நகைச்சுவை வேந்தர் திரு கவுண்டமணி அவர்கள் ஒரு குறிப்பிட்ட வசனத்தை பேசுவார். அதாவது அவரின் மாமனார் கறுப்பாக இருப்பார். ஆனால் அவரின் மனைவியும் பெண்களும் செக்கச் செவேல் என்று இருப்பதை கண்டு வியப்பார் கவுண்டர். அதற்க்கு அவரின் மாமனார் "மாபிள்ளை, என்னை பார்க்காதீர்கள். என்னுடைய மனைவியை பாருங்கள்" என்று கூறுவர். அப்போது கவுண்டர் "அதாவது, வெதைக்குரவனை பாக்காதே, வெளையுற நிலத்தை பாரு'ன்னு சொல்லுர" என்பார்.


தொடர்க.

மேலே குறிப்பிட்ட அந்த தமிழ் படத்தை லண்டனில் கலைஞர் டிவி;யில் (லக்கி கவனிக்க) பார்த்து கொண்டு இருந்த மைகேல் வாகன், உடனே தேர்வாளர்களுக்கு போன் செய்து பேசியது தான் மேலே நடந்தது. அப்போது அவர் தேர்வாளர்களிடம் "நீங்கள் இங்கிலாந்து அணியை மட்டும் பார்க்காதீர்கள். அவர்கள் விளையாடப் போகும் எதிர் அணியையும் பாருங்கள். கிரிக்கெட் வரலாற்றை கடந்த பல வருடங்களாக கூர்ந்து பார்த்தால், இந்திய அணி விளிம்பு நிலையில் இருக்கும் மற்ற அணி வீரர்களுக்கு உதவுவது நன்றாக தெரியும்".

தேர்வாளர்: " என்ன சார் சொல்றீங்க?".

மைகேல் வாகன்: " ஆமாம், உதாரணமாக அட்டப்பட்டு என்ற வீரரின் அஸ்தமனம் ஆன கிரிக்கெட் வாழ்கையை மீண்டும் துவக்கி வைத்தனர் இந்தியர்கள். இப்படியாக மாத்யூ ஹெயடன், சயீத் அன்வர், சனத் ஜெயசூர்யா, சிவநராயன் சந்தர்பால்; ஏன் எனக்கே மறு வாழ்வு கொடுத்தவர்கள் இந்திய அணியினர். ஆகையால் இங்கிலாந்து அணியை பார்க்காதீர்கள். அவர்களுடன் விளையாடும் இந்திய அணியையும் பாருங்கள், கவுண்டர் கூறியதைப் போல".

இதன் தொடர்ச்சியை நீங்கள் நன்கு அறிவீர்கள். கவுண்டர் அவர்களின் வசனங்கள் எவ்வளவு பிரபலம் என்பதையும், அதன் விளைவுகளையும் இப்போது தெரிந்து கொள்ளுங்கள். எவ்வளவு நாள் ஆனாலும், எவ்வளவு பேர் வந்தாலும் கவுண்டர் கவுண்டர் தான்.

டிசம்பர் மாதம் - சின்ன திரை ஸ்பெஷல்

ஏதோ ஒரு நோக்கத்தில் ஆரம்பித்துவிட்டதால், இப்போதைக்கு முதல் பதிவாக டிசம்பர் மாதம் - சின்ன திரை ஸ்பெஷல் என்ற தலைப்பில் இந்த மாதம் சின்ன திரையில் வரப் போகும் திரை படங்களின் விவரங்களை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

விரைவில் என்னை பற்றிய எண்ணங்களையும், இந்த வலைப் பூவின் நோக்கதையும் தெரிவிக்கிறேன்.

முதலில் கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (இல்லையெனில் என்னுடைய மானசீக குரு, வலைப்பூ வித்தகர் லக்கிலுக் கோபித்து கொள்வார்)




பெரிய திரையில் பல விவாதங்களுக்கு உரிய படங்களில் நடித்த சோனியா அகர்வால் முதன்முறையாக சின்ன திரையில் தோன்றும் மெகா தொடரே "நாணல்". நடிகை குஷ்பூ தயாரித்து, கதை எழுதி மேற்பார்வையிடும் இந்த தொடரை இயக்குபவர் பல வெற்றிப் படங்களை தந்த ராபர்ட் ராஜசேகர் ஆகும்.

இந்த தொடர் இந்த மாதம் மூன்றாம் வாரத்தில் இருந்து வெளிவரும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






படம்: கல்லூரி
இயக்குனர்: பாலாஜி சக்திவேல் இசை அமைப்பாளர்: ஜோஷுவ ஸ்ரீதர்
நடிப்பு: தமன்னா, அகில்
தயாரிப்பு: இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்ச்சர்ஸ்
வெளியீடு: December 7th, 2007
திரை இடுதல்: 25th December 08.
குறிப்பு: உலகத் தொலைக் காட்சிகளில் முதன் முறையாக





படம்: தொட்டால் பூ மலரும்
இயக்குனர்: பி.வாசு
இசை அமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜ
நடிப்பு: சக்தி, வடிவேலு, ராஜ் கிரண்
வெளியீடு: 03rd August 2007.
திரை இடுதல்: 31st Dec 08



படம்: வாழ்த்துக்கள் இயக்குனர்: சீமான்
இசை அமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
நடிப்பு: மாதவன், பாவனா வெளியீடு: January 14th 2008.
திரை இடுதல்: 1st January 2009
குறிப்பு: உலகத் தொலைக் காட்சிகளில் முதன் முறையாக














படம்: ராமேஸ்வரம்
இயக்குனர்: செல்வம்
இசை அமைப்பாளர்: நீரு
நடிப்பு: ஜீவா, பாவனா
வெளியீடு: 2007
திரை இடுதல்: 13th December 2008
குறிப்பு: உலகத் தொலைக் காட்சிகளில் முதன் முறையாக




படம்: அருணாசலம்
இயக்குனர்: சுந்தர் சி
இசை அமைப்பாளர்: தேவா
நடிப்பு: சூப்பர் ஸ்டார், சௌந்தர்யா, ரம்பா
தயாரிப்பு: இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்
வெளியீடு: 1997
திரை இடுதல்: 14th December 2008





படம்: ஒரு கல்லூரியின் கதை
இயக்குனர்: நந்தா பெரியசாமி
இசை அமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
நடிப்பு: ஆர்யா, சோனியா அகர்வால்
வெளியீடு: 2005
திரை இடுதல்: 20th December 2008






படம்: எவனோ ஒருவன்
இயக்குனர்: நிஷிகாந்த் காமத்
இசை அமைப்பாளர்: ஜீ.வீ. பிரகாஷ்குமார்
நடிப்பு: மாதவன், சங்கீதா
வெளியீடு: December 7, 2007
திரை இடுதல்: 21st December 2008
குறிப்பு: உலகத் தொலைக் காட்சிகளில் முதன் முறையாக



படம்: வல்லவன்
இயக்குனர்: சிலம்பரசன்
இசை அமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
நடிப்பு: சிம்பு, நயன் தாரா, ரீமா சென்
வெளியீடு: 2006
திரை இடுதல்: 27th December 2008




படம்: தில்
இயக்குனர்: தரணி
இசை அமைப்பாளர்: வித்யா சாகர்
நடிப்பு: விக்ரம், லைலா, விவேக்
வெளியீடு: 2001
திரை இடுதல்: 28th December 2008



படம்: திருட்டு பயலே
இயக்குனர்: சுசீ கணேசன்
இசை அமைப்பாளர்: பரத்வாஜ்
நடிப்பு: ஜீவன், சோனியா அகர்வால், விவேக் வெளியீடு: 2006
திரை இடுதல்: 03rd Jan 2009



படம்: அந்நியன்
இயக்குனர்: ஷங்கர்
இசை அமைப்பாளர்: ஏ.ஆர் ரஹ்மான்
நடிப்பு: விக்ரம், சதா, விவேக்
வெளியீடு: 2001
திரை இடுதல்: 31st Dec 2008




படம்: திருப்பாச்சி
இயக்குனர்: பேரரசு
இசை அமைப்பாளர்: தீனா
நடிப்பு: விஜய், திரிஷா
வெளியீடு: 2005
திரை இடுதல்: 01st Jan 2009



ஆங்கில படம்: பேட் பாய்ஸ் (Bad Boys 2)
இயக்குனர்: மைக்கேல் பே
நடிப்பு: வில் ஸ்மித், மார்டின் லாரன்ஸ்
வெளியீடு: 2003
திரை இடுதல்: 14th Dec 2008
குறிப்பு: உலகத் தொலைக் காட்சிகளில் தமிழில் முதன் முறையாக





ஆங்கில படம்: கிரிம்சன் டைட் (Crimson Tide) இயக்குனர்: டோனி ஸ்காட்
நடிப்பு: டென்செல் வாஷிங்டன், ஜீன் ஹக்மேன் வெளியீடு: 1995
திரை இடுதல்:21st Dec 2008
குறிப்பு: உலகத் தொலைக் காட்சிகளில் தமிழில் முதன் முறையாக




ஆங்கில படம்: மெக்கனாஸ் கோல்ட் (Mackennas Gold) இயக்குனர்: லீ தாம்சன்
நடிப்பு: கிரிகாரி பெக், ஒமார் ஷேரிப்ப்
வெளியீடு: 1969
திரை இடுதல்:28th Dec 2008
குறிப்பு: உலகத் தொலைக் காட்சிகளில் தமிழில் முதன் முறையாக




ஆங்கில படம்: பிளப்பேர் (Flubber)
இயக்குனர்: லெஸ் மேபில்ட்
நடிப்பு: ராபின் வில்லைம்ஸ், மார்சியா கே
வெளியீடு: 1997
திரை இடுதல்:4th Jan 2009
குறிப்பு: உலகத் தொலைக் காட்சிகளில் தமிழில் முதன் முறையாக
Related Posts Widget for Blogs by LinkWithin