நேத்திரம்பழம் சிப்ஸ் - ஒரு நேரடி ரிப்போர்ட்

மக்களே,

சென்றவாரம் நான் மறுபடியும் ஒரு சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். இந்த முறை நான் பயணித்த பகுதி - எண்டே தேசம் கேரளா. ஆம், கேரளா தான். கேரளா செல்வது என்று முடிவானவுடன் நண்பர்கள் அனைவரிடமும் என்ன வாங்கி வர என்று வினவினால் சொல்லி வைத்தது போல அனைவரும் சொன்ன ஒரே விடயம் - நேத்திரம்பழம் சிப்ஸ்.

என்னடா இது? கேரளத்தில் சிப்சை தவிர வேறு எதுவும் வேண்டாமா என்று கேட்டால் கூட முதலில் சிப்ஸ் வாங்கி வாருங்கள், அப்புறம் மற்றவற்றை பார்த்து கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். ஏற்கனவே கேரளா சென்று வந்த நண்பர்களிடம் வேறென்ன விசேடம் என்று வினவினால் அவர்கள் கூறுவது - கேரளா அல்வா.

அது என்ன கேரளா அல்வா? நம்ம ஏற்கனவே திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவையே வாங்கியவர்கள். நமக்கு இதெல்லாம் எம்மாத்திரம்? என்று சொன்னால், கேரளா அல்வா முற்றிலும் மாறுபட்டது. அதனை வாங்கி வாருங்கள் என்று சொன்னார்கள். அதனால் என்னுடைய கேரளா சுற்றுப்பயணத்தை இந்த இரண்டு உயரிய குறிக்கோள்களுடன் ஆரம்பித்தேன் - சிப்ஸ் மற்றும் அல்வா.

அதனால் நான் சிப்சை வாங்கும்போது அதன் செய்முறைவிளக்கத்தையும் தெரிந்துகொள்ள ஒரு சிப்ஸ் தயாரிப்பாளரை அணுகினேன். அவரும் முழு மனதுடன் ஒத்துழைக்க, நான் என்னுடைய சிப்ஸ் பற்றிய பதிவினை முடிவு செய்தேன்.

DSC01639 DSC01640
DSC01641 DSC01647

இந்த படங்களை வரிசைக்கிரமத்தில் பார்த்தாலே உங்களுக்கு செய்முறை விளக்கம் புரிந்துவிடும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு சிப்ஸ் கடையிலும் இப்படி ஒரு பெரிய அடுப்பை வைத்திருக்கிறார்கள். அந்த அடுப்பின் மேலே ஒரு மிகப்பெரிய வாணலியில் எண்ணையை கொதிக்கவிட்டு அந்த கொதிக்கும் எண்ணையில் நன்கு துருவலாக இருக்கும் வாழைக்காய் துருவலை போட்டு அதனை நன்கு பொன் வருவலாகும் வரை வதக்கி (இது சரியான வார்த்தை தானா? நமக்கு சமையல் செய்து பழக்கம் இல்லை) பின்னர் அந்த வருதெடுககப்பட்ட சிப்சை எடுத்து  சிறிது ஆற வைத்து பின்னர் அதனை விற்பனைக்கு தயார் செய்வார்கள்.

DSC01648 DSC01649

கேரளா செல்லும் மக்களே, சிறிது கவனமாக இருங்கள். முன்பு திருநெல்வேலி அல்வாவில் இரண்டு வகை (அசல் மற்றும் போலி) என்று இருந்ததை நாம்தான் தோலுரித்து காட்டினோம். அதனைப்போல இந்த சிப்ஸ் விடயத்திலும் ஒரு அசல் மற்றும் போலி உள்ளது. இந்த இரண்டு படங்களையும் சற்று நன்கு கவனியுங்கள் அசல் மற்றும் போலியை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

முதல் படத்தில் இருப்பது போலி சிப்ஸ் ஆகும். இரண்டாவது படத்தில் இருப்பது அசல் கேரளா நேத்திரம்பழம் சிப்ஸ். வித்தியாசம் என்னவெனில் இரண்டாவது சிப்சை சாப்பிடும்போது திகட்டாது. நல்ல எண்ணையில் செய்யப்பட்டு இருக்கும்.

DSC01642 DSC01643
DSC01650 DSC01651

ஆனால் வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு இந்த வித்தியாசம் தெரியாது. விலையில் கூட மாற்றம் இருக்கும். அசல் சிப்ஸ் ஒரு கிலோ Rs 120 என்றால், போலி சிப்ஸ் விலை Rs 90 மட்டும்தான். ஆனால் புதிதாக வாங்குபவர்கள் இதனை கண்டு ஏமாந்துவிடக்கூடாது என்றே நான் இதனை இங்கு அளிக்கிறேன்.

ஒவ்வொரு கடையிலும் இரண்டு கண்ணாடி அடைப்பான்களில் சிப்ஸ் வைக்கப்பட்டு இருப்பதை கவனியுங்கள். ஒன்று அசல், மற்றது விஜய், சேச்சே மன்னிக்கவும், போலி.

DSC01644 DSC01645
DSC01646 DSC01642

கோவையில் இருந்து பாலக்காடு வழியாக கேரளா செல்லும்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் (பாலக்காட்டில் தான்) இப்படி வரிசையாக சிப்ஸ் கடைகள் இருக்கின்றன. மக்கள் அனைவரும் அனைத்து பொழுதுகளிலும் வந்து வாங்கி மகிழ்கிறார்கள். அந்த கேரளா அல்வாவை பற்றி சொல்லவே இல்லை என்கிறீர்களா? அதனை சாப்பிடவே முடியவில்லை சார். அப்படியே திகட்டுகிறது. ஆம், முழுக்க முழுக்க தேங்காய் எண்ணையில் செய்யப்பட்டதால் அப்படி ஒரு சுவையாம்.

அப்பாடா, ரொம்ப நாளா மக்களுக்கு பயனுள்ள ஒரு பதிவாவது போட எண்ணி இருந்தேன், இன்று செய்து விட்டேன். அதில் அனைவருக்கும் ஒரு மெஸ்சேஜ் வேறு சொல்லி விட்டேன்.

கிரிக்கெட் கேப்டன் தோனி ஆரம்பித்து வைக்கும் நடிகர் விஜயகாந்த்தின் கேப்டன் டிவி 14th April 2010

நடிகர் விஜயகாந்த் அவர்கள் ஒரு தொலைகாட்சி சேனலை ஆரம்பிக்கப்போகிறார் என்பது ஊரறிந்த விஷயம். அதனைப் பற்றி நாம் கூறப்போவதில்லை. நாம் சொல்லப்போவது ஒரு ஸ்கூப் செய்தி. அந்த செய்தியை தெரிந்துகொள்ளும் முன் இதுவரை நடந்தது என்ன என்பதை சற்று நினைவு கூறுங்கள்:

இரண்டு மாதங்களுக்கு முன்பு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தங்களுடைய கட்சி தொண்டர்களுக்காக ஒரு தொலைக்காட்சி சேனலை ஆரம்பிக்க முடிவெடுத்து அதன் சின்னத்தையும் வெளியிட்டார். பின்னர் அந்த தொலைக்காட்சி தன்னுடைய நிகழ்சிகளை ஏப்ரல் மாதம் பதினான்காம் நாள் முதல் ஆரம்பிக்கும் என்று கூறப்பட்டது.

vijayakanth unwiling captain-tv logo DSC_0075 DSC_0062

வழக்கமாக தன்னுடைய படங்களில் மட்டுமே அரசியல் மற்றும் பன்ச் டையலாக்குகளை பேசி வந்த கேப்டன் இனிமேல் தன்னுடைய தொலைக்காட்சி சேனலிலும் இதுபோன்ற வசனங்களை அடிக்கடி பேசுவார் என்பதற்கு அவரின் ஆரம்ப நாள் விழாவின் சில வசனங்களே சான்று:

  • நான்காவது தூணின் மூன்றாவது கண் - கேப்டன் டிவி (The 3rd eye of the Fourth estate)
  • உள்ளது உள்ளபடி - இனி கேப்டன் டிவியில் மட்டுமே (Actuals – As it is : Only in Captain TV)

இதனிடையில் மீடியா துறையில் இருக்கும் என் நண்பர்கள் சிலரிடம் நான் விசாரிக்கையில் இதுவரையில் (சேனல் ஆரம்பிக்க இன்னும் மூன்று வாரங்களே பாக்கி இருக்கும் போது) அந்த சேனலில் பெரிய ஆட்களை நியமிக்கவில்லை என்றே சொன்னார்கள். அதாவது ஒரு சேனல் ஆரம்பிக்கும்போது பொதுவாக மற்ற சேனல்களில் இருக்கும் முக்கியமான நபர்களை போச் செய்வார்கள். இதற்க்கு சிறந்த உதாரணம் - கலைஞர் டிவி. அவர்கள் ஆரம்பித்த போது அனைத்து ஆட்களையும் சன் டிவியில் இருந்தே எடுத்தார்கள்.

ஆனால் கேப்டன் டிவியில் இதுவரை அந்த மாதிரி யாரையும் வேலைக்கு எடுத்த மாதிரியே தெரியவில்லை. திரு ஹெமாத்த்ரி என்பவர் தான் அங்கு நிகழ்ச்சிகளின் முதன்மை மேலாளராம். கேப்டனின் மச்சான் சுதீஷ் தான் CEO.

  • யாரோ ஒருவர் வசந்த் டிவியில் இருந்து விளம்பர துறைக்கு பொறுபேற்க இருப்பதாக தகவல். இது ஏப்ரலில் நடக்குமாம்.
  • இதுவரையில் கலைஞர் டிவியில் இருந்த ஒருவர் (அதாவது மானாட மயிலாட பைனல்ஸ் வரை) கேப்டன் டிவியின் ப்ரோக்ராம் மேனஜராகவும் சேர இருப்பதாக பேச்சு.
  • அதைப்போலவே பாலிமர் டிவியில் இருந்து ஒருவர் கேமரா டிபார்ட்மென்டுக்கும் சேர இருப்பதாகவும் கூட உபரி தகவல். 

RAJINI_WITH_FANS_14_20962f

kamal

ms-dhoni

இதெல்லாம் இப்படி இருக்கையில் கேப்டன் அவர்கள் தன்னுடைய சேனலை துவக்கி வைக்க தன்னுடைய அருமை நண்பர்களாகிய திரைத்துறையினரை கேட்டதாகவும், அதற்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், சூப்பர் நடிகர் கமல்ஹாசன் அவர்களும் ஒப்புக்கொண்டு தலைமையேற்க சம்மதித்தது இருப்பதும் உபரித்தகவல். வழக்கம் போல ஒரு தொலைக்காட்சி சேனலின் ஆரம்ப நிகழ்ச்சிக்கு இரண்டு முன்னணி நடிகர்கள் போகிறார்கள். இதில் என்னடா ஸ்கூப் நியூஸ் என்றா கேட்கிறீர்கள்?  இந்த இரண்டு நடிகர்கள் சென்றாலும்கூட அந்த சேனலை துவக்கி வைக்கப்போவது என்னவோ இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிதான். ஆம், (Acting) கேப்டன் சேனலை (Cricket) கேப்டன் துவக்கி வைக்கிறார். என்ன ஒரு பொருத்தம் பாருங்கள்?

உங்களுக்கு சந்தேகம் எனில் ஐ.பி.எல் போட்டிகளின் அட்டவனையை பாருங்கள் - ஏப்ரல் பதினான்காம் தேதி தோனி சென்னையில் இருப்பதும் அன்று அவர் ப்ரீயாக இருப்பதும் தெரிய வரும். இந்த செய்தியை இதற்க்கு முன்பு யாரும் கொடுத்து இருக்க வாய்ப்பே இல்லை. வெடிகுண்டு வெங்கட்டின் ஸ்கூப் நியூஸ் இது.

Tue Apr 13 - 14:30 GMT | 20:00 local - 20:00 IST : 48th match - Chennai Super Kings v Kolkata Knight Riders
MA Chidambaram Stadium, Chepauk, Chennai
Wed Apr 14 - 14:30 GMT | 20:00 local - 20:00 IST: 49th match - Rajasthan Royals v Royal Challengers Bangalore
Sawai Mansingh Stadium, Jaipur
Thu Apr 15 - 14:30 GMT | 20:IST: 50th match - Chennai Super Kings v Delhi Daredevils 00 local - 20:00
MA Chidambaram Stadium, Chepauk, Chennai

IPL – 3 Schedule: Cricinfo.

கேப்டன் டிவி துவக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க இருக்கின்றது. மாலை ஐந்து மணிமுதல் நடைபெறும் இந்த துவக்க விழா நிகழ்ச்சியை கேப்டன் டிவியில் நேரலை (அதாங்க லைவ்) தொகுப்பாக வழங்குகிறார்கள். அதுமட்டுமின்றி அன்று நடைபெறும் நிகச்சிகளை எல்லாம் வழங்குபவர்கள் (Day Branding விளம்பரதாரர்கள்) ஆக ஒரு முன்னணி  செல்போன் சேவை நிறுவனம் முன்வந்துள்ளது.

அதுமட்டுமின்றி அன்று முதல் பத்து செகண்ட் விளம்பரம் அந்த சேனலில் ருபாய் பதினெட்டு ஆயிரமாம் (10 Sec’s Spot = Rs 18, 000/-). இதுகூட ஒரு வகையில் ஒரு சாதனையே. ஏனெனில் சன் டிவி தவிர்த்து வேறு எந்த சேனலும் இந்த விலைக்கு விளம்பரங்களை விற்பது கிடையாது. சொன்னபடி நடத்தினால் கேப்டன் ஜெயிப்பார்.

கவுண்டமணி நலமுடன் இருக்கிறார் - வதந்திகளை நம்பவேண்டாம்

தமிழகத்தின் தலை சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவராக கருதப்படுபவரும், தமிழ் சினிமாவில் மறுபடியும் நகைச்சுவை நடிகர்களுக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்தவரும் ஆகிய திரு கவுண்டமணி அவர்கள் இன்று சென்னையில் இருக்கும் அப்போல்லோ மருத்துவமனையில் இயற்கை எய்தினார் என்று ஒரு தகவல் சென்னை ஊடக மைய்யங்களில் பரபரப்பாக இருந்தது. ஆனால், நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த தகவல் அதனை மறுத்து அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும், இப்போது அவர் நலமுடனே இருப்பதாக தெரிவித்தனர். 

கோயம்புத்தூரில் இருக்கும் கன்னம்பாளயத்தில் 1940 'ஆம் ஆண்டு பிறந்த மணி, தன்னுடைய நாடக நடிப்பினால் பெயர் பெற்ற நடிகராக விளங்கினார். அதில் ஒரு நாடகத்தில் அவர் ஏற்று நடித்த "ஊர் கவுண்டர்" என்ற பாத்திரம் மிகவும் பிரபலம் ஆனதால் அன்றுமுதல் அவரை கவுண்டர் மணி, கவுண்டர் மணி என்றே அழைக்க துவங்கினர். அதுவே பின்னாளில் கவுண்டமணி என்று மருவி வழங்கலாயிற்று. மற்றபடி அவர் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவரில்லை என்பதை உலகம் அறியும்.

நாடக உலகில் இருந்து சினிமா உலகிற்கு தன்னுடைய முப்பத்தி ஆறாவது வயதில் வந்த மணி, முதன்முதலில் (?!?) நடித்த படம் அன்னக்கிளி ஆகும். தன்னுடைய நாலாவது படத்திலேயே அவரின் தனித்துவமான நடிப்புத்திறமை உலகிற்கு வெளிப்படுத்தினார். ஆம், அந்தப்படம் பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே ஆகும். அதில் ஒரு வசனம் இன்றளவும் பேசப்படுகிறது: "பத்த வச்சுட்டியே பரட்டை" என்று சொன்னால் மக்கள் இன்றளவும் நினைவு கொள்வார்கள்.

அதன் பின்னர் படிப்படியாக வெற்றிப்படிகளில் ஏற ஆரம்பித்த மணி, பின்னர் தமிழ்ப்படங்களில் ஒரு முக்கிய சக்தியாகவே மாற ஆரம்பித்து விட்டார். அவரது வாழைப்பழ காமெடி மறக்க முடியாத ஒரு அம்சமாக மாறிவிட்டது.

 

நெடுங்காலம் கழித்து அவர் இப்போதுதான் சரத்குமாருடன் ஜக்குபாய் படத்தில் நடித்தார். அந்த படமும் சிறப்பாகவே பேசப்பட்டது. இனிமேல் அவர் பல படங்களில் நடித்து நூறாண்டுகள் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

கவுண்டமணி நடித்த படங்களின் விவரம் – Official Site.

Related Posts Widget for Blogs by LinkWithin