மலையாளத்தில் சுறா - സുരാ

மக்களே,

நேற்றுதான் என்னுடைய கேரளா சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினேன். வந்து பார்த்தால் அனைவரும் சூறாவளியில் (சுறாவலியில்?) சிக்கி சின்னா பின்னமாகி இருப்பது தெரிந்தது. ஆனால் என்னுடைய பதிவு சற்று வித்தியாசமான ஒன்றாகும். ஆம், நான் பதிவிடப்போவது மலையாள சுறா பற்றி. அதாவது இளைய தளபதி நடித்த சுறா படத்தின் மலையாள வடிவம் பற்றி.

என்னுடைய கேரளா சுற்றுப்பயனத்தினூடே நான் அவதானித்த விடயம் என்னவெனில் அங்கும் விஜய் ஒரு மாஸ் தான். அவருடைய படங்கள் அங்கும் பல தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது என்பதே. (இன்னமுமா மக்கள் நம்மளை நம்புறாங்க?). ஆனால் அவை டப்பிங் செய்யப்படுவதில்லை. மாறாக போஸ்டர்கள் மலையாளத்தில் இருந்தாலும்கூட படம் என்னவோ தமிழில்தான் உள்ளது.

DSC00163
DSC00162
DSC00160
DSC00159

இந்த நேரத்தில் எனக்கு மின் அஞ்சலில் வந்த சில பல மொக்கை மெயில்களை உங்களுக்கு சமர்பிக்கிறேன். பாருங்கள். ஏற்கனவே பார்த்திருந்தால் மன்னிக்கவும். படங்கள் அந்த போட்டோஷாப் திறனாளிக்கே சமர்ப்பணம். வாழ்க அவரது திறமை, வளர்க அவரது கற்பனை. (சார், கொஞ்ச நாளில் காவல்காரன் வருதாம், ரெடியா இருங்க).

1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24

என்ஜாய்.

முன்னோட்டம் - இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் (2010)

இயக்கம் சிம்புதேவன்
தயாரிப்பு கல்பாத்தி S.அகோரம்
ஆக்கம் சிம்புதேவன்
நடிப்பு ராகவா லாரன்ஸ்
  லக்ஷ்மி ராய்
  பத்மபிரியா
  சந்தியா
  நாசர்
  சாய் குமார்
  M.S.பாஸ்கர்
  ரமேஷ் கண்ணா
  மனோரமா
  டெல்லி கணேஷ்
  வையாபுரி
  மெளலி
  இளவரசு
இசை G.V.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு அழகப்பன்
எடிட்டிங் ராஜா முகம்மது
விஷுவல் எஃபெக்ட்ஸ் பீட்டர் பால் (வைட் லோட்டஸ்)
ஸ்டூடியோ AGS ஃபிலிம் எண்டெர்டெய்ன்மெண்ட்
ரிலீஸ் மே 7, 2010

சுவாரசியமான தகவல்கள்:

வரும் வெள்ளியன்று (மே 7, 2010) வெளிவரவிருக்கும் இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் திரைப்படம் குறித்து ஒரு EXCLUSIVE முன்னோட்டம். விமர்சனம் விரைவில்.

· கிட்டத்தட்ட 36 வருடங்களுக்குப் பிறகு தமிழில் வெளிவரும் முதல் கெள-பாய் திரைப்படம் இதுதான்.

· 1972-ல் கர்ணன் இயக்கத்தில் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நடித்து வெளிவந்த கங்கா திரைப்படம்தான் தமிழில் கடைசியாக வெளிவந்த முழு நீள கெள-பாய் திரைப்படம் ஆகும்.

Ganga Film

· இயக்குனர் சிம்புதேவன் தான் படித்து ரசித்த/ரசித்துக் கொண்டிருக்கும் கெள-பாய் காமிக்ஸ்களையும் (டெக்ஸ் வில்லர், லக்கி லூக், கேப்டன் டைகர், சிக்பில்) பார்த்து ரசித்த கெள-பாய் படங்களையுமே இப்படத்திற்கு உந்துதலாக அமைந்தது என்கிறார்.

· அதிலும் குறிப்பாக மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நடித்து வெளிவந்த கெள-பாய் திரைப்படங்களுக்கு இயக்குனர் சிம்புதேவன் பெரும் ரசிகராவார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் படத்தில் காணப்படும் ஊர்களுக்கும் தெருக்களுக்கும் அவரது பெயரையே சூட்டியுள்ளார் (உம்: ஜெய்சங்கர்புரம் என்று ஒரு ஊருக்கு பெயர் வைத்துள்ளார்).

Jaishankar

· படத்தை எடுப்பதற்கு முன் இயக்குனர் சிம்புதேவன் 1960களிலும் 70களிலும் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நடிப்பில் பல கெள-பாய் திரைப்படங்களை இயக்கிய காமிரா மேதை கர்ணன் அவர்களை சந்தித்து அவரின் நல்லாசிகளுடனேயே படத்தை துவக்கியுள்ளார்.

Jai Shankar Enga Paattan Sothu Jai Shankar Jakkamma

· THE GOOD, THE BAD AND THE UGLY படத்தையும் தன்னை பாதித்த படங்களில் ஒன்று என்று குறிப்பிட்டிருக்கிறார் இயக்குனர் சிம்புதேவன். தன் படத்திலும் ஒரு நல்லவன் (ராகவா லாரன்ஸ்), ஒரு கெட்டவன் (நாசர்), ஒரு விநோதன் (M.S.பாஸ்கர்) என்று மூன்று கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளார்.

Irumbu-Kottai-Murattu-Singam-5

· இதில் விநோதனாகத் தோன்றும் M.S.பாஸ்கரின் கதாபாத்திரம் படத்தில் பேசும் ஒரு வித மொழியையே புதிதாக உருவாக்கியுள்ளார்கள். இதற்காக பல நாட்கள் தீவிரமாக ஆராய்ந்து அந்த புது மொழிக்கு ஒரு அகராதியையே உருவாக்கியுள்ளார்கள். படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் கண்டிப்பாக அந்தப் புது மொழியிலிருந்து நான்கைந்து வார்த்தைகளாவது கற்றுக் கொள்வது நிச்சயம் என்கிறார்கள்.

irumbu_kottai_murattu_singam_1

· படத்தில் நடிக்கும் பலரும் இதுவரை குதிரையேறியதில்லை என்பதால் அனைவருக்குமே குதிரையேற்றம் பயிற்றுவிக்கப் பட்டது. இதில் குறிப்பாக லக்ஷ்மி ராய் பயிற்சிக்குப் பின் ஒரு தேர்ந்த குதிரை வீராங்கனையாக மாறி விட்டாராம். அவர் குதிரையில் பவனி வரும் அழகைக் கண்ட கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் படவிழாவில் அவரைப் புகழ்ந்து “ஒரு அரேபியக் குதிரையே குதிரை மீது சவாரி செய்கிறது! குதிரை கொடுத்து வைத்திருக்க வேண்டும்!” என்றெல்லாம் கவிதை மழை பொழிந்தாராம்.

· படத்தின் ஒரு பாடல் காட்சி வியட்நாமில் உள்ள ஹா லோங் விரிகுடா எனும் இடத்தில் படமாக்கப்பட்டது. இங்குதான் PIRATES OF THE CARIBBEAN படமும் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

படம் பார்க்கும் அனைவருக்கும் இது மறக்க முடியாத புதுமையான அனுபவமாக இருக்கும் என்று படக்குழுவினரும் நாமும் நம்புகிறோம்.

சாப்பிடும் இடத்தில் சாதி வெறி = ஒரு கொலைவெறி ஹோட்டல்

மக்களே,

இன்றுதான் சென்னை திரும்பிய நானும் என்னுடைய தோழரும் மதிய உணவை குறிவைத்து பயணம் செய்தோம். அப்போது திடீரென்று நண்பருக்கு அபீசியல் போன் கால் ஒன்று வந்து விட நண்பர் சுமார் ஒன்றரை மணி நேரம் அதில் மூழ்கி விட்டார். அதனால் எங்கே செல்வது என்றில்லாமல் நானும் சீருந்தில் அங்கேயும் இங்கேயும் சென்றுக்கொண்டிருந்தேன். சற்றே கவலையான விஷயம் போலும், நண்பர் சிறிது சோகமாகி விட்டார். அதனால் அருகிலுள்ள ஏதாவது ஒரு ஹோட்டலில் சென்று சாப்பிடலாம் என்று பார்த்தேன். மைலாப்பூர் மேம்பாலம் அருகில் ஒரு ஹோட்டல் தென்பட்டது.

நானோ முழு சைவம், நண்பரோ லேக்டோ வெஜிடேரியன். அதாவது முட்டை மட்டும் சாப்பிடும் சைவக்காரர். அதனால் அருகில் இருந்த இந்த ஹோட்டலில் நுழைந்தோம். இரண்டு காரணங்கள்: 

1. கார் பார்க் பண்ண இடம் இருந்தது

2. குளிரூட்டப்பட்ட உணவகம், அதாங்க A/C.

 

Image(369)
Image(368)
Image(367)

ஆனால், அங்கு சென்றது எவ்வளவு பெரிய தவறு என்பது சற்று நேரத்தில் தான் தெரிய வந்தது. ஏ சி ரூமில் சென்றவுடனே தெரிந்தது அது ஒன்றும் சுத்தத்திற்கு பெயர் போன இடமில்லை என்பது. சிறிது நேரம் வெயிட் செய்தவுடன் ஒருவர் வந்து "இன்னா சார் வேணும்?" என்று கேட்டார். பின்னர் தான் தெரிந்தது அவர் அந்த ஹோட்டலில் வேலை செய்பவர் என்று. சரி, ஆளுக்கொரு மீல்ஸ் என்று ஆர்டர் செய்தோம், நண்பர் "முட்டை பிரியாணி" என்று மாற்ற்விட்டு, கூடவே "ஆம்லேட் ஒன்று, முட்டை பொரியல் ஒன்று, ஹாப் பாயில் ஒன்று" என்று அடுக்கிக் கொண்டே போனார். ஆனால் அந்த நபரோ, "சார் சைட் டிஷ் ஏதாவது ஆர்டர் பண்ணால் மட்டுமே இங்கு சாப்பிட முடியும், இல்லையெனில் வெளியே போங்கள்" என்று சொன்னார். மனம் நொந்த நாங்கள் " அதான் எவ்வளவு சைட் டிஷ் ஆர்டர் செய்துள்ளோமே" என்று கூறியும் அவர் கண்டுக்கொள்ளவில்லை. 

சரி முதலாளியிடம் புகார் செய்தால் சரியாகிவிடும் என்றெண்ணி கள்ளப்பெட்டியிடம் சென்றோம். சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் வெள்ளையும் சொள்ளையுமாக உட்கார்ந்துக்கொண்டு இருந்தார். அவரிடம் சென்று கூறியவுடன், அவரும் அதே பல்லவியை பாடினார். நான் வெஜிடேரியன் என்று சொன்னவுடன், அவர் "பரவாயில்லை, ஏதாவது சைட் டிஷ் ஆர்டர் செய்யுங்கள், பிறகு அங்கு A/C ஹாலில் சாப்பிடுங்கள்" என்று மறுபடியும் ஆரம்பித்தார். கடுப்பான நண்பர் "வாப்பா போகலாம், இப்படியே இருந்தால் வெளங்கிடும்" என்று என்னை அழைத்தார். உடனே அந்த வெள்ளை + சொள்ளை கடுப்பாகி விட்டு, "எங்க உங்கள மாதிரி பிராமினை எல்லாம் யார் உள்ளே விட்டது? இது எங்க ஆளுங்க ஹோட்டல்" என்று சாதி பிரச்சினையை தூண்டிவிட்டார். வெஜிடேரியன் என்றாலே அவன் பிராமின்தானா என்ன? என்ன கொடுமை சார் இது? என்று மனம் நொந்து வெளியே வந்தோம்.

மக்களே,

நீங்களே பதில் சொல்லுங்கள். அந்த ஹோட்டலின் வாயிலில் அசைவம் என்று இருந்தும் சாப்பிட சென்றது தவறு என்று நீங்கள் சொல்லலாம், ஆனால் பின்னர் நானும் நண்பரும் அருகில் இருந்த ராயப்பேட்டை முனுசாமி ஹோட்டலில் தான் சாப்பிட்டோம். நான் சைவமும், நண்பர் அதே ஆர்டரை ரிபீட் செய்தும் (முட்டை பிரியாணி" , கூடவே "ஆம்லேட் ஒன்று, முட்டை பொரியல் ஒன்று, ஹாப் பாயில் ஒன்று) சாப்பிட்டோம். அங்கே இந்த மாதிரி பிரச்சினை எல்லாம் எதுவும் நடக்கவில்லை. இங்கு யாருடைய தவறு? நமதா? அல்லது அந்த ஹோட்டலின் முதலாளியினுடயதா?

சாப்பிட்டு விட்டு வந்தவுடனே இந்த தெருப்பலகை தான் கண்ணில் பட்டது. அதுதான் உடனே புகைப்படம் எடுத்து விட்டேன். இடம், பொருள் எல்லாம் சரியாக வந்த படம் இது.

Image(360)

இப்படி மொக்கையாக இந்த நாள் அமைந்து விட்டதே என்று மவுன்ட் ரோட் சென்றால் அங்கு ஒரு நோட்டிஸ் போர்டை பார்த்து விட்டு இன்னமும் கடுப்பானேன். நீங்களே பாருங்கள் இந்த மொக்கையை.

Image(352)

இப்படி நம்மை ஒரு மொக்கை பாண்டி பிராமிணன் ஆக்கிவிடானே என்று வந்தால் இந்த போஸ்டர் கண்ணில் பட்டது. என்ன இன்று எல்லாமே விவகாரம்தான் என்று கூட தோன்றியது.

DSC01735

கவனிக்கவும் - இது ஒரு மொக்கை பதிவு. ஆகையால் கமெண்ட் போடலாம்.

Related Posts Widget for Blogs by LinkWithin