மக்களே,
நேற்று காலை (திங்கட்கிழமை, April மாதம் ஐந்தாம் தேதி) என்னுடைய அடுத்த சுற்றுப்பயணத்தை துவக்க நான் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தை சென்றடைந்தேன். அப்போது மணி ஒன்பதரை இருக்கும். லோக்கல் ரயில் நிலையத்தின் மெயின் வாசலில் ஒரு பெரிய கூட்டம் நிற்பதை கண்டேன்.
.jpg)
ஒருவழியாக அவரை சரிபடுத்தி அனுப்பி வைத்த பிறகு தான் நான் யோசித்தேன் - இந்த சூழ்நிலையிலும் கூட மக்கள் காக்காய் வலிப்பு, இரும்பு என்று இருக்கிறார்களே, இன்னுமா அவர்களுக்கு அறிவு வரவில்லை என்று.
அதனால் என்னுடைய நண்பர் டாக்டர் (பாண்ட்) பரத், PGDCA அவர்களை நம்முடைய வெடிகுண்டு பதிவில் வந்து இந்த வலிப்பை பற்றிய சந்தேகங்களை நிவர்த்தி செய்ய சொன்னேன். Take Over Doctor:
- காக்காய் வலிப்பின் ஆங்கிலப் பெயர் - எபிலெப்சி ஆகும். For Further Reading, Wikipedia Tamil, English
- இது ஒரு பொதுவான தீவிரமான நரம்புச் சீர்கேடு ஆகும்
- மூளையில் நிகழும் அசாதரணமான, மிதமிஞ்சிய, அதே சமயம் குறுகிய காலத்திற்கு தோன்றும் வலிப்புத்தாக்கங்கள் தான் இந்த வலிப்பிற்கு காரணம்.
- இது ஒரு மருத்துவ குறைபாடே-நோயே ஆகும்.
வலிப்பு வந்தால் செய்ய வேண்டியவை:
- உடனடியாக அவருக்கு போதிய இடம் அளியுங்கள், சுவாசிக்க காற்று வரவிடுங்கள். அவரை சூழ்ந்து நிற்க வேண்டாம்.
- அவரின் நாக்கு எப்படி இருக்கிறது, எங்கே இருக்கிறது என்பதை கவனியுங்கள். சிலர் வலிப்பின்போது தம்மையறியாமல் நாக்கை கடித்துக்கொள்ளவும் செய்வார்கள்.
- அவருக்கு மூச்சு திணறல் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
- பொதுவாக, அதிகபட்சம் மூன்று நிமிடங்களில் அந்த வலிப்பின் வீரியம் குறைந்துவிடும். அப்படி குறையாமல் ஐந்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்தால் அது மிகவும் ஆபத்தானதாகும். உடனடியாக அவருக்கு மருத்துவமனையில் அவசரகால சிகிச்சை அளிக்க வேண்டும்.
வலிப்பின்போது செய்ய கூடாதவை
- வலிப்பு வந்தவருக்கு கையிலோ, வாயிலோ எதனையும் திணிக்க வேண்டாம்.
- குறிப்பாக இரும்பினால் ஆன பொருட்களை கொடுத்தால் அதனால் தன்னைத்தானே காயப்படுதிக்கொள்ள வாய்ப்பு அதிகம்.
- வலிப்பு வந்த நபர் முழுமையாக சரியாகாத வரை (அவருக்கு வலிப்பு தானாக நிற்காத வரை) அவரை பலவந்தமாக பிடிக்கவோ, கட்டுப்படுத்தவோ கூடாது.
- அவராக அடங்கும்வரை காத்திருக்க வேண்டும். புஜபல பராக்கிரமத்தை காட்டினால், வலிப்பு பாதியில் நின்று உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம்.
வலிப்பு வந்தவுடன் செய்ய வேண்டியவை
- வலிப்பிற்கு பிறகு பாதிக்கப்பட்ட நபர் பலவீனமடைதல் & குழப்பமடைதல் பொதுவான ஒன்றாகும். ஏனெனில் அவருக்கு வலிப்பு வந்தது தெரியாது. அவருக்கு தெளிவாக, மறுபடியும், மறுபடியும் "உங்களுக்கு வலிப்பு வந்தது" என்று சொல்லுங்கள்.
- பாதிக்கப்பட்ட நபர் சாதாரண நடவடிக்கைக்கு மாறும் வரை மற்றொருவர் உடனிருந்து அவருக்கு நம்பிக்கையும் ஆறுதலும் அளிக்க வேண்டும்.
- சிலர் வலிப்பிற்கு பின் வாந்தி எடுப்பார்கள், அதனால் சற்று விலகியே இருங்கள்.
- வலிப்பிற்கு பிறகு அந்த நபர் சாதாரண விழிப்புணர்வு நிலைக்குத்திரும்ப பலமணி நேரம் ஆகும். அதனால் அவரை தனித்து விடவேண்டாம்.
இதுவரையில் பொறுமையாக படித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
அப்பாடா, ரொம்ப நாளா மக்களுக்கு பயனுள்ள ஒரு பதிவாவது போட எண்ணி இருந்தேன், இன்று செய்து விட்டேன். அதில் அனைவருக்கும் ஒரு மெஸ்சேஜ் வேறு சொல்லி விட்டேன்.