கலைஞர் டி.வி.ஐ காப்பாற்றிய வீரத்தளபதி ஜே.கே ரித்தீஷ், இப்போது கலைஞரை காப்பாற்றுவாரா?

வெடிகுண்டு வெங்கட்டின் சிறப்பு செய்தியாகிய இந்த பதிவினை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மக்களே,

உங்களின் சொந்த ஊர் ராமநாதபுரமா? நீங்கள் கோடை விடுமுறையில் அங்கு செல்ல நினைத்து இருக்கிறீர்களா? இன்னும் ரிசர்வேஷன் செய்யவில்லையா? அப்படியானால் உடனடியாக ராமநாதபுரம் செல்லும் என்னத்தை கை விட்டு விடுங்கள்.

அமெரிக்காவிற்கு கிரீன் கார்ட் வாங்க மக்கள் அமெரிக்க எம்பஸ்ஸி வாசலில் கியூ வில் நிற்கும் காட்சியை சென்னையில் எப்போதும் பார்க்கலாம். அதனைப் போல இப்போது ராமநாதபுரம் செல்லத் துடிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

இந்த விஷயத்தின் மூலம் என்னவென்றால், ராமநாதபுரம் தொகுதியில் வீரத்தளபதி ஜே.கே ரித்தீஷ் தி.மு.க சார்பில் போட்டியிடுவார் என்று இன்று அதிகார பூர்வமாக அறிவிக்கப் பட்டது. மதுரையில் நடை பெற்ற இடைத் தேர்தலில் பெய்த பணமழை பற்றி கேள்விப்பட்ட தமிழக மக்கள், வீரத்தளபதி ஜே.கே ரித்தீஷ் பற்றியும் தெரிந்து வைத்து இருப்பதால் தான் இந்த நிலைமை.

"தலைவா" என்று யாராவது கூறினாலே அவர்களிடம் ஆயிரம் ருபாய் நோட்டை தூக்கி கொடுக்கும் வீரத்தளபதி ஜே.கே ரித்தீஷ், ஒரு வோட்டுக்கு என்ன செலவு செய்வார் என்பதை கணக்கு போட்டு பார்த்து விட்டு, பலர் தங்களின் சொத்து, சுகங்களை எல்லாம் விற்று விட்டு ராமநாதபுரம் சென்று குடி பெயர்வது என்று முடிவு செய்து விட்டனர். ராமநாத புரம் மக்களுக்கு கோடையில் ஒரு பணமழை தான்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் கலைஞர் டி.வி.யின் ரேடிங் மிகவும் மோசமாக இருந்தது. அதாவது சன் டி.வி.யின் ரேடிங்'ஐ விட ஆறில் ஒரு பங்காக இருந்தது. அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் முழித்த அவர்கள், உடனடியாக வீரத்தளபதி ஜே.கே ரித்தீஷ் நடித்த நாயகன் என்ற படத்தை உலகத் தொலைக் காட்சிகளில் முதல் முறையாக ஒளி பரப்பினார்கள்.

விளைவு? அடுத்த வாரம் வந்த ரேடிங் கலைஞர் டி.வி. சன் டி.வி.ஐ நெருங்கி விட்டது. ஆம், இப்போது ரேடிங் மூன்றில் ஒரு பங்காகி விட்டது. அது மட்டும் இல்லாமல், கலைஞர் டி.வி.யின் ரேடிங் பல மாதங்களுக்கு பின்னர் இரண்டு இலக்கங்களை தொட்டதும் அப்போது தான்.

எனவே, முன்பு கலைஞர் டி.வி.ஐ காப்பாற்றிய வீரத்தளபதி ஜே.கே ரித்தீஷ், இப்போது கலைஞரையே காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை. காப்பாற்றுவாரா?

கடைசியாக கேள்விப் பட்ட தகவல் என்னவென்றால் அங்கு கட்சி தொண்டு ஆற்றப் போகும் இளம் சிங்கங்களுக்கு ஏ.சி பொருத்தப்பட்ட டூ வீலர் ரெடியாம். அதுவும் ஸ்பிலிட் ஏ.சி.யாம்.

சார், சார் எங்கே போறீங்க? ராமநாத புரமா? போறதுக்கு முன்னாடி கொஞ்சம் தமிளிஷ்'ல வோட்டு போட்டுட்டு போங்க சார். என்னால வீரத்தளபதி ஜே.கே ரித்தீஷ் மாதிரி எதுவும் பண்ண முடியாவிட்டாலும் நன்றி கூறுவேன்.

Comments

12 Responses to "கலைஞர் டி.வி.ஐ காப்பாற்றிய வீரத்தளபதி ஜே.கே ரித்தீஷ், இப்போது கலைஞரை காப்பாற்றுவாரா?"

வெடிகுண்டு வெங்கட் said... April 5, 2009 at 6:43 PM

சோதனை இடுகை.

Anonymous said... April 5, 2009 at 7:01 PM

ஜெ.கே.ரித்தீஷ் எம்.பி.யாம்..........சூப்பரப்பு......

இருந்தா அள்ளிக்கொடு, இல்லேன்னா சொல்லிக்கொடுன்னு பாடின அகில உலக டெர்ரர் ஸ்டார் அவரு.

Captain Vijaykanth said... April 5, 2009 at 9:29 PM

=கலைஞர் டி.வி.ஐ காப்பாற்றிய வீரத்தளபதி ஜே.கே ரித்தீஷ், இப்போது கலைஞரை காப்பாற்றுவாரா?=

Ha Ha Ha. Very Good Comedy.

Pity on DMK. Poor fellows.

Anonymous said... April 5, 2009 at 9:53 PM

please visit http://suthanthira-ilavasa-menporul.blogspot.com/

Anonymous said... April 5, 2009 at 10:24 PM

Good comedy.
//கட்சி தொண்டு ஆற்றப் போகும் இளம் சிங்கங்களுக்கு ஏ.சி பொருத்தப்பட்ட டூ வீலர் ரெடியாம். அதுவும் ஸ்பிலிட் ஏ.சி.யாம்//

Anonymous said... April 5, 2009 at 10:37 PM

நாயகன் படத்தால் கலைஞர் டிவியின் rating கூடியதா? இது என்ன புது கதை! அட்றா அட்றா ! இது கொஞ்சம் ஓவரா தெரியவில்லையா!

வெடிகுண்டு வெங்கட் said... April 5, 2009 at 11:48 PM

நண்பரே,

மற்ற விஷயங்கள் காமெடியாக இருந்தாலும் அந்த ரேடிங் விஷயம் உண்மைதான்.

அந்த படம் பொங்கல் அன்று ஒளிபரப்ப பட்டது. அதன் ரேடிங் 7.6 ஆகும். அதன் மூலம் கலைஞர் டி.வீ.யின் ரேடிங் அதற்க்கு முதிய வார ரேடிங் ஆன 6.4 இல் இருந்து 12.3 ஆக உயர்ந்தது. என்னிடம் டேம் ரிபோர்ட் உள்ளது. அதில் உள்ள விவரங்கள் தான் இவை.

அப்போதே இதைப் பற்றி ஒரு பதிவு இட நினைத்தேன். வெளி நாடு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் இட இயலவில்லை.

butterfly Surya said... April 6, 2009 at 12:35 AM

கலக்கல்.

ரெயில்வே ரிசர்வேஷன் எல்லாம் நிறைந்து விட்டதாம்.

ஸ்பெஷல் பஸ் விட்டால் வரத்தயார்.

வெடிகுண்டு வெங்கட் said... April 6, 2009 at 12:44 AM

வருகைக்கும் கமெண்ட் போட்டு நிலைமையை மக்களுக்கு தெளிவாக விளக்கியதற்கும் நன்றி வண்ணத்து பூச்சியாரே.

பாலா said... April 6, 2009 at 2:30 AM

ஒவ்வொரு பதிவையும் சொல்லி வச்சி ‘பத்த’ வைக்கறீங்க வெங்கட். :)

ப்ளாக் ஆர்கைவ்-ஐ மேலே போடுங்களேன். பழைய பதிவுகளை, புதுசா வர்றவங்க படிக்க வசதியா இருக்கும். ரொம்ப கீழ ட்ரேக் பண்ண வேண்டியிருக்கு.

Anonymous said... April 6, 2009 at 10:42 AM

oru nayagan.....Ramnathapurathil nirkiran.......election mudinthaudan.....tharuvil nirapaaan.....

jaser

Anonymous said... April 6, 2009 at 7:45 PM

J.K.Ritheesh eppadiyo enakku theriyathu...Aana he is doing donations to the needy people and poor students. Enna thaan kaiyula kaasu irunthalum illaathavangalukku seyya manasu venumey? Ethanaiyo makkalukku ethuvumey seyyatha arasiyalvaathika naama valarthu vitukkom.Avangaloda ivarum irundhuttu pohattumey..Don't criticise him...

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin