தசாவதாரத்துடன் மோதும் படிக்காதவன் : தீபாவளி திரைப்படங்கள்

வெடிகுண்டு வெங்கட்டின் சிறப்பு செய்தியாகிய இந்த பதிவினை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்ற வருடம் தீபாவளி அன்று சந்திரமுகியுடன் மோதிய பில்லா கதை போல இந்த வருடம் தீபாவளி அன்று மறுபடியும் மோத சன் டிவி மற்றும் கலைஞர் டிவி நிறுவனங்கள் தயாராக உள்ளன.

கலைஞர் டிவி மிகுந்த பொருட்செலவில் வாங்கிய கமல் பத்து வேடத்தில் கலக்கிய தசாவதாரம் படத்தை இந்த தீபாவளிக்கு ஒளிபரப்புகின்றனர். அதற்காக அவர்கள் விளம்பர வேட்டையில் இறங்கி உள்ளனர். வழக்கமாக பதினாலாயிரம் ருபாய் விலைக்கு பத்து செகண்ட் சார்ஜ் செய்யும் கலைஞர் டிவி இந்த படத்துக்காக ருபாய் இருபத்தி ஐந்தாயிரம் என்று விலையை நிர்ணயித்து உள்ளனர். கமல் மேஜிக் பெரிய திரையில் நடந்தது போல சின்ன திரையிலும் நடக்கும் என்பது இவர்களின் எண்ணம்.


அதே நேரம் தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தை ஒழி பரப்ப சன் டிவி முடிவு எடுத்துள்ளது. வழக்கமாக இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்க்கு பத்து செகண்ட் விளம்பரம் வாங்கும் சன் டிவி இந்த மெகா ஹிட் பிளாக்பஸ்டர் படத்துக்கு முப்பத்தி எட்டாயிரம் ருபாய் சார்ஜ் செய்கிறார்களாம். வழக்கம் போல இதுவும் ஒரு வெற்றி முயற்சியாக அமையும் என்பதில் அவர்களுக்கு இருவேறு எண்ணம் இல்லையாம்.

சென்ற வருடம் இதே போல நடந்த மோதலில் (சந்திரமுகி + பில்லா) சன் டிவியே ஜெயித்தது உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம். அதனால் இந்த வருடம் தசாவதாரம் படத்துடன் மோத மருத்துவர் விஜய் நடித்த போக்கிரி படம் தான் ஒலிபரப்ப படும் என்று பலரும் நினைத்திருந்த வேளையில் இப்படி ஒரு செய்தி வந்துள்ளது அனைவரின் கவனத்தியும் கவர்ந்து உள்ளது. குறிப்பாக சுப்ப்ரமணிபுரம் மேட்டருக்கு பின்னர் இப்படி நடந்து உள்ளது ஆச்சரியமாக உள்ளது.

சன் டிவியை பற்றி நன்றாக தெரிந்தவர்கள் கண்டிப்பாக அவர்கள் வேறொரு படத்தை கமலுக்கு போட்டியாக களமிறக்குவார்கள் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்கிறார்கள். பார்க்கலாம், என்ன நடக்கிறது என்று.

Comments

4 Responses to "தசாவதாரத்துடன் மோதும் படிக்காதவன் : தீபாவளி திரைப்படங்கள்"

வழிப்போக்கன் said... October 1, 2009 at 8:59 PM

dasavatharam wins...

SUREஷ் (பழனியிலிருந்து) said... October 1, 2009 at 9:45 PM

தீபாவளி..., தீபாவளிதான்...,

வெடிகுண்டு வெங்கட் said... October 1, 2009 at 11:30 PM

why no votes?

the brothers said... October 2, 2009 at 11:15 PM

தனுஷ் நடித்த படிக்காதவன் - மெகா ஹிட் பிளாக்பஸ்டர்?

ha ha haaaaaaaaaa

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin