
மக்களே,
திருமணமாகாத அனைவருக்கும் என்னுடைய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். திருமணமானவர்களுக்கு, வெல், வேறென்ன சொல்ல, ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த பதிவின் தலைப்பை பார்த்து விட்டு த எக்ஸ்பெண்டபிள்ஸ் ஹாலிவுட் படம் விமர்சனம் என்று நினைத்து வந்தீர்கள் என்றால், ஐயம் சாரி. அதற்க்கு நீங்கள் வேறிடம் செல்ல வேண்டி இருக்கும்.
பதிவிற்குள் நுழைவதற்கு முன்பாக, த எக்ஸ்பெண்டபிள்ஸ் என்றால் அர்த்தம் என்ன என்று சொல்லிவிடுகிறேன். இந்த வார்த்தை பிரயோகம் ரேம்போ படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் உபயோகப்படுத்தப்பட்டது. ஒரு கொரிய/வியட்நாமிய நாட்டுப்பெண் (உடனே கொரிய பிகர்கள் இருக்கும் கொரிய படங்களாக போட்டு தாக்கும் கருந்தேளிடமோ இல்லுமினாட்டியிடமோ செல்ல வேண்டாம்) கோ-பாவோ ரேம்போவிடம் கேட்பார்: “இந்த ஆபத்தான வேலைக்கு ஏன் உங்களை தேர்ந்தெடுத்தார்கள்?” என்று.
அதற்க்கு ரேம்போ சொல்வார்: “ஏனென்றால் நான் எக்ஸ்பெண்டபிள்” என்று.
அதற்க்கு கோ பாவோ கேட்பார்: “எக்ஸ்பெண்டபிள் என்றால் என்ன?".
ரேம்போ சொல்லும் பதிலே இந்த புதிய படத்திற்கு அடிக்கோல்: "யாரை நீங்கள் உங்கள் வீட்டிற்க்கு அழைத்ததுவிட்டு அவர வரவில்லை என்றால் கவலைபடமாட்டீர்களோ, அவர்தான் எக்ஸ்பெண்டபிள்".
அதாவது, அந்த நபரால் நமக்கு வேலை ஆகவேண்டும், அதே சமயம் அந்த நபருக்கு அதில் ஆபத்து வந்தாலும்கூட நமக்கு கவலை இல்லை. அவர்கள்தான் எக்ஸ்பெண்டபிள்ஸ். உடனே அதற்காக ரேம்போ மாதிரி ஆட்கள்தான் எக்ஸ்பெண்டபிள்ஸ், நாம இல்லை என்று நினைத்து விடாதீர்கள். ஒரு வகையில் பார்த்தால் அரசாங்க இயந்திரத்திடமும், லஞ்ச லாவண்ய பிரபுக்களிடமும் நாம் எல்லோருமே எக்ஸ்பெண்டபிள்ஸ்தான். எப்படி என்றா கேட்கிறீர்கள்? கீழ்க்காணும் படங்களை சற்றே பாருங்கள்.
மேலே நீங்கள் கண்ட படங்கள் ஏதோ ஒரு சேரியிலோ அல்லது குப்பை மேட்டிலோ என்றுதானே நினைத்தீர்கள்? அது சரிதான். சற்று கூர்ந்து கவனியுங்கள் நண்பர்களே. நீங்கள் எந்த இடத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று தெரியவரும்.
என்ன மக்களே, இவ்வளவு படங்களை பார்த்தும் இது எந்த இடம் என்று உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையா? என்ன கொடுனை சார் இது? தயவு செய்து அடுத்த படத்தை பாருங்கள். பிறகாவது உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பார்ப்போம்.
இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லையா? சரி விடுங்க சார். இந்த கடைசி படத்தை பாருங்கள். இப்போது உங்களுக்கே தெரியும் இது எந்த இடம் என்று.
ஆமாம், இந்தியாவிலேயே அதிகமாக மக்கள் புழங்கும் தியாகராய நகரின் மையப்பகுதியாகிய ரெங்கநாதன் தெருவின் புகைப்படங்களே இவை. இந்த படங்களை மறுபடியும் ஒரு முறை பார்த்தது விடுங்கள். பிறகு பதிவின் நோக்கத்தை நோக்கி செல்வோம்.
ஒக்கே, பதிவின் ஆரம்பத்தில் நாம் எக்ஸ்பெண்டபிள்ஸ் பற்றி சொன்னதை ஒருமுறை நினைவுபடுத்துங்கள். முடியாதவர்களுக்கு :
கோ-பாவோ: “இந்த ஆபத்தான வேலைக்கு ஏன் உங்களை தேர்ந்தெடுத்தார்கள்?”.
ரேம்போ: “ஏனென்றால் நான் எக்ஸ்பெண்டபிள்”.
கோ பாவோ: “எக்ஸ்பெண்டபிள் என்றால் என்ன?".
ரேம்போ சொல்லும் பதிலே இந்த புதிய படத்திற்கு அடிக்கோல்.
ரேம்போ:"யாரை நீங்கள் உங்கள் வீட்டிற்க்கு அழைத்ததுவிட்டு அவர வரவில்லை என்றால் கவலைபடமாட்டீர்களோ, அவர்தான் எக்ஸ்பெண்டபிள்".
அதாவது, அந்த நபரால் நமக்கு வேலை ஆகவேண்டும், அதே சமயம் அந்த நபருக்கு அதில் ஆபத்து வந்தாலும்கூட நமக்கு கவலை இல்லை. அவர்கள்தான் எக்ஸ்பெண்டபிள்ஸ். உடனே அதற்காக ரேம்போ மாதிரி ஆட்கள்தான் எக்ஸ்பெண்டபிள்ஸ், நாம இல்லை என்று நினைத்து விடாதீர்கள். ஒரு வகையில் பார்த்தால் அரசாங்க இயந்திரத்திடமும், லஞ்ச லாவண்ய பிரபுக்களிடமும் நாம் எல்லோருமே எக்ஸ்பெண்டபிள்ஸ்தான்.
இந்த சரவணா ஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன் ஸ்டோர்ஸ் போன்ற கடைகாரர்களுக்கும் மற்ற மரண வியாபாரிகளுக்கும்கூட நாம் ஒரு வகையில் எக்ஸ்பெண்டபிள்ஸ் தான். ஏனென்றால் அவர்களுக்கு அவர்களின் சரக்கை வாங்க ஆட்கள் தேவை, மற்றபடி அதை வாங்க வருபவர்கள் எந்த கஷ்டத்திற்கு ஆளானாலும் சரி, அதை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. வாங்க வருபவர்கள் மேன் ஹோலில் விழுந்தாலோ, அல்லது சாக்கடையில் கால் வழுக்கி அடிபட்டாலோ அதை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.
நம்ம கடையில் வாங்க வருகிறார்களே, நாம் சற்று சுத்தமாக இருப்போம் என்றுகூட அவர்களுக்கு சிந்தனை இல்லை. அதே நேரம் அந்த தெருவில் குப்பைகளை கொட்டாமல் இருப்போமே என்ற யோசனையும் இல்லை. அதே நேரம் தவறு நம்ம மக்களிடம் தான் இருக்கிறது. ஒரு டி சாப்பிட வேண்டும் என்றால் கூட கடையை பார்த்து பார்த்து செலக்ட் செய்யும் நாம் (கடைக்காரன் முழி சரி இல்லை, கடை முன்னே நிக்க இடம் இல்லை, கடையில் உட்கார சரியான பெஞ்ச் இல்லை, கடை வாசலில் சாக்கடை தேங்கி நிற்கிறது), அதைப்போல ஏன் இந்த கடைகளிலும் செய்யக்கூடாது என்று கேட்கக் தோன்றுகிறது.
இப்போது கடைக்காரர்களுக்கு சில பல கேள்விகள்:
1. காந்தி சொன்னது போல "வாடிக்கையாளரே நமது தெய்வம்" என்றெல்லாம் கூட சொல்ல தேவை இல்லை. அவர்களுக்கு தேவையான குறைந்தபட்ச தேவைகளைக்கூட உங்களால் செய்ய இயலாதா?
2. உங்கள் வீடு வாசலில் இப்படி குப்பை இருந்தால் நீங்கள் சும்மா இருப்பீர்களா என்ன? இந்த கடைதானே உங்களுக்கு பணம் தரும் வகை, இங்கே அதே சுத்தம் இருக்க வேண்டாமா?
3. உங்கள் வீட்டு வாசலில் இப்படி ஒரு மேன் ஹோல் திறந்து இருந்தால் விட்டு வைப்பீர்களா என்ன? உங்கள் வீட்டிற்கு வருபவர்கள் காயமடைந்தால் உங்களுக்கு தானே அவமரியாதை?
அடுத்ததாக அரசு இயந்திரங்களுக்கு சில கேள்விகள்:
இந்நாள் மாநகரதந்தைக்கு:
1. ஐயா, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள எரிக்களில் தான் அதிகம் வியாதிகள் பரவும் என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா? மழைக்காலம் வந்தவுடனே டெங்கு, மலேரியா, போன்ற வியாதிகளும் படையெடுத்து வருமே, இது போன்ற இடங்கள் சுத்தமாக இருக்கவேண்டாமா? மாநகராட்சியின் கண்களுக்கு இந்த இடங்கள தெரியவே தெரியாதா?
2. இந்த ரெங்கநாதன் தெருவில் நடைபாதை எங்குள்ளது என்பதை நீங்கள் எனக்கு காட்ட முடியுமா? இப்படி கடைக்காரர்கள் முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளார்களே, இதையெல்லாம் மாமூல் வாங்கிக்கொண்டு அமைதியாக இருக்கும் போலிஸ்காரர்கள் தான் கண்டுக்கொள்ள மாட்டார்கள், நீங்களுமா? நடைபாதை ஆக்கிரமிப்பு என்பது சட்டப்படி குற்றமல்லவா? அல்லது அதனை நினைவுபடுத்துவது தான் உங்கள் கடமையா?
3. இந்த பெரிய கடைகளின் வாசலில் அவர்களின் சார்பு கடைகள் (ஐஸ்கிரீம், பஜ்ஜி போண்டா) உள்ளனவே, அவர்கள் லைசென்ஸ் வாங்கியுள்ளார்களா?
முன்னாள் மாநகரதந்தைக்கு:
1. ஐயா, முதன்முதலில் சிங்கார சென்னை என்கிற கான்செப்டை பிரபலப்படுத்தியவர் நீங்கள்தான். இப்போது துணை முதல்வர் ஆகியவுடன் அதனை எல்லாம் மறந்து விட்டீர்களா என்ன?
2. மக்கள் அதிகம் புழங்கும் இடங்களையே நாம் அழகாக வைத்திருக்க வேண்டும். யாருமே இவராத இடங்களை அழகு படுத்தி பார்ப்பதில் என்ன சுவை? யாருமே இல்லாத இடத்தில் யாருக்கு டீ போட வேண்டும்?
3. அது எப்படிங்க சார், நீங்க இருக்கும் தெருவில மட்டும் குண்டும் குழியும் சாக்கடையும் இல்லாம சுத்தமா இருக்கு. நாங்க வசிக்கிற இடத்துக்கு ரோடு இல்லை. நாங்கல்லாம் மனுஷங்க இல்லையா?
என்னாடா இவன், மக்களுக்கு கேள்வியே இல்லையா என்று நினைக்கலாம். அவங்க கிட்ட கேட்டு.................. ஹும்ம்ம்மம்மம்ம்ம்ம் விடுங்க சார்.
இதுவரையில் பொறுமையாக படித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
அப்பாடா, ரொம்ப நாளா மக்களுக்கு பயனுள்ள ஒரு பதிவாவது போட எண்ணி இருந்தேன், இன்று செய்து விட்டேன். அதில் அனைவருக்கும் ஒரு மெஸ்சேஜ் வேறு சொல்லி விட்டேன்.