த எக்ஸ்பெண்டபிள்ஸ் (1947 – 2010 – ?!)

வெடிகுண்டு வெங்கட்டின் சிறப்பு செய்தியாகிய இந்த பதிவினை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

மக்களே,

திருமணமாகாத அனைவருக்கும் என்னுடைய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். திருமணமானவர்களுக்கு, வெல், வேறென்ன சொல்ல, ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த பதிவின் தலைப்பை பார்த்து விட்டு த எக்ஸ்பெண்டபிள்ஸ் ஹாலிவுட் படம் விமர்சனம் என்று நினைத்து வந்தீர்கள் என்றால், ஐயம் சாரி. அதற்க்கு நீங்கள் வேறிடம் செல்ல வேண்டி இருக்கும்.

பதிவிற்குள் நுழைவதற்கு முன்பாக, த எக்ஸ்பெண்டபிள்ஸ் என்றால் அர்த்தம் என்ன என்று சொல்லிவிடுகிறேன். இந்த வார்த்தை பிரயோகம் ரேம்போ படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் உபயோகப்படுத்தப்பட்டது. ஒரு கொரிய/வியட்நாமிய நாட்டுப்பெண் (உடனே கொரிய பிகர்கள் இருக்கும் கொரிய படங்களாக போட்டு தாக்கும் கருந்தேளிடமோ இல்லுமினாட்டியிடமோ செல்ல வேண்டாம்) கோ-பாவோ ரேம்போவிடம் கேட்பார்: “இந்த ஆபத்தான வேலைக்கு ஏன் உங்களை தேர்ந்தெடுத்தார்கள்?” என்று.

அதற்க்கு ரேம்போ சொல்வார்: “ஏனென்றால் நான் எக்ஸ்பெண்டபிள்” என்று. 

அதற்க்கு கோ பாவோ கேட்பார்: “எக்ஸ்பெண்டபிள் என்றால் என்ன?".

ரேம்போ சொல்லும் பதிலே இந்த புதிய படத்திற்கு அடிக்கோல்: "யாரை நீங்கள் உங்கள் வீட்டிற்க்கு அழைத்ததுவிட்டு அவர வரவில்லை என்றால் கவலைபடமாட்டீர்களோ, அவர்தான் எக்ஸ்பெண்டபிள்". 

அதாவது, அந்த நபரால் நமக்கு வேலை ஆகவேண்டும், அதே சமயம் அந்த நபருக்கு அதில் ஆபத்து வந்தாலும்கூட நமக்கு கவலை இல்லை. அவர்கள்தான் எக்ஸ்பெண்டபிள்ஸ்.  உடனே அதற்காக ரேம்போ மாதிரி ஆட்கள்தான் எக்ஸ்பெண்டபிள்ஸ், நாம இல்லை என்று நினைத்து விடாதீர்கள். ஒரு வகையில் பார்த்தால் அரசாங்க இயந்திரத்திடமும், லஞ்ச லாவண்ய பிரபுக்களிடமும் நாம் எல்லோருமே எக்ஸ்பெண்டபிள்ஸ்தான். எப்படி என்றா கேட்கிறீர்கள்? கீழ்க்காணும் படங்களை சற்றே பாருங்கள்.

ஒரு மேன் ஹோல் முழுவதுமாக திறந்துள்ளது. யார் வேண்டுமானாலும் பலி கொடுக்கப்படலாம்.
DSC02008
சற்று உத்து பார்த்தால் அந்த மேன் ஹோல் குப்பைகளால் மறைக்கப்படுகிறது - விபத்திற்கு வழி?
DSC02009
இந்த மேன் ஹோல் குப்பைகளால் மூடப்பட்டு பலரும் விழ வழி வகுக்கிறது
DSC02010

மேலே நீங்கள் கண்ட படங்கள் ஏதோ ஒரு சேரியிலோ அல்லது குப்பை மேட்டிலோ என்றுதானே நினைத்தீர்கள்? அது சரிதான். சற்று கூர்ந்து கவனியுங்கள் நண்பர்களே. நீங்கள் எந்த இடத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று தெரியவரும்.

குப்பைகள், கழிவுகள், கசடுகள், மற்றும் இவர்களின் ஊடே மனிதர்கள் - இதுதான் இன்றைய சூழல்
DSC02011
நவநாகரீகத்தின் நடுவில் நம்முடைய கழிவுகள் - இது ஹைக்கூ கவிதை மாதிரியே இல்லை?
DSC02012
மூட்டை, மூட்டையாக கொட்டப்படும் குப்பைகளும், அதன் நடுவில் மனிதர்களும்
DSC02013
ஒரு சாதாரண தூரலுக்கே இந்த நிலை என்றால் 3மணி நேரம், 4 மணி நேரம் பெய்தால்?
DSC02014
அடுத்த மேன் ஹோல் ரெடி - நமக்கு நாமே குழி பறிக்கும் நாள் இதுதானோ?
DSC02015

என்ன மக்களே, இவ்வளவு படங்களை பார்த்தும் இது எந்த இடம் என்று உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையா? என்ன கொடுனை சார் இது? தயவு செய்து அடுத்த படத்தை பாருங்கள். பிறகாவது உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பார்ப்போம்.

மக்கள் கூட்டமா இல்லை மாக்கள் கூட்டமா?
DSC02016

இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லையா? சரி விடுங்க சார். இந்த கடைசி படத்தை பாருங்கள். இப்போது உங்களுக்கே தெரியும் இது எந்த இடம் என்று.

ஒரு சனிக்கிழமை (14th Aug) டி. நகர் ரங்கநாதன் தெருவின் காலை பதினோரு மணி நெரிசல்
DSC02017

ஆமாம், இந்தியாவிலேயே அதிகமாக மக்கள் புழங்கும் தியாகராய நகரின் மையப்பகுதியாகிய ரெங்கநாதன் தெருவின் புகைப்படங்களே இவை. இந்த படங்களை மறுபடியும் ஒரு முறை பார்த்தது விடுங்கள். பிறகு பதிவின் நோக்கத்தை நோக்கி செல்வோம்.

DSC02008 DSC02009 DSC02010 DSC02011
DSC02012 DSC02013 DSC02014 DSC02015

ஒக்கே, பதிவின் ஆரம்பத்தில் நாம் எக்ஸ்பெண்டபிள்ஸ் பற்றி சொன்னதை ஒருமுறை நினைவுபடுத்துங்கள். முடியாதவர்களுக்கு :

கோ-பாவோ: “இந்த ஆபத்தான வேலைக்கு ஏன் உங்களை தேர்ந்தெடுத்தார்கள்?”.

ரேம்போ: “ஏனென்றால் நான் எக்ஸ்பெண்டபிள்”.

கோ பாவோ: “எக்ஸ்பெண்டபிள் என்றால் என்ன?".

ரேம்போ சொல்லும் பதிலே இந்த புதிய படத்திற்கு அடிக்கோல்.

ரேம்போ:"யாரை நீங்கள் உங்கள் வீட்டிற்க்கு அழைத்ததுவிட்டு அவர வரவில்லை என்றால் கவலைபடமாட்டீர்களோ, அவர்தான் எக்ஸ்பெண்டபிள்".

அதாவது, அந்த நபரால் நமக்கு வேலை ஆகவேண்டும், அதே சமயம் அந்த நபருக்கு அதில் ஆபத்து வந்தாலும்கூட நமக்கு கவலை இல்லை. அவர்கள்தான் எக்ஸ்பெண்டபிள்ஸ்.  உடனே அதற்காக ரேம்போ மாதிரி ஆட்கள்தான் எக்ஸ்பெண்டபிள்ஸ், நாம இல்லை என்று நினைத்து விடாதீர்கள். ஒரு வகையில் பார்த்தால் அரசாங்க இயந்திரத்திடமும், லஞ்ச லாவண்ய பிரபுக்களிடமும் நாம் எல்லோருமே எக்ஸ்பெண்டபிள்ஸ்தான்.

இந்த சரவணா ஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன் ஸ்டோர்ஸ் போன்ற கடைகாரர்களுக்கும் மற்ற மரண வியாபாரிகளுக்கும்கூட நாம் ஒரு வகையில் எக்ஸ்பெண்டபிள்ஸ் தான். ஏனென்றால் அவர்களுக்கு அவர்களின் சரக்கை வாங்க ஆட்கள் தேவை, மற்றபடி அதை வாங்க வருபவர்கள் எந்த கஷ்டத்திற்கு ஆளானாலும் சரி, அதை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. வாங்க வருபவர்கள் மேன் ஹோலில் விழுந்தாலோ, அல்லது சாக்கடையில் கால் வழுக்கி அடிபட்டாலோ அதை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.

நம்ம கடையில் வாங்க வருகிறார்களே, நாம் சற்று சுத்தமாக இருப்போம் என்றுகூட அவர்களுக்கு சிந்தனை இல்லை. அதே நேரம் அந்த தெருவில் குப்பைகளை கொட்டாமல் இருப்போமே என்ற யோசனையும் இல்லை. அதே நேரம் தவறு நம்ம மக்களிடம் தான் இருக்கிறது. ஒரு டி சாப்பிட வேண்டும் என்றால் கூட கடையை பார்த்து பார்த்து செலக்ட் செய்யும் நாம் (கடைக்காரன் முழி சரி இல்லை, கடை முன்னே நிக்க இடம் இல்லை, கடையில் உட்கார சரியான பெஞ்ச் இல்லை, கடை வாசலில் சாக்கடை தேங்கி நிற்கிறது), அதைப்போல ஏன் இந்த கடைகளிலும் செய்யக்கூடாது என்று கேட்கக் தோன்றுகிறது.

இப்போது கடைக்காரர்களுக்கு சில பல கேள்விகள்:

1. காந்தி சொன்னது போல "வாடிக்கையாளரே நமது தெய்வம்" என்றெல்லாம் கூட சொல்ல தேவை இல்லை. அவர்களுக்கு தேவையான குறைந்தபட்ச தேவைகளைக்கூட உங்களால் செய்ய இயலாதா?

2. உங்கள் வீடு வாசலில் இப்படி குப்பை இருந்தால் நீங்கள் சும்மா இருப்பீர்களா என்ன? இந்த கடைதானே உங்களுக்கு பணம் தரும் வகை, இங்கே அதே சுத்தம் இருக்க வேண்டாமா?

3. உங்கள் வீட்டு வாசலில் இப்படி ஒரு மேன் ஹோல் திறந்து இருந்தால் விட்டு வைப்பீர்களா என்ன? உங்கள் வீட்டிற்கு வருபவர்கள் காயமடைந்தால் உங்களுக்கு தானே அவமரியாதை?

அடுத்ததாக அரசு இயந்திரங்களுக்கு சில கேள்விகள்:

இந்நாள் மாநகரதந்தைக்கு:

1. ஐயா, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள எரிக்களில் தான் அதிகம் வியாதிகள் பரவும் என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா? மழைக்காலம் வந்தவுடனே டெங்கு, மலேரியா, போன்ற வியாதிகளும் படையெடுத்து வருமே, இது போன்ற இடங்கள் சுத்தமாக இருக்கவேண்டாமா? மாநகராட்சியின் கண்களுக்கு இந்த இடங்கள தெரியவே தெரியாதா?

2. இந்த ரெங்கநாதன் தெருவில் நடைபாதை எங்குள்ளது என்பதை நீங்கள் எனக்கு காட்ட முடியுமா? இப்படி கடைக்காரர்கள் முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளார்களே, இதையெல்லாம் மாமூல் வாங்கிக்கொண்டு அமைதியாக இருக்கும் போலிஸ்காரர்கள் தான் கண்டுக்கொள்ள மாட்டார்கள், நீங்களுமா? நடைபாதை ஆக்கிரமிப்பு என்பது சட்டப்படி குற்றமல்லவா? அல்லது அதனை நினைவுபடுத்துவது தான் உங்கள் கடமையா?

3. இந்த பெரிய கடைகளின் வாசலில் அவர்களின் சார்பு கடைகள் (ஐஸ்கிரீம், பஜ்ஜி போண்டா) உள்ளனவே, அவர்கள் லைசென்ஸ் வாங்கியுள்ளார்களா?

முன்னாள் மாநகரதந்தைக்கு:

1. ஐயா, முதன்முதலில் சிங்கார சென்னை என்கிற கான்செப்டை பிரபலப்படுத்தியவர் நீங்கள்தான். இப்போது துணை முதல்வர் ஆகியவுடன் அதனை எல்லாம் மறந்து விட்டீர்களா என்ன?

2. மக்கள் அதிகம் புழங்கும் இடங்களையே நாம் அழகாக வைத்திருக்க வேண்டும். யாருமே இவராத இடங்களை அழகு படுத்தி பார்ப்பதில் என்ன சுவை? யாருமே இல்லாத இடத்தில் யாருக்கு டீ போட வேண்டும்?

3. அது எப்படிங்க சார், நீங்க இருக்கும் தெருவில மட்டும் குண்டும் குழியும் சாக்கடையும் இல்லாம சுத்தமா இருக்கு. நாங்க வசிக்கிற இடத்துக்கு ரோடு இல்லை. நாங்கல்லாம் மனுஷங்க இல்லையா?

என்னாடா இவன், மக்களுக்கு கேள்வியே இல்லையா என்று நினைக்கலாம். அவங்க கிட்ட கேட்டு.................. ஹும்ம்ம்மம்மம்ம்ம்ம் விடுங்க சார்.

இதுவரையில் பொறுமையாக படித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

அப்பாடா, ரொம்ப நாளா மக்களுக்கு பயனுள்ள ஒரு பதிவாவது போட எண்ணி இருந்தேன், இன்று செய்து விட்டேன். அதில் அனைவருக்கும் ஒரு மெஸ்சேஜ் வேறு சொல்லி விட்டேன்.

Comments

13 Responses to "த எக்ஸ்பெண்டபிள்ஸ் (1947 – 2010 – ?!)"

வெடிகுண்டு வெங்கட் said... August 15, 2010 at 1:17 PM

Test.

வெங்கட்,

வெடிகுண்டு வெங்கட்.
த எக்ஸ்பெண்டபிள்ஸ் (1947 – 2010 – ?!)

கருந்தேள் கண்ணாயிரம் said... August 15, 2010 at 1:46 PM

நீங்க நம்மாண்ட கமெண்ட் போட்டப்புறம் தான் உங்க போஸ்ட்ட கவனிச்சேன்.. அருமையான, சவுக்கடி பதிவு.. கண்டின்யூ... அட்டகாசம் !

வெடிகுண்டு வெங்கட் said... August 15, 2010 at 1:50 PM

தேளு,

உங்க பதிவு சூப்பர். நாமளும் அந்த காலத்து ஹீரோக்கள ரசிச்சவங்க தான். அதான் இந்த டைட்டிலு.
வெங்கட்,

வெடிகுண்டு வெங்கட்.

த எக்ஸ்பெண்டபிள்ஸ் (1947 – 2010 – ?!)

ILLUMINATI said... August 15, 2010 at 2:43 PM

நல்ல பதிவு நண்பா!ஆனா நீங்க என்ன கத்துங்க,இவனுங்க திருந்த மாட்டானுங்க.நம்ம ஆளுங்க quality பாக்குறவங்க டைப் இல்ல,quantity பாக்குறவங்க.அது இந்த மாதிரி ஊரை ஏமாற்றும் முதலாளிகளுக்கு நல்லா தெரியும்.அதனால மெத்தனம்.மக்கள் விழிக்கனும்.அதுக்கு அவனுக்கே எதுனா நடக்கணும்.இல்லைனா இதை பற்றி யோசிக்க கூட மாட்டானுக.இது தான் இப்போதைய நிலைமை.

மயில்ராவணன் said... August 15, 2010 at 6:02 PM

Congrats!

Your story titled 'த எக்ஸ்பெண்டபிள்ஸ் (1947 – 2010 – ?!)' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 16th August 2010 01:42:02 AM GMTHere is the link to the story: http://ta.indli.com/story/321812

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

மயில்ராவணன் said... August 15, 2010 at 6:03 PM

ஏதோ நம்மால முடிஞ்சது.........தமிலிஸ்ல சேர்த்துவுட்டேன்... ஜெய்ஹிந்த்.

வெடிகுண்டு வெங்கட் said... August 15, 2010 at 7:02 PM

நன்றி இல்லு.

நீங்கள் கூறுவதும் சரியே.

வெடிகுண்டு வெங்கட் said... August 15, 2010 at 7:03 PM

நண்பர் மயில்ராவணன்,

நன்றிகள் பல, நண்பரே. நண்பர்களுக்கு மெயில் செய்துவிட்டு வந்து இணைக்கலாம் என்று பார்த்தால் அதற்குள் நீங்கள் இணைத்து விட்டீர்கள்.

நன்றிகள் மீண்டும்

இராமசாமி கண்ணண் said... August 15, 2010 at 8:09 PM

என்னத்த சொல்ல.. நம்மளும் கத்தினோம்.. நம்மளும் கத்துகிறோம்.. நம்மளும் கத்துவோம்..
மாற்றம் ஒன்றுதான் மாறாதது - இது நேற்றைய தத்துவம்.
ஆட்சிசெய்பவர் மாறுவர்.. ஆட்சிமுறை மட்டும் மாறாது - இது இன்றய பித்துவம் ...

ஹாலிவுட் பாலா said... August 16, 2010 at 12:24 AM

உங்களுக்கு அடி விழப்போகுது. சும்மா விளையாட்டுக்கு போட்ட கமெண்ட்டை சீரியஸா எடுத்துக்கறதா??

ஒழுங்கா.. எனக்கும்.. அதே கமெண்ட் அங்க வரணும் சொல்லிட்டேன். :) :)

நம்ம ஃப்ரென்ஸுக்கு இல்லாம வேற யாருக்குங்க ப்லாக்?!!!

ஹாலிவுட் பாலா said... August 16, 2010 at 12:27 AM

ரைட்டு.. சீரியஸா எடுக்கலைன்னு.. கருந்தேள் ஏரியாவில் பார்த்துட்டேன்.

அப்ப.. ஒழுங்க.. உங்க ப்ராண்ட் பின்னூட்டத்தை அங்க போடுங்க. அப்பத்தான்.. ஒத்துக்குவேன்.

Cable Sankar said... August 16, 2010 at 12:59 AM

een intha kolai veri..?":)

♠ யெஸ்.பாலபாரதி ♠ said... August 17, 2010 at 5:08 PM

அவசியமான இடுகை. நல்ல பணி. வாழ்த்துக்கள் நண்பரே!

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin