அமானுஷ்ய அப்பாவும் ஒரு கிரிக்கெட் கேள்வியும்

வெடிகுண்டு வெங்கட்டின் சிறப்பு செய்தியாகிய இந்த பதிவினை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

மக்களே,

கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிங்கையில் இருந்து கஷ்டப்பட்டதால் பதிவுகள் எதனையுமே இட மனம் வரவில்லை. சமீபத்தில் சகா பட்டாப்பட்டி ராஜ் அவர்களின் மரணம் என்னை உலுக்கி எடுத்து விட்டது. என்னுடைய பல பதிவுகளில் ரெகுலர் ஆக வந்து கமெண்ட் இட்டு என்னை வளர்த்து விட்ட அவரின் நினைவாக தமிழகம் வந்தவுடன் இடும் முதல் பதிவை அவருக்கு அர்பணிப்பு செய்கிறேன். இனிமேல் பதிவுக்குள் ஓடுவோம்.

கடந்த வாரத்தில் ஒரு நாள் புதிய தலைமுறை சேனலை பார்க்க நேரிட்டது (தலைவிதி). அதில் பத்ரி அங்கிள் (கிழக்கு டி ஷர்ட்டுடன் தான்),W V ராமன்,மனுஷ்ய புத்திரன் மற்றும் பெயர் நினைவில் இல்லாத ஒரு அதி புத்திசாலி ஆகியோர் கிரிக்கெட் சூதாட்டம் பற்றி பேசிக்கொண்டு இருந்தனர். நான் பேசாமல் எழுந்து சென்று விட்டு இருக்க வேண்டும்தான், ஆனால் TV இருந்த அந்த அறையில் எனக்கு ஒரு வேலை இருந்ததால் தொடர்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  WV Raman

W V ராமன் ஒக்கே, கிரிக்கெட் ஆடி இருக்கிறார்-அதனால் அவர் வந்து பேசுவதில் தவறில்லை.  ஏனென்றால் அவருக்கு விஷயம் தெரியும்.

Badri Uncle பத்ரி அங்கிள் கூட கிரிக்கின்ஃபோ இணையதள தொடர்பினால், அவருக்கும் ஒரு டிக்-அவரும் பேசலாம் தவறில்லை தான். ஆனால் அடுத்த முறை அந்த கிழக்கு T ஷர்ட் இல்லாமல் வேறு எந்த சட்டையாவது அணிந்து வந்தால் நலம்,உங்க பிராண்டிங் தொல்லை தாங்க முடியல அங்கிள், ப்ளீஸ்.

ஆனால் அடுத்து வந்த இரண்டு பேர் - அங்கேதான் பிரச்சினையே.

அந்த ஒரு அதி புத்திசாலி IPL என்பது சூதாட ஆரம்பிக்கப்பட்ட ஒன்று என்று ஆரம்ப முதலே பேசிக்கொண்டு இருந்தார். அது கூட பரவாயில்லை (பாவம் அவருக்கு என்ன குடும்ப பிரச்சினையோ), ஆனால் அதற்க்கு அடுத்து வந்ததுதான் அதைவிட கொடுமை.uyirmai

3 பேர் ஸ்பாட் பிக்ஸிங் செய்ததற்கு சீனியை பதவி விலக கோரிய மனுஷ்யபுத்திரன்,உயிர்மை அலுவலகத்தில் யாராவது கையாடல்/குற்றம் செய்தால் அதை விசாரிக்க முனவருவாரா அல்லது தனது வேலையை ரிசைன் செய்துவிட்டு கம்பெனியை இழுத்து மூடுவாரா? ஒரு மைக்கும் டிவி சேனலும் கிடைத்துவிட்டால் என்னது என்பதே தெரியாமல் பேசும் இவர்களை போன்ற அதிபுத்திசாலிகள் தான் இந்த சமூகத்தின் மிகப்பெரிய கேடு.

*இந்த இடத்தில் வேறு ஒரு கேள்வி மனதில் எழுகிறது கூச்சப்படாமல் பின் குறிப்பாக அந்த கேள்வியை படித்துக் கொள்ளுங்க பாசு.

எல்லா விஷயத்திலும் வந்து கருத்து சொல்லும் மனுஷ்யபுத்திரன் எப்போதில் இருந்து Master Of All Subjects ஆனார் என்பது எனக்கு தெரியவில்லை. அவருக்கு ஏதாவது ஒரு அயல்நாட்டு பல்கலைகழகம் அப்படி ஒரு விருது கொடுத்து இருந்தால் எனக்கு ஏன் அந்த விஷயம் தெரியாமல் போனது? (தெரிந்தால் நானும் ஒரு டாக்டர் பட்டம் வாங்கி போட்டுக்கொள்வேனே? டாக்டர் வெடிகுண்டு வெங்கட் - எப்படி இருக்கிறது?).

  • சினிமா விமர்சனமா? டிக்
  • அரசியலா? டிக்
  • கிரிக்கெட்டா? டிக்
  • சமூக அவலங்களா? டிக்
  • கல்வியா? டிக்
  • அதிஷா போன்ற இளைஞர்கள் புகை பிடிப்பதை விடுவதால் ஏற்படும் நன்மையா? டிக்
  • முத்துராமலிங்கம் படம் எடுப்பதால் தமிழ் சினிமாவிற்கு ஏற்படும் நன்மையா? டிக்
  • பதிவுலகில் ஏற்படும் சர்ச்சைகளா? டிக்
  • கள்ளகாதல் பிரச்சினையா? டிக்
  • கல்லூரி பேராசிரியைகளை காம கண்ணோட்டத்தோடு பார்க்கும் மாணவர்களா? டிக்

என்று எல்லா விஷயங்களையும் நுணுக்கமாக தெரிந்துகொண்டு அதில் மேதாவிலாசத்துடன் பேச மனுஷ்யபுத்திரனுக்கு யார் பயிற்சி கொடுத்தது? தயவு செய்து அந்த Institute பெயர் எது என்று சொன்னால் அங்கே சென்று அடியேனும் ஒரு கோர்ஸ் முடித்துவிட்டு வேலை வெட்டி இல்லாத நேரங்களில் இதுமாதிரி தொலைகாட்சி சேனல்களுக்கு சென்று ஜாலியாக ஏதாவது உளறிக்கொட்டிவிட்டு மன்னிக்கவும் கருத்து சொல்லிவிட்டு வரலாமே

MA

அதனால் நமக்கு காசு, பணம், துட்டு, மணி, Money எதுவும் வராவிட்டாலும் (சாறு புழிஞ்சிதா அங்கிள் கவனிக்கவும்,இந்த வேலைக்கு நீங்க சரிப்பட்டுவரமாட்டீங்க, அதனால் உங்க பக்த கேடிகளிடமே பணவசூல் செய்யுங்க சார்), நானும் நம்ம அதிஷா மாதிரி ஒரு பிரபலமாவது ஆவேனே? அதன்மூலம் சினிமா, கிரிக்கெட், சூதாட்டம் என்று பின்னர் சம்பாதித்து கொள்ளலாமே?

*பின் குறிப்பு:

இதே கேள்வியை இந்த தொலைகாட்சியை நடத்தும் அண்ணன் க்ரீன் பேர்ல் இடமும் கேட்க ஆசைதான் (அது யார் க்ரீன் பேர்ல் என்று எதிர் கேள்வி கேட்பவர்கள் தயவு செய்து இடத்தை காலி செய்யவும்).  ஆனால் குடும்ப பிரச்சினை எனக்கு நன்றாக தெரிந்த விஷயம் என்பதால் க்ரீன் பேர்ல் மகர் (மகனைத்தான் மரியாதையுடன் மகர் என்று சொல்கிறேன்) வெள்ளை வேட்டி சத்யா நாராயணாவிடமே கேட்கிறேன்.

புதிய தொலைக்காட்சியில் இருக்கும் யாராவது ஒருவர் தவறு செய்தால், அதை காரணம் காட்டி அண்ணன் வெள்ளை வேட்டி சத்யா நாராயணா அந்த சேனலின் பொறுப்பில் இருந்து பதவி விலகுவாரா? அல்லது அந்த தவறு செய்த ஒரு ஆளை கண்டுபிடித்து விசாரணை செய்து தகுந்த தண்டனை வாங்கி தர முயல்வாரா? 

இந்த இடத்தில் சம்பந்தம் இல்லாத ஒரு தகவல் - புதிய தலைமுறையில் தவறு செய்த ஒரு ஆள் என்றால் அது காமெடிதான். ஏனென்றால் ஊரில் இருக்கும் அத்துணை ஃப்ராடுகளுக்கும் இடம் கொடுத்துள்ள சேனலாயிற்றே அது? அங்கே சேருவதற்கு தான் இதுபோன்ற தகுதிகள் தேவை.

Comments

2 Responses to "அமானுஷ்ய அப்பாவும் ஒரு கிரிக்கெட் கேள்வியும்"

SUREஷ்(பழனியிலிருந்து) said... June 1, 2013 at 5:56 AM

//க்ரீன் பேர்ல்// பெயர் சூப்பர், இலியானாவுக்கு தெரிந்திருந்தால் இதையும் சேர்த்து பேசியிருப்பார்.

உங்களுக்கு உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் ப்ளாக்பேர்ல் பத்தி தெரியுமா? தெரியவில்லை என்றால் உங்களுக்கு 95 மதிப்பெண் (பத்திற்கு) கொடுக்கப்படும்

மேற்கு பதிப்பகம் கத்ரி said... June 1, 2013 at 12:20 PM

யோவ் கூமுட்டை,

அதுக்காக என்ன சட்டை இல்லாம அரை நிர்வாணமா வர சொல்றியா?

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin