மக்களே,
தலைப்பை பார்ர்த்து விட்டு புதிய அரசியல் கட்சியா என்று எண்ணி விடாதீர்கள்.
தே.மு - தே. பி என்பது தேர்தலுக்கு முன் - தேர்தலுக்கு பின் என்பதின் சுருக்கமே ஆகும்.
அடுத்த இரண்டு மாதங்களில் இந்தியாவின் மிகப் பெரும் சர்க்கஸ் நடக்கப் போவது உங்கள் எல்லாருக்கும் தெரியும். அந்த சர்க்கஸ் ஆட்டத்தில் கலந்து கொள்ள இருக்கும் தமிழ் நாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பின்வருமாறு:
கருணாநிதி | ஜெயலலிதா | விஜயகாந்த் | ராமதாஸ் | திருமாவளவன் |
அடுத்த கட்ட தலைவர்கள் மற்றும் வருங்கால இந்திய பிரதமர்களின் விபரங்களும் இங்கே உண்டு. என்னடா இங்கே எதற்கு வடிவேலு அவர்களின் படம் உள்ளது என்று யோசிக்காதீர்கள். அவர்தான் விஜயகாந்த் எங்கே நின்றாலும் அவரை எதிர்த்து போட்டியிடப் போவதாக சொல்லி இருக்கிறாரே? மறந்து விட்டதா?
தங்கபாலு | கார்த்திக் | சரத் குமார் | விஜய டி ராஜேந்தர் | வடிவேலு |
சரி, அது என்னதான் அப்படிப்பட்ட அன்பளிப்பு - கிப்ட்? அதில் என்ன தேர்தலுக்கு முன் தேர்தலுக்கு பின் என்ற பாகுபாடு என்று கேட்பவர்களுக்கு, இதோ விளக்கம்.
தேர்தலுக்கு முன்னர் பல விதமான அன்பளிப்புகள் வழங்கப்படும். ஒவ்வொரு கட்சியின் நிதி நிலையை பொறுத்து அவை நிர்ணயிக்கப் படும். அவற்றில் சில, இதோ:
தேர்தலுக்கு முன்பு கிடைக்கப் போகும் கிப்ட்- எந்த கட்சி அதிகம் கொடுக்குமோ அது தான் ஜெயிக்கும் |
டெலிவிஷன் | கம்புயுட்டர் | சைக்கிள் | பிரியாணி | பணம் |
ஆனால், தேர்தலுக்கு பின்னர் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு கிடைக்கப் போகும் அன்பளிப்பு ஒன்றே ஒன்றுதான். இதில், மேல்ஜாதி, கீழ்ஜாதி, ஹிந்து, முஸ்லீம், கிறித்துவன், போன்ற பாகுபாடு, படித்தவன் - படிக்காதவன், பணக்காரன் - ஏழை என்று எந்த விதமான பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் ஒரே விதமான அன்பளிப்புதான் வழங்கப் படும். இதோ அந்த அன்பளிப்பின் விளக்கப் படம்:
தேர்தலுக்கு பிறகு கிடைக்கப்போகும் கிப்ட்-எந்தகட்சி ஜெயித்தாலும் ஒரே கிப்ட்தான் |
முக்கிய கேள்வி:தலைவர்களே, இந்த மாத இறுதியில் நான் வெளி நாடு செல்ல இருப்பதால், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அரசியல் பரிசளிப்பு விழாக்களில் (அதாங்க, தேர்தல்) பங்கேற்க இயலாது. அதனால் எனக்கு உரிய பரிசுகளை (அதாங்க அன்பளிப்பு) இப்போதே வாங்கிக் கொள்ளலாமா? எப்படி இருந்தாலும் என்னுடைய வோட்டை நீங்களே போட்டு விடுவீர்கள் தானே? நீங்க தேர்தலுக்கு பின்னாடி தர வேண்டியதை (அதாங்க நாமம்) நான் இப்பவே போட்டுக்குறேன். ஒ.கே.வா?
சூப்பர். கலக்குறீங்க வெடிகுண்டு வெங்கட்.
நன்றி அனானி தோழரே.
இந்த பிரியாணி படத்தை மட்டும் போடாதீங்க! நாக்குல எச்சி ஊறுது. எப்படா ஊருக்கு வந்து ‘காராசாரமா’ சாப்பிட போறோம்னு!
//எப்படி இருந்தாலும் என்னுடைய வோட்டை நீங்களே போட்டு விடுவீர்கள் தானே?//
போன எலக்சன்ல வேற ஒரு பையனை வச்சி என் வோட்டை போட்டுட்டாங்க (என் சித்தப்பு DMK-க்கு). இந்த முறையும் அதுதான் நடக்கப்போகுது.
ஊருக்கு வரும்போது சொல்லுங்க பாலா.
சென்னைக்கு வந்த நானே பிரியாணி சமைத்து தருகிறேன்.
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
//சென்னைக்கு வந்த நானே பிரியாணி சமைத்து தருகிறேன். //
வாவ்...!!! நோட் பண்ணிக்கங்க.. மறந்துட கூடாது. :) :)
கண்டிப்பாக தல.
உங்களுக்கு இல்லாததா?
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
கொய்யால,
தலைவர் படத்த மட்டும் மோசமா போட்டு இருக்க? மத்தவங்க எல்லாம் அரெஸ்ட் ஆகுற மாதிரி படம் உனக்கு வேனுமாட?
மாத்துடா டேய்.
Why Me?
அனானி,
குருவி படத்தையே தில்லா புல்லா பார்த்த ஆளு நான். இதுக்கெல்லாம் பயப் பட மாட்டேன். அதுக்கப்புறம் கூட வில்லு படத்த பார்த்தவன்.
ஜாக்கிரதை. பீ கேர்புல் (எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்).
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
அருமையா எழுதுறிங்க இனி நான் உங்க பாலோவர்