பரபரப்பு செய்தி = அபியின் கல்யாணம் நின்றது.
இன்று டாக்டர் மகேஷ் உடன் நடப்பதாக இருந்த அபியின் கல்யாணம் (இரண்டாவது கல்யாணம் - முதல் கல்யாணம் பாஸ்கர் உடன் நடந்து இப்போது விவாகரத்தும் நடந்து விட்டது) இன்று திடீரென்று நின்று விட்டது.
கல்யாணத்தை நிறுத்தியது யார்? என்று தெரிந்து கொள்வதற்கு முன்பாக ஒரு சிறு தகவல்: இந்த கல்யாணம் நடக்க கூடாது என்பதற்காக முதல் கணவன் பாஸ்கர் ஒரு துப்பாக்கியுடன் கல்யாண மண்டபத்தில் வந்து அபியை சுட எண்ணியுள்ளான்.
இந்த துடிப்பான கட்டத்தில் தான் அபியின் கல்யாணம் நின்று விட்டது.
கல்யாணத்தை நிறுத்தியது யார்?
பாஸ்கரா? (விவாகரத்து பெற்ற முன்னால் கணவன் - மறுபடியும் கல்யாணம் செய்துக் கொள்ள துடிப்பவன்).
ஆதியா? (அபியின் சகோதரன் - ஆனால் மாற்றாந்தாய்க்கு பிறந்தவன் - அபியை பழி வாங்க துடிப்பவன்)
திருவேங்கடம்'ஆ? (அபியின் சித்தப்பா - அபியின் வளர்ச்சியை பிடிக்காத ஒரு நபர் - ஆதியின் கைக்கூலி).
தொல்காப்பியன்'ஆ? (அபியின் முன்னால் நண்பர் - அபியாள் தவறாக புரிந்து கொள்ளப் பட்ட சீரியல் இயக்குனர் - அதனால் எப்போதும் நல்லவர்)
மேனகாவா? (தொழிலதிபர் - அபியால் பல வகைகளில் பாதிக்கப்பட்டவர்)
இப்படி பலரும் யோசித்துக் கொண்டு இருக்கும்போது தான் இந்த கல்யாணம் நின்று விட்டது.
கல்யாணத்தை நிறுத்தியது வேறு யாருமல்ல, சாட்சாத் அபியே தான்.
என்ன சார் இது? தன்னுடைய கல்யாணத்தை தானே யாராவது நிறுத்துவார்களா என்று கேட்பவர்கள் சரியாக மூன்று வருடங்களும் ஐந்நூறு நாட்களும் கழித்து இந்த சீரியலை பாருங்கள். அப்போதாவது யாராவது வந்து "அபி ஏன் கல்யாணத்த நிறுத்தினா தெரியுமா?" என்று கேட்டு நமக்கு எல்லாம் விடை சொல்வார்கள்.
டிஸ்கி: டோண்டு சார் சும்மா இவன்தான் பிராமணன் கதையை போட்டு விடுகிறார். நமக்கு தான் எழுதவே எந்த டாபிக்கும் இல்லை என்று நினைத்தால் இன்று இந்த சம்பவம் நடந்தது.
டோண்டு சார் கோவிச்சுக்க மாட்டேளே?
பின் குறிப்பு : திருவேங்கடத்தின் மகள் தான் டாக்டர் மகேஷ் உடன் கல்யாணம் செய்துக் கொள்ளப் போகும் பெண். இதில் கூத்து என்னவென்றால் அவளுக்கும் இது ரெண்டாவது கல்யாணம். முதல் கணவன் இப்போது தான் திரும்பி வந்து திருவேங்கடத்தின் வீட்டில் தங்கி இருக்கிறான்.
என்னது அபி கல்யாணம் நின்னு போச்சா?
MENAKA IS THOLS'S SISTER.
THOLS KNOWS THIS.
MENAKE DOESNT KNOW.
WHAT A TRAJEDY?
//தொல்காப்பியன்'ஆ? (அபியின் முன்னால் நண்பர் - அபியாள் தவறாக புரிந்து கொள்ளப் பட்ட சீரியல் இயக்குனர் - அதனால் எப்போதும் நல்லவர்)
//
அனைத்துக்கும் காரணம் இவரே... இவரால்தான்ன் அபி இவ்வளவு சிரமப் படுகிறார். கலைஞர் டி.வி.யில் அபி நடிப்பதாக செய்திவந்தபோது அபி சுட்டு பல நாட்கள் மருத்துவமனையில் தள்ளிய கொடியவர். கடைசியில் அபி இவரை சரணடைந்தபின்னரே பிழைக்க வைத்தார்.
இவரே எழுதி இவரே இயக்குவதால் அபி அடையும் கொடுமை சொல்லிமாளாது.
வெங்கட்தான் நிறுத்தியதாக கூட ஒரு வதந்தி தல...
கல்யாணம் நின்னதால் ஒரு போஸ்ட் போட்டுட்டீங்கல்ல,,,,,
தல,
//வெங்கட்தான் நிறுத்தியதாக கூட ஒரு வதந்தி தல//
இப்படி பல விஷயங்கள தெரிஞ்சு வச்சு இருக்குறதால தான் உங்கள நாங்க தல என்று சொல்லுறோம்.
வாழ்க தல. வளர்க அவர் சீரியல் நாலேட்ஜ்.
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
//டோண்டு சார் கோவிச்சுக்க மாட்டேளே//
இதுக்கெல்லாம் யாராவது கோவிச்சுவாங்களா? நிற்க.
நான் ஏற்கனவேயே சொன்னதைத்தான் திரும்பச் சொல்லுவேன். எங்கே பிராமணன் சீரியலையும் பாருங்கள், கோலங்களையும் பாருங்கள். சோவின் சீரியலில் மிகைபடுத்தப்பட்ட, மெலோட்ராமா காட்சி என ஒன்று கூட பார்க்க முடியாது. அதன் பிளஸ் பாயிண்டே சோவும் அவர் நண்பரும் சீன்களுக்கு நடுவில் வரும் காட்சிகளே. ரொம்பவுமே நெருக்கமாகப் பின்னப்பட்ட திரைக்கதை. கண்டிப்பாகவே மற்ற மெகாசீரியல்கள் இதன் கால்தூசுக்கும் சமமாகாது என்பதைக் கூறவும் வேண்டுமோ?
எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சாரி..பாஸூ நான் கோல்ங்கள் பார்ப்பதில்லை..(ஆன்லி கனாகானும் காலங்கள்)..
:)))
என்னது காந்தி செத்துட்டாரா?
டோண்டு சார், உங்க அலும்புக்கு ஒரு எல்லையே இல்லையா ? சகிக்கல உங்க மார்க்கெட்டிங் !
டோண்டு சார்,
//மற்ற மெகாசீரியல்கள் இதன் கால்தூசுக்கும் சமமாகாது என்பதைக் கூறவும் வேண்டுமோ?// சார், இந்த பதிவே ஒரு காமெடிக்காக தான் எழுதப் பட்டது. நீங்கள் அதை சீரியஸ் ஆகா எடுத்துக் கொண்டீர்கள் போல இருக்கிறதே?
நீங்கள் இந்த பதிவில் உள்ள மற்ற பதிவுகளை படித்து பார்த்தீர்களே ஆனால் ஆமொதிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இருந்தாலும் உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.
ஒரு நாள் சீரியல் பாத்ததுக்கே எனக்கு தாங்கல. மத்தவங்க எல்லாம் எப்படி தான் இதப் போயி ஐந்து ஆறு வருடமாக பாகுரான்களோ?
கொடுமை ஐயா கொடுமை.
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
வழிப் போக்கன் சார்,
//சாரி..பாஸூ நான் கோல்ங்கள் பார்ப்பதில்லை..(ஆன்லி கனாகானும் காலங்கள்)//
நான் அதைக்கூட பாக்குறது இல்லை.
நமக்கு எப்பவுமே ஸ்போர்ட்ஸ், நியூஸ், மற்றும் மூவீஸ் சேனல் தான் சரிப் பட்டு வரும்.
நேத்து ஒரு நாள் தெரியாத்தனமாக பாத்துட்டேன்.
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்
டக்ளஸ் அண்ணே,
அப்ப நீங்க ஓனர் இல்லையா? பய புள்ள, பொய் சொல்லி இருக்கான்.
//என்னது காந்தி செத்துட்டாரா?// அட்டகாசம் தலை.
இத, இத தான் நான் எதிர் பார்த்தேன்.
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்
மணிகண்டன் சார்,
//டோண்டு சார், உங்க அலும்புக்கு ஒரு எல்லையே இல்லையா ? சகிக்கல உங்க மார்க்கெட்டிங்//
டோண்டு சார் மேல தப்பு இல்ல. நான் தான் அவர் பிளாக்கில் பொய் கமெண்ட் போட்டு அவரை இங்கு அழைத்தேன்.
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்
நல்ல சீரியல்கள் வரவில்லை என புலம்புகிறோம். எப்போதாவது அத்தி பூத்தாற்போல எங்கே பிராமணன் போன்ற நல்ல சீரியல்கள் வரும்போது கண்களை மூடிக் கொள்கிறோம்.
நிற்க. கோலங்கள் சீரியலின் கான்சப்ட் நல்லதுதான். எல்லாவித எதிர்ப்புகளையும் மீறி ஒரு பெண் வளர்வது என்பது மனதுக்கு நிறைவாகவே இருக்கிறது. அதுவும் டி.ஆர்.பி. ரேட்டிங் என்பது இரக்கமே இல்லாத ஒரு அரக்கன். ஒரு நிமிடத்தில் அது ஒரு சீரியலை குப்பைத் தொட்டியில் தள்ளிவிடும். இந்த சீரியல் இந்த விஷயம் பொருத்து விடாது மேல் நிலையில் இருப்பது எல்லோராலும் முடியும் சாத்தியம் அல்ல.
என்ன அந்த கான்சப்டுக்கு மட்டும் உண்மையாக இல்லாது பல சம்பந்தமில்லாத விஷயங்களையும் கொண்டு வருவதால் சீரியல் நீர்த்து போகிறது.
//ஸ்போர்ட்ஸ், நியூஸ், மற்றும் மூவீஸ் சேனல் தான் சரிப்பட்டு வரும்.//
அங்கு மட்டும் என்ன வாழ்கிறதாம்? மூவீஸ் சேனலில் காவியங்களையா காட்டுகிறார்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
தல அடுத்து என்ன ஆச்சுங்க தல...
நாங்க கூட்டுக்கு வரதுக்குள்ள சன் டி.வி.ல சீரியல முடிச்சிடறாங்க....
வீட்டில இதெல்லாம் கேட்க ஈகோ இடம் தரமாட்டேங்குது தல....
அட.. தேவுடா.. இதைத்தான்.. ‘அபியோட கல்யாணம் நின்னு போச்சி’ன்னு, ஊருக்கு போயிருந்தப்ப... வந்து பின்னூட்டம் போட்டீங்களா..?? :)
இன்னைக்கு வரைக்கும்.. என்னன்னு தெரியாம மண்டை காஞ்சி திருஞ்சிட்டு இருந்தேன்..! :) :) :)
கர்..புர்... கர்.. புர்......!!!!!!!!!