பாலிமர் டி.வி - புதிய தமிழ் சாட்டிலைட் தொலைக்காட்சி சேனல்

வெடிகுண்டு வெங்கட்டின் சிறப்பு செய்தியாகிய இந்த பதிவினை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

மக்களே,

நீண்ட நெடு நாட்களாக ஆழ்தூக்கத்தில் இருந்த நான் எழுந்து வந்து விட்டேன். இனிமேல் என்னிடம் இருந்து மொக்கை பதிவுகளை நீங்கள் அடிக்கடி எதிர்பார்க்கலாம். இனிமேல் அறிவிப்புகள், விழாக்கள், சினிமா விமர்சனங்கள், சுவையான சங்கதிகள் என்று இந்த வலை ரோஜா சிறப்பாக இயங்கும் என்ற தகவலை உங்களுக்கு தெரிவிப்பதில் நான் பெறுமகிழ்ச்சி அடைகிறேன். முதன்முதலாக இதோ ஒரு விழா பற்றிய பதிவு. இந்த விழ ஒரு புதிய சாட்டிலைட் சேனல் துவக்க விழா ஆகும்.

தமிழில் ஏற்கனவே பல சேனல்கள் இருக்கின்றன. அவற்றில் குறிப்பிட்டு சொல்லும்படியாக ஒன்றிரண்டு சேனல்களே இயங்குகின்றன. இருபத்தி இரண்டு சேனல்கள் இருக்கும் இடத்தில் நான் என் ஒன்றிரண்டு சேனல் பற்றியே பேசவேண்டும் என்று கூட நீங்கள் கேட்கலாம். வாசகர்களையும், பார்ப்பவர்களையும் அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லாத எந்த ஒரு ஊடகமும் அவர்களுக்கு தீமையே செய்கின்றன என்பது தவிர்க்க இயலாத உண்மை. ஆங்கிலத்தில் If you are Not part of the Solution, Then You Are the Problem என்று ஒரு சொல்லாடல் உண்டு. இதனையே ரிக் வேதத்தில் கூறி இருப்பார்கள். இங்குள்ள பெரும்பாலான தொலைக்காட்சி ஊடகங்கள் நம்மை மன அளவிலும், சமூக அளவிலும் வளர விடாமல் ஒரு அடிமைகளாகவே வைத்து இருக்கின்றன.

இத்தகைய சூழ்நிலையில் தான் இந்த புதிய சாட்டிலைட் சேனல் உதயமாகிறது. பெரும்பாலான நிகழ்ச்சிகள் புதுமையாக இருக்கும் என்று உறுதி அளித்து வரும் புதன் அன்று முதல் தொலைக் காட்சி இயங்க ஆரம்பிக்கும் என்று அந்த நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிறுவனத்தினரை பற்றி தெரியாதவர்களுக்கு இந்த பத்தி: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் (சேலம், கோவை, ஈரோடு இன்னும் பிற) மக்கள் அதிகமாக பார்க்கும் சேனல் எது என்று ஆய்வு செய்தால் வழக்கம் போல சண் தொலைக்காட்சி தான் முதலில் வரும். ஆனால் இரண்டாவது இடத்தில் நீங்கள் நினைப்பது போல கே. டி.வியோ, கலைஞட் தொலைக்காட்சியோ, விஜய் டி.வியோ அல்லது ஜெயா டி.வியோ இல்லை. இவற்றிற்கு பதிலாக இரண்டாவது இடத்தில் வரும் சேனல் ஒரு கேபிள் தொலைக்காட்சி சேனல் ஆகும். அந்த சேனலின் பெயர் தான் பாலிமர். இதுநாள் வரை கேபிள் தொலைக் காட்சியாக மட்டுமே இயங்கி வந்த இவர்கள் தமிழ நாட்டின் முன்னணி தொலைக் காட்சி ஊடக நிபுணர்களை கொண்டு ஆரம்பிக்கும் சேனல் இது.

Polimer

புதிதாக ஒன்று என்றால் நம்முடைய பத்திரிகை காரர்களுக்கு மூக்கில் வேர்த்து விடுமே? இதில் கழுகுகள் யாருக்குm சளைத்தவர் இல்லை என்பதை இந்த தகவல் மூலம் தெரிவிக்கிறார். இதனால் இதுவும் ஒரு அரசியல் சார்ந்த சேனலோ என்ற எண்ணம் மேலிட்டதால் அந்த நிறுவனத்தினரிடமும் பலரிடமும் விசாரித்ததில் அரசியல் சார்பு அற்ற நடுநிலைமை நிறுவனம் இது என்ற தகவல் கிடைத்தது.

d

மக்களே, இந்த பதிவு இவ்வள்வு தான். அடுத்த பதிவில் விரைவில் சந்திப்போம்.

Comments

3 Responses to "பாலிமர் டி.வி - புதிய தமிழ் சாட்டிலைட் தொலைக்காட்சி சேனல்"

பாலா said... September 20, 2009 at 7:46 PM

வாங்க.. வாங்க.. வெல்கம் பேக்! :) :)

இந்த டி.வி மேட்டரை கிங்’விஷ்வா சொல்லியிருக்கார். நல்லாயிருக்கட்டும்.!

வெடிகுண்டு வெங்கட் said... September 20, 2009 at 8:00 PM

தலைவரே,

வருக வருக.

உங்களுக்கும் என்னை மாதிரியே தமிளிஷ் பிரச்சினை போல தெரிகிறது. என்ன கொடுமை சார் இது?

இந்த இன்விடேஷன் எனக்கு நேற்றுத்தான் கிடைத்தது. உன்னைப் போல் ஒருவன் விமர்சனம் போடலாம் என்று இருந்தேன். ஆனால் இதனை தான் போட முடிந்தது.

கிங் எங்கு போனாரோ என்ன ஆனாரோ? ஒரு தகவலும் இல்லை. ஒரு காமிக்ஸ் தளத்தில் கிடைத்த தகவல் படி அவர் இப்போது இந்தியாவிலேயே இல்லையாம்.

பாலா said... September 20, 2009 at 10:31 PM

ஹும்..! எனக்கு திரும்ப வேலை கிடைச்சப்ப அவர்கிட்ட ஃபோனில் பேசினேன். அதுக்கப்புறம் காண்டாக்ட் இல்லை.

நீங்க சொல்லும் காமிக் தளம் ரஃபீக் ராஜா-வா? இவர் கிட்ட பேச பலமுறை முயன்றும், தல.. போனே அட்டண்ட் பண்ண மாட்டேங்கறார். :) :)

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin