உலகத்தமிழர்கள் தவற விட்ட உண்மை சம்பவம் (கன்னி மற்றும் கண்ணி சம்பவங்களின் முழு உண்மை)

வெடிகுண்டு வெங்கட்டின் சிறப்பு செய்தியாகிய இந்த பதிவினை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

மக்களே,

ரொம்ப அதிசயமாக நேத்து நம்ம ஜெயம் ரவி கால் பண்ணி இருந்தான். சமீப காலமா அவன் கிட்ட இருந்து எந்த ஒரு தொடர்பும் இல்லாததால் நான் கூட அவனை கண்டுக் கொள்ளவே இல்லை. எனக்கு என்ன ஒரு சந்தேகம் என்றால் கொஞ்சம் பாப்புலாரிட்டி வந்துட்டா போதுமே, நண்பனை எல்லாம் மறந்து விடுவதா என்ன? அதனால் தான் தொடர்பு கொள்ளவில்லையோ என்னவோ என்று. ஆனால் அவன் கூட பேசிய பிறகுதான் தெரிந்தது, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று.

அவன் சொன்ன ரெண்டு முக்கியமான விஷயங்களை கீழே கொடுத்துள்ளேன் (அவனுக்கு இதெல்லாம் முக்கியமான விஷயங்கலாம்).

1. நேத்து தேதி 20-09 -2009 அதனால் என்னடா என்று கேட்டால், 20092009 என்று வருகிறதாம், இந்த வருடத்தில் இப்படி ஒரு முறை தான் வருமாம். ?(ஏண்டா, போன வருஷம் கூட 20082008 வந்ததே, நீ அப்ப எண்டா போன் பண்ணல?)

சரி, எப்படி தான் மொக்கை போடப் போறான் என்று நினைத்து, அந்த பாழாப் போன ரெண்டாவது விஷயம் என்னடா என்று கேட்டால், அவன் சொன்னதை கேட்டு என்னுடைய நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது. (நன்றாக கவனிக்கவும், நெஞ்சுதான்)

2. அதாவது, நேத்து, அதாங்க ஞாயிற்றுகிழமை அன்று தமிழ மொழியின் தலைமகனாம் நம்ம கவிஞர் கபாலீஸ்வரன் அவர்கள் எழுதிய கவிதைகளின் ஒலி நாடாக்கள் (நன்றாக கவனிக்கவும், ஒலி நாடாக்கள் தான், வேறு எந்த நாடாவும் இல்லை) வெளியிடப் பட்டனவாம். அந்த சம்பவத்தை அவன் அப்படியே போட்டோ எடுத்து எனக்கு அனுப்பி இருந்ததால் அதனை இங்கே உங்களின் பார்வைக்கு அளிக்கிறேன்.

முதல் போட்டோ ஒரு சேஞ்சுக்கு இருட்டில் எடுக்கப்பட்டது, பயந்து விடாதீர்கள்.

Image(316)
Image(317)
Image(318)

கவிதை தொகுப்புகளின் பெயர்களை நன்றாக கவனிக்கவும்.

1. நீ மனிதன் தானா? (அருகிலேயே நம்ம கவிஞர் கபாலீஸ்வரன் படம் உள்ளதை கவனிக்கவும்)

2. இதயா ஒலி (இதய ஒலி அல்ல, இதயா ஒலிதான்)

3. உன்னை பார்த்து உலகம் சிரிக்கிறது (அருகிலேயே நம்ம கவிஞர் கபாலீஸ்வரன் படம் உள்ளதை கவனிக்கவும்)

4. ஆசையை அலை போலே (ஆசையே அலை போலே அல்ல, ஆசையை அலை போலே தான்)

5. முள்ளில் மலர்ந்த ரோஜா (சொல்ல ஒன்னும் இல்ல, இருந்தாலும் அருகில் ஷகீலா படம்).

இதில் முக்கியமான விஷயம் வெளியீட்டாளர் பெயருக்கு முன்னாள் உள்ள அடைமொழிகள் தான்:

கனவுக்கண்ணி (நன்றாக கவனிக்கவும், கனவுக் கன்னி அல்ல, கண்ணி தான்). இந்த கன்னி என்றால் ஆங்கிலத்தில் TRAP என்று கூட அர்த்தமாம். அதாங்க கண்ணி வெடி என்று சொல்வோமே, அந்த கண்ணி தான் இந்த கண்ணி.

அதுக்கு அப்புறம், உஸ்ஸ்ஸ்ஸ், அப்பாடா முடியல. நீங்களே படிச்சு தெரிஞ்சுகொங்கோ.

Comments

5 Responses to "உலகத்தமிழர்கள் தவற விட்ட உண்மை சம்பவம் (கன்னி மற்றும் கண்ணி சம்பவங்களின் முழு உண்மை)"

ஹாலிவுட் பாலா said... September 22, 2009 at 12:56 AM

ஹய்யோ... முடியல..! :) :) :) :) :)

யாராவது.. அந்த புத்தகங்களை வாங்கி.. பார்சல் அனுப்புங்க..., ப்ளீஸ்!!

‘வெடிகுண்டு’-க்கே கண்ணி வைக்கறாங்களா???
===================

ஜெயம் ’ரவி’ நல்லாயிருக்காரா???

கோவி.கண்ணன் said... September 22, 2009 at 7:22 AM

:)

எப்படியோ தமிழ் வளருது

இராம்/Raam said... September 22, 2009 at 7:26 AM

:))

துளசி கோபால் said... September 22, 2009 at 7:29 AM

நானும் இந்தப் போஸ்டரை நேத்துப் பார்த்தேன்
ஷகீலா அரசியலில் சேர்ந்துட்டாங்கன்னு 'அசால்ட்டா' கடந்துட்டேனே:-)

யாத்ரீகன் said... September 22, 2009 at 11:39 PM

yengirudhu boss idhellam unga kannuku padudhu :-))))))))

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin