நாளைய மனிதன் - அதிசய மனிதன் படங்களை தொடர்ந்து "நானே வருவேன் "

வெடிகுண்டு வெங்கட்டின் சிறப்பு செய்தியாகிய இந்த பதிவினை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மக்களே,

இப்போது வேலு பிரபாகரனின் காதல் கதை என்ற படத்தை எடுத்த வேலு பிரபாகரன அவர்களை கடவுள், புரட்சிக்காரன், காதல் கதை போன்ற புரட்சிகரமான முற்போக்கு (முன் நவீனத்துவம்?) சிந்தனையுள்ள படங்களை இயக்கியவராக மட்டுமே நமக்கு தெரியும். நேற்று எனக்கு வந்த ஒரு அழைப்பிதழை பார்த்த பொது தான் அவரைப் பற்றிய முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக்கவும்.

நான் சிறு வயதில் ரசித்து பார்த்த படங்களில் நாளைய மனிதன், அதிசய மனிதன், ஜென்ம நட்சத்திரம் போன்ற படங்கள் அடங்கும். அதிலும் சாகாத ஒரு மனிதனை பற்றி சிறு வயதில் சிலாகித்து பயந்த காலங்களும் உண்டு. நாம் அதிஷா இந்த படங்களுக்கு ரசிகர் மன்றமே ஆரம்பித்தாலும் ஆரம்பிப்பார் போல. அந்த அளவுக்கு இந்த படங்களுக்கு ஒரு சிறப்பிடம் உண்டு. இப்போது இந்த "நாளைய மனிதன் - அதிசய மனிதன்" படங்களை தொடர்ந்து அடுத்து ஒரு படம் இதே வரிசையில் வரப் போகிறது. இதோ அந்தப் படத்தின் விவரங்கள்.



முதல் படமாகிய நாளைய மனிதனில் இளைய திலகம் பிரபு ஒரு ஆங்கில காப் போன்ற ஒரு போலீஸ வேடமேற்று நடித்து இருப்பார். அதிலும் அந்த கிளைமாக்ஸ் காட்சி இப்போதும் கண்முன்னே நிற்கும். இரண்டாவது பாகத்தில் நிழல்கள் ரவி அதைப் போலவே போலீஸ வேடத்தில் வருவார். இது போன்ற படங்களில் எல்லாமே வருவது போல கிளைமாக்சில் அந்த வில்லன் சாவது போல தெரியும், ஆனாலும் உறுதியாக சொல்ல முடியாது. இப்போது இந்த புதிய படத்தில் பாபு கணேஷ் அவர்கள் பிரபு, நிழல்கள் ரவி போல லீட் கதாபாத்திரம் ஆக நடிக்கிறார் போல.



ஆனாலும் ஸ்ரீமன் கையில் சிவப்பு பெயின்ட் அடித்த அந்த கோடாரியை வைத்து இருப்பதை பார்க்கும் போது அவரும் ஹீரோவாக இருப்பாரோ என்ற சந்தேகம் வருகிறது. சின்னி ஜெயந்த் வேறு இருக்கிறார். என்ன நடக்குமோ என்று இப்போதே ஒரு பயம் கிளம்பி விட்டதை தவிர்க்க முடியவில்லை.

அந்த படங்களில் எல்லாம் அந்த நாளைய மனிதனாக நடித்தவர் நம்ம அஜய் ரத்னம். அவரை காணவில்லை போல. அதனால் ஒரு புதிய முகம் காட்டாத வில்லன் நடிக்கிறார் என்று நாம் வைத்துக் கொள்ளலாம்.

Comments

2 Responses to "நாளைய மனிதன் - அதிசய மனிதன் படங்களை தொடர்ந்து "நானே வருவேன் ""

வேலுப்பிள்ளை said... October 3, 2009 at 1:08 PM

காந்தி ஜெயந்தி அன்னிக்கு ஒரு வன்முறை சார்ந்த படப்பூஜையா? என்ன கொடுமை சார் இது?

satish said... October 5, 2009 at 3:21 AM

i think prabhu is the zombie in the second part not ajay rathnam...prabhu was hero in first part...

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin