மக்களே,
ஏற்கனவே ஜி தமிழ் பற்றிய ஒரு சூடான பதிவை இட்டு இருந்தோம். அதைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும். ஏற்கனவே படித்தவர்கள் தொடரலாம். சூப்பர் ஹிட் படங்களை நம்பர் ஒன் குழுமத்திற்கு விற்று விட்ட ஜி தமிழ் நிர்வாகம், தற்போது இருக்கும் சுமாரான படங்களான அரசாங்கம் (கேப்டனின் அரசாங்கம்?), வல்லமை தாராயோ, ராசையா போன்ற படங்களையும் கூட வேறு சில தொலைக்காட்சி நிர்வாகத்தினரிடம் கொடுத்து விட்டதாக கேள்வி.
எதற்காக இந்த விஷயம் சொல்ல வருகிறேன் என்றால், ஒரு பொழுது போக்கு தொலைக் காட்சியில் படங்களோ (கலைஞர் டிவி), சீரியல்களோ (சன் டிவி), அல்லது நடைமுறை நிகழ்ச்சிகளோ (விஜய் டிவி) முன்னணியில் இருந்தால் அது அந்த சேனலுக்கு பெருமை. மற்ற சேனல்களாகிய ஜெயா டிவி (ஜாக்பாட், எங்கே பிராமிணன்) ராஜ் டிவி (ஸ்ரீ கிருஷ்ணா) என்று சில பல நிகழ்ச்சிகளை தங்கள் கைவசம் வைத்து உள்ளன. அவ்வளவு ஏன்? மெகா டீவியில் கூட கருப்பு வெள்ளை பாடல்களை பற்றிய ஒரு காலை வேலை நிகழ்ச்சி சிறப்பாக இருக்கின்றது.
ஆனால், ஒரு தேசிய சேனலில், அதுவும் கோடிக்கணக்கில் செலவு செய்ய தயங்காத ஒரு சேனலில் ஒரு சமையல் நிகழ்ச்சி தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறது என்றால் அது அந்த புரோகிராமை பற்றிய பெருமை அல்ல, அந்த சேனலில் வேறு சரக்கு இல்லை என்பதை காட்டும் ஒரு கண்ணாடி. ஆம், தொடர்ந்து பல வாரங்களாக "அஞ்சறைப் பெட்டி" என்ற ஒரு சமையல் குறிப்பு நிகழ்ச்சியே ஜி தமிழ் தொலைக்காட்சியில் முதன்மை புரோகிராமாக இருந்து வருவது அந்த நிர்வாகத்தினரை சிந்தனையில் ஆழ்த்தி உள்ளது.
அதுவும் இல்லாமல் செய்திகளை தவிர்த்து வேறு எந்த நிகழ்வுகளையும் மக்கள் ரசிக்காததால் (அஞ்சறைப்பெட்டியும் செய்திகளும் தவிர்த்து என்று வாசிக்கவும்) எதற்கு இத்தனை செலவு செய்து மற்ற நிகழ்ச்சிகளை செய்ய வேண்டும் என்று நிர்வாகம் யோசிக்க ஆரம்பித்து விட்டது.
முதலில் முழுவது மூடிவிடலாமா என்று கூட யோசித்தார்களாம் (இந்த தகவல் ஊர்ஜிதப்படுத்தப்படாத ஒன்று - தவறாகவும் இருக்கலாம்), பின்னர் அவ்வாறு செய்தால் அது சகோதரர்களின் வெற்றி என்பது போல ஆகிவிடும் என்பதால் சரி,முழுநேர செய்தி சேனலாக மாற்றி விடும் முடிவில் நிர்வாகம் இருப்பதாகவும் அதில் பணி புரியும் புரோகிராம் மேனேஜர்களுக்கு ஒரு மாத கெடு அளிக்கப் பட்டு இருப்பதாகவும் இன்னுமொரு ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்.
இந்த ஒரு மாதத்தில் புரோகிராம் ரேட்டிங்கில் மாற்றங்கள் வந்தால் முழு நேர பொழுதுபோக்கு தொலைக்காட்சியாக தொடருமாம்; இல்லை எனில், முழு நேர செய்தி சேனலாக தொடருமாம்.
என்ன கொடுமை சார் இது?
ஏதாவது ஒரு தேசிய கட்சி அல்லது மாநில கட்சிக்கு ஸ்பாண்சர் செய்யலாமே..,