அஜித்துடன் மோதும் விஜய் - குடியரசு தின கொண்டாட்டங்கள் - சின்னத்திரை படங்கள்

வெடிகுண்டு வெங்கட்டின் சிறப்பு செய்தியாகிய இந்த பதிவினை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

மக்களே,

இளைய தளபதி  மற்றும் தல படங்கள் ஒரு சேர திரைக்கு வந்த பல வருடங்கள் ஆகி விட்டன. எனக்கு தெரிந்தவரையில் ஒரு மூன்று முறை இப்படி நிகழ்ந்துள்ளது (அதாவது இந்த பட்டங்கள் இவர்களுக்கு கொடுக்கப்பட்டவுடன்). ஆனால் சமீப காலங்களில் இவர்கள் இருவரின் படங்கள் ஒருங்கே வருவதில்லை. அந்த குறையை சின்னத்திரை இப்போது தீர்த்து வைக்கிறது. ஆம், இந்த குடியரசு தினம் இந்த இருவரின் மோதலையும் நாம் காணலாம்.

 

Kalaignar TV Aegan Kalaignar TV Pasanga

இந்த முறை கலைஞர் டிவியும் சன் டிவியும் இவர்களை மோதவிட்டு வசூல் பார்க்கப் போகிறார்கள். ஆம், இளைய தளபதியின் அழகிய தமிழ் மகனும் தல'யின் ஏகனும் நேருக்கு நேர் மோதவிருக்கிரார்கள். இந்த இரண்டு படங்களுமே சரியாக ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், சின்னத்திரையில் நல்ல வசூல் பார்க்கலாம் என்பது இந்த தொலைக்கட்சியினரின் கணிப்பு.

Sun TV ATM

ஆக மொத்தம் இவர்களின் திரைப்படங்களை பாருங்கள், குடியரசை கொண்டாடுங்கள்.

Comments

0 Responses to "அஜித்துடன் மோதும் விஜய் - குடியரசு தின கொண்டாட்டங்கள் - சின்னத்திரை படங்கள்"

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin