கிரிக்கெட் கேப்டன் தோனி ஆரம்பித்து வைக்கும் நடிகர் விஜயகாந்த்தின் கேப்டன் டிவி 14th April 2010

வெடிகுண்டு வெங்கட்டின் சிறப்பு செய்தியாகிய இந்த பதிவினை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

நடிகர் விஜயகாந்த் அவர்கள் ஒரு தொலைகாட்சி சேனலை ஆரம்பிக்கப்போகிறார் என்பது ஊரறிந்த விஷயம். அதனைப் பற்றி நாம் கூறப்போவதில்லை. நாம் சொல்லப்போவது ஒரு ஸ்கூப் செய்தி. அந்த செய்தியை தெரிந்துகொள்ளும் முன் இதுவரை நடந்தது என்ன என்பதை சற்று நினைவு கூறுங்கள்:

இரண்டு மாதங்களுக்கு முன்பு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தங்களுடைய கட்சி தொண்டர்களுக்காக ஒரு தொலைக்காட்சி சேனலை ஆரம்பிக்க முடிவெடுத்து அதன் சின்னத்தையும் வெளியிட்டார். பின்னர் அந்த தொலைக்காட்சி தன்னுடைய நிகழ்சிகளை ஏப்ரல் மாதம் பதினான்காம் நாள் முதல் ஆரம்பிக்கும் என்று கூறப்பட்டது.

vijayakanth unwiling captain-tv logo DSC_0075 DSC_0062

வழக்கமாக தன்னுடைய படங்களில் மட்டுமே அரசியல் மற்றும் பன்ச் டையலாக்குகளை பேசி வந்த கேப்டன் இனிமேல் தன்னுடைய தொலைக்காட்சி சேனலிலும் இதுபோன்ற வசனங்களை அடிக்கடி பேசுவார் என்பதற்கு அவரின் ஆரம்ப நாள் விழாவின் சில வசனங்களே சான்று:

  • நான்காவது தூணின் மூன்றாவது கண் - கேப்டன் டிவி (The 3rd eye of the Fourth estate)
  • உள்ளது உள்ளபடி - இனி கேப்டன் டிவியில் மட்டுமே (Actuals – As it is : Only in Captain TV)

இதனிடையில் மீடியா துறையில் இருக்கும் என் நண்பர்கள் சிலரிடம் நான் விசாரிக்கையில் இதுவரையில் (சேனல் ஆரம்பிக்க இன்னும் மூன்று வாரங்களே பாக்கி இருக்கும் போது) அந்த சேனலில் பெரிய ஆட்களை நியமிக்கவில்லை என்றே சொன்னார்கள். அதாவது ஒரு சேனல் ஆரம்பிக்கும்போது பொதுவாக மற்ற சேனல்களில் இருக்கும் முக்கியமான நபர்களை போச் செய்வார்கள். இதற்க்கு சிறந்த உதாரணம் - கலைஞர் டிவி. அவர்கள் ஆரம்பித்த போது அனைத்து ஆட்களையும் சன் டிவியில் இருந்தே எடுத்தார்கள்.

ஆனால் கேப்டன் டிவியில் இதுவரை அந்த மாதிரி யாரையும் வேலைக்கு எடுத்த மாதிரியே தெரியவில்லை. திரு ஹெமாத்த்ரி என்பவர் தான் அங்கு நிகழ்ச்சிகளின் முதன்மை மேலாளராம். கேப்டனின் மச்சான் சுதீஷ் தான் CEO.

  • யாரோ ஒருவர் வசந்த் டிவியில் இருந்து விளம்பர துறைக்கு பொறுபேற்க இருப்பதாக தகவல். இது ஏப்ரலில் நடக்குமாம்.
  • இதுவரையில் கலைஞர் டிவியில் இருந்த ஒருவர் (அதாவது மானாட மயிலாட பைனல்ஸ் வரை) கேப்டன் டிவியின் ப்ரோக்ராம் மேனஜராகவும் சேர இருப்பதாக பேச்சு.
  • அதைப்போலவே பாலிமர் டிவியில் இருந்து ஒருவர் கேமரா டிபார்ட்மென்டுக்கும் சேர இருப்பதாகவும் கூட உபரி தகவல். 

RAJINI_WITH_FANS_14_20962f

kamal

ms-dhoni

இதெல்லாம் இப்படி இருக்கையில் கேப்டன் அவர்கள் தன்னுடைய சேனலை துவக்கி வைக்க தன்னுடைய அருமை நண்பர்களாகிய திரைத்துறையினரை கேட்டதாகவும், அதற்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், சூப்பர் நடிகர் கமல்ஹாசன் அவர்களும் ஒப்புக்கொண்டு தலைமையேற்க சம்மதித்தது இருப்பதும் உபரித்தகவல். வழக்கம் போல ஒரு தொலைக்காட்சி சேனலின் ஆரம்ப நிகழ்ச்சிக்கு இரண்டு முன்னணி நடிகர்கள் போகிறார்கள். இதில் என்னடா ஸ்கூப் நியூஸ் என்றா கேட்கிறீர்கள்?  இந்த இரண்டு நடிகர்கள் சென்றாலும்கூட அந்த சேனலை துவக்கி வைக்கப்போவது என்னவோ இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிதான். ஆம், (Acting) கேப்டன் சேனலை (Cricket) கேப்டன் துவக்கி வைக்கிறார். என்ன ஒரு பொருத்தம் பாருங்கள்?

உங்களுக்கு சந்தேகம் எனில் ஐ.பி.எல் போட்டிகளின் அட்டவனையை பாருங்கள் - ஏப்ரல் பதினான்காம் தேதி தோனி சென்னையில் இருப்பதும் அன்று அவர் ப்ரீயாக இருப்பதும் தெரிய வரும். இந்த செய்தியை இதற்க்கு முன்பு யாரும் கொடுத்து இருக்க வாய்ப்பே இல்லை. வெடிகுண்டு வெங்கட்டின் ஸ்கூப் நியூஸ் இது.

Tue Apr 13 - 14:30 GMT | 20:00 local - 20:00 IST : 48th match - Chennai Super Kings v Kolkata Knight Riders
MA Chidambaram Stadium, Chepauk, Chennai
Wed Apr 14 - 14:30 GMT | 20:00 local - 20:00 IST: 49th match - Rajasthan Royals v Royal Challengers Bangalore
Sawai Mansingh Stadium, Jaipur
Thu Apr 15 - 14:30 GMT | 20:IST: 50th match - Chennai Super Kings v Delhi Daredevils 00 local - 20:00
MA Chidambaram Stadium, Chepauk, Chennai

IPL – 3 Schedule: Cricinfo.

கேப்டன் டிவி துவக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க இருக்கின்றது. மாலை ஐந்து மணிமுதல் நடைபெறும் இந்த துவக்க விழா நிகழ்ச்சியை கேப்டன் டிவியில் நேரலை (அதாங்க லைவ்) தொகுப்பாக வழங்குகிறார்கள். அதுமட்டுமின்றி அன்று நடைபெறும் நிகச்சிகளை எல்லாம் வழங்குபவர்கள் (Day Branding விளம்பரதாரர்கள்) ஆக ஒரு முன்னணி  செல்போன் சேவை நிறுவனம் முன்வந்துள்ளது.

அதுமட்டுமின்றி அன்று முதல் பத்து செகண்ட் விளம்பரம் அந்த சேனலில் ருபாய் பதினெட்டு ஆயிரமாம் (10 Sec’s Spot = Rs 18, 000/-). இதுகூட ஒரு வகையில் ஒரு சாதனையே. ஏனெனில் சன் டிவி தவிர்த்து வேறு எந்த சேனலும் இந்த விலைக்கு விளம்பரங்களை விற்பது கிடையாது. சொன்னபடி நடத்தினால் கேப்டன் ஜெயிப்பார்.

Comments

10 Responses to "கிரிக்கெட் கேப்டன் தோனி ஆரம்பித்து வைக்கும் நடிகர் விஜயகாந்த்தின் கேப்டன் டிவி 14th April 2010"

வெடிகுண்டு வெங்கட் said... March 22, 2010 at 9:32 PM

test.
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said... March 22, 2010 at 9:38 PM

தகவலுக்கு மிக்க நன்றிகள் வெங்கட்..!

வெடிகுண்டு வெங்கட் said... March 22, 2010 at 9:45 PM

நன்றி உண்மை தமிழன் சார்.

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்
கிரிக்கெட் கேப்டன் தோனி ஆரம்பித்து வைக்கும் நடிகர் விஜயகாந்த்தின் கேப்டன் டிவி

SUREஷ் (பழனியிலிருந்து) said... March 23, 2010 at 12:25 AM

//அதற்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், சூப்பர் நடிகர் கமல்ஹாசன் அவர்களும் ஒப்புக்கொண்டு தலைமையேற்க சம்மதித்தது இருப்பதும் உபரித்தகவல்.//


we will wait

will wait

wait

it

t

அவர் பாணியிலேயே படிங்க தல

அக்பர் said... March 23, 2010 at 1:01 AM

ஓப்பனிங் நல்லாத்தான் இருக்கு. பினிசிங்கும் நல்லாயிருந்தா நல்லாயிருக்கும். (ரொம்ப குழப்பிட்டேனோ)

ஜெட்லி said... March 23, 2010 at 10:00 PM

உண்மையா இது....எதுவும் காமெடி பண்ணலையே...

வெடிகுண்டு வெங்கட் said... March 25, 2010 at 10:55 PM

//அவர் பாணியிலேயே படிங்க தல//

ஒக்கே தல.

வருகைக்கு நன்றி தல.

வெடிகுண்டு வெங்கட் said... March 25, 2010 at 10:56 PM

//ஓப்பனிங் நல்லாத்தான் இருக்கு. பினிசிங்கும் நல்லாயிருந்தா நல்லாயிருக்கும். (ரொம்ப குழப்பிட்டேனோ)//

நன்றி அக்பர் பாய். குழப்பவில்லை. தெளிவாகத்தான் இருக்கிறேன். நன்றி

வெடிகுண்டு வெங்கட் said... March 25, 2010 at 10:57 PM

//உண்மையா இது....எதுவும் காமெடி பண்ணலையே..//

இல்லை தல. நேற்றைய ஜூனியர் விகடனில் கூட நம்ம செய்தியை தான் சொல்லி இருக்கிறார்கள்.

Anonymous said... March 29, 2010 at 3:53 PM

ini dhoni avlothana!!! paavam dhoni ini comedy captain aagaporaru.

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin