கவுண்டமணி நலமுடன் இருக்கிறார் - வதந்திகளை நம்பவேண்டாம்

வெடிகுண்டு வெங்கட்டின் சிறப்பு செய்தியாகிய இந்த பதிவினை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

தமிழகத்தின் தலை சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவராக கருதப்படுபவரும், தமிழ் சினிமாவில் மறுபடியும் நகைச்சுவை நடிகர்களுக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்தவரும் ஆகிய திரு கவுண்டமணி அவர்கள் இன்று சென்னையில் இருக்கும் அப்போல்லோ மருத்துவமனையில் இயற்கை எய்தினார் என்று ஒரு தகவல் சென்னை ஊடக மைய்யங்களில் பரபரப்பாக இருந்தது. ஆனால், நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த தகவல் அதனை மறுத்து அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும், இப்போது அவர் நலமுடனே இருப்பதாக தெரிவித்தனர். 

கோயம்புத்தூரில் இருக்கும் கன்னம்பாளயத்தில் 1940 'ஆம் ஆண்டு பிறந்த மணி, தன்னுடைய நாடக நடிப்பினால் பெயர் பெற்ற நடிகராக விளங்கினார். அதில் ஒரு நாடகத்தில் அவர் ஏற்று நடித்த "ஊர் கவுண்டர்" என்ற பாத்திரம் மிகவும் பிரபலம் ஆனதால் அன்றுமுதல் அவரை கவுண்டர் மணி, கவுண்டர் மணி என்றே அழைக்க துவங்கினர். அதுவே பின்னாளில் கவுண்டமணி என்று மருவி வழங்கலாயிற்று. மற்றபடி அவர் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவரில்லை என்பதை உலகம் அறியும்.

நாடக உலகில் இருந்து சினிமா உலகிற்கு தன்னுடைய முப்பத்தி ஆறாவது வயதில் வந்த மணி, முதன்முதலில் (?!?) நடித்த படம் அன்னக்கிளி ஆகும். தன்னுடைய நாலாவது படத்திலேயே அவரின் தனித்துவமான நடிப்புத்திறமை உலகிற்கு வெளிப்படுத்தினார். ஆம், அந்தப்படம் பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே ஆகும். அதில் ஒரு வசனம் இன்றளவும் பேசப்படுகிறது: "பத்த வச்சுட்டியே பரட்டை" என்று சொன்னால் மக்கள் இன்றளவும் நினைவு கொள்வார்கள்.

அதன் பின்னர் படிப்படியாக வெற்றிப்படிகளில் ஏற ஆரம்பித்த மணி, பின்னர் தமிழ்ப்படங்களில் ஒரு முக்கிய சக்தியாகவே மாற ஆரம்பித்து விட்டார். அவரது வாழைப்பழ காமெடி மறக்க முடியாத ஒரு அம்சமாக மாறிவிட்டது.

 

நெடுங்காலம் கழித்து அவர் இப்போதுதான் சரத்குமாருடன் ஜக்குபாய் படத்தில் நடித்தார். அந்த படமும் சிறப்பாகவே பேசப்பட்டது. இனிமேல் அவர் பல படங்களில் நடித்து நூறாண்டுகள் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

கவுண்டமணி நடித்த படங்களின் விவரம் – Official Site.

Comments

2 Responses to "கவுண்டமணி நலமுடன் இருக்கிறார் - வதந்திகளை நம்பவேண்டாம்"

SUREஷ்(பழனியிலிருந்து) said... March 18, 2010 at 2:34 PM

//அந்தப்படம் பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே ஆகும். //

அப்படி என்றால் அவர் ரஜினி கமலுக்கெல்லாம் கொஞ்சம்தான் சீனியரா தல..,

வெடிகுண்டு வெங்கட் said... March 18, 2010 at 2:37 PM

ஆம்மாம் தல.

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin