உளவாளியும், கத்துக்குட்டியும் From Paris With Love 2010 - சினிமா விமர்சனம்

வெடிகுண்டு வெங்கட்டின் சிறப்பு செய்தியாகிய இந்த பதிவினை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

மக்களே,

நம்முடைய சென்ற ஒலக சினிமா விமர்சனம் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து இந்த முறையாவது ஓரளவுக்கு உருப்படியாக எழுதுவோம் என்று அடுத்த பதிவுக்காக எந்த படம் என்று யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது, சரி எவ்வளவு நாள்தான் டிவிடியில் பார்ப்பது, இன்னிக்கு ஒரு நாளாவது தியேட்டரில் சென்று பார்க்கலாம் என்று படங்களை பற்றி ஆராய்ந்தேன்.

universal-soldier-regeneration-postவேன் டேம் நடித்த "யூனிவர்சல் சோல்ஜர்" படத்தின் நான்காம் பாகம் ரிலீஸ் ஆகி இருந்தது. சரி, இந்த படத்தை பார்க்கலாம் என்று சென்றேன். (பல காரணங்கள் - ஹீரோ நம்ம பழைய பேவரிட் Van Damme, படமும் கூட. சண்டை படம் தியேட்டரில் பார்த்து ரொம்ப நாளாச்சு) ஆனால் கடுப்பாகிவிட்டது. ஏன்தான் இந்த படத்திற்கு வந்தேனோ என்று யோசிக்க வைத்த படம் அது. இதில் கொடுமை என்னவென்றால் அங்கிள் மன்னிக்கவும், தாத்தா  வேன் டேம் அடுத்த பாகத்திலும் ஹீரோவாக நடிக்கிறாராம். என்ன கொடுமை சார் இது?

From Paris With Love (2010) ஏன் இந்த படத்தினை பார்த்தேன்? 

முதல் காரணம்: ஏற்கனவே சொன்ன மாதிரி நான் ஒரு ஜான் ட்ரவோல்டா விசிறி. ஆகையால் இந்த படம் என்னை பார்க்க தூண்டியது. அதுவும் நம்ம ஹீரோ வேற முதல் முறையாக மொட்டை அடிச்சு நடிச்சிருக்கார் (பின்னே, 56 வயசாச்சே? ஏதாவது பண்ண வேணாமா?) அப்படி என்னதான் இந்த படத்துல பண்ணி இருக்கார் என்ற ஆவல் மேலிட இந்த படத்திற்கு டிக் அடித்தேன்.

இரண்டாவது காரணம்: லுக் பெஸ்ஸான் - ஆம், இந்த படத்தின் கதை அவருடையது தான். நான் இவர் திரைக்கதை அமைத்த பல படங்களை பார்த்துள்ளேன். அட்டகாசமாக இருக்கும் (டிரான்ஸ்போர்ட்டர் பட வரிசை - மூன்று பாகங்களும், ரிவால்வர், பெண்டிடாஸ், விருதகிரி டேக்கன்) என்று பல படங்கள். அதே சமயம் சமீப வருடங்களாக இவர் இயக்குகிறார் என்றால் ஒரு மைல் தூரம் ஓடிவிடுகிறேன் (புரியல சாமி). நான் சின்னப்பைய்யனாக இருந்த போது எங்க மாமாவுடன் சென்னையில் நடந்த உலகத் திரைப்பட விழாவில் இவர் இயக்கிய நிகிதா படத்தை பார்த்தேன். (அதே ஷோவிற்கு நம்ம பாக்கியராஜ் சார் வந்திருந்தார் என்பதை அடுத்த வருஷம் வந்த ருத்ரா படம் மூலம் தெரிஞ்சு கிட்டேன்).

ஆனால், ஒரு பத்து, 12 வருஷதிர்ற்கு முன்னாடி வந்த பிப்த் எலமன்ட் என்ற படத்தை பார்த்துவிட்டு ஒன்றும் புரியாமல் முழித்ததும் நினைவில் இருக்கிறது (தியேட்டரில் - நோ சப் டைட்டில், நோ ரிபீட், நோ விக்கிபீடியா, அப்போது நோ ஹாலிவுட் பாலா). இந்த படதிர்ற்கு இவர் வெறும் திரைக்கதை மட்டும்தான் என்றவுடன் மகிழ்ச்சியுடன் பார்க்க முடிவு செய்தேன்.

மூன்றாவது காரணம்: இந்த படத்தின் விளம்பரம். ஆம், சில வேளைகளில் படத்தின் ஸ்டில்களையோ , அல்லது விளம்பர ட்ரெயிலரை பார்த்தோ நாம் செல்வது உண்டு. அதுபோல இந்த படத்தின் டிவிடி கவரில் இருந்த இந்த ஸ்டில் (துப்பாக்கியின் மறுபகுதி ஈபில் டவராக மாறுவது) என்னமோ தெரியல, எனக்கு பிடித்துவிட்டது.

படம் பற்றிய மேலதிக விவரங்கள்:

Poster

இயக்குனர்

Pierre Morel பியர்ரே மாரல்

தயாரிப்பாளர்(கள்)

Luc Besson லுக் பெஸ்ஸான்

விநியோகஸ்தர்கள்

Warner Bros. / லயன்ஸ்கேட்

படம் ரிலீஸ் தேதி

05th Feb 2010 – No Theatrical Release in India

டிவிடி ரிலீஸ் தேதி

June 2010 (India Also) + Available in RIC Video

நடிகர்கள் 

படத்தின் நீளம்

95 நிமிடங்கள் (Wrongly Mentioned in Wiki)

படமாக்கப்பட்ட மொழி

ஆங்கிலம்

படமாக்கப்பட்ட நாடு 

France

பொது அபிப்பிராயம் 

No Profit, No Loss – ஆக மொத்தம் Time Pass

வெடிகுண்டின் கருத்து

டைம் பாஸ், சண்டை பிரியர்களுக்கு விருந்து

 ஸ்டார் ரேட்டிங் 

*****  (2/5)

பட வகை

தீவிரவாதம், சண்டை, சேசிங், த்ரில்லர் டைப்

MPAA பட ரேட்டிங்:

   R

அதிகாரபூர்வ இணையதளம்

http://www.frompariswithlovefilm.com/

 

 

படத்தின் கதை:

Caroline Presenting the ring JT with Mrs Jones JT Finding out Drugs

ஜோனதன் மைர்ஸ்  பிரான்சில் இருக்கும் அமெரிக்க தூதரின் செயலாளர். அவருக்கு வலது கரம் போல. அவருடன் செஸ் ஆடுவது முதல் அவரது பல அலுவல்களை திறம்பட முடிப்பது இவரது பணி. ஒரு அலுவலகப் பணியாளராக இல்லாமல் ஒரு உளவாளியாக செயல்படவேண்டும் என்பது இவரது நெடுநாள் அவா. அதற்காக இவர் காத்திருக்கிறார். அதே சமயம் அலுவலகப்பணிகளை சிறப்பாக செய்கிறார்.

கசியா ஸ்முட்னியாக் இவரது காதலியாக வருகிறார். இவர் ஒரு டிசைனராக ஆரம்பத்தில் அசத்துகிறார். முதல் காட்சியிலேயே ஜீன்சை கழட்டிவிட்டு ஒரு டாப்ஸில் வந்து நம் மனதை தொடுகிறார். இந்த காட்சிகள் எல்லாம் பின்னர் விளக்கமளிக்கும்  காட்சிகளாக மாறுவது சிறப்பம்சம். இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்ளாமல் ஒன்றாக வாழ்கிறார்கள் (நம்ம சூர்யா - நிலா மாதிரி). கதை ஆரம்பிக்கும் முதல் நாளில் இவர் தன்னுடைய தந்தையின் மோதிரத்தை ஜானுக்கு கொடுத்து அதனை எப்போதும் கழட்டவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறார். அப்போது ஜானுக்கு வரும் ஒரு போன் மூலமாக கதை ஆரம்பம் ஆகிறது.

Translation JRM With Kooja Varolyn Shooting JRM

போனில் பேசுபவர் ஜானிர்க்கு உளவுத்துறையில் என்ட்ரி கொடுத்திருக்கும் மர்ம தலைவர் (இவரை கடைசி வரை யார் என்று காட்டவே மாட்டார்கள்). இவர் ஜானுக்கு அடுத்தபடியாக ஒரு புது அசைன்மென்ட் கொடுக்கிறார். அதாவது அமெரிக்க உளவாளி ஜான் ட்ரவோல்டா பாரிஸ் வந்திருப்பதாகவும் அவரை விமான நிலைய அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தி இருப்பதாகவும், அவரை மீட்டு வந்து அவருக்கு உதவியாக இருப்பதே உன்னுடைய வேலை, இதில் நீ வெற்றிபெற்றுவிட்டால், உன்னை முழுநேர உளவாளியாக்குகிறேன் என்றும் உறுதியளிக்கிறார்.

அதன்படி ஜான் விமான நிலையம் விரைந்து சென்று ஜான் ட்ரவோல்டாஐ அங்கிருந்து மீட்கிறார். பின்னர் இருவரும் சேர்ந்து அதிரடியாக அடுத்த 48 மணி நேரத்தில் இணைந்து செயல்பட்டு தீவிரவாதிகளை முடக்குவதை வேகமாகவும், தெளிவாகவும் சொல்லி இருக்கிறார்கள். படத்தில் பல திருப்புமுனை காட்சிகள் நிறைந்துள்ளன. மறக்காமல் பாருங்கள்.

JT With Rocket Luncher Love, Actually Fire Him

இந்த படத்தில் தோன்றும் நடிகர்களை பற்றி:

JRM 2
Jonathan Meyers*****
  • ஜோனதன் மைர்ஸ்:இவரை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. படம் பார்த்து முடித்த பின்னர் பதிவெழுத இவரைப்பற்றி தேடினால், மிஷன் இம்பாசிபில் படத்தின் மூன்றாம் பாகத்தில் நடித்தவர் என்றெல்லாம் தகவல் உள்ளது. ஞாபகம் இல்லை. இந்த படத்தில் அம்ரேக்க நாட்டின் பிரெஞ்சு தூதரின் செயலாளராக வருகிறார். அந்த அலுவலக வேலைகளை விட்டு விட்டு ஒரு உளவாளியாக வாழ ஆசைப்படுகிறார். அதனால் தான் இந்த கதையே நகர்கிறது. செஸ் விளையாடும் , கண்ணாடி அணிந்த ஒரு துப்பறியும் நிபுணர் என்றால் எனக்கு ரிப் கிர்பி தான் நினைவுக்கு வருகிறார். முன்னாளில் தமிழில் முத்து காமிக்ஸில் இவரது கதைகள் வரும். இவரும் அவரை நினைவு படுத்துகிறார். வசன உச்சரிப்பு ஒக்கே, நடிப்பும்கூட நன்றாகவே வருகிறது. ஆனால் என்னமோ தெரியவில்லை, ஏதோ ஒன்று குறைவதாகவே படுகிறது. அதனால் தான் மனிதர் இன்னமும் செகண்ட் லெவலிலேயே இருக்கிறாரோ என்னவோ?

படத்தில் இவரின் நடிப்பை குறிப்பிட்டு சொல்லவேண்டிய காட்சிகள் என்றால், கரீமின் வீட்டில் தன்னுடைய படங்களை கண்டு அதிர்ச்சியடைவது, கேரோலைன் தன்னை சுட வரும்போது ஏற்படும் மாற்றம், கிளைமேக்சில் செண்டிமெண்டாக "காதல், காதல்" என்று டையலாக் பேசுவது என்று பல காட்சிகள். தமிழ் படங்களை கிண்டல் செய்து ஆங்கில/மொழி புரியாத படங்களை ஒலக சினிமா என்று சொல்பவர்கள் இந்த கிளைமேக்ஸ் காட்சியை கட்டாயம் காணவேண்டும். ஒரு பெண் தன்னுடைய உடலில் வெடிகுண்டை வைத்துக்கொண்டு ஒரு மாநாட்டையே சிதறடிக்க வருகிறாள். வெடிகுண்டை அமுக்க செய்யும்போது "அன்பே, நான் உன்னிடம் கொண்ட காதலை நினைவு படுத்து, காதல் - காதல்" என்றெல்லாம் டையலாக் பேசுகிறார். உண்மையில் அந்த காட்சியில் எனக்கொரு புதிய சிந்தனை தோன்றியது. 

அதாவது "இவன் இவ்வளவு தூரம் சொல்றானே, சரி வெடிகுண்டை வெடிக்க வேண்டாம்" என்று அவள் நினைத்த தருவாயில், "காதல்-காதல்" என்று கூறி அவளின் காதலன் கரீமை நினைவுபடுத்திஅதன்மூலம், மறுபடியும் வெடிகுண்டை நினைவுபடுத்தி அவளை வெடிகுண்டை இயக்கதூண்டிவிடுகிறார் நம்ம ஹீரோ.

JT with Energy Drink
John Travolta: *****

ஜான் ட்ரவோல்டா: இவரு நம்ம ஊரு ரஜினிகாந்தை போல. ஸ்டைலான ஒரு நடிகர். தன்னைத்தானே காலத்திற்கேற்ப மாற்றியமைப்பதில் இவர் நம்ம விக்ரமை போல. ஆம், ஆரம்ப காலத்தில் ஒரு யூத் ஐகான் ஆக இருந்தவர் பின்பு காணாமல் போய், பின்னர் 1996ஆம் ஆண்டு ஜான் வூ படமாகிய புரோக்கன் எர்ரோ படம் மூலம் ரீ என்ட்ரி செய்ததில் இருந்து (In Aisa) மறுபடியும் தன்னை ஒரு லீடிங் நடிகராக நிலைநிருதிக்கொண்டுள்ளார். இந்த படத்தில் அலட்டிக்கொள்ளாது ஒரு ஹாப்பி-கோ-லக்கி வேடத்தில் வந்து கலக்கியுள்ளார். இவரது அலட்டல் இல்லாத இந்த ஸ்டைலே இவரது ரசிகர்களுக்கு ஒரு விருந்து.

படத்தில் இவரது ஆரம்ப கட்ட அறிமுகமே அசத்தல். அதுவும் Mrs Jonesஐ இவர் அறிமுகம் செய்வது சூப்பர். ஒவ்வொரு செயலுக்கும் இவர் அளிக்கும் விளக்கம் - டாப் கிளாஸ். நடிப்பு என்று பார்த்தால் இவருக்கும், மற்ற யாருக்குமே இந்த படத்தில் நடிக்க ஸ்கோப் இல்லை என்பதால் கிடைத்த சில பல சீன்களில் இவர் அசத்தி இருப்பார். அதுவும் பல காட்சிகளில் ஓவர் த டாப் என்று சொல்வோமே அதுபோல தூள் கிளப்பியிருப்பார். அதுவும் ஒரு சீன உணவு விடுதியில் அகப்பட்டவர்களை எல்லாம் அடித்து நொறுக்கி விட்டு மீதமிருக்கும் ஒரே ஒரு கையாளை பின்தொடர்ந்து ஒரு முட்டுசந்தில் ஒரு ரவுடி கூட்டத்தை எதிர்கொள்ளும்போது, ஜான் சொல்லும் வசனமும் அதற்க்கு இவர் அந்த கும்பலை அடித்து துவம்சம் செய்துவிட்டு கேட்கும் கேள்வியும் இன்னமும் மனதில் இருக்கிறது.

Caroline
Kasia Smutniak: *****
  • கசியா ஸ்முட்னியாக்: இவர்தான் இந்த படத்தில் ஜானின் காதலியாக வருகிறவர். ஒல்லியாக, அதே சமயம் அழகாகவும் இருக்கிறார். அந்த ஆரம்ப காட்சியிலேயே அசத்திவிடுகிறார். இவரது எந்த படத்தையும் நான் இதுவரை பார்த்தது கிடையாது. இவரைப்பற்றி கூடுதல் தகவல் அறிய இவரது பெயரை கிளிக் செய்யுங்கள். போலந்து நாட்டை சேர்ந்த விமானப்படை ஜெனரலின் மகளாகிய இவர், தற்போது இத்தாலியில் தங்கி நடித்து வருகிறார். முப்பத்தியொரு வயதாகிறதாம் அம்மணிக்கு. பார்த்தால் அப்படி தெரியவில்லை (எதைப் பார்த்தால் என்று தானே கேட்கிறீர்கள்? நடிப்பை பார்த்துதான்).  இந்த படத்தில் இவருக்கு நடிப்பதற்கு ஓரிரு காட்சிகள் இருந்தாலும், ஒக்கே அளவிற்குதான் இவரின் நடிப்பு இருக்கிறது. 

குறிப்பாக மோதிரத்தை ஜான் கழட்டும்போது கெஞ்சுவதும், தவழ்ந்தவாறு சென்று துப்பாக்கியை எடுத்து சுடுவதும், பின்னர் பொது தொலைபேசியில் ஜானிடம் பேசுவதும் என்று சில காட்சிகள் நன்றாக இருக்கிறது. கடைசியில் அந்த தீவிரவாதியாக வருவது (உயிரே படத்தில் வரும் மனிஷா போல) சிறிதும் எடுபடவில்லை. ஆனால், இனிமேல் அம்மணிக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Minister
Richard Durden: *****

ரிச்சர்ட் டர்டென் : இவர்தான் இந்த படத்தில் அமெரிக்க தூதர் பென்னிங்க்டன் வேடத்தில் நடித்திருப்பவர். ஏன் இவரைப்பற்றிஎல்லாம் எழுதுகிறேன் என்றா கேட்கிறீர்கள்? வேறொன்றுமில்லை ஐயா, படத்தில் இந்த மூன்று பேரை தவிர சொல்லிக்கொள்ளும்படி வருவது இவர் மட்டும்தான். ஆகையால் தான் இவரை பற்றி எழுதவேண்டியதாகி விட்டது. இருந்தாலும் இவர் தன்னுடைய சகா ஒருவரைப்பற்றி கேட்கும் கேள்வி உலக ஞானம் மிக்கது (அவன் அந்த ரெண்டு செகரேட்டரில யாரை வச்சுருக்கான்?). அதற்க்கு ஜான் சொல்லும் பதில் அதைவிட சிறப்பானது (ரெண்டு பேரையும்தான்). இவரும் இந்த படத்தில் செஸ் ஆடுகிறார். சினிமா விதிப்படி ஹீரோவிடம் செஸ் ஆட்டத்தில் தோற்பதே இவருக்கு வேலை.

மறுபடியும் கிளைமேக்சில் வந்து தலை காட்டுகிறார். அப்போது கதாநாயகனுக்கு உதவியும் செய்கிறார். மற்றபடி சொல்லிக்கொள்ளும்படியான காட்சிகளும், கதையமைப்பும் இல்லை. இவரைத்தவிர வேறு சிலரும் ஓரிரு காட்சிகளில் தோன்றுகிறார்கள். அவர்கள் பின்வருமாறு:

Amber Rose Revah Rebecca Dylan The Villain

படத்தின் ஒரே ஒரு காட்சியில் வந்து செத்துப்போகிறார்.தன்னுடைய "திறமையை" வெளிப்படுத்த வாய்ப்பு இல்லாததால் நம் மனதில் ஒட்ட மறுக்கிறார். 

இவரும் கிளைமேக்சில் மட்டுமே வருகிறார். நடந்தது ஒன்றுமே தெரியாமல் ஹீரோவை வேலையை விட்டு தூக்க சொல்கிறார்.  படத்தின் வில்லன் இவர்தான். ஆனால் படத்தில் இவருக்கு ஸ்க்ரீன் பிரசன்ஸ் மொத்தமே மூன்று காட்சிகளில்தான். இருந்தாலும் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமில்லை. 

படத்தினை பற்றிய சுவையான தகவல்கள்:

  • இந்த படத்தின் தலைப்பு, From Russia With Love என்ற பிரபல ஜேம்ஸ் பாண்ட் படத்தின் தலைப்பின் பேரில் இருந்து இன்ஸ்பயர் ஆகி இருக்கும் என்றே நினைத்தேன். ஆனால், சிறிது கூகிள் சர்ச் செய்ததில் உண்மை வேறுவிதமாக இருக்கிறது. அதாவது இயான் பிளெம்மிங் அவர்கள் From Russia With Love என்ற பெயரில் நாவல் எழுதியது 1955ஆம் ஆண்டு. அதன் பின்னரே ஷான் கானரி நடித்து From Russia With Love என்று படமாக 1963இல் வந்தது. ஆனால் இயன் பிளேம்மிங்குக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்தது 1955ஆம் ஆண்டு வந்த ஒரு படமே  ஆகும். (To Paris With Love – 1955)
  • படத்தில் இயக்குனர் லுக் பெஸ்சானும், நடிகை கெல்லி பிரெஸ்டனும் ஒரே ஒரு காட்சியில் இயல்பாக காட்சிகளின் குறுக்கே வருகிறார்களாம் (இணையத்தில் படித்தது).
  • படத்தில் ஒரு காட்சியில் ஜான் ட்ரவோல்டா ஈபில் டவரில் உச்சியில் பைனாகுலாரில் பார்ப்பது போல ஒரு காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். சற்று கூர்ந்து பார்த்தால் கொய்யால, பைனாகுலாரை திருப்பி வைத்தவாறு பார்ப்பார் நம்ம ஹீரோ (ஜார்ஜ் புஷ் மாதிரி).
  • படத்தின் வெற்றி காரணமாக இந்த படத்தையும் டிரான்ஸ்போர்ட்டர் சீரிஸ் மாதிரி மற்றுமொரு தொடராக கொண்டுவரும் எண்ணம் இருக்கிறதாம் நம்ம தயாரிப்பாளருக்கு. ஆகையால் அடுத்தட வருடம் இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்கலாம்.

 படத்தினை இன்னமும் பார்க்காதவர்களுக்காக படத்தின் ஆன்லைன் டிரைலர்:

அடுத்த வாரம், வேறொரு படத்துடன்.

Comments

15 Responses to "உளவாளியும், கத்துக்குட்டியும் From Paris With Love 2010 - சினிமா விமர்சனம்"

SUREஷ்(பழனியிலிருந்து) said... June 27, 2010 at 10:15 PM

அப்ப இது கமல்ஹாசன் படம் ஆகும் நாள் வெகுதூரத்தில் இல்லை

SUREஷ்(பழனியிலிருந்து) said... June 27, 2010 at 10:18 PM

இந்த ஆண்டின் தமிழில் ராஸ்பெர்ரி எந்த படம்?

Paleo God said... June 28, 2010 at 4:25 PM

வித்தியாசமா எழுதி இருக்கீங்க நண்பரே! வாழ்த்துகள்.:))

Ben said... June 29, 2010 at 8:49 PM

அருமை. உங்களுடைய உலக சினிமாவிற்கான வரையறையுடன் ஒத்து போகிறேன்.

@சுரேஷ்
இந்த வருடத்தின் மோசமான தமிழ்ப் படங்களை பற்றி என் பதிவில் எழுதியிருக்கிறேன்.

ILLUMINATI said... July 3, 2010 at 1:11 PM

A good write-up friend.I would very well like to see your reviews for several other movies. :)

வெடிகுண்டு வெங்கட் said... July 4, 2010 at 11:19 AM

//அப்ப இது கமல்ஹாசன் படம் ஆகும் நாள் வெகுதூரத்தில் இல்லை//

ஆமாம் தல. அப்படித்தான் நினைக்க வைக்குது.

வெடிகுண்டு வெங்கட் said... July 4, 2010 at 11:19 AM

//வித்தியாசமா எழுதி இருக்கீங்க நண்பரே! வாழ்த்துகள்.:)//

நன்றி ஷங்கர். தொடர முயற்சி செய்கிறேன்.

வெடிகுண்டு வெங்கட் said... July 4, 2010 at 11:20 AM

//அருமை. உங்களுடைய உலக சினிமாவிற்கான வரையறையுடன் ஒத்து போகிறேன்//

அப்பாடா, நீங்களாவது சப்போர்ட்டுக்கு வந்தீங்களே, நன்றி சார்.

வெடிகுண்டு வெங்கட் said... July 4, 2010 at 11:21 AM

//A good write-up friend.I would very well like to see your reviews for several other movies//

will try my friend.

பாலா said... July 6, 2010 at 5:16 AM

உங்களை நினைச்சி கஷ்டமாயிருக்குங்க வெடிகுண்டு. இப்படியா போய்.. வரிசையா மாட்டுவீங்க?


///படத்தின் வெற்றி காரணமாக//

என்னங்க இது? புதுசு புதுசா சொல்லுறீங்க?

பாலா said... July 6, 2010 at 5:18 AM

என்னங்க இது? ஓல்ட் டாக் பேரில் இந்த பதிவு பப்ளிஷ் ஆகியிருக்கு?

எதுனா ஓவர்ரைட் ஆகிடுச்சா?

ILLUMINATI said... July 6, 2010 at 8:39 AM

What bala tells seems to be right.The post seems to have been overwritten.
The film is just an entertainer.Not more,not less.And the only saving grace for this film was travolta.

geethappriyan said... July 6, 2010 at 9:20 AM

நல்லாருக்கு நண்பா விமர்சனம்,தொடர்ந்து கலக்குங்க

geethappriyan said... July 6, 2010 at 9:20 AM

//என்னங்க இது? ஓல்ட் டாக் பேரில் இந்த பதிவு பப்ளிஷ் ஆகியிருக்கு?

எதுனா ஓவர்ரைட் ஆகிடுச்சா?//ஆமாம் செக் பண்னுங்க

எஸ்.கே said... August 23, 2010 at 12:35 AM

தொடர்ந்து விமர்சனம் எழுத வாழ்த்துக்கள்!

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin