அனுஷ்காவும், ஆபாச போஸ்டரும்

வெடிகுண்டு வெங்கட்டின் சிறப்பு செய்தியாகிய இந்த பதிவினை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

மக்களே,

கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், அலுவலகத்திற்கு செல்லவில்லை. அதுமட்டுமில்லாமல் இணையத்திலும் எதுவும் பதியவில்லை. இன்று உடல்நலம் சற்று தேறியவுடன் என்னுடைய கடமைகளை நிறைவேற்ற வந்தபோது ஒரு போஸ்டரைக்காண நேரிட்டது. அந்த போஸ்டரே இன்றைய இந்த பதிவின் காரணம்.

படத்தை பாருங்கள். ஒரு நடுத்தர வயது முதியவர் பைக் ஓட்டிச்செல்கையில் அவருடைய கவனம் சுவற்றில் இருக்கும் போஸ்டரின் மீதே இருக்கிறது. அதனால் ரைட் கட் எடுக்கவேண்டிய ஒரு சைக்கிள் ஓட்டும் இளைஞன் (அட, இவரு வேறங்க, நம்ம கலைஞரின் இளைஞன் கிடையாது) கடுப்பாகி அவரை திட்ட முயல்கிறான். DSC01996 சரி, அப்படி அந்த போஸ்டரில் என்ன விசேடம் என்று பார்த்தால் ஒன்றுமில்லை. சரி என்று மறுபடியும் கண்ணை கசக்கிக் கொண்டு பார்த்தால், அட, ஆமாங்க, மக்களை திரும்பி பார்க்கத்தூண்டும் ஒரு விஷயம் அந்த போஸ்டரில் இருந்தது.

அனுஷ்காவின் அந்த மார்புக் கச்சையின் நீளமானது சற்றே குறைவாக இருப்பதும், அதனால் அவரது வாளிப்பும், வனப்பும் அனைவரின் பார்வைக்கு விருந்தாகவும் இருந்ததை கண்டேன். மனம் நொந்தேன். ஒரு காலத்தில் இது போன்ற போஸ்டர்கள் ஓட்டுவதற்கு என்றே சில இடங்கள் இருந்தன. இப்போதோ, அனைத்து இடங்களிலும் ஓட்டுகிறார்கள். DSC01997 சற்று கஷடப்பட்டு பார்ப்பவர்களுக்காக இதோ மற்றுமொரு (அருகாமையில் எடுக்கப்பட்ட) புகைப்படம். இந்த படத்தில் என்ன மறைக்கப்படவேண்டுமோ, அது மறைக்கப்படாமல் ஒளிவு மறைவின்றி அனைவரின் கண்களுக்கும் விருந்தாகி, விபத்துக்களுக்கு வித்திட்டு கொண்டு இருக்கிறது.

இது போன்ற ஆபாச போஸ்டர்களை தடுக்க சென்னை மாநகராட்சி ஒரு சிஸ்டம் கொண்டு வந்ததாக நினைவு. அது மட்டுமின்றி நகரில் ஒட்டப்படும் அனைத்து போஸ்டர்களும் உத்தரவு பெறப்பட்டே (சான்றிதழுடன்) ஓட்டப்பட வேண்டும். சில நேரங்களில் இது போன்ற போஸ்டர்களில் தியேட்டர் பெயர்களை "முக்கியமான" இடத்தில் ஒட்டி விடுவார்கள். அட் லீஸ்ட் அப்படியாவது செய்து இருக்கலாம். இது போன்ற போஸ்டர்களை பார்க்கும்போதுதான் சென்னை மாநகராட்சி என்ன செய்துக்கொண்டு இருக்கிறது என்று கோபம் வருகிறது. DSC01998 சரி, இந்த போஸ்டர் தான் இப்படி. மற்றபடி பத்திரிக்கைகளில் செய்யப்படும் விளம்பரமாவது சரியாக இருக்கிறதா என்று ஆராய கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளிவந்த தினத்தந்தி பத்திரிக்கையின் ஆன்லைன் பேப்பரை பார்த்தேன். (தமிழில் வரும் பத்திரிக்கைகளில் தினத் தந்தி, தினகரன், தமிழ் முரசு போன்றவை இலவசமாக ஆன்லைன் ஈ பேப்பரை அளிக்கின்றன). என்ன கொடுமை? அங்கேயும் இதே விளம்பரம்தான் வெளியிடப்பட்டு இருக்கிறது.

Dailythanthi friday july 09th 

என்ன செய்வது? சமூக சீர்கேட்டை நோக்கி விரைவுப்பாதையில் சென்றுக்கொண்டிருக்கும் நம்முடைய நாட்டில் சட்டம் ஒழுங்கானது இந்த நிலையில்தானா இருக்கிறது? அது தவிர, சில பல கேள்விகள்:

ஒன்று: சென்னை மேயருக்கு / கமிஷனருக்கு: ஐயா, இது போன்ற விஷயங்களால் எவ்வளவு விபத்துக்கள் நடக்கின்றன என்பது உங்களுக்கு தெரியும். விபத்துக்களை தவிர "வேறு சிலவற்றுக்கும்" இந்த விளம்பரங்கள் வித்திடுகின்றன என்பதும் உங்களுக்கு தெரியும். என்ன செய்ய வேண்டும் என்பதும் உங்களுக்கு தெரியும். இனிமேல் என்ன செய்யப் போகிறீர்கள் ஐயா?

இரண்டு: பத்திரிக்கைகளுக்கு: சமூக பொறுப்புணர்ச்சி என்று ஒன்று இருப்பதாக சில வேளைகளில் காட்டிக்கொள்வீர்களே, அது இன்னமும் உள்ளதா? இந்த விளம்பரங்களை வெளியிட்ட அந்த சினிமா விளம்பர பகுதி எடிட்டரின் தவறு என்று சொல்லி தப்பித்துக்கொள்ள வேண்டாம். இனிமேல் என்ன செய்யப் போகிறீர்கள் ஐயா?

மூன்று: சினிமா நிறுவனங்களுக்கு: அடிக்கடி கேட்கப்படும் கேள்விதான். (உங்கள் சகோதரி, சொந்தங்களின் படங்களை இப்படி வெளியிடுவீர்களா?) ஆனால் நான் அதனை கேட்கப்போவதில்லை. இந்த மாதிரி காட்சிகள் படங்களில் வருவது வியாபார நோக்கில் இன்றியமையாததாகி விட்ட சூழலில், அட்லீஸ்ட் போஸ்டர்களிலாவது இவற்றை தவிர்க்கலாமே?

நான்கு: மாதர் சங்கங்களுக்கு: வழக்கமாக பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அவலங்களை கண்டு கொதிக்கும் உங்கள் ரத்தம் மாஸ்கோ பனி போல உறைந்து விட்டதா என்ன? இவற்றை எல்லாம் விட்டு விட்டு, ஏதாவது நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதில் தான் உங்களுக்கு விருப்பம் என்றால், உங்களிடம் கேட்க எனக்கு கேள்வியே இல்லை, மன்னிக்கவும்.

ஐந்து: சமூக நீதிக் காவலர்களுக்கு: சென்ற கேள்வியை அப்படியே ரிபீட் செய்துக்கொள்ளவும். டைப் அடிக்கவோ/ காபி பேஸ்ட் செய்யவோ சோம்பேறித்தனம்.

ஆறு: உயர்திரு ராம நாராயணன் அவர்களுக்கு: ஐயா, நீங்கள் மூன்றாம் முறையாகவும் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு பாராட்டுக்கள். சினிமா துறையை நீங்கள் வாழ வைப்பீர்கள் என்று பலரும் நம்புகிறார்களாம். ஆகையால், இது போன்ற விஷயங்களுக்கு உங்களின் தீர்வு என்ன?

இதுவரை படித்தமைக்கு நன்றிகள்.

Comments

13 Responses to "அனுஷ்காவும், ஆபாச போஸ்டரும்"

Advocate P.R.Jayarajan said... July 12, 2010 at 2:08 PM

இதுவரை மேற்பக்கமாக காட்டினார்கள். இப்போது ஒரு மாற்றத்திற்கு அடிப்பக்கம் காட்டுகிறார்கள். விரைவில் முழுவதும் காட்டி விடுவார்கள் என்று நம்பலாம். காலம் எங்கோ போய்க்கொண்டு இருக்கிறது.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said... July 12, 2010 at 2:50 PM

6 கேள்விகளும் நச்?

நல்ல பதிவு

geethappriyan said... July 12, 2010 at 4:16 PM

அடடா?இப்புடியும ஆரம்பிச்சிட்டாய்ங்களா?

கருந்தேள் கண்ணாயிரம் said... July 13, 2010 at 12:52 AM

ஆஹா. இத இப்பத்தேன் பார்த்தேன். . இந்த போஸ்டர் கொடும தான்.. உங்க கேள்விகளும் நல்லாத்தான் கீது... ஆனா இதுகளுக்குப் பதிலே வராது . .

இதேபோல், ஸ்ரீப்ரியாவுக்கு, நாககன்னி போல ஒரு மெகா கட் அவுட் மெட்ராஸ்ல வெச்சாங்க.. நீயா படம் வந்தப்ப.. அப்பல்லாம் தினம் விபத்து தான் அங்க..

பாலா said... July 13, 2010 at 8:05 AM

ஏங்க.. இதெல்லாம் ஒரு மேட்டரா??

மங்குனி அமைச்சர் said... July 13, 2010 at 9:58 AM

இது வரை என்னை மாத்தி பார்க்காதவர்களுக்கு , அந்த பெரும் பாக்கியத்தை தந்த திரு.வெடிகுண்டு வெங்கட் அவர்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள் (சும்மா தமாசு )

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said... July 13, 2010 at 10:26 AM

இது வரை என்னை மாத்தி பார்க்காதவர்களுக்கு , அந்த பெரும் பாக்கியத்தை தந்த திரு.வெடிகுண்டு வெங்கட் அவர்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்
//

ரிப்பீட்டு

Jey said... July 13, 2010 at 12:16 PM

அடடே, படம் பக்க நல்லா இருக்கே!!!, நான் இந்த படத்தை முதன்முறையாக, இங்குதான், பார்க்கிறேன்:).

மத்தபடி, கேள்விகள் நச்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... July 13, 2010 at 6:16 PM

padam paaththachaa?

Karthick Chidambaram said... July 14, 2010 at 11:18 AM

Nalla kelvigal .... Varaverkiren

Anonymous said... July 14, 2010 at 7:19 PM

அங்க ஒரு போஸ்டர்தான்.ஆனா இந்த பதிவ்ல அத் மூனூவாட்டி போட்டு ஒங்க மன வக்கிரத்தை காட்டி இருக்கீங்க.இதுவரைக்கும் பாக்காதவங்க இனிமே இத்த பாத்துட்டு ,வேற எதுனா "க்ளிப்" கிடைக்குமான்னு 'கூகுள" தேடப்போறாங்க!! அதான் நீங்க சாதிச்சது!! தப்புன்னு நினைச்சு ஃல் பண்னா படத்த எடுத்துடுங்க!

பின்னோக்கி said... July 14, 2010 at 8:40 PM

ஏங்க இந்த போஸ்டர் ஒட்டக் கூடாது.. கூடாதுன்னு சொல்லி, 4 தடவை அதே போஸ்டர போட்டு :)

Unknown said... December 27, 2010 at 10:31 AM

அவுங்க இதுக்கு மேலயும் காட்ட ரெடிதான்.. அரசாங்கம் அனுமதித்தால் ...

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin