நம்ம ஊர் நடிகர்களின் வருங்கால படங்கள் - ஒரு காமடி: இப்போ போற போக்கை பார்த்தல் படங்களின் பெயருக்கு கூட பஞ்சம் வந்து விடும் போல இருக்கிறது. அதனால் நம்முடைய சூப்பர் நடிகர்களுக்கு அந்த நிலைமை வரக் கூடாது என்று நானே (சுயமாக சிந்திச்சு) சில தலைப்புகளை சூட்டி உள்ளேன். குறிப்பிட்ட நடிகர்களின் ரசிகர்கள் கோபிக்க வேண்டாம்.
முதலில் நம்ம
கேப்டன் விஜயகாந்த் =
தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், தூத்துக்குடி, மயிலாடுதுறை, இப்படியே போக வேண்டியது தான். என்ன ஒரு பிரச்சினை நம்ம பேரரசு சண்டைக்கு வருவார்.

அடுத்து நம்ம
இளைய தளபதி விஜய், மன்னிக்கவும் டாக்டர் விஜய்:
வில்லு, அம்பு, கம்பு, கத்தி, கபடா, நெறைய இருக்கு.
அருவாள், வீச்சரிவா என்று போனால் தான் ஹரி சண்டைக்கு வருவார்.
தல அஜித் =
அசல், நகல், ஒரிஜினல், ஜெராக்ஸ், கலர் ஜெராக்ஸ், இன்னும் நெறைய நெறைய இருக்கு. அப்படி இது சரியா வரலன்னா, அசல், வட்டி, கடன், மீட்டர் வட்டி, கந்து வட்டி, இப்படியும் போகலாம். எப்படி வசதி?
சூர்யா =
வாரணம் ஆயிரம், தோரணம் ரெண்டாயிரம், பூரணம் மூவாயிரம், பஞ்சவர்ணம் நாலாயிரம், காரணம் அஞ்சாயிரம் இப்படி சொல்லிகிட்டே போகலாம்.
என்ன, மாமா பிஸ்கோத்து என்று யாரும் கேக்காத வரை.

வருங்கால (அது எப்போ வருமோ) சூப்பர் ஸ்டார் இன்றைய
லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு =
சிலம்பாட்டம், புலியாட்டம், கரகாட்டம், குயிலாட்டம், மயிலாட்டம், பாம்பாட்டம் இப்படி பல கலைகளை கூறிக்கொண்டே போனால் போதும்.
அந்த பெயரில் எல்லாம் சிம்பு வருவார்.
நடிகர் ஜீவா (அப்ப மத்தவங்க எல்லாம்?) =
ஈ, கொசு, எறும்பு, கரப்பான்பூச்சி, மூட்டபூச்சி, மண்புழு... சொல்ல சொல்ல கொமட்டிட்டு வருது. இதோட நிறுத்திக்குவோம். பேசாம அவர்
ராமேஸ்வரம், காசி, கன்னியாகுமரி, இப்படி ஸ்டார்ட் செய்யலாமே?
புரட்சி தளபதி விஷால் =
சத்யம், சங்கம், அபிராமி, உதயம், வூட்லண்ட்ஸ், தேவி, ஐநாக்ஸ், இன்னும் நெறைய இருக்கு.
இயக்குனர் சேரன் (அப்போ ஓட்டுனர் சேரன் யாராம்?) =
ராமன் தேடிய சீதை, லக்சுமணன் தேடிய சீதை, அனுமன் தேடிய சீதை, ராவணன் தேடிய சீதை, வாலி தேடிய சீதை, சூர்பனகை தேடிய சீதை யப்பா முடியல. இது போர் அடிச்சா, கைகேழி தேடிய சீதை, கூனி தேடிய சீதை, பாரதன் தேடிய சீதை என்றும் ஆரம்பிக்கலாம்.
நகுல் =
காதலில் விழுந்தேன், ரோட்ல விழுந்தேன், பைக்'ல விழுந்தேன், கிழே விழுந்தேன், செப்டிக் டாங்கில் விழுந்தேன் இன்னும் நெறைய எதிர் பார்க்கிறோம்.
நாயகன் ஜீவன் =
தோட்டா, புல்லட், பீரங்கி, துப்பாக்கி. பழைய படமா வேணும்னா ரெட்டை குழல் துப்பாக்கி, காது வச்ச பீரங்கி இன்னும் கூட இருக்கு. சொல்லட்டுமா?
சியான் விக்ரம் =
கந்தசாமி, கருப்புசாமி, குப்புசாமி (அட நம்ம நல்லி குப்புசாமி இல்லாப்பா), குழந்தைசாமி, மாடசாமி, ஆருச்ச்சாமி, எழுச்சாமி, எட்டுச்சாமி, இப்படி பெயர் வச்ச இது ஒரு வசதி.
பார்க்க பார்க்க பிடிக்கும் தனுஷ் = படிக்காதவன், உருப்படாதவன், தருதல, ஒன்னுத்துக்கும் ஒதவாதன், சூப்பர் ஸ்டார் மருமகன் என்பதால் அவர் ரசிகர்கள் கோபிசுசுகுவாங்கோ.
ஆர்யா =
நான் கடவுள், நான் மிருகம், நான் பேய், நான் சாத்தான், நான் பிசாசு, நான் பைத்தியம்
ஜெயம் ரவி (நம்ம செந்தழல் ரவி பிரண்டா?) =
சம்திங் சம்திங், நத்திங் நத்திங், எனிதிங் எனிதிங், எவ்ரிதிங் எவ்ரிதிங் இப்படி பல.
நரன் =
அஞ்சாதே, ஆறாதே, எழாதே, எட்டாதே,
மக்கள் தலைவர்
சரத் குமார் =
1977, 1978, 1979, 1980 ...அய்யா, நீங்க 2011க்கு வர ரொம்ப காலம் பிடிக்குமே?
எஸ்.ஜெ.சூர்யா =
நியுட்டனின் மூன்றாம் லா, பாஸ்கல் லா, ஒம்'ஸ் லா, ஷகீ லா,
மாதவன் =
குரு என் ஆளு, ப்ரியா உன் ஆளு, நமிதா என் ஆளு, (சிம்பு) நயன் என் ஆளு,
கார்த்தி =
பருத்தி வீரன், புண்ணாக்கு வீரன், கழனி தண்ணி வீரன், மாட்டு தீவனம் வீரன்
சாந்தனு =
சக்கர கட்டி, உப்புக் கட்டி (புரடியூசருக்கு), சுண்ணாம்பு கட்டி (படத்த பார்த்தவங்களுக்கு), சந்தன கட்டி (அப்பாவுக்கு)
இந்த லிஸ்ட் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?