வெடிகுண்டு வெங்கட்டின் சிறப்பு செய்தியாகிய இந்த பதிவினை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
சமீபத்தில் ஐ.பீ.எல் என்று அழைக்கப்படும் 20/20 கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் இருந்து மாற்றப் பட்டது. அதனை இங்கிலாந்திலும், தென்னாப்பிரிக்காவிலும் நடத்த முயற்சிகளின் மேற்கொள்ளப் பட்டன. ஆனால், அவை தென்னாப்பிரிக்கில் தான் இப்போது நடத்தப் படுகின்றன. இதனால் கடுப்படைந்த இங்கிலாந்து செக்கியுரிட்டி சேவை பிரிவு தலைவர் கார்டன் ரீச் அவர்கள் சில திடுக்கிடும் தகவல்களை அளித்தார். அவற்றில் சில அரசியல் அசிங்கங்கள், திடுக்கிடும் தகவல்கள், உள்குத்துக்கள் என பல விஷயங்கள் இருந்தன.



இந்த தடுப்பு முயற்சிகளை எல்லாம் அறிந்து கொண்ட நமது கேப்டன் விஜயகாந்த் அவர்கள், ஐ.நா சபை உதவியுடன் படம் வெளிவர முயற்சி மேற்க்கொண்டு அதில் வெற்றியும் கண்டு விட்டார். ஆம், ஏப்ரல் மாதம் எங்கள் ஆசான் படமும், மே மாதம் மரியாதை படமும் வரும் என்று ஐ.நா சபை உத்தரவு இட்டு விட்டது.
இனிமேல் ஒன்றும் செய்ய இயலாது என்பதை தெரிந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம், ஐ.பீ.எல் என்று அழைக்கப்படும் 20/20 கிரிக்கெட் போட்டிகளை ஒரேயடியாக தென்னாபிரிக்காவிற்கு மாற்றி விட்டனர்.
இதன் மூலம் இளைய தளபதி விஜய் அவர்களை விட தான் ஒரு படி மேலே என்பதை கேப்டன் நிரூபித்து விட்டார். ஆம், சிறந்த கதையும், நெஞ்சை உலுக்கும் வசனங்களும், குடும்ப குணச்சித்திர காட்சிகள் இருந்தும் இளைய தளபதி விஜய் அவர்களின் "குருவி" என்ற படம் சென்ற ஆண்டு ஐ.பீ.எல் 20/20 கிரிக்கெட் போட்டிகளால் தோல்வி அடைந்தது. இப்போது கேப்டன் அந்த ஐ.பீ.எல் 20/20 கிரிக்கெட் போட்டியே தோல்வி அடைய செய்து விட்டார்.
எங்கள் ஆசான் படம் என்ன ஆச்சு என்று இன்னமும் சில பல கோடி மக்கள் வழி மேல் விழி வைத்து காத்து இருக்கும்போது நேற்று இரவு "மரியாதை" படத்தின் சில காட்சிகளை பார்க்கும் பாக்கியம் ஏற்பட்டது. இதோ, அந்த படத்தில் வரும் சில மெகா ஹிட் வசனங்களும், சிறப்பு புகைப் படங்களும்.
சின்ன விஜயகாந்த்: திங்கறது தமிழ் நாட்டுல. ஆனா, தமிழன் வேஷ்டி கட்டிக் கிட்டு வந்தா மட்டும் கழுத்தப் புடிச்சு வெளிய தள்ளுவீன்களோ?
ரமேஷ் கண்ணா: தோசத்துக்கும் சந்தோஷத்துக்கும் என்ன வித்தியாசம்?
மீரா ஜாஸ்மின்: உன்ன நான் கிணத்துல தள்ளி சாகடிச்சா, அது தோஷம். அதுவே, நீயா கிணத்துல விழுந்து செத்தா, அது எனக்கு சந்தோஷம்.

அதே மாதிரி இந்த பதிவ படிச்சதும் உங்க விதி தான். போங்க, பேசாமல் போய் தமிளிழ்'ல போய் வோட்டு போட்டுட்டு போங்க.
test comment to check.
நெஜமா நாங்க இதெல்லாம் எதிர்பார்க்கவே இல்லை
சுரேஷ் அவர்களே,
மேலே உள்ள தகவல்கள் அனைத்தும் உண்மை தான்.
கோபிஃ அண்ணன் (ஐ.ந தலைவர்)
டேய்,
யாருடா நீ? சும்மா சம்பந்தமே இல்லாமல் எங்க தலைவரை வம்புக்கு இழுக்குற?
இதோட நிறுத்திக்க. இல்ல'ன்ன வீட்டுக்கு ஆட்டோ அனுப்ப வேண்டி இருக்கும்.
எப்படி வசதி?
இளைய தளபதி விஜய் ரசிகர்கள்
i didnt expect this reason
i expect this reason
amazing story. now iam believing this.
dhanush is the best actor. he will become next super star and become a asian action movie star just like bruce lee.
i have decreased my rates and there is summer discount also. please use.
விஜயகாந்த் பத்தி சொல்லலையே... முகமும் கழுத்தும் ஒரே மாதிரி இருக்கு. அப்பா விஜயகாந்த் கூட பரவ இல்ல.. சின்ன விஜயகாந்த் டூயட் தான் சகிக்கல...ஒரு முழு ட்ரம்கு கோட் சூட் போட்ட மாதிரி...
யாருப்பா அது,
எங்க தலைவரை கிண்டல் செய்வது? அமெரிக்க தேர்தலில் நான் ஜெயிக்க முக்கிய காரணம் தலைவர் விஜயகாந்த் தான். அவர் நடித்த "நரசிம்மா" படத்தின் டீ.வி.டீ'யை அனைவருக்கும் விநியோகித்து தான் காரணம்.
பாரக் ஒபாமா,
உண்மை தமிழன் விஜய காந்த் ரசிகர் மன்ற தலைவர்
ஆம், சிறந்த கதையும், நெஞ்சை உலுக்கும் வசனங்களும், குடும்ப குணச்சித்திர காட்சிகள் இருந்தும் இளைய தளபதி விஜய் அவர்களின் "குருவி" என்ற படம் சென்ற ஆண்டு ஐ.பீ.எல் 20/20 கிரிக்கெட் போட்டிகளால் தோல்வி அடைந்தது. //
சத்தியமா சிரிக்காம இருக்கவே முடியாது..
நன்றி வழிப் போக்கன் அவர்களே,
உங்களுக்காவது உண்மை என்னவென்று புரிந்ததே.
ஓட்டு போட்டாச்சிங்கோ!
சிரிச்சிட்டு தான் போட்டேன்.
நன்றி ஜமால்.
OMG !!! naan etho seriousaa solreenganu ninaichen !!! This was ultimate...