வேட்டைக்காரன் - கவுண்டமணி சிறப்பு விமர்சனம்

வெடிகுண்டு வெங்கட்டின் சிறப்பு செய்தியாகிய இந்த பதிவினை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

மக்களே,

இன்று வேட்டைக்காரன் என்ற உலக மகா காவியம் வெளியிடப் படுவதால் அதனைப் பற்றி அனைவரும் சிறப்பு பதிவுகளை இட்டுக் கொண்டே இருக்கின்றனர். அந்த வரிசையில் நம்முடைய நண்பர் சுரேஷ் அவர்கள் தங்களுடய கனவுகளே என்ற வலை ரோஜாவில் (எத்தனை நாளைக்கு தான் வலைப்பூ என்றே சொல்வது, அதனால் சும்மா ஒரு மாற்றத்துக்கு) இன்று வேட்டைக்காரன் படத்தின் சிறப்பு விமர்சனத்தையே வெளியிட்டு உள்ளார். அதனை படிப்பதற்கு முன்னர் (இங்கே கிளிக் செய்யவும் Suresh) இந்த சிறப்பு பதிவை படியுங்கள்.

நேற்று வேட்டைக்காரன் படத்தின் சிறப்பு காட்சி நடைபெற்றது. அதில் சினிமா உலகின் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அதில் நம்முடைய ஆல் டைம் பேவரிட் காமெடியர் (ஒரு மரியாதை தான்) கவுண்டமணியும் அடக்கம். அந்த படத்தை பார்த்து விட்டு அவருடைய விமர்சனம் பின்வருமாறு:

vijay

மருத்துவர் விஜய்: நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட.....................

gavundamani

கவுண்டர்: டேய் டிபன் பாக்ஸ் மண்டையா, நீ அடிச்சா கூட பரவா இல்லைடா. ஆனா நீ நடிச்சா தான் தாங்க முடியல.

kid

 

மக்களே, நானும் ஒரு மருத்துவர் விஜய் ரசிகன் என்பதை மறந்து விடாதீர்கள். இது நம்முடைய ஞானி அவர்கள் பாணியில் செய்யப்பட்ட ஒரு பகடி (அதாங்க காமெடி). அதனால் இதனை சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் ஜாலியாக விட்டு விடுங்கள்.

வாழ்க மருத்துவர் விஜய். ஓடுக அவரின் படங்கள்.

Comments

11 Responses to "வேட்டைக்காரன் - கவுண்டமணி சிறப்பு விமர்சனம்"

எஸ்.ஏ.சந்திரசேகரா said... December 18, 2009 at 1:58 PM

கடைசி எச்சரிக்கை. மரியாதையாக மன்னிப்பு கேட்கவும். அல்லது வேட்டைக்காரன் படத்தை தொடர்ந்து இரண்டு காட்சிகள் பார்க்கும்படி தண்டனை தந்து விடுவோம்.

எஸ்.ஏ.சந்திரசேகரா

எண்பது கோடி விஜய் ரசிகர்கள் said... December 18, 2009 at 2:11 PM

இந்த தளத்தை நாங்கள் புறக்கணிக்கிறோம். அதனால் எண்பது கோடி மக்களின் ஹிட்சை இந்த தளம் இழக்கட்டும். மருத்துவர் விஜய் அவர்களை கிண்டல் செய்யும் ஒவ்வொரு இணைய தளத்திற்கும் இதே கதிதான். ஜாக்கிரதை.

எண்பது கோடி விஜய் ரசிகர்கள்.

Ultimate Star Ajith Fan said... December 18, 2009 at 4:39 PM

//வாழ்க மருத்துவர் விஜய். ஓடுக அவரின் படங்கள். //

எங்கே? தியேட்டரை விட்டா?

angel said... December 18, 2009 at 7:35 PM

very nice yaru unga blog oppose panalum feel panathinga engala mathiri nalavanga thodarnthu varuvom

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... December 18, 2009 at 9:16 PM

:)))))

SUREஷ் (பழனியிலிருந்து) said... December 18, 2009 at 9:26 PM

கவுண்டமணி படம் அழகு..,

நாஞ்சில் பிரதாப் said... December 18, 2009 at 11:44 PM

ஓடத்தான் போவுது தியேட்டரை விட்டு...எப்படித்தல நைசா கலாய்ச்சுட்டு கடைசில அப்ருவர் ஆயிடுறீங்க... ஆட்டோ வந்துரும்னு பயமா...சும்மா கலாயங்க நாங்க இருக்கோம்...

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said... December 19, 2009 at 11:53 AM

இன்னுமா இதை எல்லாம் சினிமான்னு நம்புரீங்க..!! ரொம்ப நல்லவங்கப்பா எல்லாரும்.. !!

தமிழக அரசு said... December 20, 2009 at 12:33 PM

வேட்டைக்காரன் படத்தை பார்த்து விட்டு உயிர் விடுபவர்களுக்கோ, உடல் மற்றும் மன அளவில் பாதிக்கப்படுபவர்களுக்கு கலைஞர் காப்பிட்டு திட்டம் பொருந்தாது.

தமிழக அரசு.

டாக்டர் வசூல்ராஜா said... December 20, 2009 at 12:38 PM

இங்கே என்னுடைய கிளினிக்கில் வேட்டைக்காரன் ஸ்பெஷல் வைத்தியம் பார்க்கப்படும். அதனால் வேட்டைக்காரன் படத்தால் பாதிக்கப் பட்டவர்கள் வந்து செக் செய்துக்கொள்ளலாம்.

டாக்டர் வசூல்ராஜா

பிரகாஷ் said... January 15, 2010 at 8:40 PM

டிவி'இல விளம்பரப் படுத்தி கொஞ்சமாவது ஓட்டலாம்னு பாத்தா, அதையும் கேடுத்துருவீங்க போலிருக்கே. சன் டிவி விளம்பரத்தை மிஞ்சுது உங்க கமெண்ட். முழுசா மண்ண வாரி போட்டுட்டு கடைசில அப்ரூவர் ஆயிட்டா வுட்டுடுவான்களா? உன் வீட்டு முன்னாடி, ஆட்டோ வரப போறது உறுதி...

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin