வெடிகுண்டு வெங்கட்டின் சிறப்பு செய்தியாகிய இந்த பதிவினை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
ஜீ தமிழ் என்ற ஒரு சேனல் தமிழ் நாட்டில் தட்டு தடுமாறி வந்து கொண்டு இருப்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த கதை. என்னடா இவன், இந்தியாவில் முதல் முறையாக சாட்டிலைட் சேனல் ஆரம்பித்த ஜீ குழுமத்தின் சேனலை பற்றி இப்படி தட்டு தடுமாறி வருகிறது என்று கூறுகிறானே என்று கூட நீங்கள் யோசிக்கலாம். ஆனால், உண்மை அது தான். அதன் பின்புல விவரங்கள் கீழ்வருமாறு:
சென்னை மற்றும் தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களில் கேபிள் குழுமங்களை இயக்குவது SCV என்று அழைக்கப்படும் சுமங்கலி கேபிள் விஷன் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த குழுமமே சென்னையில் எண்பத்தி ஐந்து சதவீதம் அளவிற்கு கேபிள் வீடுகளின் கனேக்டிவிடியை SCV கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதும் நீங்கள் கேள்விப் பட்ட உண்மையே. அதனால் எந்த ஒரு புதிய சேனல் பல கோடி ரூபாயை செலவு செய்து தமிழகத்தில் ஆரம்பித்தாலும் இவர்கள் அதனை காண்பித்தால் மட்டுமே அது மக்களை சென்று அடையும்.
இந்த சூழ்நிலையில் ஆரம்பிக்கப் பட்ட ஜீ தமிழ் சேனல் பல தொழில் நுட்ப வல்லுனர்களையும், துறை அறிஞர்களையும் கொண்டு ஆரம்பிக்கப் பட்டாலும் அது இருட்டடிப்பு செய்யப் பட்டது மக்களுக்கு நன்றாக தெரியும். இன்னனும் அந்த சேனல் செட் டாப் பாக்ஸில் வரவில்லை என்பது ஆரம்பித்து ஒரு வருடம் கழித்தும் தொடரும் கொடுமை.
எப்போது ஒரு சேனல் மக்களுக்கு சென்று அடைய வில்லையோ அப்போதே அந்த நிகழ்ச்சிகள் வெற்றி அடையாது. அதனால் அங்கு எந்த அளவுக்கு நல்ல நிகழ்ச்சிகள் இருந்தாலும் வணிக அளவில் அவை வெற்றி அடையவில்லை. இருந்தாலும் தன முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல அந்த நிர்வாகமும் தொடர்ந்து படங்களை வாங்குவதிலும், சீரியல்களை ஆரம்பிபதிலும் மும்முரமாக இருந்த வந்தனர். அதனால் தான் சுட்ட பழம், ஸ்டெப் நீ போன்ற சரித்திர புகழ் பெற்ற படங்களை நம்மால் கண்டு ரசிக்க முடிகிறது.
சுப்ரமணியபுரம் படம் வெளிவருவதற்கு முன்பே ஜீ தமிழ் சேனல் அந்த படத்தின் தொலைக்காட்சி ஒலி பரப்பும் உரிமையை வாங்கி விட்டனர். கடந்த நான்கு மாதங்களாக அந்த படத்தை விரைவில் என்று விளம்பரம் செய்தும் அனைவரையும் கவர்ந்து கொண்டு இருந்தனர். அது ஒரு வெற்றி பெற்ற படம் என்பதால் அந்த படத்தை பலரும் எதிர்பார்த்து இருந்தனர் என்பது மறுக்க இயலாத உண்மை. வணிக அளவில் ஒரு கணிசமான தொகையை ஈட்ட இந்த படம் ஜீ தமிழ் நிறுவனத்திற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.
அதனால் இந்த திங்கள் அன்று அந்த படத்தை ஒலி பரப்ப ஜீ தமிழ் நிர்வாகம் முடிவு எடுத்தது. அன்று விஜய தசமி என்பதால் அது மக்களை கண்டிப்பாக சென்றடையும் என்பது நிர்வாகத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை. தொழில் முறை போட்டியாளர்களின் படங்கள் ஒன்று பெரிய அளவில் போட்டியாக இல்லை என்பதும் ஒரு முக்கிய விஷயம். ஆம், கலைஞர் டீவியில் "அபியும் நானும்" என்ற படமும், சன் டீவியில் "வெடிகுண்டு முருகேசன்" என்ற படமும் ஒளிபரப்ப முடிவு செய்து இருந்தனர். அதற்கான ஆயத்தமும் செய்யப் பட்டு விளம்பரதாரர்களுக்கு தகவலும் தெரிவிக்கப் பட்டது.
இந்த படத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஜீ தமிழ் நிர்வாகம் அனைத்து விளம்பரதாரர்களிடமும் சிறப்பான முறையில் பேசி விளம்பரங்களை பெற்று மகிழ்ச்சியாக இருந்தபோது திடீரென வெள்ளிக் கிழமை அன்று சன் டீவியில் சுப்ரமணியபுரம் படம் விஜயதசமி சிறப்பு படம் என்று விளம்பரம் வந்த வுடன் மக்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் முழிக்க ஆரம்பித்தனர். எனென்றால், ஒரு டிவி வாங்கிய படத்தை அனுமதியில்லாமல் மற்ற டிவி ஒளிபரப்பினால் அது சட்டப்படி குற்றமாகும்.
சன் டிவி சுப்ரமணியபுரம் படத்தை மாலை ஆறு மணிக்கு ஒளிபரப்ப போகிறார்கள், அதாவது ஜீ தமிழ் ஒளிபரப்ப முடிவு செய்த அதே நேரத்தில். அதாவது உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு குழும டிவிக்கள் ஒரே படத்தை ஒரே மொழியில் ஒளிபரப்பவிருக்கின்றனர்.
இந்த விஷயத்தை கேள்விப் பட்டவுடனே பெரும்பாலான (அனைத்து?) விளம்பரதாரகளும் தங்களது விளம்பரங்களை ஜீ தமிழ் டீவியில் நிறுத்தி விட்டு சன் டீவியில் கொடுத்து விட்டனர். இப்படி திடீரென நடந்தது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதற்க்கான காரணம் என்ன என்று தெரியாமல் மக்கள் முழித்து கொண்டு இருந்த வேளையில் வெடிகுண்டு வெங்கட் தன்னுடைய முழு திறமையை உபயோகப் படுத்தி உண்மையை கண்டறிந்து மக்களுக்கு தெரியப்படுத்துகிறார்.
உண்மை - இந்த தகவல் தமிழின் முன்னணி பத்திரிக்கையாளர் ஒருவரால் கூறப்பட்டது. அதனால் இது உண்மையாக இருக்கும் என்றே நம்பப் படுகிறது. சுமார் இருவது வருடங்கள் பத்திரிகை துறையில் இருக்கும் நண்பர் தவறான தகவலை அளிக்க மாட்டார் என்ற நம்பிக்கையுடன் அந்த தகவலை இங்கு அளிக்கிறேன்.
அதாகப்பட்டது சன் டிவியின் சன் டைரெக்ட் டி.டி.எச்சில் இனிமேல் ஜி தமிழ சேனல் வருமாம். அதற்க்கு கைம்மாறாக இந்த ஒரு முறை மட்டும் இப்படி கோடிக் கணக்கில் கொடுத்து வாங்கிய உரிமையை ஜி தமிழ் நிர்வாகம் பகிர்ந்து கொள்கிறது.
அதனால், இந்த திங்கள் அன்று உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக ஒரே படத்தை இரண்டு சேனல்களில் பார்க்கும் பாக்கியம் தமிழக மக்களை அடைகின்றது. என்ன கொடுமை சார் இது?
வார்ரே.. வா!!!
இப்பல்லாம்.. பெரிய இடம் பார்த்தே... பத்த வைக்க ஆரம்பிச்சிட்டீங்களா...??!!!
சபாஷ்...!! ஜாய்ன் த க்ளப்! :) :) :) :)
இதுல இவ்வளவு விசயமிருக்கா ....
தம்பி,
உங்க வீட்டுக்கு ஒரு ஆட்டோ அனுப்பி இருக்கேன். ஜாக்கிரதை.
டேய்,
தப்பி தவறி கூட அந்த சன் டைரெக்ட் டீ.டி.எச்'ஐ வாங்கிடாதீங்க டா. வாங்கிட்டு நாங்க படுற பாடு தாங்கல.
தம்பி,
உன்னுடைய வீட்டுக்கு ரெண்டு SCV செட் டாப் பாக்ஸ் தாரேன். தயவு செஞ்சு இப்படி எல்லாம் எழுதாதே.
அடங்கொப்பன்மவனே ! இதுதான் வெஷயமா.ஏன் இந்த மாதிரி.
அதுக்குப்பதிலா கம்முனு டிஷ் டீவி டீடீஹெச் மாத வாடகையை கொறைச்சு
சேனல் எண்ணிக்கையை கொஞ்சம் அதிகரிக்கலாம். அதே மாதிரி செட்டாப் பாக்ஸ் ரேட் ரூ 1000/= .அப்படின்னு சொல்லி யாவாரம் செஞ்சா சன் எல்லாம்
படுத்துக்கும். அதை உட்டுப்போட்டு அவன் கால்ல உழுந்துட்டு என்ன கொடுமை.
85 சதவிகிதம் இல்லை.. ஆல்மோஸ்ட் 100 சதவிகிதம்.. ஹாத்வேன்னு ஒரு கம்பெனி மூட்டைய கட்டிட்டு பெங்களுரூக்கு போயிட்டானுங்க
பாஸ் இதுல என்ன கொடுமை ?. நாட்டமை படம் ஜெயா டிவியில எப்படி ஒளிபரப்பாச்சுன்னு மறந்துருக்க மாட்டீங்க. இது ஒரு பிசினெஸ் டீல் தான். நல்ல வேளை, எங்கள் கழக கண்மணிகள், ஜீ டிவி ஆபீஸ் புகுந்து கேசட்ட எஸ்ஸாக்காம இந்த அளவுக்கு அஹிம்சை வழியில நடந்துக்கிட்டோம்னு பெருமை படாம.. :)
:)