மக்களே,
வழக்கம் போல இந்த விடுமுறை சிறப்பு தினத்தையும் நாம் துப்பாக்கி, கடத்தல், வெட்டு, குத்து, கொலை, கற்பழிப்பு காட்சிகள் நிறைந்த படங்களை பார்த்தே கழிப்போம் என்றே தோன்றுகிறது. அதனால் இனிமேல் சின்னத்திரையில் மட்டுமே படங்களை பார்க்கலாம் என்றால், அதுவும் முடியாது போல இருக்கிறது. ஆம், சமீப வருடங்களில் சின்னத்திரையில் தான் பெரும்பாலான படங்கள் ரிலீஸ் ஆனா விவரமே தெரிகிறது. (கேபிளார் புண்ணியத்தில் பலவற்றை அவைத் செய்து விடுகிறேன், இருந்தாலும் சில பல படங்களை என்ன,ஏது என்று தெரியாமல் பார்க்க வேண்டி இருக்கிறது - தொலைக் காட்சியிலேயே).
சன் டிவி: இவர்கள் வழக்கம் போல ஒரு புதிய படத்தையும் இரண்டு மூன்று பழைய படத்தையும் போட இருக்கிறார்கள். முதல் முறை ஒளிபரப்பில் இருக்கும் படம் : இளைய தளபதி விஜய் நடித்த (நடிக்க முயற்சித்த?!?) போக்கிரி என்ற முக்கால்வாசி சீரியஸ், கடைசி கால்வாசி காமெடி படத்தை ஒளிபரப்புகிறார்கள். மேலும் ரீமேக் ரவி நடித்த "சந்தோஷ் சுப்பிரமணியம்" என்ற படத்தையும் இரண்டாம் முறையாக ஒளிபரப்புகிறார்கள்.
மொத்தத்தில் இது ஒரு இளையதளபதி பொங்கல் தான் சன் டிவியில்.
14th Jan 2010:
10.00 AM Polladhavan 06.00 PM Pokkiri
15th Jan 2010
10.00 AM Santhosh Subramaniyam 06.00 PM Thiruppachi
கலைஞர் டிவி :
புத்தம் புது படங்களை போட்டு தாக்கிக் கொண்டு இருக்கும் கலைஞர் டிவி இந்த முறையும் களத்தில் அட்டகாசமாக இறங்குகிறார்கள். ஆம், இரண்டு முதல் முறை ஒளிபரப்பையும் இரண்டு மற்ற புது படங்களையும் ஒளிபரப்புகிறார்கள். இளைய தளபதி பறந்த "குருவி" படம் இவர்களின் எதிர்பார்ப்பை தூக்கி இருக்கிறது. ஆம், இந்த படத்தை கண்டிப்பாக தியேட்டரில் எல்லாம் யாரும் பார்க்காததால், கண்டிப்பாக டிவியில் பார்ப்பார்கள். அதனால் ரேட்டிங் ஏறும் என்று ஒரு அசாத்திய நம்பிக்கை. அதனால் பத்து செகண்ட் விளம்பரம் ருபாய் இருபதாயிரம் என்று கூட விற்கிறார்கள். ஆனானப்பட்ட தசாவதாரம் கூட இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்க்கே விற்றார்கள்.
14th Jan 2010:
10.00 AM Pandi 01.30 PM Kuruvi
15th Jan 2010:
10.00 AM Sivapuram 01.30 PM Jillunu Oru Kadhal 06.00 PM Muthirai
ஜெயா டிவி:
வழக்கம் போல இவர்களும் ஒரே ஒரு படத்தை வைத்துக் கொண்டு களத்தில் இறங்குகிறார்கள். ஆனால் அதுவும் விஜய் படம் என்பது தான் கொடூரம். ஆம், சிவகாசி படத்தை இவர்கள் ஒளிபரப்புகிறார்கள். வழி இல்லாமல் இந்த பொங்கலுக்கு கேபிள் கனேக்க்ஷனை புடுங்கி விட வேண்டிய சூழல் வந்தாலும் வரலாம். என்ன கொடுமை மருத்துவர் விஜய் இது?
பாலிமர் டிவி:
புதிதாக களத்தில் இறங்கி குறுகிய காலத்தில் ராஜ் டிவியை முந்திய இவர்களும் இந்த முறை படங்களுடன் களத்தில் இறங்கி விட்டனர். ஆனால், எத்தனை நாள் பெரிய பெரிய படங்களுடன் இவர்களால் போட்டி இட இயலும் என்பது தெரிய வில்லை. இந்த முறை சற்று வித்தியாசமாக ரஜினிகாந்த் நடித்த ஒரே படமான முள்ளும் மலரும் படத்தை மறு ஒலிபரப்பு செய்கிறார்கள், அதுவும் மேம்படுத்தப்பட்ட தரத்துடன். வழக்கம் போல இரண்டு ஹாலிவுட் படங்களும், ஒரு புதிய தமிழ் படமும் கூட உண்டு. சாபூதிரீ என்ற படத்தை இவர்கள் ஒளிபரப்புகிறார்கள்.
ராஜ் டிவி
நாங்களும் களத்தில் இருக்கிறோம் என்பதை காட்ட ராஜ் டிவி கடுமையாக போராடிக் கொண்டு இருக்கிறது. ஆனாலும், தலைமையில் தடுமாற்றம் இருப்பதால் முயற்சிகள் கை கூடவில்லை. இந்த முறை சற்று புதுமையாக புரட்சி தலைவரை நம்பி களத்தில் இறங்கி இருக்கிறார்கள். ஆம், சென்ற ஆண்டு புரட்சி கலைஞரை நம்பியது வீண் ஆனது(மரியாதை தியேட்டரில் ஊத்திக் கொண்டு அவமரியாதை ஆனது). அதனால் புரட்சி தலைவர் எம்ஜியார் நடித்த படங்களை முதல் முறையாக ஒளிபரப்புகிறார்கள். வழக்கம் போல அவர்கள் தயாரிப்பான காதல்னா சும்மா இல்லை என்ற படமும் உண்டு. ஒரு நல்ல படத்தை (தெலுகு - கம்யம்) எப்படி ஒரு மொக்கை ஹீரோவை கொண்டு வீணடிக்கலாம் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
Enjoy.
//ரஜினிகாந்த் நடித்த ஒரே படமான //
வன்மையாக கண்டிக்கிறேன். ரஜினிக்கு சரியான வாய்ப்புக்கள் கொடுக்கப் படுவதில்லை. அவரது நடிப்புக்கு சாட்சி சொல்ல படங்கள் உள்ளன. சமகாலத்தவர்களில் கமல் மட்டுமே அவரை முந்தி நிற்கமுடியும். ,மற்றவர்களை விட ரஜினி நடித்து தன்னை நிரூபித்த படங்கள் அதிகம்
//அதனால் புரட்சி தலைவர் எம்ஜியார் நடித்த படங்களை முதல் முறையாக ஒளிபரப்புகிறார்கள். //
வசந்த மாளிகை ஒளிபரப்பானபோது மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது நினைவுக்கு வந்திருக்கலாம்
//வன்மையாக கண்டிக்கிறேன்.//
நானும்தான். இருந்தாலும் கூட வேறு படங்கள் எதுவும் எனக்கு நினைவுக்கு வர மறுக்கின்றன.
//ரஜினிக்கு சரியான வாய்ப்புக்கள் கொடுக்கப் படுவதில்லை.//
வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பதற்காக நாம் அவரை சிறந்த நடிகர் என்று கூற முடியாதல்லவா? உதாரணமாக கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவில் நிறவெறி பிரிவினை காலத்தில் பேரி ரிச்சர்ட்ஸ் மொத்தமும் நான்கே நான்கு டெஸ்ட் போட்டிகள் ஆடிய நிலையில் தென்னாப்பிரிக்க டெஸ்ட் போட்டிகளில் தடை செய்யப் பட்டது. அந்த நான்கு போட்டிகளை வைத்து, அவருக்கு வாய்ப்பு கொடுக்கப் படவில்லை, விளையாடிய நான்கு போட்டிகளிலும் அவர் சிறப்பாக செயல்பட்டதால் அவரை சச்சினை விடவோ, பிராட்மேனை விடவோ சிறந்தவர் என்று கூற முடியாதல்லவா?
தல,
கருத்துக்கள் தவறாக இருப்பின் மன்னிக்கவும்.
நம்ம விஜய் டிவி யா உட்டுடிக ...?
//விளையாடிய நான்கு போட்டிகளிலும் அவர் சிறப்பாக செயல்பட்டதால் அவரை சச்சினை விடவோ, பிராட்மேனை விடவோ சிறந்தவர் என்று கூற முடியாதல்லவா?//
உண்மை..ஆனால் மட்டம் தட்டுவது?